அவனிடமிருந்தே அனைத்தும் தோன்றின

யாகங்களைப்பற்றிய அறிமுகத்தை முடிப்பதற்கு முன்பாக, முதன்முதலாக நடந்த யாகத்தைப்பற்றிய விவரங்களைச்சிறிது பார்ப்போம்‌. இதை விவரிப்பதுபுருஷ ஸுக்தம்‌’. இது உலக சருஷ்டியைப்பற்றிக்கூறுகிறது

உலக இருஷ்டியைப்பற்றிப்பல்வேறு மதங்கள்‌, பல்வேறு விதமாக வர்ணிக்கின்றன. அந்தந்த மதத்தினர்‌, அந்தந்த கார ணத்தை நம்புகின்றனர்‌. ஹிந்து மத நூல்களிலோ சிருஷ்டி பற்றி பல்வேறு வர்ணனைகள்இருந்தாலும்‌, எல்லா வர்ணனைகளுமே, பரம புருஷனாகிய இறைவனிடமிருந்து உலகமும்‌, ஜீவராசி களும்தோன்றின என்பதை ஏற்கின்றன. ஆகையால்நம்பிக்கை உடையவர்கள்இதை ஏற்று,திருப்தியுறலாம்‌… 

இதையெல்லாம்எப்படி நம்புவது என்று கேட்பவர்களுக்கு ஒரு வார்த்தை. விஞ்ஞானிகள்உலகம்தோன்றியதற்கான கார ணத்தைக்கூறுகிறபோது, அதைப்புரிந்து கொண்டா எல்லோரும்ஏற்கிறார்கள்‌? படித்தவர்கள்‌, சொல்கிறார்கள்‌ – என்பதால்அனை: வரும்ஏற்கிறார்கள்‌; அவ்வளவுதானே? அணுவும்அணுவும்மோதியது எப்படி என்றோ, பரிணாம வளர்ச்சியின்பல்வேறு கட்டங்களில்என்ன நடந்தது என்றோ, ‘பிக்பேங்க்‌ – 89 8௦ாஏஎனப்படுகிற மாபெரும்மோதல்எப்படி நடந்தது என்றோபுரிந்து கொண்டா அந்த விளக்கங்கள்ஏற்கப்படுகின்றன? அவற்றைப்புரிந்து கொண்டவர்களேகூட, ஒருவரிலிருந்து ஒருவர்மாறு பட்ட கருத்தைக்கொண்டவர்களாக, இன்று வரை வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள்‌. அப்படியிருக்க, அதில்மட்டும்எப்படி நம்பிக்கை வருகிறது?

அறிந்தவர்கள்கூறுவதால்நம்பிக்கை வருகிறது என்றால்‌, வேதங்களையும்இதிஹாசங்களையும்ஏற்றவர்களும்அறிந்தவர்களே என்பதால்‌, அவர்கள்கூறுவதை ஏன்ஏற்கக்கூடாது?

தன்னிடத்திலிருந்தே உலகை இறைவன்படைத்தான்என்பதைச்சிருஷ்டி வர்ணனைகள்எல்லாமே ஏற்கிற மாதிரி, புருஷ ஸூக்தமும்ஏற்றுப்படைப்பை வர்ணிக்கிறது.

இதையெல்லாம்மனதில்வைத்துக்கொண்டு, புருஷ ஸூக்தம்பற்றிய சில விவரங்களைப்பார்ப்போம்‌:

புருஷன்‌! என்பதற்கு கணவன்‌, ஆண்என்ற அர்த்தங்கள்வழக்கில்உள்ளன. ஆனால்வேதங்களில்பல இடங்களிலும்‌, ஆதி புருஷனைஇறைவனையே குறிக்க, ‘புருஷன்‌’ என்ற சொல்பயன்படுத்தப்படுகிறது. ஸூக்தம்என்றால்சரியாகச்சொல்லப்பட்டதுஉண்மையான வர்ணனை என்று அர்த்தம்கூறப்பட்டுள்ளது. நான்கு வேதங்களிலுமே இடம்பெற்றுள்ள இந்த புருஷ ஸூக்தம்என்பது பல மந்த்ரங்களைக்கொண்டது. (மந்த்ரம்என்று சொல்லாமல்‌ ‘பாராஎன்றோ, ஸ்லோகம்என்றோ சொல்வதும்உண்டு.)

