பூர்வ மீமாம்ஸையைப் பற்றிப் பார்த்தோம். இது, ஆறு தரி சனங்களில் அதாவது ஆறு பார்வைகளில் ஒன்று, பார்ப்பது என் றால், கண்டறிவது – உணர்வது என்ற பொருள் கொள்ள வேண் டும். இவை ஷட்தர்சனங்கள் என்று சொல்லப்படுகின்றன. ஷண்முகன் என்றால் ஆறுமுகன்; ஷட்தர்சனம் – என்றால் ஆறு தரிசனங்கள்.
இவற்றை, ஆங்கிலத்தில் ‘பிலாஸஃபி‘ என்று சொல்லலாம். இந்த ஆங்கிலச் சொல்லை, ‘அறிவைப் பெறுகிற முயற்சி” என்று! வர்ணிக்கலாம். இறுதி உண்மையை அறிகிற முயற்சி என்றும் ஆங்கில அகராதி இதற்கு அர்த்தம் சொல்கிறது. ‘மனிதனின் இயல்பு என்ன? இந்த வாழ்க்கையின் முடிவு என்ன? நாம் வாழ் கிற இந்த உலகின் இயல்பு என்ன? இந்த உலகைப் படைத்த வன் ஒருவன் உண்டா? தான், கடவுள், தான் வாழ்கிற உலகம் – போன்றவற்றைப் பற்றி அறிந்து கொண்டு, மனிதன் எப்படி வாழ வேண்டும்…?’ என்பன போன்ற கேள்விகளை ஆராய்வது பிலாஸஃபி – தத்துவம்.
இந்தத் தத்துவம் என்ற சொல்லே கூட, ஒரு சுவாரஸ்யம் உடைய சொல், ‘தத் த்வம்! என்ற ஸம்ஸ்க்ருத சொல்லிற்கு, ‘அது நீயே! என்று பொருள். இதுதான் இறுதி உண்மை. இதை விளக்குவது தத்வம்; தத்துவம். தற்காலத்தில், இந்தச் சொல் எல்லாவிதமான போதனைகளுக்கும் பொருத்தப்பட்டு, கம்யூனிஸ தத்துவம், சோஷலிஸ தத்துவம்… என்றெல்லாம் வார்த்தைகள் வழக்கில் வந்துவிட்டன.
‘தத் த்வம்” – அது நீயே, என்று உபநிஷத்துக்கள் கூறுகின் றன. ஆனாலும், இது உட்பட, வேதங்களில் கூறப்பட்டுள்ள பல விஷயங்களை உணர்ந்தனர். ஒவ்வொருவருடைய உணர்வு ஒவ்வொரு வகை. இவைதாம் ஆறு தரிசனங்கள் என்ற பெய ரைப் பெற்றன.
உணர்ந்தார்கள் என்றால் – அத்துடன் விட்டுவிடவில்லை. ஆராய்ந்தார்கள். அந்த ஆய்வுக்கு இலக்கணங்களையும் வகுத்துக் கொண்டனர். இந்த இலக்கண வழிமுறைகளின் பெயர்களைப் பார்த்தாலே, பல ஆயிர வருடங்களுக்கும் முன்பாகக் கையாளப் பட்ட இந்தப் பெயர்கள், அதே பொருளுடன் இன்றும் வழங்கு வதை உணரலாம். அப்படி வேதங்கள் தொடங்கி, நமது கலாச்சாரம், ஒரு சங்கிலிப் பிணைப்புப் போல இன்று வரை தொடர் இறது.
அந்த ஆய்வு முறைகள் சிலவற்றைப் பார்ப்போம். ‘ப்ரத்ய க்ஷம்’ என்பது நமது இந்திரியங்களினால், உடனடியாக உணரப் படுவது. ஒரு மேஜையைப் பார்க்கிறோம்; அது ப்ரத்யக்ஷம்.
‘அனுமானம்’ என்பது நேரிடையாக இல்லாவிட்டாலும், தொடர்பின் காரணமாக நமக்கு ஒரு விஷயத்தை உணர்த்துவது. ஒரு குன்றில், ஒரு இடத்திலிருந்து புகை வருகிறது; அதைப் பார்த்தவுடன் அங்கே நெருப்புப் பற்றியிருக்கிறது என்பதை நாம் உணர்கிறோம்; நெருப்பைப் பார்க்கா விட்டாலும், அந்தக் குன்றில் இப்பற்றியிருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். இது அனுமானம்.
