வேதம் கூறும் தெய்வங்களில் சில…

வேதங்கள்கூறுகிற முக்கியமான தெய்வங்களில்சூரியன்ஒருவன்‌. ஒளியைத்தருபவன்‌; இருளுக்குக்காரணமாகிறவன்‌; ஜிீவராசிகளுக்குச்சக்தியை அளித்து, சோம்பலையும்நோயையும்விரட்டி அவற்றை இயங்க வைப்பவன்‌. விடியலுக்குச்சற்று முன்பாகக்காணப்படுவது இவனுடைய அம்சமாகிய ஸவித்ரு; அந்நிலையில்அவன்மனிதர்களைச்சரியான வழியில்நடத்து கிறான்‌. காயத்ரி மந்திரம்இவனை நோக்கியே ஓதப்படுகிறது. புஷ்டி அளிக்கிற இவனுடைய குணத்தினால்‌, இவன்‌ ‘பூஷன்‌’ ஆகிறான்‌. இந்தக்கோணத்தில்‌, இவனுடைய அம்சம்எல்லோ ரையும்சமப்பார்வையுடன்நோக்கி, தீமையை விரட்டி, நன்மையை தாராளமாக அளிக்கிற தன்மை உடையதாகிறது. வேதங்களில்குறிப்பிடப்படுகிற தெய்வங்களில்‌, சூரியனே முதன்மை யானவன்என்று கருதுபவர்கள்உண்டு

வருணன்‌, உலகம்முழுவதும்வியாபித்திருப்பவன்‌. வானமே, வருணனாக சில சமயங்களில்உருவகப்படுத்தப்பட்டாலும்‌, நதிகள்‌, சமுத்திரம்ஆகியவற்றுடன்இவன்சேர்த்துப்பேசப்படுகிறான்‌. இவனுடைய அறிவும்‌, சக்தியும்அளவற்றவை. மிகவும்விரிந்த பார்வையுடைய இவன்‌, உலஇன்தர்மத்இன்பாற்பட்ட விதிமுறைகளை நிர்வகிக்கிறான்‌. இந்தப்பாதையிலிருந்து தவறுபவர்களை வருணன்‌, அப்படித்தவறு செய்ப

வர்கள்வருந்தி, துதித்து, இருந்தி விடுகிறபோது, அவர்களை மன்னிக்கும்கருணை உள்ளம்கொண்டவனாகவும்இருக்கிறான்‌. பொதுவாக உலக வாழ்வின்சட்டதிட்டங்கள்இவனுடைய அதி காரத்திற்குட்பட்டவை என்று சொல்லலாம்‌. 

உயிர்மூச்சின்உருவம்வாயு. இவன்இந்திரனுடன்சேர்ந்து, விண்ணுலகிற்கும்இடைப்பட்ட வானுலகில்அதிகாரம்செலுத்து பவன்‌. மனிதர்கள்உடலின்உள்ளே, ஐந்து முக்கிய மூச்சுக்காற்றுகளாக இவன்விளங்குகிறான்‌. இவன்மருத்துவனும்கூட என்பதால்‌, நோய்களைத்நீர்ப்பவனும்ஆகிறான்‌. உயிர்களுக்கு ஆதார மானவன்என்று இவன்வர்ணிக்கப்படுகிறான்‌. 

அடக்குவது, கட்டுப்படுத்துவது, நிர்வகிப்பதுபோன்ற வற்றைச்செய்பவன்யமன்‌. இறந்தவர்களின்ஆன்மா இவனி டம்வசிக்கின்றன. இறந்தவர்களின்உலகை ஆள்வதால்‌, இவன்அரசன்என்றும்வர்ணிக்கப்படுகிறான்‌. உலகில்வாழ்பவர்களின்முன்னோர்களை எல்லாம்இவன்கருணையுடன்ஆதரிக்கிறான்‌. இறந்தவர்களில்முதன்மையானவன்என்றும்அவனைப்பற்றி கூறப்படுகிறது. ஆந்தை, புறா ஆகியவை யமதூதர்களாக வர்ணிக்கப்படுகின்றன. ஆகையால்இவற்றின்வருகை, சாவைக்குறிக்கும்என்ற நம்பிக்கையும்உண்டு

புயல்காற்றின்தெய்வங்களான மருத்துக்கள்இந்திரனுக்கு உதவுகிறவர்கள்‌. நோய்கள்குணமாவதற்கும்இவர்கள்வேண்டப்படுகிறார்கள்‌. கோபம்கொண்டு, தீமையை அழிக்கிறபோது, இவர்களைக்கண்டு வானவர்களே நடுங்குவார்கள்‌. இவர்கள்பன்மையிலேயே குறிப்பிடப்படுகிறார்கள்‌. 

