சப்தத்தின் சக்தி

(முன்பெல்லாம்‌ பள்ளிக்கடங்களில்‌ வாய்ப்பாடு சொல்லிக்‌ கொடுக்கும்போது, அதை ஒப்பிக்கச்‌ சொல்வார்கள்‌. நேராக ஒப்‌ பித்தால்‌ மட்டும்‌ போதாது; தலைகீழாகவும்‌ ஒப்பிக்க வேண்டும்‌; அதனுடன்‌ கூட ஒவ்வொரு பெருக்கலையும்‌, இரண்டு விதமாகச்‌ சொல்ல வேண்டும்‌.  உதாரணமாக, நான்காம்‌ வாய்ப்பாடு என்றால்‌ – ‘நாலோண்‌ நாலு, நால்‌ ரெண்டு எட்டு, நால்‌ மூணு பன்னிரண்டு… நாலு பதினாறு அறுபத்திநாலு’ என்று ஒப்பித்தால்‌ போதாது. இது ஒரு முறை. இன்னொரு முறையில்‌ ‘நாலோண்‌ நாலு, நால்‌ ரெண்டு எட்டு, இரண்டு நான்கு எட்டு; நால்‌ மூணு பன்னிரண்டு, மூணு நான்கு பன்னிரண்டு…’ என்று போக வேண்டியிருக்கும்‌. இன்னொரு முறையில்‌, தலைகீழாக ‘பதினாறு நான்கு அறுபத்திநாலு, நான்கு பதினாறு அறுபத்திநாலு; பதிமூணு நான்கு அம்பத்திரண்டு, நான்கு பதிமூணு அம்பத்திரண்டு…” என்று சொல்ல வேண்டும்‌.  இப்படிப்‌ பாடம்‌ பண்ணிவிட்டால்‌, அதற்குப்‌ பிறகு இது ஆயுள்‌ உள்ள வரை மறக்காது என்பதால்தான்‌ இந்த மாதிரி மனப்பாடம்‌ செய்யச்‌ சொன்னார்கள்‌. இந்த மாதிரி ஒரு வழிமுறை,

இன்னும்‌  பல மடங்கு கடினமாக, வேதம்‌ ஓதுவதில்‌ கையாளப்படுகிறது.  பத பாடம்‌, கிரம பாடம்‌ என்று இரண்டு வழிகள்‌. அதன்‌  பின்னர்‌, எட்டு விதமான வழிமுறைகள்‌. ஜடை, மாலை, சிகை என்ற பெயர்களைக்‌ கொண்ட இந்த வழிமுறைகளில்‌, சொற்களின்‌ கோர்வை பல வகைகளில்‌ அமையும்‌. முதல்‌ வார்த்தையுடன்‌ இரண்டாவது வார்த்தை, இரண்டாவது வார்த்தையுடன்‌ மூன்றாவது வார்த்தை… என்பது ஒருவகை என்றால்‌, அதன்‌ பின்னர்‌ உள்‌  ளவை சிக்கலான வழி முறைகள்‌. ஓர்‌ உதாரணத்திற்காக, ஒன்றைப்‌ பார்ப்போம்‌ : இதுதான்‌ வழி என்று எடுத்துக்‌ கொள்ளக்‌ கூடாது. விளக்குவதற்காக, கையாளப்‌ படுகிற ஓர்‌ உபாயமாக இதைப்‌ பாருங்கள்‌.

