வைத்ய சாஸ்திரம்

இப்படியே ஆயுர்வேத வைத்யர்கள், நாட்டு வைத்யர்கள்,ஸித்த வைத்யர்கள் அங்கங்கே இருந்துகொண்டு அவர்களில் சிலபேர் நல்ல ப்ராபல்யத்தோடு இருப்பதால் இவற்றுக்கான சாஸ்திரங்கள் அவர்கள் பாடு என்று விட்டுவிடக்கூடாது. நம்முடைய இந்தப் புராதன வித்யைகளை நன்றாகக் காப்பாற்றி, கெட்டிப்படுத்தி, வளர்த்துக் கொடுப்பது நம் எல்லோருடைய பொறுப்புமாகும் என்ற உணர்வோடு புது சிஷ்யர்கள் பழைய படிப்பு முறையில் உருவாவதற்கான கார்யங்களைச் செய்யவேண்டும்.