இன்றும் பாராளுமன்றத்தில் சபாநாயகரின் வருகையை சபைக்கு அறிவிக்கும்போது, மார்ஷல் உரக்கக் கூவிச் சொல்கிற வார்த்தைகள்கூட வேதத் தொடக்கம் உள்ளவைதான். ஸபை அங் கத்தினர்களைப் பார்த்து, ‘மரியாதைக்குரிய ஸபாஸதயர்களே, மரி யாதைக்குரிய ஸபாபதி வருகிறார்! என்று கட்டியம் கூறப்படு கிறது. இதில் ஸபாஸதயர்கள் என்பதும், ஸபாபதி என்பதும் வேதங்களில் வருகிற வார்த்தைகள். ஆம்! அன்றேகூட, ஸபை இருந்திருக்கிறது. அங்கத்தினர்கள் இருந்திருக்கிறார்கள். ஸபைத் தலைவரும் இருந்திருக்கிறார்.
கிராமங்களில் இருந்த அமைப்புகளுக்குப் பெயர் ஸமிதி. ராஜ் யத்திற்குப் பொதுவாக இருந்தது ஸபை. ஸமிதிகளில் உறுப்பி னர்கள் அதிகம். சபையில் அதை விடக் கொஞ்சம் குறைவு. இது பற்றிய சில வேத மந்த்ரங்களைப் பார்ப்போம்:
‘ஸபையும், ஸமிதிகளும் அரசனுக்கு முறையான விவரங் களைத் தெரிவிக்கட்டும். ஹே! ஸபையே! நீ அழிக்க முடியாதது. உன்னுடைய அங்கத்தினர்கள் பாரபட்சமின்றியும், நடுநிலையுட னும் அரசனுக்கு ஆலோசனை கூறட்டும். உன்னுடைய அங்கத் இினர்களின் அறிவுடமையை அரசன் ஏற்கிறான்…
‘லபையின் அங்கத்தினர்களே! ஸபை நடவடிக்கைகளில் நீங் கள் ஈடுபட்டிருக்கும் போது, மற்ற சிந்தனைகள் உங்கள் கவனத் தைத் இருப்பாமல் இருக்கட்டும். அரசு காரியத்தில் உங்கள் மனங் கள் முழுமையாக ஈடுபடட்டும். ‘
ஸபையினரிடையே ஓர் ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற விருப்பத்தைக் கீழ்க்கண்ட மந்த்ரம் தெரிவிக்கிறது :
ஸமானீவ ஆகத:
ஸமானா ஹ்ருதயானி வ:
ஸமானமஸ்து வோ மன:
யதா வா ஸுஸஹாஸதி.
உங்கள் உணர்வுகளும், இதயங்களும் ஒற்றுமையுடன் இருக் கட்டும். உங்கள் மனங்கள் ஒருமையோடு இயங்கட்டும்.
மற்றொரு வாக்கியம் இவ்வாறு கூறுகிறது:
வித்ம தே ஸபே நாம நரிஷ்டா
நாம வா அஸி
சபை பிறரால் கலைக்கப்பட முடியாததாகவும், அவமதிக்கப் படத் தகாததாகவும் இருக்க வேண்டும்.
அரசனுக்கு ஆலோசனை சொல்ல ஒரு ஸபை; அதற்குட் பட்ட ஸமிதிகள் என்ற கிராம அமைப்புகள்; இவற்றின் அவ மதிக்கப்படாத தன்மை; ஒருமுகத்துடன் செயல்பட்டு முடிவு எடுக்க வேண்டிய கடமை… போன்ற விவரங்களைப் பார்க்கும் போது, இன்றைய பாராளுமன்ற முறைக்கு, அன்றே ஒரு தொடக்கம் இருந்தது என்பது தெளிவாகவே புரிகிறது.
ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் எழுதியுள்ள ‘வேத விஜ்ஞா னம்! என்ற நூலில் இது தொடர்பாக வேதங்களில் மேலும் கூறப் பட்டிருக்கும் சில விவரங்களைத் தந்திருக்கிறார்.
‘ஒரு விஷயத்தை ஸபையில் உள்ள பலர் சேர்ந்து ஏற்றுக் கொண்டால், அது மீற முடியாததாகிறது. ஸயையை அவமதிப்பவன் கிராமத்தை விட்டும், ராஜ்யத்தை விட்டும் விலக்கத் தக் கவன். ஸமிதிகளின் மூலம் மக்கள் தங்கள் குறைகளை அரசனுக்குத் தெரிவிக்கலாம்.
