உல்க நன்மைக்காக…!

வேதங்களில்பல்வேறுபட்ட விஷயங்கள்அடங்கியிருக்இன்றன என்பதைப்பார்த்தோம்‌. அவற்றில்ஒன்று – ‘மணிகளைப்பற்றியது. அஇர்ஷ்டம்தரக்கூடிய கல்‌, ஆபத்தைப்போக்குகிற தாயத்து, தோஷத்தை நீக்குதிற கயிறு என்ற பலவித நம்பிக்கைகள்இன்றும்உள்ளன. இவை எல்லாவற்றையுமேமணி! என்ற வார்த்தையில்அடக்கி விடலாம்‌. புராணங்கள்கூட பல மணி கள்பற்றிப்பேசுகின்றன. ச்யமந்தக மணி என்ற ஒன்றைப்பற்றிய நிகழ்ச்சி மஹாபாரதத்திலும்வருகிறது. மணி என்பது எத்தகைய முக்கியத்துவம்வாய்ந்தது என்று அறிவதற்காக அந்த விவரத்தைப்பார்ப்போம்‌.  சத்ரஜித்என்ற மன்னன்‌, சூரியனை நண்பனாகப்பெற்றிருந்தான்‌. அவனுக்குத்தன்னுடைய பரிசாக ச்யமந்தக மணியைச்சூரியன்அளித்தான்‌. அதை முறையாகப்பூஜித்து அணிய வேண்டும்‌. இதைச்சத்ரஜித்தின்சகோதரன்ப்ராஸேனன்அணிந்து கொண்டான்‌. அவன்அந்த மணியை முறையாகப்பெற்றவனும்அல்ல; முறை யாகப்பூஜித்து அணிந்தவனும்அல்ல. அதை அணிந்து காட்டிற்கு வேட்டையாடச்சென்றபோது, அவன்ஒரு சங்கத்தினால்கொல்லப்பட்டான்‌.  எங்கத்திடமிருந்து ச்யமந்தக மணியைப்பெற்ற ஜாம்பவான்‌, தன்னுடைய குகைக்கு அதை எடுத்துச்சென்றான்‌.

இதற்கிடையில்‌,  ப்ராஸேனனைக்கொன்று, ச்யமந்தக மணியை, கிருஷ்ணர்தாம்அபகரித்துச்சென்றுவிட்டார்‌! என்று ஓர்அபவாதம்பர வியது. இதை அறிந்த இருஷ்ணர்‌, ச்யமந்தக மணியைத்தேடிப்புறப்பட்டு, ஜாம்பவானின்குகையில்நுழைந்து, அவனைத்தோற்கடித்து, மணியை மீட்டுச்சத்ரஜித்திடம்கொடுத்தார்‌. இது பத்ம புராணம்‌, ஹரிவம்சம்போன்ற நூல்களில்விவரமாகக்கூறப்பட்டிருக்கிறது. சத்ரஜித்தின்மகளான சத்யபாமாவை இருஷ்ணர்மணந்தார்‌.

ச்யமந்தக மணியைக்இருஷ்ணருக்குத்தர சத்ரஜித்முன்வந்தும்‌, இருஷ்ணர்அதை ஏற்கவில்லை. இதன்பிறகு ஒரு யாதவ அரச னாகிய சததன்வன்என்பவன்‌, சத்ரஜித்தைக்கொன்று, ச்யமந்தக மணியைக்கைப்பற்றினான்‌. இருஷ்ணர்சததன்வனைப்போரிட்டுக்கொன்றார்‌; ஆனால்அதற்கு முன்னதாகவே அவன்‌, ச்யமந்தக மணியை அக்ரூரன்என்ற மற்றொரு யாதவ அரசனிடம்கொடுத்து விட்டான்‌. மணியைப்பெற்ற அக்ரூரன்கடும்தவம்செய்தான்‌. பின்னர்த்துவாரகையில்கடுமையான பஞ்சம்நேரிட்டபோது, அக்ரூரனை வரவழைத்தால்‌, பஞ்சம்விலகுமென்று நம்பி, யாதவர்கள்அவனைத்துவாரகைக்கு அழைத்து வந்தனர்‌.

