மரம், பூ, காய், பழம்

நான்கு வேதங்களில்‌ ரிக்‌ வேதம்‌ முதலிலும்‌, அதைத்‌ தொடர்ந்து பெரிய கால இடைவெளியில்‌, யஜுர்‌, ஸாம, அதர்‌வண வேதங்களும்‌ வந்தன என்றும்‌ சில ஆராய்ச்சியாளர்கள்‌ கூறு வதை, ஹிந்து மத மஹான்கள்‌ ஏற்பதில்லை. இவை எல்லாமே ஒரே சமயத்தில்‌ கிட்டியவை என்றுதான்‌ அவர்கள்‌ கூறுகிறார்கள்‌; ரிக்‌ வேதத்திலேயே, மற்ற வேதங்களைப்‌ பற்றிய குறிப்புகள்‌ வருவதால்‌, இந்த நம்பிக்கையே ஏற்புக்கு உரியதாக இருக்கிறது.  ஒவ்வொரு வேதத்திலும்‌ சில கிளைகள்‌ – சாகைகள்‌ இருக்‌ இன்றன. இது தவிர ஒவ்வொன்றும்‌ மூன்று பகுதிகளாக இருக்‌ இன்றன. இவற்றிற்கு முறையே ஸம்ஹிதை, பிராம்மணம்‌, ஆரண்‌ யகம்‌ என்று பெயர்‌. ‘ஸம்ஹிதை’ என்றால்‌ ஒரு தொகுப்பு; இது மந்த்ரங்கள்‌ அடங்கியது. நான்கு வேதங்களின்‌ ஸம்ஹிதைகளில்‌, 20,000 மந்த்ரங்களுக்கு மேல்‌ அடங்கியிருக்கின்றன. 

‘புனிதமான நூல்‌! என்று ஓர்‌ அர்த்தமுடைய ‘பிராம்மணம்‌’ என்ற பகுதியில்‌, வேத ரீதியான சடங்குகள்‌ விவரிக்கப்படுகின்றன. இந்தச்‌ சடங்குகள்‌ எப்படிச்‌ செய்யப்பட வேண்டும்‌, மந்த்ரங்களின்‌ பொருளை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்‌ – என்பதையெல்‌ லாம்‌ பிராம்மணம்‌ விவரிக்கிறது. யாகங்களுக்கான வழிமுறையை யும்‌, அந்த யாகங்களில்‌ பயன்படுத்தப்படும்‌ மந்த்ரங்களின்‌ தன்மையையும்‌ கூறுகிற விளக்க உரை என்றும்‌ இதை எடுத்துக்‌ கொள்ளலாம்‌. 

அடுத்து வருவதுஆரண்யகம்‌’. ஆரண்யம்என்றால்காடு. இல்லறத்தில்ஈடுபட்டிருப்பவர்களுக்குத்தான்யாகங்கள்விதிக்கப்பட்டிருக்கின்றன. அவை, இல்லறத்தைத்துறந்து, காடுகளுக்குச்சென்று துறவு வாழ்க்கையை மேற்கொண்டு, தனிமையில்வாழ்பவர்களுக்காக நியமிக்கப்பட்டவை அல்ல. ஆனால்‌, வேதத்தில்விதிக்கப்பட்டுள்ள சடங்குகள்‌, வாழ்க்கை நலன்களைத்தருவன மட்டும்அல்ல: ஸம்ஹிதையில்கூறப்பட்டுள்ள மந்த்ரங்களை, பிராம்மணத்தில்விவரிக்கப்பட்டுள்ள முறையில்பயன்படுத்தி, சடங்குகளைச்செய்து வருகிறவன்‌, தூய மனதையும்பெறுகிறான்‌. அப்படி மனத்தெளிவு பெற்றுவிட்ட நிலையில்‌, அவன்தனிமையை நாடுகிறான்‌. அவன்மனம்தத்துவ விசாரணையில்இறங்குகிறது. அந்த நிலையில்ஒருவனுக்கு வழி காட்டுவதேஆரண்யகம்‌’ என்ற பகுதி.