பூமி, பெண்தெய்வமாக வணங்கப்படுகிறது. தாயாகக்௧௬ தப்படுகிறது. இறந்தவன்முதலில்தாயான பூமியின்மடிக்குப்போய்ச்சேருகிறான்என்று வேதம்கூறுகிறது

ப்ருஹத்‌’ என்பது பெரிது; ‘பதி! என்றால்‌, பாதுகாப்பவன்‌. ப்ருஹஸ்பதி பெரிதாகிய உலகங்களைக்காப்பவன்‌. ப்ருஹஸ்பதி, ப்ரும்மணஸ்பதி ஆகிய இரண்டு பெயர்களும்சில இடங்களில்வேதங்களில்சேர்ந்தே கூறப்படுவதால்‌, இரண்டும்ஒன்றே என்று விளக்கங்கள்கூறப்பட்டுள்ளன. ப்ருஹஸ்பதி, அறிவாளி களில்மேம்பட்டவன்‌; துதிகளுக்கெல்லாம்அவனே அதிபதி; சொல்லின்தலைவன்‌; துஇப்பவர்களுக்குச்செல்வத்தை அளித்து, அவர்களை அனைத்து அபாயங்களிலிருந்தும்ப்ருஹஸ்பதி காப்பாற்றுகிறான்‌.

இந்த ப்ருஹஸ்பதியே, ப்ரும்மணஸ்பதி என்றும்குறிப்பிடப்படுவதைப்பார்த்தோம்‌. இப்படி ஓதுகிற மந்த்ரத்தில்‌, ‘கணபதிஎன்ற வர்ணனையும்வருகிறது. அதாவது கணங்களின்தலை வன்‌. இதுதான்பிற்காலத்தில்‌ ‘விநாயகர்‌’ என்று புராணங்களில்பேசப்படுதநற தெய்வம்‌. ஆக, ப்ருஹஸ்பதியே, விநாயகர்‌. அவன்ஒரு கருமானைப்போல்செயல்பட்டு, உலகைப்படைத்தான்என்று வேதம்கூறுகிறது.

கர்மார இவ

கருமானைப்போல

 என்று வேதம்கூறுகிறது. ஸம்ஸ்க்ருதத்தில்கர்மார, தமிழில்கருமான்‌. கருமானைப்போல செயல்பட்டு, தனது மூச்சுக்காற்நினால்‌, உலகைப்படைத்தான்ப்ருஹஸ்பதி. அப்படியானால்‌, பிரம்மன்உலகைப்படைக்கவில்லையா? ஆம்‌, பிரம்மன்படைத்தான்‌. ப்ருஹஸ்பதியே பிரம்மனாகவும்வர்ணிக்கப்படுகிறான்‌.

.வேதங்களில்‌, கிட்டத்தட்ட இந்திரனுக்கும்அக்கினிக்கும்நிகராக ஸோமன்போற்றப்படுகிறான்‌. ஸோமன்குறிப்பாக உருவம்கொண்டவனாக வர்ணிக்கப்படாமல்‌, ஸோமக்கொடியுடன்தொடர்புபடுத்தியே துதிக்கப்படுகிறான்‌. ஸோம பானம்‌, மது பானம்அல்ல; ஸுரா பானம்என்பதுதான்மது. ஸோம ரஸமோ, அமிர்தத்திற்கு நிகராகப்பேசப்பட்டு துதிக்கப்படுவது; இதனால்தான்யாகங்களில்ஸோம ரஸத்திற்கு முக்கியமான இடம்தரப்பட்டது. ஸோமன்‌, நீர்நிலைகளின்சகோதரன்‌; ரிஷிகளில்உயர்ந்த ரிஷி என்றும்ஸோமன்போற்றப்படுகிறான்‌; அவன்நல்ல போர்வீரனும்கூட. உலகிலுள்ள ஜீவராசிகளுக்கு, உருவத்தைச்சமைத்து அளிப்பவன்பதவதச்சனாகிய த்வஷ்டா.

விச்வகர்மா சிறந்த அறிவாளி. சிருஷ்டியில்இவனுடைய செயல்பாடு இருப்பதால்‌, இவன்ப்ரஜாபதியுடன்சேர்த்துப்பேசப்படுகிறான்‌. ப்ரஜாபதி என்றால்ஜனங்களின்தலைவன்‌. 

அவனே முதலில்உண்டானவன்‌. ஜீவராசிகளுக்கு அதிபதி. ஜீவராசிகளின்அரசன்அவன்‌. இவனே ப்ரம்மன்என்று கூறப்படுவதும்உண்டு. வேதத்தின்ஒரு பகுதியில்ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது

கஸ்மை தேவாய ஹவிஷா விதேம 

எந்த தெய்வத்திற்கு நமது சமர்ப்பணங்களை அளிப்போம்‌? 