முதல்யாகத்தை வர்ணித்து, சிருஷ்டியைச்சுருக்கமாக விவ ரிக்கிற புருஷ ஸூக்தம்‌, ஆதிபுருஷனைபரம புருஷனைஇறைவனைபிரம்மத்தைமிகப்பெரிய வடிவில்காட்டு கிறது. பிரம்மம்பெரியதற்கெல்லாம்பெரியது: சிறியதற்கெல்லாம்சிறியது என்பதால்‌, பிரம்மத்தைப்பெரியதாக வர்ணிக்கிற மந்த்ரங்கள்அல்லது ஸ்லோகங்களும்உண்டு; மிகவும்சிறிதாக, அணு வைக்காட்டிலும்சிறியதாகக்கூறுகிற ஸ்லோகங்களும்உண்டு. புருஷஸூக்தம்‌, கணக்கற்ற கைகளும்‌, கால்களும்‌, தலைகளும்உள்ள பிரம்மாண்டமான உருவமாகப்பரம புருஷனை வர்ணிக்கிறது.

அந்தப்பரம புருஷனை அறிவதைத்தவிர, முக்தி பெறுவதற்கு வேறு ஒரு வழி இல்லைஎன்பது புருஷஸூக்தம்கூறு கிற அறிவுரைஆரம்பத்திலேயே ஒன்றைப்புரிந்து கொண்டு விடுவது நல்லது. புருஷ ஸூக்தம்என்கிற இந்தத்தொகுப்பில்‌, ‘உருவகப்படுத்துதல்‌! மற்றும்ராம! என்கிற வழிமுறைகள்தாராள மாகவே கையாளப்பட்டிருக்கின்றன. ஆகையால்‌, பரமபுருஷன்‌ – பிரம்மம்‌ – பெரியவற்றுக்கெல்லாம்பெரியது என்பதைக்காட்டு வதற்காக, ‘ஆயிரம்தலைகள்‌, ஆயிரம்கண்கள்‌”… என்று வர்ணனை போகிறதுஅவன்எங்கும்வியாபித்து நிற்கிறான்‌. கணித நூல்இலக்கணத்தில்அவனுடைய மகிமையை, அளந்து அடக்க முடியாது. இதுவரை இருந்ததும்‌, இனி வரப்போவதும்‌, இப்போது இருப்பதும்‌, இதற்கெல்லாம்அப்பாற்பட்டவனும்அவனே. அவனிட மிருந்தே அனைத்தும்தோன்றுகின்றன; அவனிடமே நிலை பெறு இன்றன. அவனே அனைத்திற்கும்ஆத்மா. இவ்வுலகம்அவனு டைய மஹிமையில்‌ – கால்பகுதியானது. மீதமுள்ள முக்கால்பகுதியோ காணப்படாமல்மறைந்திருக்கிறது. இப்படிப்புருஷ ஸுக்தத்தில்பரம புருஷன்வர்ணிக்கப்படுகிறான்‌.

இந்தப்பரம புருஷன்‌, தன்னிலிருந்து விராட புருஷனைத்தோற்றுவித்தான்‌. விராட புருஷன்என்றால்மகத்தான புருஷன்‌. அவனே, ஆதி ஜீவனும்‌, படைப்புக்கடவுளுமாகிய ப்ரம்மதேவன்‌. அவனிட மிருந்து தேவர்கள்தோன்றினர்‌.  இப்படித்தோன்றிய தேவர்கள்‌, அந்த விராட புருஷனாகிய பிரம்மதேவனையே வேள்விப்பொருளாக்கி ஒரு மானஸ யக்ஞம்‌ – மனதினால்செய்யப்படுகிற, மானஸ யாகம்‌ – நடத்தினார்கள்‌. பகவத்சிதையிலும்கூட, பொருளைக்கொண்டு செய்யப்படுகிற யாகத்தைவிட, ஞான வேள்வியே மேம்பட்டது என்று கூறப்பட்டிருக்கிறது. தைத்ரீிய உபநிஷதத்திலும்கூட முடிவில்மானஸ யாகமே குறிப்பிடப்படுகிறது. மானஸ யாகத்தின்மேன்மையைப்புரிந்து கொண்ட ஞானிக்கு, அவனுடைய ஆத்மாவே யாகம்நடத்துகிற எஜமானன்‌; அவன்மனதில்அவன்காட்டுகிற கிறது. ‘அந்தப்‌ பரம புருஷனை அறிவதைத்‌ தவிர, முக்தி பெறு வதற்கு வேறு ஒரு வழி இல்லை’ என்பது புருஷஸூக்தம்‌ கூறு கிற அறிவுரை. 

