குலாரிலபட்டருடன் வாதிட்டு, பிடிவாதமான மீமாம்ஸைப் பாதையிலிருந்து அவரைத் இருப்ப வேண்டும் என்ற நோக்கத் துடன் வந்திருந்த ஆஇசங்கரர், குமாரிலபட்டரின் நிலை கண்டு இகைத்து நின்றார். குமாரிலபட்டர் நடந்த விவரங்களைக் கூறி, ‘என் தவறுக்குப் பிராயச்சித்தம் செய்வதற்காகவே, இந்தத் தண் டனையை நானே விதித்துக் கொண்டேன். சில இனங்களுக்கு முன்பாக நீங்கள் வந்திருந்தால், உங்களைத் தரிசித்திருப்பேன் – அந்த புண்ணியமே, என்னுடைய பாபத்தைப் போக்கியிருக்கும். இப்போது காலம் கடந்துவிட்டது; இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்தத் தீ என்னை விழுங்கி விடும். நீங்கள், மாஹிஷ்மதியில் வசிக்கிற மண்டனமிச்ரரைப் போய்ப் பாருங்கள். அவருடன் வாதிட்டு, அவரை உங்கள் பாதைக்குத் இருப்பிவிட்டால், அதன் பிறகு மீமாம்ஸகர்கள் அனைவருமே உங்கள் வழியை ஏற்றவர் களாக விடுவார்கள்! என்று கூறினார்.
ஆதிசங்கரர், அங்கிருந்து புறப்பட்டு, மாஹிஷ்மதி போய்ச் சேர்ந்தார். இது இப்போதைய பாட்னாவிற்கு அருகில் உள்ள இடம் என்று கூறப்படுகிறது. அந்த ஊரில் மண்டனமிச்ரரின் வீடு எங்கே இருக்கிறது என்று ஆதிசங்கரர் விசாரித்த போது, இலர் ‘எந்த வீட்டு வாசலில் உள்ள கிளிகள், வேத சம்பந்தமான கேள்விகளை அலசப் பேசுகின்றதனவோ – அதுவே மண்டனமிச் ரரின் வீடு! என்று கூறினர். அதாவது கிளிகளும் கற்றுக் கொள் ளும் அளவிற்கு, வேத சம்பந்தமான விஷயங்கள் பேசப்படுகிற இல்லம் அது.
யாகங்கள், சடங்குகள் – இவையே ஒரு மனிதனின் கடமை யென்றும், இவற்றிற்கு இறைவன் குறுக்கீடு தேவையில்லாதவை, இறை சிந்தனை அநாவசியமானது என்பது போலவும் வாதிட்ட மீமாம்ஸகர்களில், மிகவும் கற்றறிந்தவர் மண்டனமிச்ரர். ஸந்யா கள், கர்மங்களை விட்டவர்கள் என்பதால், அவர்கள் மட்ட மானவர்கள் என்பது அவருடைய கருத்து. அப்படிப்பட்டவர் விட்டில் ஒரு சிராத்தம் நடந்து கொண்டிருந்தபோது, அங்கே ஆதி சங்கரர் போய்ச் சேர, சராத்தத்தின் புனிதத்தன்மையே பாழாகிவிட்டது போல மண்டனமிச்ரருக்குக் கோபம் வந்தது.
இத்தனைக்கும், ‘ஒரு வீட்டில் சிராத்தம் நடக்கிறபோது, அந்த ஊரில் ஒரு ஸந்யாசி இருந்தால், அவரிடம் போய்ச் சிராத்தம் நடக்க இருப்பதாகக் கூறி, அவருடைய உத்திரவைப் பெற்று வருவது, ரொம்பவும் விசேஷம்; முறையாக வேதம் ஒதிய அந் தணர்கள் இடைக்கவில்லை என்றால், ஒரு ஸந்யாசியைச் சிராத் தத்தில் அமரச் செய்யலாம்’ என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் மண்டனமிச்ரருக்கோ, ‘ஸந்யாசிகள் கர்ம ப்ரஷ்டர்கள்! – அதாவது, செய்ய வேண்டிய கர்மங்களை விட்ட வர்கள்! என்ற எண்ணம் உறுதியாக இருந்தது. அதனால்தான் _ அவர் ஆதிசங்கரரைக் கோபித்துக் கொண்டார்.
