பழைய ஆசாரம் வேணுமா, சீர்திருத்தம் வேணுமா என்பதற்கு ஒரு ‘டெஸ்ட்’ போதும். ஒழுங்கீனம், லஞ்சம், திருட்டுப்புரட்டு, மோசடி, கொலை, வியபசாரம் இத்யாதிகள் நாம் ‘ஸுபர்ஸ்டீஷிய’ஸாக இருந்தபோது ஜாஸ்தியிருந்ததா, இப்போது ‘என்லைடன்’ ஆகிவிட்ட பிறகு [‘அறிவுப் பிரகாசம்’ அடைந்த பிறகு] ஜாஸ்தியாகியிருக்கிறதா என்று பார்த்து விட்டால் போதும்!இத்தனை அனர்த்த பரம்பரையோடுதான் நாம் ‘சீர்திருந்தி’யிருக்க முடியுமென்றால், இதைவிட மூட நம்பிக்கைகளைக் கட்டிக்கொண்டு அழுவதேமேல் என்றுதான் தோன்றுகிறது.