ஆரம்பத்திலேயே ஒன்றைப்‌ புரிந்து கொண்டு விடுவது நல்‌ லது. புருஷ ஸூக்தம்‌ என்கிற இந்தத்‌ தொகுப்பில்‌, ‘உருவகப்‌ படுத்துதல்‌! மற்றும்‌ ராம! என்கிற வழிமுறைகள்‌ தாராள மாகவே கையாளப்பட்டிருக்கின்றன. ஆகையால்‌, பரமபுருஷன்‌ – பிரம்மம்‌ – பெரியவற்றுக்கெல்லாம்‌ பெரியது என்பதைக்‌ காட்டு வதற்காக, ‘ஆயிரம்‌ தலைகள்‌, ஆயிரம்‌ கண்கள்‌… என்று வர்ணனை போகிறது.  அவன்‌ எங்கும்‌ வியாபித்து நிற்கிறான்‌. கணித நூல்‌ இலக்க ணத்தில்‌ அவனுடைய மகிமையை, அளந்து அடக்க முடியாது. இதுவரை இருந்ததும்‌, இனி வரப்‌ போவதும்‌, இப்போது இருப்‌ பதும்‌, இதற்கெல்லாம்‌ அப்பாற்பட்டவனும்‌ அவனே. அவனிட மிருந்தே அனைத்தும்‌ தோன்றுகின்றன; அவனிடமே நிலை பெறு இன்றன. அவனே அனைத்திற்கும்‌ ஆத்மா. இவ்வுலகம்‌ அவனு டைய மஹிமையில்‌ – கால்‌ பகுதியானது. மீதமுள்ள முக்கால்‌ பகுதியோ காணப்படாமல்‌ மறைந்திருக்கிறது. இப்படிப்‌ புருஷ ஸுக்தத்தில்‌ பரம புருஷன்‌ வர்ணிக்கப்படுகிறான்‌. இந்தப்‌ பரம புருஷன்‌, தன்னிலிருந்து விராட புருஷனைத்‌ தோற்றுவித்தான்‌.