பின்னர் அவருடன் வாதிட்டு, அவரை வேதாந்த தத்துவங் களின் பாதையில் இருப்புவதற்காகவே தாம் வந்திருப்பதாக ஆதி சங்கரர் கூறினார். மீமாம்ஸை பாதையின் மேன்மையை நிலை நாட்ட நல்ல சந்தர்ப்பம் கட்டியதாக நினைத்த மண்டனமிச்ரர், விவாதத்திற்கு சம்மதித்தார்.
மண்டனமிச்ரரின் மனைவியாகிய உதயபாரதியே நடுவராக இருந்து, வாதத்தில் வென்றது யார் என்ற தீர்ப்பை அளிப்பார் என்றும், வென்றவருக்குத் தோற்றவர் சிஷ்யர் ஆவார் என்றும் முடிவு செய்து கொண்டு விவாதம் தொடங்கப்பட்டது. விவாதம் நாட்கணக்கில் நடந்தது. இடையில் உதய பாரதி தீர்ப்புக்கு ஒரு வழி கண்டாள். மண்டன மிச்ரர், ஆதிசங்கரர் இருவரையும் பூ மாலைகள் அணியச் செய்தார்; யார் கழுத்தில் உள்ள மாலை
முதலில் வாடுகிறதோ, அவரே தோற்றவர் – என்று அவர் கூற, வாதிட்டுக் கொண்டிருந்த இருவரும் அதை ஏற்றனர். உதய பாரதி, சாட்சாத் சரஸ்வதியின் அம்சம் கொண்டவள் என்று ஆதி சங்கரரின் சரித்திரம் கூறுகிறது என்பது நினைவில் கொள்ளத் தக்கது.
விவாதம் பல தினங்கள் தொடர்ந்து நடந்தது. மண்டனமிச்ரர் கழுத்தில் இருந்த மாலை வாடியது; ஆதிசங்கரர் அணிந்திருந்த மாலையோ, அப்போது பறித்த பூக்களினால் கோர்க்கப்பட்டது போல் வாடாமல் இருந்தது. மண்டனமிச்ரர் தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆதிசங்கரரின் சீடரானார். ஸுரேச்வரர் என்ற புதிய பெயரையும் பெற்று, அவரும் ஸந்யாசம் மேற்கொண்டார்.
உபநிஷத்துக்கள் கூறுகிற தத்துவங்களையே ஆதிசங்கரர் தமது வாதங்களாக முன்வைத்து மண்டனமிச்ரரை வென்றார். ‘கர்ம மார்க்கமே சிறந்தது; அதுவே போதும்” என்று நினைத்துச் செயல் படுபவன் தேவர்களைத் திருப்தி செய்யலாம். ஆனால் ஞானத்தை அடைவதையே லட்சியமாகக் கொண்டு, அதற்காக முனைபவன், தன்னையே வேள்வியில் அர்ப்பணிக்கிறவன்; அவன் மோக்ஷத்தை அடைந்து பிறப்பற்ற நிலையை எய்துவான். கர்ம மார்க்கத்தில் செல்பவனோ, ஸ்வர்க்கத்தை அடைந்து, மீண்டும் பிறப்பெய்துவான்.
ஸ்வர்க்கத்திற்கும், மோக்ஷத்திற்கும் உள்ள வித்தியாசம் இது. ஸ்வர்க்கம் மேன்மையான நிலைதான். ஆனால் அவன் செய்த புண்ணியங்கள் நிர்ணயிக்கிற காலம் தீர்ந்த பிறகு, ஸ்வர்க்க நிலையை அடைந்த மனிதன் மீண்டும் பிறப்பெய்துவான். இடை யில் ஒரு மேன்மை கிட்டினாலும், அவனுடைய கணக்கு முடி வதில்லை. ஆனால் மோக்ஷத்தை அடைபவனோ, மீண்டும் பிறப்பு, மீண்டும் இறப்பு என்கிற சம்ஸாரக் கடலிலிருந்து கரை யேறி, பிறப்பற்ற நிலையை அடைகிறான். மீமாம்ஸகர்களோ ஸ்வர்க்க நிலையை அடைவதையே உயர்ந்த லட்சியமாகப் பேசுவார்கள்.
புத்தர் போன்றவர்கள், சடங்குகளை முழுமையாக நிராகரித் தது போல ஆதிசங்கரர் செய்யவில்லை. அது – வேதாந்த உணர்வை அடைவதற்கு முன் கடக்க வேண்டிய பாதை என்று அவர் ஏற்றார். ஆகையால், யாகங்கள், சடங்குகள், பூஜைகள் காலப்போக்கில் இவற்றிலே புகுந்துவிட்ட வேண்டாத அம்சங் களை அவர் கண்டித்தார்.
