யாகங்களைப் பற்றிய சில விவரங்களைச் சென்ற அத்தி யாயத்தில் பார்த்தோம். வேதங்களில், யாகங்களுக்குச் சிறப்பிடம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் கவனித்தோம். பகவத் கீதையில் யாகத்தின், அதாவது வேள்வியின் மேன்மை பற்றி ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனுக்கு இப்படி விளக்கு கிறார் : ‘ “அன்னத்தால் உயிர்கள் சமைகின்றன; மழையினால் உணவு தோன்றுகிறது; மழை வேள்வியினால் இட்டுகிறது; வேள்வி செய்கையிலிருந்து பிறக்கிறது; ‘ செய்கை பிரம்மத்திடமிருந்து கிடைக்கிறது; பிரம்மம் அமிர்தத்தில் தோன்றுகிறது; ஆகையால், எங்கும் நிறைந்த பிரம்மம், வேள்வியில் நிலை பெற்றது”. இப்படிக் கூறிய கிருஷ்ண பகவான், ”முன்பு பிரம்ம தேவன், யாகத்துடன் சேர்ந்தே, உயிர்களை ஒருமிக்கப் படைத்து ‘இதைப் பருகுங்கள்; உங்கள் விருப்பங்களை இது உங்களுக்குப் பெற்றுத் தரும்! என்று கூறினான்” என்றும் சொல்லியிருக்கிறார். இப்படி யாகத்தின் பெருமையைப் பற்றிப் பேசுகிற பரமாத்மா, அதே பகவத் கீதையில் மற்றோர் இடத்தில், இப்படிச் சொல்கிறார்:
“வேதங்களின் வெளியுரையில் மகழ்வோர்கள் சிலர், மலர்களை அடுக்குவது போல சொற்களைப் பேசுகிறார்கள். தாங்கள் சொல் வதைத் தவிர, வேறு எதற்கும் இடமில்லை என்று அடித்துக் கூறுகிற ‘வேத வாத ப்ரியர்கள்’ ஆன இவர்கள், சுகத்தில் பற்று கொண்டு, செய்கைக்குப் பயன் வேண்டுபவர்கள்; பல வகை யான சடங்குகளை வலியுறுத்திப் பேசுகிற இவர்கள் சொல்வதை அப்படியே ஏற்பவனின் மனம், பயனில் விருப்பம் கொண்டு, பிரம்மத்திடம் நிலை பெறாமற் போகும்’.
இதைப் படிக்கும்போது, ‘யாகத்தின் மேன்மையை விளக்கிய ஸ்ரீ கிருஷ்ணரே, அவற்றை இடித்தும் பேசுகிறாரோ?’ – என்ற கேள்வி சிலர் மனதில் எழலாம். வேத வாத ப்ரியர்கள் – என்று யாரைக் குறிப்பிட்டு, இங்கு ஸ்ரீ கிருஷ்ணர் பேசுகிறார் என்பதைக் கவனித்தால், இந்தக் கேள்விக்கு இடமிராது. பயனை விரும்பி – அந்தப் பயன் ‘ஸ்வர்க்கம் கிட்ட வேண்டும்! என்பதாக இருந் தாலும் சரி – வேள்விகளை நடத்தி, அதற்கு ஈடு எதுவுமில்லை என்று வாதிடுகிறவர்களைத்தான், இங்கே வேத வாத ப்ரியர்கள் என்று பகவான் சொல்கிறார். யாகங்களின் இறுதி லட்சியம், தன்னைத்தானே உணர்வது; தான் என்ற எண்ணத்தையே அழிப்பது. வேதத்தின் அகராதி எனக் கருதத்தக்க நிருக்தம் ‘யாகத்தைப் பற்றிய அறிவு, தெய்வத்தைப் பற்றிய அறிவு, தன்னைப் பற்றிய அறிவு” என்ற மூன்றையும் வலி யுறுத்துகிறது.