‘உன்னை மனதார பணிவோடு நான்‌ வணங்குகிறேன்‌’ என்பது மந்த்ரம்‌ என்று வைத்துக்‌ கொள்வோம்‌. அப்படியே சொல்வது ஒரு வழிமுறை. ‘உன்னை மனது மனது மனது உன்னை உன்னை உன்னை மனது உன்னை என்பது ஒரு வழிமுறை. ‘உன்னை மனது மனதுன்னை உன்னை மனதார மனது ஆற ஆற மனது…’ என்று ஓதுவது ஒருவகை. இப்படி எட்டு வகைகள்‌. அவ்வழிமுறைகளுக்கு ஜடை, மாலை, சிகை, ரேகை, த்வஜம்‌, தண்டம்‌, ரதம்‌, கனம்‌ – என்று பெயர்‌. இவற்றில்‌ ‘கனம்‌! என்பதில்‌ உள்ள சொற்கோர்வைகள்‌ மிக வும்‌ சிக்கலானவை. இதை நன்கு கற்றறிந்து, இவ்வழியில்‌ ஓது பவர்கள்‌, கனம்‌ பாடம்‌ அறிந்தவர்கள்‌ – அதாவது கனபாடிகள்‌. ்‌ இவ்வளவு கடினமான வழிமுறைகளில்‌ வேதம்‌ ஓதுதலைக்‌ கற்ற பிறகு, அது எளிதில்‌ மறக்காது. இத்துடன்‌, மந்த்ரங்களை ஓதுகிற போது ஏற்படக்‌ கூடிய குற்றங்கள்‌ பட்டியலிடப்பட்டிருக்‌ இன்றன. அவை தவிர்க்கப்பட வேண்டும்‌. ஸ்வரம்‌ பிசகக்‌ கூடாது; அவசர அவசரமாக ஓதக்‌ கூடாது; ஒரே மாதிரியான ஏற்ற இறக்கத்‌ துடன்‌ ஓதக்‌ கூடாது; பாட்டுப்‌ பாடுகிறவர்‌ மாதிரி தலையை ஆட்டிக்‌ கொண்டு அங்க சேஷ்டைகளில்‌ இறங்கக்‌ கூடாது; மிகவும்‌ மெல்லிய குரலில்‌ ஓதக்‌ கூடாது; அர்த்தத்தைப்‌ புரிந்து கொண்டு மந்திரத்தை ஓத வேண்டும்‌…

 இப்படிப்‌ பல நிபந்தனைகள்‌. இவ்வளவு கடுமையான பயிற்சி இருந்து வருவதால்தான்‌, வேதங்கள்‌ இன்று வரை, அன்று இருந்தது போலவே, காப்பாற்றப்‌ பட்டு வருகின்றன. இன்றும்‌ கூட வேத பாடசாலைகளில்‌ சேர்கிற சிறுவர்கள்‌ – குரு மூலமாகவும்‌, தாங்களே ஓதுவதன்‌‌ மூலமாகவும்‌, சுமார்‌ எட்டு மணி நேரமாவது தினமும்‌ வேதம்‌ ஓதி பயிற்சி பெறுகிறார்கள்‌. இதற்கிடையில்‌ கடைப்பிடிக்கப்பட வேண்டிய நியமங்கள்‌ வேறு. இந்த மாதிரி ஒரு மாணவர்‌, ஏழு வருடங்கள்‌ படித்தால்‌, ஒரளவு தேர்ச்சி அடையலாம்‌ – ஒரு வேதத்‌ இல்‌! இந்தக்‌ கல்வி முடிந்த பிறகு – விவாகங்கள்‌, உபநயனம்‌, பலவித பூஜைகள்‌, இறுதிச்‌ சடங்கு… போன்றவற்றிற்கான வழி முறைகளையும்‌, மந்த்ரங்களையும்‌, தனியாக மேலும்‌ சில வருடங்‌ கள்‌ கற்றால்தான்‌, ஒரு மாணவன்‌ புரோகிதர்‌ ஆக முடியும்‌.  ஏன்‌ இவ்வளவு நிபந்தனைகள்‌ என்றால்‌, வேத மந்த்ரங்கள்‌ எழுப்புகிற ஒலிக்கு உள்ள வலிமை குன்றி விடுகிற வகையில்‌ அவற்றை ஓதக்‌ கூடாது என்பதுதான்‌ காரணம்‌.