பிராம்மணத்தில்கூறியுள்ளது போல யாகங்களை ஏன்செய்கிறோம்‌? அதில்பயன்படுத்தப்படுகிற, ஸம்ஹிதையில்வருகிற மந்த்ரங்களின்உட்பொருள்என்ன?” என்பதை ஆரண்யகம்விளக்குகிறதுஆரண்யகங்களின்முடிவில்வருவது உபநிஷத்துக்கள்‌. இது வும்வேதத்தின்ஒரு பகுதியே; ஆனால்இது பற்றித்தனியே பல பண்டிதர்கள்விளக்க உரைகள்கூறியிருப்பதாலோ என்னவோஉபநிஷத்துக்கள்‌, நடைமுறையில்வேதங்களுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட விஷயமாகப்பேசப்படுகின்றன. ஆனால்உண்மையில்‌, இதுவும்வேதத்தைச்சார்ந்ததே; வேதத்தின்முடிவு உபநிஷத்துஸம்ஹிதைஒரு மரமென்றால்‌, பிராம்மணம்‌ – அதன்பூக்கள்‌; ஆரண்யகம்‌ – அதில்உள்ள காய்‌; உபநிஷத்துஅது தருகிற பழம்என்று காஞ்சி மஹாஸ்வாமிகள்விளக்கியிருக்கிறார்‌. ஞானப்பாதையின்வழியே, இறை தத்துவம்பற்றியும்‌, ஆத்மா பற்றியும்புரிந்து கொண்டு, தளைகளை வெட்டி எறிந்து, மன விடுதலை பெறுகிற மார்க்கத்தைப்போதிப்பவை உபநிஷத்துக்கள்‌. 

உபநிஷத்துக்கள்வேதாந்தம்என்று அழைக்கப்படுகின்றன. அந்தம்என்றால்முடிவு; ‘ஆதியோடு அந்தமாகஎன்றால்ஆரம்பம்தொட்டு முடிவு வரை. வேதத்தின்முடிவு வேதாந்தம்‌; அது உபநிஷத்து. இந்தச்சொல்லிற்கு அர்த்தம்‌ – அருகே அமர்வது. ‘சடன்குருவின்அருகே அமர்ந்து கற்பது; இறைவனின்அருகே நெருங்க வழி காட்டுவது! என்ற விளக்கங்கள்உபநிஷத்து என்ற சொல்லிற்குக்கூறப்பட்டுள்ளன

ரிக்வேத ஸம்ஹிதையில்‌, அக்னி, இந்திரன்‌, வாயு, வருணன்‌, விஷ்ணு, ருத்ரன்‌, ஸரஸ்வதிஎன்று பல தேவர்கள்போற்றப்படுகின்றனர்‌. திருமணச்சடங்குகளில்இன்றும்கையாளப்படுகிற சடங்குகள்‌, ரிக்வேதத்தில்கூறப்பட்டிருப்பதன்அடிப்படையில்அமைந்துள்ளன. பின்னர்ப்புராணங்களில்கூறப்படுகிற சில நிகழ்ச்சிகளும்‌, இந்த மந்த்ர பாகமாகிய ஸம்ஹிதையில்குறிப்பிடப்படுகின்றன. வியாதி, விஷத்தினால்வரும்விளைவு ஆகிய வற்றை நீக்குகிற மந்த்ரங்கள்‌, கர்ப்பமாக உள்ள பெண்மணிக்குச்சுகப்பிரசவம்ஆவதற்காக உதவுகிற மந்த்ரம்போன்றவை இதில்உள்ளன. ‘ரிக்‌’ என்பதே மந்த்ரங்களைக்குறிக்கும்சொல்தான்‌; அவையே ரிக்வேதத்தில்முக்கியத்துவம்பெறுகின்றன

பசுக்களின்மேன்மை; உழவர்களின்உயர்வு; நதிகள்சிலவற்றின்பெருமை, மழை பொழிவதற்கான மந்த்ரம்‌; கிருஷ்ண அவ தாரம்‌, ராமாவதாரம்‌… ஆகியவை பற்றிய சில குறிப்புகள்‌… என்று பல விஷயங்கள்அடங்கியது ரிக்வேத ஸம்ஹிதை.  