வேத மந்த்ரங்களிலிருந்து இந்த மூன்றையுமே உணர வேண்டும் என்று நிருக்தத்தை இயற்றிய யாஸ்கர் கூறுகிறார். இதை மறந்து, தனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்பதை மட்டுமே லட்சியமாகக் கொண்டு, யாகம் செய்வதை வலியுறுத்து பவர்கள் பற்றித்தான் கிருஷ்ணர் வேத வாத ப்ரியர்கள் என்று இடித்துச் சொல்கிறார். யாகங்களின் உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது, பிற்காலத்தில் முன் வைக்கப்பட்ட கருத்து என்றும், இவற்றில் சில உட்கருத்துக்கள் இருப்பதாகக் கூறியதும்கூட, பிற்கால விளக்க உரையாளர்களே என்றும் சிலர் வாதிடுகிறார்கள். இது தவறு. வேதங்களிலேயே, இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்பது, பல பண்டிதர்களால் சுட்டிக் காட்டப்பட்டிருக் கிறது. இதை மேலும் விளக்குவதற்கு மஹாபாரதம் போன்ற இதி ஹாசங்கள் பயன்படுகின்றன. உதாரணத்திற்கு, ‘வ்ருத்ரன் என்ற அசுரனைக் கொன்று, அவ னிடம் பிடிபட்டிருந்த மேகத்தை விடுவித்து, மழையைப் பொழி வித்தான் இந்திரன் என்பதை விளக்க, வேதமே வழி செய்கிறது. வ்ருத்ரன் இருளைக் குறிப்பதாகவும், இந்திரன் அந்த இருளை நீக்கி, ஞானம் என்கிற மழை பொழிவதற்கு வழி செய்வதாகவும் அர்த்தம் கொள்ள வேதத்தில் இடமிருக்கிறது. இது போதாது என்றால், மஹாபாரதத்தில், அனுசாஸன பர்வத் இல் இது மேலும் விளக்கப்படுகிறது. வ்ருத்ரன், நம்மிடமே இருக் இறான்; அதுதான் நம்மிடம் உள்ள இருள். அதைப் போக்கத்தான் நாம் வழி தேட வேண்டும். அதுதான் வேதம் கூறுகிற துதி.
இப்போது ஒரு சந்தேகம் வரலாம். உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, வேத மந்திரங்களை ஓதுவதுதான் சரி என்றால் – பல பயன்களை வேண்டி நடத்தப்படுகிற யாகங்கள் அர்த்தமற்ற காரி யங்களா? அதனால் ஒரு பயனும் கிட்டாதா? இன்று யாகங்கள் பெரிய அளவில் நடக்காவிட்டாலும், ஹோமங்கள் நடக்கின்றன. அவையெல்லாம் வீணா? இல்லை. வேண்டிய பலன் கிட்டுவது என்று பார்த்தால், அவை வீண் அல்ல; ஆனால் இறுதி உண்மையை உணர்வது என்று பார்த்தால், இவை வீணே. இறுதி உண்மையைப் பொறுத்த வரையில், பயன் வேண்டப்பட்டுச் செல்கிற பாதை, பயனற்ற பாதையே. இதையே ஓர் உதாரணத்தின் மூலம் பார்ப்போம். ஒரு மாண வன் கல்லூரியில் ஃபிசிக்ஸ் படிக்கிறான். பெரிய விஞ்ஞானியாக வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு இருக்கிறது. நன்றாகப் படித்துப் பிரமாதமாக மார்க் வாங்கி பாஸ் செய்கிறான். இதை வைத்துக் கொண்டு, அவன் விஞ்ஞானி ஆகிவிட முடியாது. அப் படியானால் அந்தப் படிப்பு வீணா? ஆம்; விஞ்ஞானி ஆவது என்ற வகையில் வீண்தான். ஆனால் பரீட்சையில் பாஸ் ஆவது என்ற பயனை அந்தப் படிப்புத் தரத்தான் செய்யும்; அந்த வகையில் அது வீண் அல்ல. விஞ்ஞானி ஆவதற்கு, ஒருவன் பல வருடங்கள் பிரயாசைப் பட வேண்டியிருக்கும். பலப்பல சோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பல நிபுணர்களின் கழ் பணிபுரிய வேண்டியிருக் கும். ஃபிசிக்ஸ் பாடத்தில் வாங்கிய மார்க் இதற்கு பயன்படாது.