‘உபமானம்! என்பது, ஒப்பீட்டின் மூலம் புரிந்து கொள்வது. முன்பு பார்த்த ஒரு பொருளுடன், இப்போது பார்ப்பதை ஒப் பிட்டு, அது போல இது என்று உணர்கிற இந்த வழிமுறை, உபமானம். ‘சப்தம்’ என்பது தத்துவ விசாரணையின் அடுத்த வழி. ஒருவர் விஷயமறிந்தவர்; அவர் வார்த்தை (சப்தம்) ஏற்கத்தக்கது என்றால், அதன் மூலம் ஒரு பொருளை உணர்வது – சப்தம் என்ற வழிமுறை.
‘அர்த்தபத்தி” என்பது யூகம். ஒரு மனிதன் சாப்பிடுவதில்லை; ஆனால் குண்டாக இருக்கிறான். இவன் யாரும் பார்க்காத வேளையில் நன்றாகச் சாப்பிடுகிறான் என்பது யூகம்.
‘அனுபலப்தி! என்பது இல்லாததை உணர்வது. ஒரு இடத் இல் ஒரு பொருள் இருந்தது; இப்போது அது அங்குக் காணப் படவில்லை என்றால், அது இப்போது இல்லாமற் போய்விட் டது என்பதை உணர்கிறோம். இது அனுபலப்தி.
இப்படிச் சில வழிமுறைகளை வகுத்துக் கொண்டு, அவற்றை உபயோஙித்து, தத்துவ ஆராய்ச்சியில் இறங்கி, தாங்கள் உணர்ந்ததையும் சேர்த்து, சில ரிஷிகள் அறிந்தவைதான், ஆறு தரிசனங்கள். இவற்றில் சில தத்துவங்கள், சில வழிமுறைகளை ஏற்கவில்லை.
மீமாம்ஸை எல்லாவற்றையுமே ஏற்றது. மீமாம்ஸை, நியாயம், வைஸேஷிகம், ஸாங்க்யம், யோகம், வேதாந்தம் என்ற பெயர் கொண்ட இந்த ஆறு தரிசனங்கள், ஹிந்து தத்துவத்தின் – பிலாஸஃபியின் பல்வேறு கோணங்கள். ஒரு கோணத்தில் பார்த்தவர், மற்றவற்றை நிராகரித்தார்.
ஆறு தரிசனங்கள் என்கிற இந்தத் தத்துவங்கள், முக்கியமாக – பிரம்மம் அல்லது இறைவன் பற்றியும், உலக சிருஷ்டி பற்றி யும், ஜீவாத்மா பற்றியும், உலக வாழ்விலிருந்து விடுதலை பெறு ் இற மார்க்கம் பற்றியும் ஆராய்ந்து கருத்துக்களைக் கூறின. வேதங் களை இவை யாவுமே ஏற்றன. கர்ம பலன் – முன்வினைப்பயன் உண்டு என்பதையும் இவை ஏற்றன. ஆகையால், இவை ஆஸ் இக தத்துவங்கள். வேதங்களையும், கர்ம பலனில் நம்பிக்கையை யும் நிராகரிப்பதுதான் நாஸ்திகம்.
கடவுள்தான் இவ்வுலகை சிருஷ்டி செய்தான் என்பதை நியா யம், வைஸேஷிகம், யோகம், வேதாந்தம் ஆகிய பாதைகள் ஏற் றன. ஸாங்க்யம் இதை ஏற்கவில்லை. உலக சிருஷ்டியை ஸாங்க் யம் வேறு விதமாக விளக்குகிறது.
(ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களின் சேர்க்கை, ஆத்மாவுடன் தொடர்பு கொண்டு வெவ்வேறு வகையில் இயங் குகிற போது, உலக சிருஷ்டி உண்டாகிறது. இது என்று தொடங் இயது என்பதை நிர்ணயிக்க முடியாது; இது ஆரம்பம் காண முடி யாதது‘ என்பது சிருஷ்டி பற்றி ஸாங்க்யம் கூறுவதன் சுருக்கம்.)
