சோழ நாட்டிலும்

சோழ ராஜாக்களும் தங்கள் ராஜ்யத்தை வேத சாஸ்திரங்கள் நன்றாகப் பிரகாசித்த வித்யா பூமியாகத்தான் வளர்த்துவந்தார்களென்றாலும் சோழதேசப் பாடசாலைகளைகடிகைஎன்ற பெயரில் குறிப்பிடக் காணோம். ஆனாலும் தஞ்சாவூர் ஜில்லா வேப்பத்தூரில் (‘வேம்பற்றூர்என்பது அதன் ஸரியான பெயர்) மஹாபண்டிதர்கள் கல்வி போதித்து, ‘கடிகைஎன்றே பெயர் பெற்றிருந்த ஒரு கலாசாலை இருந்ததாகத் தெரிகிறது. திருக்கழித்திட்டை வேதபுரீச்வரர் ஆலய கர்ப்பக்ருஹத்தின் வடவண்டைச் சுவரிலுள்ள முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டிலிருந்து இது தெரிகிறது.

இதுகடிகைஎன்ற பெயருக்குத் தெற்கு எல்லை.