வணக்கம்

வணக்குவதுஎன்றால்கூடவளைப்பதுதான். அப்படிப் பார்த்தால்வணக்கம்என்பது வாஸ்தவத்திலே ஸ்த்ரீகள் பண்ணுவதுதான் என்று தோன்றுகிறது. புருஷர்கள் கை வணக்கம் மட்டும் பண்ணலாம்; இடுப்புக்கு மேலே உடம்பையும் சிரஸையும் கொஞ்சம் குனித்து வணங்கலாம். ஆனால் ஸ்த்ரீகள்தான் ஸர்வாங்க வணக்கம் செய்வது.

வணக்கம்என்பது மட்டுமில்லை. ‘நமஸ்காரத்தில் வரும்நமஎன்பதுநம்என்ற வேர்ச் சொல்லிலிருந்து தான் தோன்றியிருக்கிறது. ‘நம்என்கிறதற்கு அர்த்தம்வளைப்பதுதான். ‘நம்என்பது வினைச் சொல் தாது; ‘வளைஎன்று அர்த்தம். அதுவேநமனம்என்றாகும்போதுவளைத்தல்என்று அர்த்தம். அதுவேநமஸ்காரமும். அப்படிப் பார்த்தால் கழி மாதிரி நேரே, வளையாமல் கிடக்கிற அஷ்டாங்கத்தை விடவும், ‘நமஸ்காரம்’, ‘வணக்கம்என்ற வார்த்தைகளுக்கு ஜாஸ்தி நிஜமாக இருப்பது பஞ்சாங்கம் தான்!