ஞானம் என்ற பொருள் உடைய ‘ஸாங்க்யம்’ என்ற பாதை யின் வாதங்களை முறியடிப்பதை, ஆதிசங்கரர்கூட மிக முக்கிய மாகக் கருதினார். பிரம்மஸுத்ரத்திற்கு உரை எழுத முனைந்த போது அவர், முதலில் ஸாங்க்ய தரிசனத்தை எதிர் கொள்வதே முக்கியம் என்று பிரகடனம் செய்திருக்கிறார்.
ப்ரதான மல்ல நிபர்ஹண ந்யாயேன…
முதன்மையான மல்யுத்த வீரனை (முதலில்) முறியடிக்கிற வழி முறையின்படி…
மல்யுத்தத்தில் தனது முதன்மையை நிலை நாட்ட முற்படு இறவன், தன்னை எதிர்க்க இருப்பவர்களில், எவன் முதன்மை யான மல்யுத்த வீரனோ, அவனை முதலில் வென்றுவிட வேண் டும்; அப்போதே அவனுடைய முதன்மை உணரப்படும்’ என் பது இதன் பொருள். இந்த அடிப்படையில், மற்ற தத்துவங் களை எதிர்கொண்டு, அத்வைதத்தை நிலைநாட்ட முற்பட்ட ஆதி சங்கரர், முதலில் ‘ஸாங்க்யம்’ என்ற வழிமுறையில், தாம் கண்ட குறைகளை விளக்க முற்பட்டார். அந்த அளவிற்கு ஸாங்க்யம் செல்வாக்குப் பெற்றிருந்திருக்க வேண்டும்.
‘யோகம்’ பதஞ்ஜலி என்கிற முனிவர் வகுத்த வழிமுறை, அதற்கும் முன்பாக ஸனத்குமாரர் இது பற்றி விவரித்திருக்கிறார் என்றும் சில பண்டிதர்கள் கூறுகிறார்கள். யோகம் என்றாலே ஒருமுகப்படுத்துவது. மனதை அடக்குகிறபோது, யோகம் சாத்தி யமாகிறது என்று பதஞ்ஜலி கூறியிருக்கிறார். திட சித்தியும், இடை விடாத முயற்சியும் இதற்குத் தேவை என்றும் அவர் வலியுறுத் துகிறார். இது தவிர, துன்புறுபவர்களின்பால் கருணை, மகழ்ச்சி யுடன் இருப்பவர்களைப் பார்த்துப் பொறாமை கொள்ளாமல் நட்பு காட்டுவது, மூச்சை ஒழுங்குபடுத்துவது, புண்ய€லர்களைப் பற்றிய நினைவை வளர்த்துக் கொள்வது, இறைவனைப் பற்றி நினைவை வளர்த்துக் கொள்வது, இறைவனைப் பற்றிச் சந்திப் பது.. போன்றவையும் அவர் கூறுகிற யோக வழிமுறைகள்.
பதஞ்ஜலியின் யோக முறையின்படி, அஷ்டமா ஸித்திகள் எனப்படும் அற்புதங்களைச் செய்வதும்கூட, யோகத்தைக் கடைப் பிடிப்பதால் சாத்தியமாகும். அணு போன்று சிறுத்து விடுவது: மிகப் பெரிய உருவம் எடுப்பது; மற்றவர் மனதில் இருப்பதை அறிவது; மிருகங்கள் பேசுவதைப் புரிந்து கொள்வது; மற்றவர் பார்வையிலிருந்து மறைவது… போன்ற சாகஸங்கள், யோகத்தால் இட்டும்; இவ்வாறு கூறுகிற பதஞ்ஜலியே, யோகத்தைப் பயில விரும்புகிறவர்கள், இந்த மாதிரி சக்திகளைப் பெற முனையக் கூடாது என்று எச்சரிக்கையும் செய்கிறார். இவை மனிதனைத் தாழ்த்தி, உயர்ந்த நிலையை எட்ட விடாமல் செய்து விடும் என் பது அவர் விடுக்கிற எச்சரிக்கை. யோக வழி முறையை மேற் கொண்டு, அது விவரிக்கிற படிகளைக் கடப்பவன், தன்னைத் தானே உணர்ந்தவனாஇி, சம்சாரக் கட்டிலிருந்து விடுபடுவான் என் பது இந்தத் தத்துவம் வகுக்கிற பாதை. ‘வேதாந்தம்’ என்கிற பாதை பிரம்ம ஸுத்ரத்தை அடிப்படையாகக் கொண்டது. வியா சர் இயற்றிய பிரம்மஸூத்ரமோ, உபநிஷத்துக்களை விளக்குவது. இதற்கு சங்கரர், ராமானுஜர், மத்வாச்சார்யார் ஆகியோரும், வேறு சிலரும் அவரவர் பார்வையின்படி விளக்க உரைகள் எழுதியிருக் கிறார்கள்.
