வேதங்களில் கூறப்பட்டு, பின்னர் அவற்றையொட்டிய நூல்களில் விளக்கப்பட்டுள்ள யாகங்கள் இருபத்தியொன்று. பின்னர் வந்த ரிஷிகள் வேறு சில யாகங்களையும் குறிப்பிடு இறார்கள் என்று கூறப்படுகிறது. பல யாகங்களில் ஸோம ரஸம் முக்கியமான இடம் பெறுகிறது. மேலைநாட்டு ஆராய்ச்சியாளர் கள் ‘ஸோம பானம் என்பது மது; ரிஷிகள் அதைக் குடித்திருக் இன்றனர்’ என்று விமர்சனம் செய்து, ரிஷிகளைக் குடிகாரர்களாக வர்ணித்துவிட்டனர். இதுவே இறுதித் தீர்ப்பு ஆகிவிட்டது. ஆனால் உண்மையில் ஸோம ரஸம், மது அல்ல. ‘சந்திரனை தலைவனாகக் கொண்ட மருந்துச் செடிகள் பூவுலகில் தோன்றின; அவற்றில் சிறப்பு வாய்ந்த ஸோமக் கொடியே! எங்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவாயாக! அதன் பொருட்டு உன்னுடைய ரஸத்தை எங்களுக்குக் கொடுப்பாயாக!” என்று ஸோமலதை என்கிற ஸோமக் கொடி போற்றப்படுகிறது. ஸோமன் என்றால் சந்திரன்; அவனிட மிருந்து வந்ததால் அது ஸோமக் கொடி – ஸோமலதை; அதன் ரஸம், ஸோம ரஸம், ஸோம பானம். ஸுரா பானம் என்பதுதான் மது; அதை உட்கொள்வது இகழப்பட்டிருக்கிறது. ஸோம ரஸம் தெய்வத் தன்மை வாய்ந்தது என்பதால்தான், ‘தேவர்கள் அமிர்தம் உண்டு மரணமற்ற தன்மையை எய்தினார்கள்; ரிஷிகள ஸோம ரஸத்தைப் பருகி, அத்தன்மையை அடைந்தனர்! என்று கூறப்பட்டிருக்கிறது.
யாகங்கள் மிகவும் வலிமை பெற்றவை. தக்ஷகன் என்ற பாம்பு கடித்து, தன் தந்தையான பரீட்சித் இறந்ததால், அவனுடைய மகன் ஜனமேஜயன், பாம்புகள் எல்லாவற்றையும் அழித்து விடுவது என்ற இர்மானத்துடன், யாகம் நடத்தினான்; யாகத்தைச் செய்வித்த முனி வர்கள் மந்திரங்களை ஓத ஓத, பாம்புகள் எங்கிருந்தாலும், அவற்றிற் காக மூட்டப்பட்ட தீயில் வந்து விழுந்த வண்ணமாக இருந்தன.
‘தக்ஷ்கனே வா! வந்து இயில் விழு! என்று ஆணையிட்டு, முனிவர்கள் மந்திரம் ஓத, தக்ஷகன் செய்வதறியாமல் இணறி, இந்திரனை நாடி, அவனிடம் சரணடைந்தான். தக்ஷகன் வராதது கண்ட முனிவர்கள், அவன் இந்திரனிடம் தஞ்ச மடைந்திருப்பதை உணர்ந்தனர். அவர்களிடமிருந்து இதையறிந்த ஜனமேஜயன், இந்திரனுடன் சேர்ந்தே தக்ஷகன் இயில் விழட்டும் என்று கூற, ‘தக்ஷகனே வா! இந்திரனுடன் சேர்ந்து வந்து இயில் விழுவாயாக[‘ என்று ஆணையிட்டு, மந்திரம் ஓதினர் முனிவர் கள். மந்திரத்தின் வலிமையால், இந்திரனுடன் சேர்ந்தே தக்ஷகன் இழுக்கப்பட்டான். தான் தப்பித்தால் போதும் என்று இந்திரன் தக்ஷ்கனை கைவிட, நெருப்பை நோக்கி தக்ஷகன் விழுந்து கொண் புருந்தபோது, ஆஸ்தீகர் என்ற ரிஷி தலையிட்டு, பாம்புகளுக்குப் பாதுகாப்புக் கோரி ஜனமேஜயனிடம் முறையிட, அவருடைய வேண்டுகோளை நிறைவேற்றுவதாக ஏற்கெனவே வாக்களித்திருந்த ஜனமேஜயன், அவருடைய கோரிக்கையை ஏற்று, தக்ஷகனுக்கும் மற்ற ஸர்ப்பங்களுக்கும் விடுதலை அளித்தான். இப்படிப்பட்ட சக்தி வாய்ந்தவை யாகங்கள். மக்கட்பேறு இல்லாத தசரத மன்னன், யாகம் செய்து மகன்களைப் பெற்றான் என்று ராமாயணம் கூறுகிறது;
துரோணனை வெல்லக் கூடிய ஒரு மகனும், அர்ஜுனனை மணக்கத்தக்க ஒரு மகளும் வேண்டுமெனக் கோரி, துருபத மன்னன் யாகம் நடத்தி னான்; த்ருஷ்டத்யும்னனும், திரெளபதியும் யாகத்தின் அக்னி குண்டத்திலிருந்து தோன்றினர். இது மஹாபாரதத்தில் வருகிற நிகழ்ச்சி. யுவனாச்வன் என்கிற பெயருடைய ஒரு மன்னன், மகன் பிறக்க வேண்டும் என்பதற்காக யாகம் நடத்தினான். யாகம் செய்வித்த முனிவர்கள் தந்த புனித நீரை மனைவிக்குத் தருவதற்கு பஇலாக, தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காகத் தானே அருந்தி விட்டான் யுவனாச்வன். இயற்கை விதிகளுக்கு விரோதமாக அவனே கர்ப்பமுற்று, ரண சிஇிச்சை நடந்து, அவன் ஒரு மகனைப் பெற்றான். (அவனுடைய மகன் மாந்தாதா. இவன் இக்ஷ்வாகு குல மன்னர் களில் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்களில் ஒருவனாக விளங்கினான். ) _