2008-ம்‌ வருடம்‌ ஜனவரி 8-ஆம்‌ தேதியிட்ட ‘எகானமிஸ்ட்‌’ பத்திரிகையில்‌ ஒரு செய்தி வந்துள்ளது. ‘பெரிய கடைகளின்‌ வாயிலில்‌ நின்று ரகளை செய்கிற இளைஞர்கள்‌, ரகளையை கைவிட்டு அகன்றுவிட சங்கீதம்‌ உதவுகிறது; அகற்றுவதற்குப்‌ பயன்படுகிற மாதிரி, மனதை ஆற்றுவதற்கும்‌ சங்கீதம்‌ உதவுகிறது. ஆஸ்பத்திரியில்‌ சிலச்சை பெற்று வருகிறவர்கள்‌ விரைவில்‌ குணமடைய சங்கீதம்‌ உதவுகிறது; இதில்‌ குறிப்பிடத்தக்க அம்சம்‌ ஒன்று உண்டு; மேல்நாட்டுச்‌ சங்கதத்திவேயே பழைய வகை சங்கீதத்திற்குத்தான்‌ இந்த வலிமை இருக்கிறதே தவிர, இன்றைய நாகரீக இசைக்கு அல்ல; மேலும்‌, மது அருந்தியவர்களுக்கு இசை எந்த நன்மையையும்‌ ஏற்படுத்துவதில்லை’ – இவ்வாறு எகானமிஸ்ட்‌ பத்திரிகைச்‌ செய்தி கூறுகிறது. 

இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒலிக்கு ஒரு வலிமை உண்டு; எந்த ஒலியானாலும்‌ பரவாயில்லை என்று கூற முடியாது; தவிர, மனம்‌ பொருந்தி ஒருவர்‌ கேட்கும்போதுதான்‌, இதற்குண்டான நற்‌ பலன்‌ கிட்டுகிறது. போதையில்‌ இருப்பவருக்கு இது எந்த நல்ல பாதிப்பையும்‌ ஏற்படுத்துவதில்லை. பழைய வகையில்‌ அமை கிற மேல்நாட்டுச்‌ சங்கீதத்திற்கே, இந்த வலிமை உண்டென்றால்‌ – வேத மந்திரங்களை முறைப்படி ஸ்வரங்களுடன்‌, ஏற்றத்‌ தாழ்வுகளுடன்‌, ஸ்ருதி பிசகாமல்‌, அட்சர சுத்தமாக ஓதினால்‌, அவற்றிற்கு பெரும்‌ சக்தி இருக்கத்தான்‌ செய்யும்‌ என்பதை ஏற்‌ பதில்‌ என்ன தவறு?

வேதங்களைப்‌ பற்றி அறிமுகம்‌ பெறுகிறபோது, கவனிக்க வேண்‌ மிய மற்றொரு விஷயம்‌ இருக்கிறது. அவற்றின்‌ பொருள்‌ பல இடங்களில்‌ நேரிடையாக இல்லை – மறைந்து கிடக்கிறது. ‘தமி மில்‌ வேதத்திற்கு மறை என்று பெயர்‌ இருப்பது போல்‌ – அவ்‌ வளவு பொருத்தமான பெயர்‌, வேறு எந்த மொழியிலும்‌ இருப்ப தாகத்‌ தெரியவில்லை’ என்று காஞ்சி மஹாஸ்வாமிகள்‌ கூறியிருக்‌ கிறார்‌.  ‘இப்படி மறைத்துச்‌ சொல்வானேன்‌’ என்று கேட்கலாம்‌. அதற்கு ஒரு காரணம்‌ இருக்க முடியும்‌.  வேத மந்த்ரங்களின்‌ பொருளுக்கு மட்டுமல்லாமல்‌, அவற்‌ றின்‌ ஒலிக்கும்‌ ஒரு பெரும்‌ சக்தி உண்டு என்பதைப்‌ பார்த்தோம்‌. நேரிடையாக அர்த்தம்‌ தெரிகிற சொல்லைக்‌ காட்டிலும்‌ – மறை முகமாக அர்த்தம்‌ கூறுகிற, சொல்‌ எழுப்புகிற சப்த அலைகள்‌, வலிமை மிக்கவையாக இருக்கக்‌ கூடிய இடங்களில்‌, இப்படி மறைபொருள்‌ அமைந்திருக்கிறது என்பது புரிந்து கொள்ளக்‌ கூடிய விஷயம்தானே! 