வெவ்வேறு வாதங்களினால் தோற்கடிக்கப்படக்கூடிய தர்க்க வாதங்களைவிட, வேத விளக்கங்களே முக்கியமானவை, என் றும் இருப்பவை என்று பிரம்மஸூத்ரம் அடித்துக் கூறுகிறது. இந்த உலகத்திற்குக் காரணம் இறைவனே – அதாவது பிரம்மமே. பிரம்மத்திடமிருந்தே தோன்றியதால், இந்த உலகம் வேறு, பிரம் மம் வேறு அல்ல. தான் செய்யும் கர்மாக்களின் பலனை ஒரு ஜீவன் அடைவது என்பது, ஈச்வரனின் – பிரம்மத்தின் – கருணை யினால்தான். பிரம்மத்தை உணர்கிற ஜீவனுக்கு, முந்தைய கர்ம பலன்கள் பலவும் அற்றுப் போகும். ‘இப்படிச் சொல்கிற பிரம்ம ஸலித்ரம் – பிரம்மம், ஜீவன் ஆகியவை வேறானவை அல்ல என்று கூறுகிற அத்வைதம் என்ற நிலையைப் போதிக்கிறதா இல்லையா?! என்ற கேள்வி இன்று வரை அலசப்படுகிறது.
பிரம்மஸுூத்ரத்திற்கு விளக்கவுரை எழுதிய ஆச்சார்யர்களில், ஆதிசங்கரரின் உரையின்படி – இது இரண்டற்ற நிலை – அத்வை தம் – என்பதையே போதிக்கிறது; மத்வாச்சார்யாரின் உரையின் படி இது பிரம்மம் வேறு – ஜீவன் வேறு என்ற த்வைதம் இரண்டான நிலையையே போதிக்கிறது; ராமானுஜரின் உரையின் படி, இது இரண்டாக இருந்தாலும், இறுதியில் ஒன்றாகிறது – என்கிற விசிஷ்டாத்வைதம்; ஒரு விசேஷமுடைய அத்வைதம்.
‘பெரியவர்களே இப்படி மாறுபட்டால் என்ன செய்வது? என்று கேட்கலாம். அவர்கள் பார்வையில் இருக்கிற வேறுபாடு, பாதையைப் பற்றியதே தவிர, இலக்கைப் பற்றியது அல்ல என் பதால், யாருடைய பாதையை ஏற்றாலும், சென்றடையும் இடம் ஒன்றே – என்பதைப் புரிந்து கொண்டால், இந்த வேறுபாடுகள் நம்மைக் குழப்பாது.
இப்போது, அரசியல் சாஸனத்தைப் பற்றி மாறுபட்ட பார் வைகள் இல்லையா? ”இது மத்தியில் அதிகாரங்களைக் குவிக்கிற ‘யூனிட்டரி ஸிஸ்டம்’ என்று சில சட்ட நிபுணர்கள் சொல்கிறார் கள்; இல்லை இது மாநிலங்களின் அதிகாரங்களைக் குவிக்கிற ‘உறுதியிட்டுச் சொல்கிற சமஷ்டி முறை – ‘ஃபெடரல் ஸிஸ்டம்’ என்று வேறு சில வல்லுனர்கள் சொல்கிறார்கள்; ‘ஃபெடரல் ஸிஸ்டம்தான். ஆனால் அதில் சில முக்கியமான யூனிட்டரி அம் சங்களும் உள்ளன! என்று மூன்றாவது பிரிவினர் சொல்கிறார் கள். அரசியல் சாஸனத்தை இவர்கள் யாரும் நிராகரிக்கவில்லை. அதன் ஒவ்வொரு தாக்கத்தையும் அளவிடுகிறபோது, சிலர் ஓர் அம்சத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்; வேறு சிலர் மற் றோர் அம்சத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்; ஆனால் எல் லோருமே சாஸனத்தை ஏற்கிறார்கள். இது போல்தான் நாம் மேலே பார்த்த தத்துவ பேதங்களும்.