‘இது இவ்வாறானால், வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் யாகங்களை இன்று நடத்தி, அவற்றின் பலனை நாம் பெற முடி யுமா?’ என்று கேட்கலாம். முடியும். நியம நிஷ்டைகள் பிசகாத, சத்யம் தவறாத, வேதங்களைக் கற்றறிந்த, யாக வழிமுறைகளை நன்கறிந்த, நெறி தவறாத, சகல ஜீவராசிகளையும் சமமாகப் பார்க் இற வேதியர்களைக் கொண்டு, யாகம் செய்வித்தால் – அதற்குரிய பலன் நிச்சயமாகக் கிட்டும். ஆனால் அப்படிப்பட்ட தகுதிகள் படைத்தவர்கள் இன்று எங்கிருக்கிறார்கள்? இருதயத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டும்;
நமது ஊரில் ஆஸ்பத்திரியும் இல்லை, சர்ஜனும் இல்லை; யாரோ ஒருவரிடம், ஒரு கத்தி இருக்கிறது; ‘அவரிடம் சென்று ஆபரேஷன் செய்து கொண்டால், இருதயம் குணமாகி விடுமா? என்று கேட்டால் என்ன சொல்வது? அதற்குரிய படிப்புப் படித்து, பயிற்சி பெற்று, அனுபவத்தையும் அடைந்தவரிடம் – சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் காப்பாற்றப்படுகிற இடத்தில், ஆபரேஷன் செய்து கொண்டால், இருதயம் குணமடையும். அது போலவே, தகுதி யுடையவர்கள் செய்வித்தால் யாகங்களும் பலன் தரும். இது ஒருபுறமிருக்க, யாகங்களைப் பற்றி, தற்கால ஆராய்ச்சி யாளர்கள் கூறுகிற ஒரு விமர்சனம் ‘யாகங்களில் உயிர்ப் பலி இடம் பெற்றது! என்பதே. ‘அச்வமேத யாகத்தில் குதிரை கொல்லப் பட்டது; கோமேதத்தில் பசு கொலை செய்யப்பட்டது; இவ் வளவு ஏன் – புருஷமேதம் என்ற யாகத்தில் மனிதனே கொல்லப் பட்டான்! நரபலி! கொடூரம்! என்பது இவர்களுடைய விமர்சனம். இப்படிப்பட்ட விமர்சனம் எழுவதற்குக் காரணம், வேதங்! களில் வருகிற பல விளக்கங்களுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன என்பதுதான். அதில் உயர்ந்த பொருளைக் கழித்துவிட்டு, தவறான கருத்து உருவாக இடம் தருகிற அர்த்தத்தையே எடுத்துக் கொள்வதால், விளைகிற அனர்த்தம் இது.
‘ஒரே விளக்கத்திற்கு நல்ல அர்த்தமும், விகாரமான அர்த்தமும் இருந்தால், நான் விகா ரத்தையே எடுத்துக் கொள்வேன்! என்று பிடிவாதம் பிடிப்பவர் களிடம் வாதிட்டுப் பயனில்லை. சாதாரண சொற்களில் கூட, இந்த இரட்டை அர்த்தம், குழப் பத்தை விளைவிக்கக் கூடியது. நல்ல பாண்டித்யம் பெற்ற, ஸ்ரீ சங்கர நாராயணன் என்பவர் சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் நிகழ்த்திய தமது பிரசங்கங்களில் இதைப் பற்றி, அழகாக விளக்கி னார். ‘ஸைந்தவம்’ என்றால் உப்பு; ‘ஸிந்து‘ என்றால் கடல்; அதிலிருந்து வருவது ஸைந்தவம் – உப்பு. உணவில் ஸைந்தவம் இருக்க வேண்டியது அவசியம் என்றால், சாப்பாட்டில் உப்பு இருக்க வேண்டும் என்று அர்த்தம். ஆனால் ‘ஸைந்தவம்’ என்ப தற்கு குதிரை என்றும் ஒரு பொருள் உண்டு. இதை வைத்துக் கொண்டு, ‘உணவில் ஸைந்தவம் வேண்டும்” என்றால், ‘சாப்பாட் பூல் குதிரை – அதாவது குதிரை மாமிசம் – கேட்கிறார், இந்த முனிவர்!” என்று விமர்சித்தால், அது உள்நோக்கத்துடன் செய்யப் படுகிற விமர்சனமே தவிர வேறென்ன?