யஜுர்வேதத்தில்முக்கியமாக பல யாகங்கள்விவரிக்கப்படு இன்றன. யஜுஸ்என்றால்துதிப்பது எனப்பொருள்கொள்ளலாம்‌. யாகம்எனப்படுகிற யக்ஞம்என்பதும்‌, இந்த வேரிலிருந்து வரு வதுதான்‌. யாகங்களுக்கான சடங்கு ரீதியான வழிமுறைகளைக்கூறுவது யஜுர்வேதம்‌. இந்த வேதம்‌, கிருஷ்ண யஜுர்வேதம்‌, சுக்ல யஜுர்வேதம்என்ற இரண்டு கிளைகளாகப்பிரிந்திருக்இறது. கிருஷ்ண என்றால்கறுப்பு; கிருஷ்ணனுக்குகரிய திரு மேனி! என்று கூறுகிறோம்அல்லவா? சுக்ல என்றால்வெண்மை. ஒவ்வொரு மந்திரத்திற்கும்ரிஷி யார்‌, அது எந்தச்செய்யுள்இலக்கியத்தில்அமைந்துள்ளது, அதன்குறிப்பிட்ட தேவதை யார்‌ – என்பதையெல்லாம்தெளிவாக விவரிப்பதால்‌, வெளிப்படையாகவெண்மையாக உள்ளது; அது சுக்ல யஜுர்வேதம்‌, மற்றொரு பிரிவு இப்படி ரிஷி, தேவதைகளின்விவரங்களைத்தெளிவாகக்கூறவில்லை; அது கிருஷ்ண யஜுர்வேதம்‌.

இப்படி இந்த வேதத்தில்இரு பிரிவுகள்உண்டானது தொடர்பான நிகழ்ச்சி, ஸ்ரீமத்பாகவதத்திலும்‌, விஷ்ணு புராணத்திலும்வர்ணிக்கப்படுகிறது. வைசம்பாயனர்என்கிற வியாஸரின்சீடர்‌, கடமை தவறிய குற்றத்திற்கு உள்ளானார்‌. அதைப்போக்கிக்கொள்ள, பிராயச்சித்தம்செய்வதற்காக முனைந்து அந்தப்பொறுப்பைத்தமதுடர்களிடம்ஒப்படைத்தார்‌. அவர்களில்யாக்ஞவல்கியர்‌ “மற்ற சீடர்கள்‌, இதையெல்லாம்சரியாக அறிந்தவர்கள்அல்ல. இந்தக்கடமையைச்செய்து முடிக்கும்திறன்படைத்தவன்நான்தான்‌! என்று கூறினார்‌. யாக்ஞவல்கியரின்இந்தப்பேச்சில்‌ ‘தான்‌’ என்கிற கர்வம்தொனித்ததால்‌, அவரைப்பார்த்து, ‘என்னிடம்நீ கற்ற வேதத்தைக்கக்கி விடு! என்று வைசம்பாயனர்உத்தரவிட்டார்‌. யாக்ஞுவல்கியரும்அவ்வாறே கக்கிவிட்டார்‌. வைசம்பாயனரின்வேறு சில டர்கள்‌ ‘தித்திரி என்ற பறவையாக மாறி, இதை உண்டு விட்டனர்‌. இத்திரி சாப்பிட்டது என்பதால்‌, இதுதைத்திரிய ஸம்ஹிதை! ஆயிற்று

இந்தக்கதையின்பொருளை நேரிடையாகப்பார்ப்பவர்கள்‌ ‘அட! ஒருவர்கக்கினாராம்‌! மற்றவர்அதைச்சாப்பிட்டாராம்‌! அது ஒரு வேத ஸம்ஹிதையாம்‌!’ என்று நினைக்கலாம்‌. இது தவறு. ‘அவன்உண்மையைக்கக்கிவிட்டான்என்று சொல்கிறோம்‌; ‘அவன்உண்மையை வாயின்வழியே வாந்தி எடுத்துவிட்டான்‌” என்றா அதற்கு அர்த்தம்‌? அவன்உண்மையைச்சொல்லிவிட்டான்என்பதுதானே பொருள்‌?

