தர்சனத்தால் ஸம்ஸார நீக்கம்

த்ருஷ்டே பவதி ப்ரபவதி பவதி கிம் பவதிரஸ்கார:” என்பதாகபவதிஎன்கிற சப்தத்தை நாலு முறை அடுத்தடுத்து வெவ்வேறு அர்த்தங்களில் திருப்பி இந்த ச்லோகத்தைப் பூர்த்தி பண்ணியிருக்கிறார். மஹா கவிகளின் புலமையெல்லாம் தோற்றுப்போகிற மாதிரி வாக் ஸாமர்த்யத்தை ஆசார்யாள் காட்டியிருக்கிறார்.

த்ருஷ்டே பவதிஎன்னும்போதுபவதிஎன்றால்தங்களிடத்தில்என்று அர்த்தம். ஒருத்தரிடம் மரியாதையாகத்தாங்கள்என்று சொல்லவேண்டுமானால், ‘பவான்என்று குறிப்பிடவேண்டும். இதற்குப் பெண்பால்பவதி” “பவதி பிக்ஷாம் தேஹிஎன்கிறபோதுபவதிஎன்றால் ஒரு வீட்டுக்காரியைஅம்மணி!” என்று மரியாதையாகக் கூப்பிடுவதாக அர்த்தம். ”பவதிஎன்பதே வினைச் சொல்லாக (verb) வரும் போதுஉண்டாகிறதுஎன்று அர்த்தம். ஆண்பாலில் வருகிறபவத்என்பது ஏழாம் வேற்றுமை உருபோடு சேரும்போதும்பவதிஎன்று ஆகும். அப்போதுதங்களிடத்தில்என்று அர்த்தம் உண்டாகும். இங்கே அப்படித்தான்த்ருஷ்டே பவதிஎன்பதில்பவதிக்கு அர்த்தம்.

த்ருஷ்டே பவதிஎன்றால், தங்களிடத்தில் (எங்கள்) த்ருஷ்டி ஏற்பட்டு விட்டால்’, அதாவதுஎங்களுக்கு உன் தர்சனம் கிடைத்துவிட்டால்என்று அர்த்தம். அவன் எப்படிப்பட்டவன்? எல்லாருக்கும் ப்ரபுவாக, அகிலாண்ட நாயகனாக இருக்கிறவன். ‘ப்ரபவதி பவதி த்ருஷ்டேஎன்றால்ப்ரபுவான உன்னிடம் (எங்கள்) பார்வை உண்டாகுமானால்என்று அர்த்தம். பகவத் தர்சனம் கிடைத்துவிட்டால்…. அப்புறம் என்ன ஆகிறது?

 வதி கிம்  திரஸ்கார:”

வதிரஸ்கார:’ என்பதைபவதி, ரஸ்கார:’ என்று பிரித்தால் தப்பு. ‘சுக்குமிளகுதிப்பிலிஎன்பதைசுக்குமிளகுதிபிலிஎன்று பிரித்தான் என்று கதை சொல்வார்களே, அப்படி ஆகிவிடும். ‘அநேகதம் தம்என்பதைஅநேக தந்தம்என்று பிரிக்கிற மாதிரியான தப்புத்தான் இது. ‘பவ திரஸ்கார:’ என்பதுதான் சரியான பிரிவினை. திரஸ்காரம் என்றால் மறைப்பது. மாந்த்ரீகத்தில் மறைக்கிற வித்தையைதிரஸ்கரிணிஎன்பார்கள். பவம் என்றால் ஸம்ஸாரம். முன்பே இந்தஷட்பதீயில்பவ பய கேதச்சிதேஎன்கிற இடத்தில்பவம்என்ற வார்த்தை வந்திருக்கிறது. ஸம்ஸார பந்தத்தை மறைப்பது, அதாவது ஸம்ஸார வாழ்க்கை மறையும்படிச் செய்வது, அல்லது ஸம்ஸாரத்தைப் போக்கிக்கொள்வதுதான்பவதிரஸ்காரம்’.

பவதி கிம்என்கிற இடத்தில்பவதிஎன்பது வினைச் சொல். இங்கேபவதிஎன்றால், ’உண்டாகிறதுஎன்று அர்த்தம். ‘ பவதி கிம்என்றால்உண்டாகிறதில்லையா என்ன?’ என்று அர்த்தம். எது உண்டாகிறதில்லையா? ஸம்ஸாரத்தின் மறைவுதான். ‘உன் தர்சனம் கிடைத்து விட்டால் அப்புறம் ஸம்ஸார நீக்கம் உண்டாகாமலும் இருக்குமா என்ன?’ என்று கேள்வி ரூபத்தில் கேட்கிறார். ‘உன் தர்சனம் கிடைத்தபின் ஸம்ஸாரம் விலகுகிறதுஎன்று affirmative (நேர்) ஸ்டேட்மெண்டாகச் சொல்வதைவிட, இப்படிக் கேள்வி ரூபத்தில், ‘ஸம்ஸார நீக்கம் ஏற்படாதா என்ன? ஏற்படாமலும் போகுமா என்ன?’ என்று சொல்வது, சொல்லவந்த விஷயத்துக்கு மேலும் அழுத்தம் கொடுக்கிறது.

கீதையில் (2-59) , பரமாத்மாவை தர்சித்துவிட்டால் அதோடு உள் மனஸில் தேங்கியிருக்கும் வாஸனை ருசி எல்லாம் போய்விடும் என்று சொல்லியிருக்கிறது. அதோடு ஸம்ஸாரமும் போய்விடவேண்டியதுதான். அந்த இடத்தில்பரம் த்ருஷ்ட்வாஎன்று பகவான் சொல்லியிருக்கிறது போலவே ஸக ஆசார்யாள்த்ருஷ்டே பவதிஎன்கிறார். பகவத் தர்சனம் அத்தைவ ஸாக்ஷாத்காரத்துக்குத்தான் அழைத்துக்கொண்டு போகட்டும், அல்லது த்வைதமாக அவனை தர்சிப்பதகாவே தான் இருக்கட்டும்எப்படியிருந்தாலும் அதற்கப்புறம் இந்த பூலோகத்தில் ஜனன மரணச் சுழலில் மாட்டிக்கொள்வதில்லை. “இப்படி ஏற்படாமல் கூடப் போகமுடியுமா என்ன பவதி கிம் பவ திரஸ்கார:?” என்று கேட்கிறார்.