இந்திரனை வேதம் ‘வ்ருஷண‘ என்று வர்ணிக்கிறது. வ்ருஷு என்ற மூலச் சொல்லிலிருந்து வருவது இது. வ்ருஷு என்றால் பொழிவது; மழையைப் பொழிகிறவன் வ்ருஷணன். ஆனால் பிற் கால ஸம்ஸ்க்ருதத்தில் – உயிர் அணுவைக் கொட்டுவதால், ஆண் குறிக்கும் இந்தப் பெயர் வந்தது. இதை வைத்துக் கொண்டு “இந்திரனை விகாரமாக வர்ணிக்கிறது வேதம்” என்று சொல்வதா? அன்பைக் குறிக்கிற, ஜ்ரு – ஜரு – என்ற வேர்ச் சொற்களி லிருந்து ‘ஜார‘ என்ற சொல் வந்தது; பின்னர் இதுவே கள்ளக் காதலனைக் குறிப்பதாகவும் ஆகியது. வேதத்தில், ஜார: கனீனாம் பதிர் ஜனீனாம்’ – என்று அக்னி தேவன் வர்ணிக்கப்படுகிறான். –இதன் ஒரு பொருள் : தன் சகோதரிகளின் கள்ளக் காதலன்; தன்னுடைய தாய்மார்களின் புருஷன்
இந்த அர்த்தத்தை வைத்துக் கொண்டு, பழங்கால ரிஷிகளைக் காட்டுமிராண்டிகள் என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் சிலர். விமர்சிக்றொர்கள். ஆனால் ‘கனி‘ – ‘கனிஷ்ட‘ என்ற சொற்களுக்கு ‘இிறியது” என்பது பொருள்; சுண்டு விரல் – கனிஷ்ட; ‘ஜனீனாம்’ என்றால் உற்பத்தியாகிறவை. *ஜார: கனீனாம் பதர் ஜனீனாம்” – என்றால், இறியவர்களிடமும் அன்பு கொண்டவர்; உற்பத்தி யாகிறவை அனைத்துக்கும் பாதுகாவலன்!
இப்படி அக்னி போற்றப்படுகிறான். இந்த நல்ல அர்த்தத்தைப் பார்க்கமாட்டோம் என்று பிடிவாதம் பிடித்து, தவறான பொரு ளையே கற்பிப்பது, வறட்டுத்தனம் என்று நாம் புரிந்து கொண் டால் போதும். தந்திர சாத்திரத்தில், ஒரு வாக்கியம் : கங்கா யமுனையோர் மத்யே யத்ர ரண்டா தபஸ்வினி‘ பலாத் ஆக்ருஷ்ய இஞ்ஜீதா: தத் விஷ்ணோர் பரமம் பதம் இதற்கு ஒரு பொருள் : ‘கங்கை, யமுனை ஆகிய நதிகளின் கரைகளுக்கு இடையில், கணவனை இழந்த ஓர் அப்பாவிப் பெண் இருக்கிறாள். பலாத் காரமாக அவளை நீ அடைந்தால், அதுதான் உயர்ந்த பரமபதம்’. இந்தப் பொருளை எடுத்துக் கொண்டால், அந்த வாக்தியமே அயோக்கியத்தனமாகி விடும்
ஆனால் அந்தவாக்கியத்திற்குஉண்மையானஅர்த்தம் இதுவல்ல. *இடதுநாசி, வலதுநாசிமூச்சுக்களுக்கு, யோகசாத்திரத்தில் கங்கை, யமுனைஎன்றுபெயர்கள் உண்டு. இவற்றிற்கிடையேசெல்கிறகுண்டலினிசக்தியோ, கணவனைஇழந்தபெண்போலகேட்பாரற்றுக் டெக்றது; நீமுனைந்து, அதைஉன் வசமாக்கினால், அதுவேஉயர்ந்தபரமபதம்’ – என்றுகூறுகிறதுதந்திரசாத்திரம். இதைத் தவறாகப் புரிந்துகொண்டு, தந்திரசாத்திரம் விரசங்கள் நிறைந்ததுஎன்றுகூறுவதுஒருவழி; இதற்குக் கூறப்பட் டுள்ளசரியானஅர்த்தத்தைஏற்று, இதுயோகவழிமுறையைப் பேசுகிறதுஎன்றுபுரிந்துகொள்வதுமற்றொருவழி. நாம் பின்னதைமேற்கொள்வோம்.