ஆனால்‌ இப்படி மறைபொருள்‌ இருப்பதால்‌, ஒரு குழப்பம்‌ நேரிட்டிருக்கிறது. பல மேல்நாட்டு அறிஞர்களும்‌, அவர்களைப்‌  பின்பற்றி நம்‌ நாட்டுப்‌ பண்டிதர்களும்‌, பல வேத மந்திரங்களுக்கு  நேரிடை அர்த்தத்தை எடுத்துக்‌ கொண்டு அவையெல்லாம்‌, ஒன்றும்‌ சம்பந்தா சம்பந்தம்‌ இல்லாதவை அல்லது விகாரமானவை – என்று முடிவு செய்துவிட்டனர்‌. இப்படிப்பட்ட கருத்தைக்‌ கூறுகிற பல நூல்கள்‌ வந்துவிட்டதால்‌, இதுவே உண்மை நிலை என்று கருதுகிறவர்களின்‌ எண்ணிக்கை இன்று கணிசமாகிவிட்டது. இது ஒரு துரதிர்ஷ்டமே.  இப்படி, விபரீத விளக்கங்கள்‌ தவறாகத்‌ தோன்றிவிட்டன என்பதை எடுத்துக்‌ காட்டுகிற நூல்களும்‌ உண்டு.

ஸ்ரீ க்ருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள்‌ சில உதாரணங்களைக்‌ காட்டியிருக்கிறார்‌. வேத வாக்கியம்‌ ஒன்றிற்கு, நேரிடைப்‌ பொருளை எடுத்துக்‌ கொண்டால்‌, ப்ரஜாபதி, தான்‌ உண்டாக்கிய பெண்ணை தானே காதலித்து, அவ ளிடம்‌ ஒரு பிள்ளையையும்‌ பெற்றார்‌! என்று அர்த்தம்‌ வருகிறது.

ஆனால்‌, உண்மையில்‌ ப்ரஜாபதி என்ற ‘ஆதி மனிதன்‌’ பற்றியே இந்த வாக்கியம்‌ பேசவில்லை.  சூரியனுக்கு, ப்ரஜாபதி என்ற ஒரு பெயரும்‌ உண்டு என்பது வேதத்தின்‌ மற்றொரு பகுதியில்‌ கூறப்பட்டிருக்கிறது. இப்படிப்‌ பொருள்‌ கொண்டு இந்த வாக்கியத்தைப்‌ பார்க்கும்போது, உண்மை அர்த்தம்‌ வெளியாகிறது.  சூரியன்‌, மாலைப்‌ பொழுதை உண்டாக்குகிறான்‌. பிறகு அந்த மாலைப்‌ பொழுது முடிகிறபோது, அதனிடமே. உதய சூரியன்‌ பிறக்கிறான்‌’.  இந்தக்‌ கவிரஸமுள்ள வர்ணனை விகாரமான அர்த்தமுள்ள வாக்கியமாக எப்படி மாறியது என்பதைப்‌ பார்த்தோம்‌. இன்னொரு உதாரணத்தைப்‌ பார்ப்போம்‌. ‘கெளதம மஹரிஷியின்‌ மனைவி யாகிய அஹல்யையை இந்த்ரன்‌ கெடுத்துவிட்டான்‌’ என்பது ஒரு வேத வாக்கியத்தின்‌ நேரிடையான பொருள்‌. ஆனால்‌ சொற்களின்‌. வேர்களை ஆராய்ந்து அவற்றை விளக்குகிற ‘நிருக்தம்‌’ என்ற நூலில்‌, இதற்கு முறையான விளக்கம்‌ இட்டுகிறது.  ‘கெளதமன்‌ என்றால்‌ சந்திரன்‌; சந்திரனின்‌ மனைவி ராத்திரி; சூரியன்‌ உதயமாகி, இந்த ராத்திரியை பாழ்‌ செய்து விடுகிறான்‌; சூரியனே இந்திரன்‌ எனக்‌ குறிப்பிடப்பட்டு இங்கு கள்ள புருஷ னாகிறான்‌’ என்பது நிருக்தம்‌ அளிக்கும்‌ விளக்கத்திலிருந்து தெரிய வருகிறது. 