விராட புருஷன்‌ என்றால்‌ மகத்தான புருஷன்‌. அவனே, ஆதி ஜீவனும்‌, படைப்புக்‌ கடவுளுமாகிய ப்ரம்மதேவன்‌. அவனிட மிருந்து தேவர்கள்‌ தோன்றினர்‌.  இப்படித்‌ தோன்றிய தேவர்கள்‌, அந்த விராட புருஷனாகிய பிரம்மதேவனையே வேள்விப்‌ பொருளாக்கி ஒரு மானஸ யக்‌ ஞம்‌ – மனதினால்‌ செய்யப்படுகிற, மானஸ யாகம்‌ – நடத்தினார்‌ கள்‌. பகவத்‌ சிதையிலும்‌ கூட, பொருளைக்‌ கொண்டு செய்யப்‌ படுகிற யாகத்தைவிட, ஞான வேள்வியே மேம்பட்டது என்று கூறப்பட்டிருக்கிறது. தைத்ரீிய உபநிஷதத்திலும்‌ கூட முடிவில்‌ மானஸ யாகமே குறிப்பிடப்படுகிறது. மானஸ யாகத்தின்‌ மேன்‌ மையைப்‌ புரிந்து கொண்ட ஞானிக்கு, அவனுடைய ஆத்மாவே யாகம்‌ நடத்துகிற எஜமானன்‌; அவன்‌ மனதில்‌ அவன்‌ காட்டுகிற ஊக்கமே, அவனுடைய மனைவி; அவனுடைய சரீரமே அக்னி யில்இடப்படுந சுள்ளிக்கட்டைகளின்கட்டுஎன்பது உபநிஷத்து வாக்யம்‌. இப்படிப்பட்ட உயர்ந்த மானஸ யக்ஞத்தைத்தேவர்கள்செய்தனர்‌. அதில்விராட புருஷனாயெ ப்ரம்மதேவனே யாகப்பொருளானான்‌. வஸந்த காலம்‌, நெய்ஆயது; கோடைக்காலம்‌, விறகுக்கட்டையாகயது; இலையுதிர்காலம்‌, அக்னி யில்இடுகிற பொருளாகியது. பரம புருஷனே அக்னியானான்‌. இப்படிப்பட்ட மானஸ யாகத்தில்‌, விராட புருஷனாகிய ப்ரம்ம தேவன்தன்னையே அர்ப்பணித்தான்‌. இதன்பயனாக உலக சிருஷ்டி ஏற்பட்டது ஸகல ஜீவராசிகளும்‌, இசைகளும்‌, சூரியனும்‌, சந்திரனும்‌, அப்போது விராட புருஷனிடமிருந்து தோன்றினர்‌. காற்றும்‌, அக்னியும்‌, இந்திரனும்தோன்றினர்‌… இறைவனாகிய பரம புருஷன்‌, ப்ரம்மதேவன்மூலமாக உல கையும்‌, சகல ஜீவராசிகளையும்படைத்தான்‌ – என்பது இப்படி வர்ணிக்கப்பட்டு, ப்ரம்மதேவனின்உடலில்ஒவ்வொரு அங்கத்இலிருந்து, ஒவ்வொன்று உண்டாகியதாகக்கூறப்படுகிறது.

விராட புருஷனின்மனதிலிருந்து இந்திரன்தோன்றினான்‌. மூச்சிலிருந்து காற்று உண்டாயிற்று; காதுகளிலிருந்து திசைகள்தோன்றினஎன்றெல்லாம்இதில்கூறப்படுவதிலிருந்து ஒன்று தெளிவாகப்புரிகிறது. எல்லாமே உருவகப்படுத்திக்கூறப்படு கிற விஷயங்கள்‌. இந்த வர்ணனை வகையை ஒட்டியே, மனிதர்கள்படைக்கப்பட்டதும்இவ்வாறு விவரிக்கப்படுகிறது: ப்ராஹ்மணோஸ்ய முகமாஸூத்பாஹூராஜன்ய: க்ருத: ஊரூ ததஸ்ய யத்வைச்ய: பத்ப்யா(கு)ம்சூத்ரோ அஜாயத இவருடைய வாய்பிராமணன்ஆயிற்று; கைகள்க்ஷத்ரியன்‌ | ஆயின; இவருடைய தொடைகள்‌: வைசியனாயிற்று; பாதங்களிலி ருந்து சூத்ரன்தோன்றினான்‌.

இப்படிக்கூறப்பட்டிருப்பது, தொடர்ந்து சர்ச்சைக்கும்‌, விமர்சனத்திற்கும்உள்ளாகியிருக்கிறது. ‘முகத்திலிருந்து பிராமணன்‌: உண்டானான்‌ – என்றால்‌, அவன்அவ்வளவு விசேஷமா?! என்பது முதல்கேள்வி. இதில்ஒரு திரிபுவாதம்இருக்கிறது. ‘முகம்‌’ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லிற்குவாய்‌’ என்றும்பொருள்உண்டு. அந்த அர்த்தத்தை எடுத்துக்கொள்ள மறுத்து, முகம்என்றால்முகமேஎன்ற வாதம்ஏற்கத்தகாதது. பல உரைகளில்‌, முகம்என்பது வாயைக்குறிப்பதாகத்தான்பொருள்கூறப்படுகிறது. அப்படிப்பார்க்கும்போது, அது ஒன்றும்அவ்வளவு விசேஷமானது அல்ல என்று ஆகிறது