அதே போல பயனை வேண்டி செய்யப்படுகிற யாகம், ஒரு மனி தனுக்கு, தன்னை உணர்ந்தவன் என்ற நிலையைத் தந்து விடாது. எப்படி ஃபிசிக்ஸ் பாடத் தேர்ச்சி, ஒருவன் விஞ்ஞானியாவதற்கு முதற்படியோ, அதே போல ஒருவன் தன்னை உணர்கிற நிலையை அடைவதற்கு யாகம் ஓர் ஆரம்ப நிலை – அவ்வளவுதான். அதுவே இறுதி சாதனை அல்ல. சல விஞ்ஞான மேதைகள், முறையான கல்வி அறிவு பெறா மலேயே, சில கண்டுபிடிப்புகளை உலகிற்கு அளித்துள்ளார்கள். அதே போல, யாகம், பூஜை… போன்றவை எதுவும் செய்யா மலே இறுதி உண்மையை உணர்ந்த ஞானிகள் உண்டு. இவர்கள் தெய்வத்தின் அருளைப் பெற்றவர்கள். ஆக, வேதங்களில் யாகத் இற்கு சிறப்பிடம் உண்டு, அவற்றிற்கு பலன் உண்டு; ஆனால் அவையேதான் வேதம் உணர்த்துகிற தர்மம் என்று நினைத்து விடக் கூடாது. வேதங்களில் உள்ள மந்த்ரங்கள், யாகங்களைத் தவிர வேறு பல உயர்வான விஷயங்களை எடுத்துச் சொல்கின்றன. சத்யம், நன்னடத்தை, தீய எண்ணம் இல்லாமை, மற்றவர்களுக்கு உதவு கிற தன்மை போன்றவை வேதங்களில் போற்றப்படுகின்றன.
கெட்ட நடத்தை உடையவனுக்கும், மனதை அலைபாய விடுகிறவனுக்கும், கோபக்காரனுக்கும், பொய் பேசுபவனுக்கும், கபடு உள்ளவனுக்கும் பரமாத்மா புலப்படமாட்டான்; எவர் களிடம் நல்ல தவமும், ஸத்யமும் நிலைத்து இருக்கிறதோ அவர்களுக்கே அவன் தெளிவாவான்’ என்று வேதம் கூறுகிறது. மேலும் வேதம் கூறுகிற சில நன்மொழிகளைப் பார்ப்போம். யாவரும் ஒற்றுமையாக இருங்கள்; ஒற்றுமையாகப் பேசுங்கள்; உங்கள் யாவருடைய இதயத்திலும் ஒற்றுமையுணர்வு இருக்க வேண்டும். ‘மனசாட்சிக்கு விரோதம் இல்லாத வழியே இன்பத்தைத் தருவது‘. ‘விழித்திருப்பவனுக்குத்தான் கல்வி இட்டும்”. சூரியனால் ஆகாசம் ஒளி விட்டுப் பிரகாசிக்கிறது; ஸத்யத் தினால் பூமி பிரகாசிக்கிறது ‘. ‘புத்திமான்களே! உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள, மக்க ளிடம் பழகுங்கள்”. “யாவரையும் நட்புணர்வோடு பார்ப்போமாக. ‘உண்மையே பேசு; தர்மம் செய்; தாயாரைத் தெய்வமாய் நினைப்பாயாக; தந்தையைத் தெய்வமாக நினைப்பாயாக; குருவைத் தெய்வமாக நினைப்பாயாக; வீடு தேடி வந்தவனைத் தெய்வமாக நினைப்பாயாக. ‘நூறு கைகளால் பணத்தைச் சம்பாதிப்பாயாக; ஆயிரம் கை களால் அதை மற்றவர்களுக்குப் பயன் உள்ள வகையில் செல விடுவாயாக. ‘கொடுப்பதைச் சிரத்தையுடன் கொடு; அசிரத்தையாகக் கொடுக்காதே; முகமலர்ச்சியுடன் கொடு; அடக்கத்துடன் கொடு“.