ச்யமந்தக மணி அவனிடமே இருப்பதுதான்சரி என்று கிருஷ்ணர்முடிவு செய்தார்‌. மணி, முறையற்று அதைப்பெற்ற ப்ராஸேனனிடம்தங்க வில்லை; அதை மீண்டும்பெற்றபோது, முறையான பூஜையைச்செய்யாததால்அது சத்ரஜித்தையும்காப்பாற்றவில்லை; முறை யாக அதைப்பூஜித்து வந்த அக்ரூரனிடமே அது தங்கியது. இப்படி மிகவும்கவனமாகக்கையாளப்பட வேண்டிய இந்த மணி! இப்போது, தபால்மூலம்தருவித்துப்பெறுகிற அளவிற்கு மலிவான விஷயமாகிவிட்டது; பலனும்அதற்குத்தகுந்தாற்போல்தான்இருக்கும்‌. வேதங்களில்வருகிற குறிப்புகளின்படி பல மணிகள்இருக்கின்றன. தாமரை மணி, ருத்ராக்ஷ மணி, அத்தி மரத்தினால்ஆன மணிஎன்று பல. புற்று நோயை நீக்குவதற்கும்கூட ஒரு மணி கூறப்பட்டிருக்கிறது. ஆனால்ஒரு குரு, இதை ஒரு வனுக்கு அணிவிக்க வேண்டும்‌; பின்னர்அதற்குரிய பூஜையை யும்செய்ய வேண்டும்‌. இவை மந்த்ரம்சார்ந்த வழிமுறைகள்‌.  மணிகள்தவிரபுற்று நோய்நீங்க, சில சரும நோய்கள்நீங்க, சில கடுமையான காய்ச்சல்கள்நீங்க, மஞ்சள்காமாலை நீங்க, சுகப்பிரசவம்நேரிட, இருமிகளைப்போக்க, விஷ முறிவு செய்யஎன்று பல வியாதிகளை நீக்குவதற்கான மந்த்ரங்கள்‌. வேதங்களில்கூறப்பட்டிருக்கின்றன.  “இவற்றைப்படித்து, இன்று ஓதினால்‌, கூறப்பட்டுள்ள பலன்இட்டுமா?’ என்ற கேள்வி எழலாம்‌. சரியாகப்புரிந்து கொண்டு, முறையாக ஓதினால்பலன்கடைக்கும்‌. நாம்இதை சரியாகச்செய்யாமல்‌, வேதத்தின்மீது பழி போடுவதில்அர்த்தமில்லை.

 டாக்டரிடம்போகிறோம்‌. அவரிடம்நோய்குணமாகவில்லை என்றால்‌, ‘இந்த டாக்டர்சரியில்லைஎன்று இர்மானித்து, வேறு டாக்டரைப்பார்க்கிறோமே தவிர, மருத்துவமே பொய்என்ற முடிவிற்கு நாம்வருவதில்லை. அதுபோல, மந்த்ரத்தைப்பிரயோகம்செய்கிறவருடைய தவறுக்கு, மந்த்ரத்தைப்பழிப்பது என்ன நியாயம்‌? அந்தந்த மந்தீரங்களுக்கு, குறிப்பிட்ட மூலிகைகளும்உள்ளன என்பதையும்மறந்துவிடக்கூடாதுஇப்படி, மருந்துகள்போன்ற மந்த்ரங்களைக்கூறுகிற வேதத்இல்‌, குறிப்பிட்ட பவனை வேண்டி ஓதுவதற்கான மந்த்ரங்களும்உள்ளன. மழை பொழிவதற்கு, செல்வம்இட்டுவதற்கு, மக்கட்பேறு பெறுவதற்கு, பயிர்நன்றாக வளர்வதற்கு, குடும்பத்தினர்நலமுடன்வாழ்வதற்கு, நல்ல ஆயுள்கிட்டுவதற்கு, கடன்தொல்லை அறவே இல்லாமற்போவதற்கு, ஒரு பெண்ணிற்கு நல்ல கணவன்இட்டுவதற்குஎன்று பல பலன்களைப்பெறுவதற்காக, வெவ்வேறு மந்த்ரங்கள்வேதங்களில்கூறப்பட்டுள்ளன.

இது தவிர, விரோதியை வீழ்த்துவதற்கும்‌, யாவரையுமே உறக்கத்தில்ஆழ்த்துவதற்கும்கூட மந்த்ரங்கள்உள்ளனஎந்த மந்த்ரத்திற்குமே, அதற்கென்று விதிக்கப்பட்டுள்ளசெய்முறை! – சடங்குஉண்டு. அதைப்புரிந்து கொண்டு, அதை முறையாகக்கடைப்பிடிக்காவிட்டால்‌, மந்த்ரம்பயனைத்தராதுஇவ்வாறான மந்த்ரங்கள்எல்லாம்ஒருபுறமிருக்க, வேதங்களில்முக்கியமாகக்கூறப்படுவது யாகங்களே. வேதங்களில்‌ 27 யாகங்கள்வர்ணிக்கப்பட்டிருப்பதாகக்கூறப்படுகிறது. இவற்றில்பயன்படுத்தப்பட வேண்டிய பொருட்கள்எத்தகையவையாக இருக்க வேண்டும்என்பதும்விவரிக்கப்பட்டிருக்கிறதுகரண்டி எந்த மரத்தினால்‌, என்ன நீளம்உடையதாகச்செய்யப்பட வேண்டும்‌; மண்பாத்திரங்கள்எந்த அளவில்இருக்க வேண்டும்போன்றவை கூட கூறப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு யாகத்இற்கு அதற்காகக்குறிப்பிடப்பட்ட பொருள்களைத்தாம்பயன்படுத்த வேண்டும்‌. வேங்கை மரத்தினால்செய்யப்பட்டவை, கருங்காலி மரத்தினால்செய்யப்பட்டவை, மூங்கிலினால்செய்யப்பட்டவைஎன்ற இப்பொருள்களின்விதிமுறைகள்மீறப்படத்தக்கவை அன்றுயாகங்கள்நடத்தப்படுவது, பொதுவாக உலக நன்மைக்காகவே. ‘யாகத்தில்அக்னியில்கொடுக்கப்பட்ட அர்ப்பணம்‌, சூரி யனைச்சென்று அடைகிறது; சூரியனின்வெப்பத்தினால்‌, சமுத்திர நீர்ஆவியாகி மழை பொழிகிறது; மழையினால்உணவு உற்பத்தி நடக்கிறது; அந்த உணவினால்மனிதர்கள்உயிர்வாழ்கின்றனர்‌’ என்று மனு கூறியிருக்கிறார்‌.