சரி, சூத்ரன்‌, பாதங்களிலிருந்து தோன்றினான்என்றால்‌, அன்றே சூத்ர ஜாதி தாழ்த்தப்பட்டது ஆகிவிட்டது அல்லவா?’ என்றும்கேட்கப்படுகிறது. முதலில்ஒரு விஷயத்தைக்கவனிக்க வேண்டும்‌. இதில்ஜாதி விஷயமே வரவில்லை. வர்ணம்பற்றித்தான்இங்கு பேசப்படுகிறது. வர்ணம்வேறு; ஜாதி வேறு. வ்ரி என்பதே வர்ணம்என்பதற்கு வேர்‌; இதற்கு விரும்பித்தேர்ந்தெடுப்பது 60058 – என்பதே பொருள்‌. அதாவது ஒருவன்ஒரு வாழும்வகையை விரும்பித்தேர்ந்தெடுப்பதால்‌, அவன்அந்த வர்ணத்தைச்சேர்ந்தவன்ஆகிறான்‌. ஜாதி என்ற சொல்லைப்பார்த்தாலோ, அதுஜன்‌’ என்ற வேரிலிருந்து வருகிறது. இதற்கு பிறப்பு என்று பொருள்‌. அதாவது, ஜாதி பிறப்பை அடிப்படையாகக்கொண்டது. வேதத்தில்ஜாதி என்ற சொல்பயன்படுத்தப்படவில்லை; அது காலப்போக்கில்வழக்கில்வந்துவிட்‌  டது. ஒரு ஜாஇயிலிருந்து இன்னொரு ஜாதிக்கு மாற வழி யில்லை; ஆனால்‌, ஒரு வர்ணத்திலிருந்து மற்றொரு வர்ணத்திற்கு | மாறலாம்‌. 

குணத்தையும்‌, வாழும்வகையையும்ஒட்டி, மனிதர்கள்‌  ள்நான்கு வர்ணங்களாக வகுக்கப்பட்டனர்‌ – என்று பகவத்கதையே சொல்கிறது. புருஷ ஸுக்தத்தையே எடுத்துக்கொண்டால்‌ –

பத்ப்யாம்பூமி

பாதங்களிலிருந்து பூமி உண்டாயிற்றுஎன்று கூறப்படு கிறது. அப்படியானால்பூமியே கேவலமானதா? பூமா தேவி பெரிதும்போற்றப்படுகிறாள்‌; வணங்கப்படுகிறாள்‌; விஷ்ணுவின்மனைவியாகக்கருதப்படுகிறாள்‌. அப்படிப்பட்ட பூமி தோன்றிய இடத்திலிருந்து, ஒரு வர்ணம்தோன்றியது என்றால்அது எப்ப டிக்கேவலமானதாக விடும்‌? 

அதுவுமின்றி நான்கு வர்ணங்களுமே இறைவனிடமிருந்து தோன்றியவையே என்பதைத்தானே இது வலியுறுத்துகிறது

இது பற்றியெல்லாம்‌, ஏற்கெனவே விளக்கியிருக்கிறேன்‌. ‘எங்கே பிராமணன்‌?’, ‘வெறுக்கத்தக்கதா பிராமணியம்‌?! – ஆகிய இரு புத்தகங்களில்பல விளக்கங்களைத்தொகுத்து அளித்திருக்இறேன்‌; ‘ஹிந்து மஹா சமுத்திரம்‌! என்ற விரிந்து கிடக்கும்இம்மதத்தின்பல பார்வைகளைப்புரிந்து கொள்ள முனைகிறபோது, இந்த வர்ணப்பிரிவுகள்பற்றி விவரமாக மீண்டும்ஒருமுறை பார்ப்பது தவிர்க்க முடியாதது. ஆனால்அதைச்செய்வதற்கு, இதைவிட பொருத்தமான கட்டம்வேறு ஒன்று வரும்என்ப தால்‌, இவ்விஷயத்தை இத்துடன்நிறுத்திக்கொண்டு மேலே செல்கிறேன்‌. 

