அதாவது எல்லா மதங்களுக்கும் ஒரே போல் ஆதரவளிப்பதான சரியான செக்யூலரிஸமோ, எம்மதத்திலும் சம்பந்தம் கொள்ளாத தவறான செக்யூலரிஸமோ, எதனை அரசாங்கம் ஏற்கின்ற போதிலும் அரசியலாரின் சமூகக் கொள்கைகளுக்குப் பொருந்தும் வகையில் மதங்களில் வகுத்துள்ள விதிகளுக்கு முரணாகச் சட்டமியற்றும் அதிகாரத்தை அரசாங்கம் கைக்கொள்ளலாகாது. எம் மதத்திலும் சம்பந்தப்படுவதில்லை என்ற தவறான செக்யூலரிஸத்தை மேற்கொண்ட பின்பும் எதிர்மறை சம்பந்தமாக மத விதிகளில் இவ்வாறு துர்பிரவேசம் மட்டும் செய்யலாம் என அரசாங்கம் கருதுமேயாகில் அதனை நாம் ஏற்பதற்கில்லை..