வேத மந்த்ரங்களின்ஒலியினால்எழுப்‌  பப்படுகிற சப்த அலைகள்இதை சாதிக்கின்றனஉலகில்உள்ள எல்லா மனிதர்களுக்கும்மட்டுமல்லாமல்‌, சகல ஜிவராசிகளுக்கும்நன்மையை வேண்டி நடத்தப்படுகிறவையே யாகங்கள்என்பது, ஒரு வேத மந்த்ரத்திலிருந்தே தெளிவாகப்புரி கிற விஷயம்‌.  தச்சம்யோராவ்ருண்மஹே காதும்யஜ்ஞாய  காதும்யஜ்ஞபதயே  தைவீ: ஸ்வஸ்திரஸ்து ஸ்வஸ்திர்மானுஷேப்யஊர்த்வம்ஜிகாது பேஷஜம்‌  சந்நோ அஸ்து த்விபதே  சஞ்சதுஷ்பதே  ஓம்சாந்தி: சாந்தி: சாந்தி:

நிகழ்கால துன்பத்திற்கும்‌, எதிர்கால துன்பத்திற்கும்நிவாரணம்அளிக்கிற நற்கர்மம்எதுவோ, அதை ஆர்வத்துடன்வேண்டு கிறோம்‌. யாகத்தைச்செய்பவனுக்கு நற்பயன்கிட்ட வேண்டு இன்றோம்‌.  “நமக்கு தேவதைகளின்அருள்இட்டட்டும்‌. மனித சமூகத்இற்கு க்ஷேமம்உண்டாகட்டும்‌.  **செடி, கொடிகள்மேலோங்கி வளரட்டும்‌.  “இரண்டு கால்படைப்புகளிடம்சுபம்உண்டாகட்டும்‌;  “நான்கு கால்படைப்புகளிடம்சுபம்உண்டாகட்டும்‌.  “அமைதி நிலவட்டும்‌”.  யாகத்தின்போது ஓத வேண்டிய இந்தத்துதியை வேதம்கூறு இறது. யாகங்கள்சகல ஜீவராசிகளுக்கும்நன்மை உண்டாக வேண்டும்என்ற உயர்ந்த நோக்கமுடையவை என்பதை இந்த மந்த்ரம்நமக்கு உணர்த்துகிறது என்றால்‌ – மற்றொரு வேத மந்த்ரம்மற்று மோர்உயர்ந்த எண்ணத்தை வெளிப்படுத்துகிறது

யதிஹ கோரம்யஇஹ க்ரூரம்யதிஹ பாபம்‌  தச்சாந்தம்தச்சிவம்ஸர்வமேவ சமஸ்து :  “இங்கே எவையெல்லாம்பயங்கர சக்திகளாக உள்ளனவோ, இங்கே எவையெல்லாம்கொடூரமான சக்திகளாக உள்ளனவோ, இங்கே எவையெல்லாம்பாவத்தினால்உந்தப்பட்டு இயங்குகின்றனவோஅவை அனைத்தும்நிதானமடைந்து, அமைதி பெறட்டும்‌. எல்லாமே நன்மையை நாடட்டும்‌”.  அதாவது, இய சக்திகளையும்நல்வழிப்படுத்த வேண்டும்என்ற சரிய நோக்கத்தைக்கொண்டது வேதம்என்பதைத்தானே இது காட்டுகிறது! இவ்வாறு உயர்ந்த விஷயங்களைச்சொல்கிற வேதங்களில்‌, ஒலியின்முக்கியத்துவம்கருதியோ அல்லது மந்த்ரத்தின்மஹிமை கருதியோ பல விஷயங்கள்மறைபொருளாகக்கூறப்பட்டிருக்கின்றன. இதுவே, பல தவறான கருத்துகளுக்கும்‌, விளக்கங்களுக்கும்இடம்வகுத்துவிட்டதுஎன்பதை ஏற்கெனவே பார்த்தோம்‌.  யாகங்கள்தொடர்பாகவும்இந்த மாதிரி தவறான விளக்கங்களும்‌, அவற்றையொட்டிய விமர்சனங்களும்வந்துவிட்டன. அவற்றில்சிலவற்றைப்பார்ப்போம்‌.