அதே போல இந்த நிகழ்ச்சிக்குகுரு வின்கோபத்திற்கு ஆளான யாக்ஞவல்கியர்‌, தாம்கற்றதை அங்கேயே விட்டுவிட்டார்‌ – என்பதுதான்அர்த்தம்‌. ‘தித்திரிஎன்ற பறவையாக மாறி, சிலடர்கள்அதைச்சாப்பிட்டனர்என்பதற்கும்பொருள்உள்ளது. ‘அவன்அப்படியே கொத்திக்கொண்டு போய்விட்டான்‌” என்றால்‌ ‘வாயால்கவ்விக்கொண்டு போய்விட்டான்‌” என்று அர்த்தமல்ல. ‘ஒரு விஷயம்சொன்னால்போதும்‌; அப்ப டியே கப்பென்று பிடித்துக்கொள்வான்‌’ என்றால்‌, கையில்இறுக அந்த விஷயத்தைப்பற்றிக்கொள்வான்என்பதல்ல அர்த்தம்‌. ‘சொன்னதை கிரஹித்துக்கொள்வான்‌’ என்பதே பொருள்‌. ‘இத்திரிஎன்ற ஒரு ரிஷி இருந்தார்என்று கூறப்பட்டிருக்கிறது என்பதை மனஇல்கொண்டால்‌ – ‘இத்திரி, யாக்ஞவல்கியர்கற்ற பாடத்தைக்கற்றார்‌  என்பதே இதற்குப்பொருள்‌! என்ற விளக்கம்ஏற்புடையது என்பது விளங்கும்‌.

இத்திரி என்ற ரிஷி மூலமாக வெளிவந்ததால்‌, அது தைத்திரிய ஸம்ஹிதை. யாக்ஞுவல்கியரோ, குருவின்ஆணைக்குப்பணிந்து, தாம்கற்ற விஷயங்களில்எந்த அதிகாரமும்தமக்கு இல்லை என்ற வகையில்அதைத்துறந்துபின்னர்த்தாமே முனைந்தார்‌; அவர்மூலமாக சுக்ல யஜுர்வேத ஸம்ஹிதை வந்ததுநமது நூல்கள்எல்லாம்பிதற்றல்‌ – என்று ஒரு தீர்மானத்தைச்செய்து கொண்டு, அந்த அடிப்படையில்‌, இந்த மாதிரி விஷயங்களுக்கு நேரிடை அர்த்தம்எதுவோ, அதையே எடுத்துக்கொண்டுஅவர்கக்கினார்‌; இவர்சாப்பிட்டார்‌; ஆக மொத்தம்அசிங்கம்‌’ – என்று முடிவு செய்பவர்கள்‌, எப்படிப்பட்டவர்கள்‌?

 ‘உன்னுடைய பாட்டனார்‌, திருக்குறளைப்பரிமேலழகர்உரையோடு அப்படியே, பக்கம்பக்கமாகக்கரைத்துக்குடித்தவர்‌! என்று ஒருவர்சொல்கிறார்என்று வைத்துக்கொள்வோம்‌. ‘ஐயய்ய/ நம்ம தாத்தா இப்படிப்பட்டவரா? திருக்குறளையும்‌, அதற்கு பரிமேலழகர்எழுதிய உரை யையும்‌, பக்கம்பக்கமாகக்இழித்து, தண்ணீரில்கரைத்து, அதைக்குடித்தாராமே! நல்ல தாத்தா வாய்த்தார்நமக்கு! சரியான பைத்தியம்‌!” என்று அர்த்தம்செய்து கொள்கிறவருக்கு நிகரானவர்கள்இவர்கள்‌. பாட்டனார்மீது மரியாதை உள்ளவன்‌, ‘ஆஹா! நமது பாட்டனார்எப்படிப்பட்ட சாதனையாளர்‌! இவ்வளவு உயர்ந்த விஷயத்தை, இத்தனை ஆழமாகக்கற்றவர்அவர்என்பது எவ்வளவு பெருமை யாக இருக்கிறது?! என்றுதான்நினைப்பான்‌. அம்மாதிரி அணுகு முறையோடு, இந்த விஷயங்களை நாம்அணுக வேண்டும்‌.  நமது இதிஹாசங்களையும்‌, புராணங்களையும்எழுதியவர்கள்மஹா கவிகள்‌. உபமான, உபமேயங்களைக்கையாள்வதில்வல்ல வர்கள்‌. அந்தப்பாண்டியத்துடன்விளங்கிய அவர்கள்கூறிய வற்றை, அதற்குரிய ரஸனையோடு நாம்அணுகினால்‌, விஷயம்ஓரளவாவது புரியும்‌. இல்லாவிட்டால்‌, அர்த்தம்அனர்த்தமாகும்‌. 