அதாவது, சம்பந்தப்பட்ட வேத வாக்கியத்தின்‌ பொருள்‌ – ‘சந்திரனின்‌ மனைவியாகிய இரவை, சூரியன்‌ வந்து கெடுத்து விடுகிறான்‌’. இது கவித்துவம்‌ உள்ள வர்ணனை. இதை நேரிடையாக அர்த்தம்‌ செய்து கொண்டு, கெளதம ரிஷியின்‌ மனைவி அஹல்‌ யையை இந்திரன்‌ கெடுத்தான்‌ – என்று கூறக்‌ கூடாது. வேதத்தில்‌ காணப்படுகிற இந்த மாதிரியான உருவகங்கள்‌, புராணங்களிலும்‌, இதிஹாஸங்களிலும்‌, நிகழ்ச்சிகளாகவே வர்ணிக்கப்பட்டு விடு இன்றன. அதனால்தான்‌, இந்த ‘அஹல்யை’ என்பது ராத்திரி என்று பார்க்கப்படாமல்‌, கெளதம ரிஷியின்‌ மனைவியாக நேரிடையாகவே பார்க்கப்பட்டு, ராமாயணத்தில்‌ ஒரு நிகழ்ச்சியாக விடுகிறது. இவ்‌ வாறு ஸ்ரீ க்ருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள்‌ விளக்இயிருக்கிறார்‌. 

“அப்படியானால்‌ இதிஹாஸங்களிலும்‌, புராணங்களிலும்‌ இப்‌ படித்‌ தவறான விளக்கங்களின்‌ அடிப்படையில்‌ கதைகள்‌ வந்து விடு இன்றனவா?” என்ற கேள்வி பலர்‌ மனதில்‌ எழும்‌. அப்படியல்ல. வேதத்தில்‌ கவித்துவத்துடன்‌, மறைபொருளாக கூறப்படுகிற வாக்‌ இயத்திற்கு ஒரு நிகழ்ச்‌ பயன்படுகிறது; அந்த நிகழ்ச்‌, வெறும்‌ நிகழ்ச்சியாகவே புராணத்தில்‌ கூறப்படுகிறது. சில புராண, இதி ஹாஸ நிகழ்ச்சிகள்‌ வேதத்தில்‌ குறிப்பிடப்படுவதால்‌, அவை எல்‌ லாம்‌, எப்போது நடந்தன என்று நிர்ணயித்துக்‌ கூற முடியாத காலத்‌ இல்‌ நடந்தவையாக இருக்க வேண்டும்‌. அவற்றில்‌ சல, மறைமுக அர்த்தம்‌ உள்ள வேத விளக்கங்களுக்கும்‌, உவமைக்கும்‌ கூட பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ‘நிருக்தம்‌’ என்ற வேத விளக்க நூலை அறிந்தவர்களுக்குத்தான்‌, இது முழுமையாக விளங்கும்‌. அதை விட்டு, அகராதி சொல்கிற நேரிடை அர்த்தம்‌ பார்ப்பவர்களுக்கு, தவறான விளக்கம்தான்‌ இடைக்கும்‌. இம்மாதிரி பல வேத வாக்‌ இயங்களைச்‌ சிலர்‌ தவறாக விளக்குவதால்‌ ஏற்படுகிற நஷ்டம்‌, வேதத்திற்கு அல்ல.