‘சரி, சிலர் இந்த அரசியல் சாஸனமே மோசம்’ என்று நினைக் இறார்களே? அந்த மாதிரி, இந்தத் தத்துவ விஷயத்தில் நிராக ரிப்பு உண்டா?” என்று கேட்டால் – உண்டு?” அதுதான் ‘சார்வா கம்!. அதுகூட ஒரு பிலாஸஃபி என்ற அந்தஸ்தைப் பெற்றிருக் கிறது. சார்வாகம் என்ற பெயரைப் பெற்றது. இது நாத்திக வாதம். பிரஹஸ்பதிதான், சார்வாகர் என்ற பெயரில் குறிப்பிடப்படு இறார் என்று சிலரும், பிரஹஸ்பதியின் சீடர்களில் ஒருவர் சார் வாகருக்கும் பிரகஸ்பதிக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என் றும் இன்னும் சிலரும் கூறுகிறார்கள்.
அனுமானம், சப்தம் போன்ற வழிமுறைகளை சார்வாகம் நிரா கரிக்கிறது. வேதங்களை நம்பிவிட முடியாது என்பது சார்வாகத் இன் நிலை. நமக்குத் தெரிவதை மட்டுமே ஏற்க வேண்டும் என் பதை இந்தத் தத்துவம் வலியுறுத்தியது. இறைவன், ஆத்மா, ஸ்வர்க்கம், முன்பிறப்பு, மறுபிறப்பு… போன்ற விஷயங்களை எல்லாம் இந்தப் பாதை மறுத்தது. இவை நம் பார்வைக்கு உட் படாத விஷயங்கள் என்பதால், இவற்றைச் சார்வாகம் ஏற்க வில்லை. இயற்கையின் பல்வேறு அம்சங்களான – நீர், நெருப்பு, காற்று, பூமி – இவற்றின் வெவ்வேறு வகையான சேர்க்கையில் உலகம் உண்டாயிற்று என்று கூறுகிற சார்வாகம், இந்த நீர், நெருப்பு, காற்று, பூமி – இவை எப்படி உண்டாயின என்பதை விளக்கியதாகத் தெரியவில்லை.
யாகங்கள், சடங்குகள் போன்றவற்றையும் சார்வாகம் நிரா கரித்தது. அறம், பொருள், இன்பம், வீடு என்கிற மோட்சம், ஆகிய நான்கு தர்மங்களில் – பொருள், இன்பம் ஆகியவற்றை மட்டுமே அந்தக் கொள்கை ஏற்றது. செல்வம், இன்பம் இவையே மனிதனுக்கு முக்கியமானவை என்று சார்வாகம் கூறி யது: முன்னோர்களுக்குச் சிராத்தம் செய்வதை ஏளனம் செய்தது. இன்பத்தை நுகர்வதையே மனித வாழ்வின் குறிக்கோளாகக் காட் டிய இந்தப் பாதை, மிக மிகப் பெரும்பாலோரால் நிராகரிக்கப் பட்டதில் வியப்பில்லை.
ஆக, நாத்திக வாதத்திற்கும்கூட அன்றே ஓர் இடம் – சிறிய இடம் – இருந்திருக்கிறது. அதுவும்கூட புதிதல்ல என்பதால் – இன்றைய நாத்திகவாதிகள் தாங்கள்தாம் ஏதோ அறிவு பூர்வமாகச் சந்தித்து, ஒரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டு விட்டது போல் பேசுவது நகைப்புக்குரியது. நாத்திக வாதம் பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முந்தையதுதான். பழமையை எதிர்க் கிறோம் என்ற பெயரில் நாத்திக வாதம் பேசுவது அபத்தம்; ஏனென்றால் அதுவும் பழையதே.
சமுத்திரத்தில் யாருக்கும் பயன் இல்லாத, எதற்கும் உதவாதசலபொருட்கள் மிதக்கும். தூக்கிஎறியப்பட்டஇவற்றை7௦6 – 8817, 264 – 881) என்றுசொல்வார்கள். ஹிந்துமஹாசமுத் இரத்தில், அப்படிஃப்ளோட் – ஸாம், ஜெட் – ஸாம் ஆக மிதப்பது நாத்திகவாதம்.