அக்னி ஹோத்ரம்பற்றியும்‌, ராஜஸுூயம்‌, அச்வமேதம்போன்ற பல யாகங்கள்பற்றியும்யஜுர்வேதம்விளக்குகிறது. வாக்கிற்கும்‌, மனதிற்கும்ஏற்பட்ட போட்டி; விஸ்வாமித்திரருக்கும்வசிஷ்ட ருக்கும்இடையே ஏற்பட்ட உரசல்‌ – போன்றவை கூறப்படு இன்றன. ஸ்ரீ ருத்ரம்என்ற, இன்றும்மிகப்பரவலாக ஓதப்படுகிற  சிவஸ்துதியும்‌, விஷ்ணுவின்வராஹ அவதார மகிமையும்இதில்உள்ளன.

கணிதம்‌, கலாச்சாரம்‌, அந்தக்கால நாகரிகம்போன்றவற்றைப்பற்றியும்யஜுர்வேதத்தின்மூலம்அறியலாம்‌.  ‘ஸாமஎன்றால்மன அமைதி, சமாதான வழிமுறை. ஸாம வேதத்தில்‌, அநேகமாக எல்லாமே ரிக்வேத மந்த்ரங்களாகவே இருக்கின்றன. ஆனால்அவற்றைச்சொல்கிற முறை வேறானது. அக்னி, இந்திரன்‌, ருத்திரன்‌, விஷ்ணு போன்றவர்கள்போற்றப்படுகிறார்கள்‌. விஷ்ணுவின்அவதாரங்களில்சில பற்றியும்ஸாம வேதம்கூறுகிறது. ‘ஸாமத்தை ஓதுவதால்‌ – ஸாமத்தை இசைப்ப தால்‌ – இன்புறுகிறவளே!’ என்று அம்பிகையை, லலிதா ஸஹஸ்ர நாமம்துதிக்கிறது. எனென்றால்‌, இதை ஓதுகிற முறை சங்கீதம்போல அமைக்கப்பட்டிருப்பதால்‌, இது காதுகளுக்கு மிகவும்இனிமை யானது

அதர்வண என்றால்புரோகிதன்‌. இந்தப்பெயரில்ஒரு ரிஷி யும்இருந்திருக்கிறார்‌. ரிக்வேத மந்த்ரங்கள்‌, தேவர்களைப்போற்று இன்றன; அதர்வண வேத மந்த்ரங்கள்அவர்களைப்போற்றி, காரியங்களை வேண்டுகின்றன. அறிவு வளர்ச்சி; நோய்தீர்ப்பு: வெற்றிக்கு வழி; சுகப்பிரசவம்‌; சிறுநீரகக்கோளாறு நீங்குதல்‌; இதய நோய்அகலுதல்‌; பாபத்தை நீக்குவது; பயத்தை விலக்குதல்‌;  ப்பயிர்கள்செழித்தல்‌ – போன்றவைக்கெல்லாம்பல மந்த்ரங்கள்‌. அதர்வண வேதத்தில்உள்ளன. விவசாய மற்றும்வர்த்தக விதிமுறை கள்‌; அரசு நிர்வாகம்‌; படை அமைப்பு; இதய நோய்‌, சருமநோய்நீங்குகிற வழிகள்‌; மூலிகை ரகஸ்யங்கள்போன்றவையும்பேசப்படுகின்றன. அரசியல்‌, மருத்துவம்‌, ஆயுதக்கலை போன்றவற்றுடன்‌, இறைவனுக்கும்ஆத்மாவிற்கும்உள்ள தொடர்பு பற்றிய விஷயங்களும்அதர்வண வேத ஸம்ஹிதையில்இருக்கின்றனஇவை பற்றியெல்லாம்பெரியவர்கள்பலர்சொல்லியிருப்பதை, நான்தந்துள்ளேனே தவிர, இவற்றை எல்லாம்படித்துத்தேர்ச்சி பெற்று விடவில்லை. சட்டம்பற்றி ஓர்அறிமுகமாவது இருக்க, வக்கல்களிடம்விளக்கம்கேட்க வேண்டும்‌. வேதங்கள்போன்ற நூல்கள்பற்றி அறிமுகம்கிட்ட, பண்டிதர்களிடமும்‌, பெரியவர்களிடமும்விளக்கம்பெற வேண்டும்‌. அந்த முயற்சியை மேலும்தொடர்வோம்