அப்படிச்செவ்வதற்கு முன்பாக ஓரிரு வார்த்தைகள்‌. யாகங்களைச்செய்வதிலும்‌, தர்மத்தினால்விதிக்கப்பட்ட கர்மங்களைச்‌  செய்வதிலும்‌, எந்த வர்ணத்தாருக்கும்தடை இருக்கவில்லைஅதனால்தான்சூத்ரனுக்கு வேதம்கற்பிக்கப்பட்ட நிகழ்ச்சியும்‌, வேதத்திலேயே வர்ணிக்கப்படுகிறது. ப்ருகு முனிவர்‌, பரத்வாஜ முனிவரிடம்நான்கு வர்ணங்களைச்சார்ந்தவர்களுக்குமே யாகங்‌. களையும்‌, தர்மத்தின்படியான மற்ற கர்மங்களையும்செய்யும்அதிகாரம்உண்டு என்று கூறுகிறார்‌ : 

இத்யேதி: கர்மபிர்வ்யஸ்தா 

த்விஜா வர்ணாந்தரம்கத

தர்மோ யக்ஞய க்ரியா தேஷாம்‌ 

நித்யம் ப்ரதிஷித்யதே 

பிராமணர்கள்தங்களுடைய நியமங்களைக்கைவிட்டதால்‌, வெவ்வேறு செயல்முறைகளை மேற்கொண்டு, மற்ற மூன்று வர்ணங்களைச்சார்ந்தவர்கள்ஆகிறார்கள்‌. ஆகையால்‌, தர்ம காரியங்களைச்செய்வதிலும்‌, யாகங்களை நடத்துவதிலும்யாருக்கும்தடை கிடையாது

சூத்ரன்வேதம்பயிலக்கூடாது என்றெல்லாம்பிற்காலத்தில்வந்தது; ஆனால்இதைப்பிரதிபலிக்கிற மனு தர்மமே கூட இப்படிக்கூறுகிறது

அப்ராம்ணாத்அத்யயனம்ஆபத்காலே விதியதே:

 அனுவ்ரஜ்யா சுச்ருஷா யாவத்அத்யயனம்குரோ

தவிர்க்க முடியாத நேரங்களில்‌, பிராமணர்கள்அல்லாத குரு விடமிருந்து போதனை பெறலாம்‌; அப்படி போதனை பெறுகிற காலத்தில்‌, அந்த குருவுக்கு அந்த மாணவன்பணிவிடை செய்ய வேண்டும்‌. 

அதாவது, வர்ணங்கள்பிறப்பை ஒட்டியவை அல்லஎன்ற நிலையிலிருந்து, மாற்றங்கள்தோன்றி அவை பிறப்பால்அடை யப்படுகிறவை என்ற வழக்குமுறை வந்துவிட்ட காலகட்டத்தில்கூடமேற்கண்டவாறு வற்புறுத்தப்படுகிறது. (இவற்றை யெல்லாம்‌, மேலே கூறியது போல பிறகு விவரமாகப்பார்ப்போம்‌.) 

இதிலிருந்தே வேதங்கள்பயிலவோ, யாகங்களை நடத்தவோ யாருக்கும்தடை இருக்கவில்லை என்பது புரிகிறது. விதிக்கப்பட்ட நியமங்களை ஏற்று நடப்பவர்கள்யாராக இருந்தாலும்‌, அவர்கள்இதற்கெல்லாம்அதிகாரம்கொண்டவர்களே

அதனால்ரிக்வேதமே இவ்வாறு கூறுகிறது

அஜ்யேஷ்டாஸோ அகனிஷ்டாஸ ஏதே 

ஸம்ப்ராதரோ வாவ்ருது: ஸெளபாகாய 

உங்களில்உயர்ந்தவர்‌, தாழ்ந்தவர்என்று எவரும்இல்லை. அனைவரும்சகோதரர்களே! ஒன்றுபட்டு வாழ்ந்து, மேன்மையைப்பெறுவீர்களாக!” 

ஆக, எல்லோரும்சேர்ந்து, ஹிந்து மத சிந்தனைகளை ஓரளவாவது புரிந்து கொள்ள முயல்வோம்‌.