இப்படி எழுப்பப்படுகிற கேள்விக்கு, வேதமே அளிக்கிற பதில்‌ – ‘ப்ரஜாபதி

இந்த மாதிரி சில முக்கியமான தெய்வங்கள்தவிர கடலிலி ருந்து தோன்றிய அப்ஸரஸ்கள்‌, தெய்வத்தின்அம்சம்உடைய கந்தர்வர்கள்‌, வீட்டைக்காக்கிற தெய்வமான வாஸ்தோஷ்பதிபோன்றவர்களைப்பற்றியும்வேதங்கள்பேசுகின்றன

ஸரஸ்வதியை, ஒரு நதியாகவும்‌, பெண்தெய்வமாகவும்வேதம்குறிப்பிடுகிறது. சொல்லுக்குத்தெய்வமாகவும்ஸரஸ்வதி போற்றப்படுகிறாள்‌. 

பர்ஜன்யன்மேகங்களின்தேவன்‌. மழையைத்தருபவன்‌. 

சரி ப்ரும்மா, விஷ்ணு, சிவன்‌ – ஆகிய மும்மூர்த்திகள்பற்றி வேதம்கூறவே இல்லையா?! இந்த மூவருமே வேதங்களில்பேசப்படுகின்றனர்‌. ஆனால்இந்திரனுக்கோ, அக்னிக்கோ, சூரிய னுக்கோ உள்ளது போல அவ்வளவு பகுதிகள்இவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை. இதனால்வேதங்களில்இவர்கள்முக்கியமாகக்கருதப்படவில்லை என்ற ஒரு கருத்து, சில விரிவுரையாளர்களால்கூறப்படுகிறது. இதில்ஒரு படைப்பாளியாக வேதம்கூறுகிறது; மூவுலகையும்தமது இதிருவடிகளினால்அளந்தவர்என்று வர்ணிக்கப்படுகிற விஷ்ணு, பெரிதும்போற்றப்படுகிறார்‌. சிவ னுக்கு ஸ்ரீ ருத்ரம்என்ற பகுதியே அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

ஆகையால்இவர்களுக்கெல்லாம்வேதங்களில்முக்கியத்து வம்இல்லை என்றவேதப்பகுதிகளின்எண்ணிக்கையை அடிப்படையாக வைத்துக்கூறப்படுகிற வாதம்‌, ஏற்கத்தக்கது: அல்ல. எத்தனை முறை ஒருவன்போற்றப்படுகிறான்என்பதை விட, அவன்எவ்வாறு போற்றப்படுகிறான்‌, அவனுக்குரிய குணாதிசயங்கள்என்ன, என்பவைதாம்முக்கியம்‌. ப்ரும்மா, விஷ்ணு, சிவன்ஆகிய மூவரும்இப்போது முறையே ஆக்கும்‌, காக்கும்‌, அழிக்கும்வல்லமை படைத்தவர்களாக துஇக்கப்பட்டாலும்‌, வேதங்களில்மூவருக்குமே இந்தக்குணாதிசயங்கள்கூறப்படுகின்றன

உலகளந்த பெருமாள்என்ற பெயரில்விஷ்ணு வர்ணிக்கப்படுவதற்கு, ‘மூவடியால்மூவுலகை அளந்தவர்‌’ என்று கூறுகிற வேதமே ஆதாரம்‌; மையை அழித்து, பக்தர்களைக்காப்பாற்று இறவராக சிவன்இன்று வர்ணிக்கப்படுவதற்கு, வேதத்தில்வரு இற ஸ்ரீ ருத்ரம்ஆதாரம்‌; அதைப்போல படைக்கும்கடவுளாக பிரம்மன்கருதப்படுவதற்கும்வேத வாக்கியங்களே ஆதாரம்‌. 

ஆகையால்‌, மும்மூர்த்திகளுக்கு, வேதத்தில்முக்கியத்துவம்இல்லை என்று கூறுவது, வார்த்தைகளைத்தராசில்வைத்து, எடை போட்டுப்பார்த்துஇது கடினமானது, இது லேசானது என்று சொல்கிற வேலை. மகத்துவத்தைப்புரிந்து கொள்ள, வழி இதுவல்ல. சொல்லப்பட்ட விஷயத்தின்உன்னதத்தன்மையை உணர்வதற்கு வழி, வாக்கியத்தில்உள்ள கருத்தைப்பார்ப்பதே தவிர, அதன்நீளத்தை அளப்பது அல்ல

ப்ரும்மா, விஷ்ணு, சிவன்‌ – ஆகியோர்பற்றி வேதம்கூறு வதை அடுத்துப்பார்ப்போம்‌.