“கடவுள் ஒருவரே; இரண்டாவதாக ஒரு கடவுள் இல்லை. இப்படிப் பல நன்மொழிகள் வேதங்களில் ஆங்காங்கே, ஸம் ஹிதை பகுதிகளிலிருந்து உபநிஷத் பகுதிகள் வரை கொட்டிக் இடக்கின்றன. அதனால்தான் வேதமே, தர்மத்தின் மூலம் என்று கூறப்படுகிறது. தர்மம் என்று சொல்வதற்கு, ஒரே வார்த்தையில் பொருள் கூற முடியாது. அதைப் பற்றிய விளக்கங்களைப் பின்னர்ப் பார்ப்போம். வேதங்களில் உள்ள மந்த்ரங்கள் பல்வகைப் பட்டவை என்பதை எடுத்துக் காட்டவே, சில உதாரணங்களைக் கவனித்தோம். அரசர்களைப் பற்றிக்கூட வேதம் பேசுகிறது. பின்னர் இதிகாசங்களிலும், புராணங்களிலும் வர்ணிக்கப்படுகிற அரச பரம்பரை களின் தோற்ற காலத்தில் இருந்தவர்களைப் பற்றி வேதம் குறிப் பிடுகிறது.
பொன், பவழங்கள், முத்து போன்றவை பயன்படுத்தப்பட்ட விவரம்; சமுத்திரங்களைப் பற்றிய குறிப்புகள்; நதிகளைப் பற் நிய வர்ணனைகள்; மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றுக்குமான தூய்மைகள்; உழவர்களின் மேன்மை… என்று ஒரு சிறு பட்டியலில் அடங்காத அளவு விஷயங்கள் வேதத்தில் பேசப்படுகின்றன. இப்படிப்பட்ட வேதங்களை முழுமையாக உணர்ந்தவர்கள் யாரும் இல்லை என்று அந்தக் காலத்திலேயே கூறப்பட்டது என் றால், இப்போதுள்ள நிலை பற்றிப் பேச வேண்டிய அவசியமே இல்லை. அப்படியிருக்க, இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில குறிப்புகளை மட்டுமே படிக்கக் கூடிய நம்மைப் போன்றவர்கள், வேதங்களையே கரைத்துக் குடித்து விட்டவர்கள் போல, அதில் குறை கண்டு பேசுவது, அறியாமையைத் தவிர வேறொன்று மில்லை.
“வேத மந்த்ரங்கள் பல இடங்களில் புரியாமல் இருப்பதால் தானே, இந்த மாதிரி விமர்சனங்களே பிறக்கின்றன?! என்ற கேள்வி நியாயமானதாகத் தோற்றமளிக்கலாம். ஆனால் நமக்குப் புரிய வில்லை என்பதற்காக, ஒரு விஷயத்தைப் பழிப்பது என்ன நியாயம்? மந்த்ரங்களின் அர்த்தம் புரிவது கஷ்டமாக இருக்கிறது என் றும், தெளிவாக இல்லை என்றும் கூறுபவர்களுக்கு யாஸ்கரே பதில் அளித்திருக்கிறார். ந ஸ்தாணோரயம் அபராத: யதேந மந்தோ ந ஜானாதி கண் பார்வையற்றவர், தூண் இருப்பதறியாமல் அதில் முட்டிக் கொண்டால், அது தூணின் குற்றமன்று. ஆகையால், நமது பார்வையைச் சரி செய்து கொள்வோம்; தூணைப் பழிக்க வேண்டாம்.