யாகங்களில், மிருக பலி உண்டா இல்லையா என்பது பற்றி, முந்தைய அத்தியாயம் ஒன்றில் பார்த்தோம். உயிர் பலி போன்ற விஷயங்கள் யாகங்களில் புகுந்தன என்பதும் தெரிகிறது; அவை முறையல்ல என்பதும் தெரிகிறது; வேதங்கள் அவற்றை நிர்ண யிக்கவில்லை என்றும், ஒரு சொல்லிற்குரிய பல்வேறு அர்த்தங் களில், ஓர் அர்த்தத்தை, பொருத்தமில்லாத இடத்தில் சேர்த்துப் பார்ப்பதால் ஏற்படுகிற விளைவு இது என்பதும் தெளிவாகிறது.
ஆனால், இதை எதிர்த்தது புத்தர்தாம் என்று நினைப்பது தவறு. வேதத்திலேயே,
அஹிம்ஸா பரமோ தர்ம: அஹிம்சையே மிகவும் மேலான தர்மம்.
– என்று கூறப்பட்டிருக்கிறது. ஆகையால் அஹிம்சை என்ற சிந் தனையே புத்தர் போதனையினால் பிறந்ததுதான் என்று நினைப் பது தவறு. வேதமே இதைக் கூறியிருக்கிறது. அதற்குப் பின் பல இடங்களில் அஹிம்சையின் மேன்மை வற்புறுத்தப்பட்டிருக்கி றது. புத்தருக்குச் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக இயற்றப் பட்ட மஹாபாரதத்தில் கூட, அஹிம்ஸை வற்புறுத்தப்படுகிறது.
அஹிம்ஸார்த்தாய பூதானாம்
தர்ம ப்ரவசனம் க்ருதம்
யஸ்யாத் அஹிம்ஸாஸம்யுக்த:
ஸ தர்ம இதி நிச்சய:
ஸகல ஜீவராசிகளின்பாலும் காட்டப்பட வேண்டிய அஹிம் சையின் பொருட்டே தர்மம் பற்றிய தத்துவங்கள் பிறப்பிக்கப் பட்டுள்ளன. அஹிம்சையை ஆதாரமாகக் கொள்கிற விஷயம் எதுவோ, அது தர்மம் என்பது உறுதி.
ஆகையால் அஹிம்ஸை என்பது ஹிந்து மதத்திலேயே மீண்டும் போதிக்கப்படுவதுதான். துரதிருஷ்டவசமாக, சில தவறான வழக்கங்களின் காரணமாக உயிர் பலியும் நடை முறைக்கு வந்தது. இதற்கும் நியாயங்கள் சொல்லப்பட்டன.
‘எது தனக்கு மிகவும் ப்ரியமான பொருளோ, அதை யாகத் இல் தேவர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும். காய்கறி உண வையே விரும்புகிறவன், அதைப் படைத்து அர்ப்பணிப்பான். மாமிசத்தை விரும்பி உண்கிறவன், அதை விரும்பிப் படைப் பான். இதில் என்ன தவறு? என்று ஒரு விளக்கம், வேதங்களை ட ஏற்பவர்களாலேயேகூட அளிக்கப்படுகிறது. வேதங்களை மிகவும் தீவிரமாக ஆராய்ந்து, பல சிறப்பான விளக்கங்களைத் தந்த அர விந்தர் போன்றவர்களின் சிந்தனையை ஏற்பவர்கள்கூட, இந்த மாதிரியான விளக்கத்தை ஏற்கிறார்கள்.
ஆனால், வேதங்களில் மிருகங்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும், ஜீவஹிம்ஸை கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டிருக் இறது; மிருக பலி என்று பொருள் தரக் கூடிய வாக்கியங்களுக்கு வேறு அர்த்தங்களும் உள்ளன – என்பதை மனதில் கொள்ளும் போது, மிருகபலிக்கு வேதங்களில் இடமில்லை என்பதே ஏற்ப தற்குரிய விளக்கமாக இருக்கிறது.
யாகங்களையும், சடங்குகளையுமே போதுமானவையாக வற் புறுத்திய மீமாம்ஸகர்களின் பாதையை ஆதிசங்கரர் முழுமையாக நிராகரிக்கவில்லை என்பதைப் பார்த்தோம்; பகவத் இதையில் கிருஷ்ண பரமாத்மாகூட இந்த வழிமுறைக்கு ஒரு சிறப்பிடம் அளிக்கிறார்.
காரியங்களில் வெற்றிகளை வேண்டுகிறவர்கள் இங்குத் தேவர்களை வேண்டி யாகங்கள் செய்கிறார்கள்; மனித உலகில் கர்மங்களினால் வெற்றி விரைவில் கிட்டுகிறது அல்லவா!… யார் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ, அவர்களை நான் அங் ஙனமே சார்கிறேன்.’
‘ஸோமம் உண்டோர், பாவம் அகன்றோர், வேதங்களை அறிந்தோர், என்னை யாகங்களினால் வேண்டி, வானுலகு தரு மாறு பிரார்த்தனை செய்கின்றனர். அவர்கள் புண்ணிய ஸ்தலமாகிய தேவேந்திர உலகை அடைந்து, வானுலகில் தேவ போகங் களை அனுபவிக்கிறார்கள்.
‘விரிவாகிய வானுலகில் இன்புற்று, புண்ணியம் தீர்ந்தவுடன், அழிவுடைய மனித உலகிற்கு அவர்கள் மீண்டும் இரும்புகிறார் கள். இப்படிக் கர்மங்களை மட்டுமே பின்பற்றுவோர், விருப் பங்களில் வீழ்ந்து உழல்வார்கள்’.
அதாவது, கர்மங்கள், யாகங்கள், சடங்குகள் போன்றவற்றிற்கு பலன் உண்டு, அவற்றைச் செய்தால், வேண்டுகிற பலன் கட் டும் என்ற மீமாம்ஸகர்களின் சித்தாந்தம் தவறானது அல்ல. ஆனால் அதுவே போதும் என்ற அவர்களுடைய வாதம் ஏற்புக் குரியது அல்ல. இதுவும் கீதையில் கூறப்பட்டிருக்கிறது.
ச்ரேயான் த்ரவ்யமயாத்யஞா
ஞானயனா: பரந்தப:
ஸர்வம் கர்மாகலம் பார்த்த
ஞானே பரிஸமாப்யதே
எதிரிகளை வாட்டுவோனே! பொருளைக் கொண்டு செய்யப் படுகிற யாகத்தைக் காட்டிலும், ஞானவேள்வி சிறந்தது. பார்த்தா! கர்மம் அனைத்தும் முழுமையாக ஞானத்தில் முடிவு பெறுகிறது.
இதையேதான், ஆதிசங்கரரும் வற்புறுத்திப் பேசி வாதிட்டு, ‘பலனை வேண்டுகிற யாகங்களே போதுமானவை‘ என்று வாதிட்ட மீமாம்ஸை பாதையின் பண்டிதரான மண்டனமிச்ரரை வென்று, பின்னர் அவரைத் தமது சீடராக ஏற்றார்.
இப்படி ஞானமே சிறந்தது என்று கூறுவதால், அதையே ஒரு வழியாகப் பயன்படுத்திக் கொண்டு, ‘நான் ஞானப் பாதையில் செல்கிறேன்; ஆகையால் எனக்குப் பூஜை, புனஸ்காரம், சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் தேவையில்லை” என்று கூறி அலட்சியம் காட்டுவது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற வழி. ஞானத் தைத் தேடுவதும், அதை அடைவதும் அனைவருக்கும் கிட்டுகிற பாக்கியம் அல்ல (இது பற்றிப் பிறகு பார்ப்போம்). ஆனால் கர் மாக்களை – அதாவது, மனிதனுக்கு விதிக்கப்பட்ட வேத தொடர்பான, சாத்திர ரீதியான சடங்குகளை – செய்வது, எல்லோராலும் முடிகிற விஷயம். ஞானத்தை எய்துவதற்கு முன்னால், செல்ல வேண்டிய பாதை அது. ‘எனக்கு இதெல்லாம் வேண்டாம். நேரே ஞானத்தை எய்துவேன்! என்பது, சில அபூர்வ பிறவிகளுக்குச் சாத்தியமாகலாம். நம்மைப் போன்றவர்கள் இப்படிச் சொல்வது ‘எனக்கு அ–னா, ஆ–வனா, இ–னா, ஈ–யன்னா… எல்லாம் தேவை யில்லை; நேராகத் தமிழ்ப் புலவனாகி விடுவேன்! என்று சொல் வது போலத்தான். புலமையை அடைய முயற்சிப்பதற்கு முன் எழுத்தறிவு பெறுவது அவசியம்; ஞானத்தை அடைய முயற்சிப் பதற்கு முன், விதிக்கப்பட்ட கர்மாக்களைக் கடைப்பிடிப்பது அவசியம்.