‘ஸபைக்கு அரசன் வந்ததும், தனது அபிப்பிராயத்தைக் கூறி, அது பற்றி ஸபையின் கருத்து என்ன என்று கேட்க வேண்டும். ஸ்பை என்ன தீர்மானிக்கிறதோ, அதை அரசன் ஏற்க வேண்டும்”
ஸபைக்கும், ஸமிதிகளுக்கும் எவ்வளவு உயர்ந்த இடம் தரப் பட்டிருந்தது என்பதை வேதத்தில் வரும் ஒரு வாக்கியத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
ஸபா ச ஸமிதிஸ்சாவிதாம்
ப்ரஜாபதேர்துஹிதரெள ஸம்விதானே
ஸபையும், ஸமிதியும் ப்ரம்ம தேவனின் பெண்களாவார்கள்.
அதாவது இந்த இரு அமைப்புகளையும், மக்களின் நலனுக் காகவே ப்ரம்மன் சிருஷ்டி செய்தான் என்று வேதம் கூறுகிறது. ஆகையால் பலர் கூடி விவாதித்து அரசுக்கு உத்தரவிடுகிற காலத் இலேயே ஒரு முக்கியமான தொடக்கம் இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.
இது ஒருபுறம் இருக்க, வேதங்களில் உணவு உற்பத்திக்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பயிர் தொழில் பெரி தும் போற்றப்படுகிறது. ‘கலப்பை பிடிக்கும் கலையை அறிந்த வர்கள் அறிஞர்கள் என்று வேதம் அவர்களைப் புகழ்கிறது. மேலும் பல தொழில்களும், அவற்றைச் செய்தவர்களும் போற் றப்படுகிறார்கள். சொல்லப் போனால் தொழிலாளிகள் துதிக்கப் படுகிறார்கள். தச்சர்கள், கருமான்கள், அம்புகளைத் தயார் செய் பவர்கள், வேட்டையாடுபவர்கள், நாய்களைப் பழக்குகிறவர்கள், சிற்ப வேலை செய்பவர்கள், மண் பாண்டம் செய்பவர்கள், தேர் களைச் செய்பவர்கள்… என்று ஒவ்வொரு வகைத் தொழிலாளிகளாகக் குறிப்பிடப்பட்டு, அவர்களுக்கு நமஸ்காரம் என்று கூறி வேதம் துதிக்கிறது. ஆக, எந்தத் தொழிலுமே இழிவானதாகக் கருதப்படவில்லை.
பலவிதமான இயந்திரங்கள் பற்றி வேதங்கள் பேசுகின்றன. “குதிரை பூட்டப்படாமல், செல்லக் கூடிய ரதத்தில் போகின் றேன்! என்ற வாக்கியம் ரிக் வேதத்தில் வருகிறது. ‘காற்றை ரதத்தின் சக்கரத்தில் ஏற்றி, அந்த ரதத்தை ஓட்டுங்கள்! என்று இன்னொரு வேத வாக்கியம் கூறுகிறது.
“சமுத்திரத்தின் மேல் எங்கும் செல்லக் கூடியதும், கடலின் அலையைத் தாங்கக் கூடியதுமான கப்பலை, சாமர்த்தியசாலி ஓட்டிச் செல்கிறான்” என்பதும் ஒரு வேத வாக்கியம். வீடு கட்டும் கலை பேசப்படுகிறது. வணிகத் துறையைப் பெரிதும் முக்கிய மாகக் கருதி பல இடங்களில் வேதம் பேசுகிறது. கடல் கடந்து வியாபாரம் செய்யப்போனவர்கள் ஓர் ஆபத்தும் இல்லாமல் இரும்பி வந்து சேர வேண்டும் என்ற துதியை ஒரு வேத மந்த்ரம் கூறுகிறது!
இப்படி, மேலை நாடுகளிலிருந்துதான் உலகமே பெற்றது என்று இன்று கருதப்படுகிற பல விஷயங்களைப் பற்றி, வேதங் கள் பேசுகின்றன. போர் முறை பேசப்படுகிறது. மருத்துவம் சொல்லப்படுகிறது. வான சாஸ்திரம் கூறப்படுகிறது. உலோகங் களைப் பற்றி விவரங்கள் இிடைக்கின்றன. வேதத்தில் தாய்நாடு விசேஷமாகப் போற்றப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி அரசியலிலிருந்து, ஆன்மீகம் வரை பல விஷயங்கள்! எவ்வளவு நுட்பங்கள்! எத்தனை விவரங்கள்! எவ்வளவு விமர்ச னங்கள்! எத்தனை கேள்விகள்! எத்தனை விளக்கங்கள்!
இப்படிப்பட்ட ஒரு மாபெரும் சிந்தனை ஊற்று, நமது நாட் டில் இருந்திருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம். உலகில் வேறு மதங்கள் தோன்றாத நிலையில், வேறு இலக்கியங் கள் உருவாகாத நேரத்தில், இங்கே வேதங்களைக் கண்டு, இவ் வளவு விஷயங்களை ரிஷிகள் அள்ளித் தந்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட வேதங்களைப் பற்றிப் பலவிதமான விமர்சனங்களை நாம் சந்திக்கிறோம். இரட்டை அர்த்தமுள்ள பல வாக்கியங்களுக்கும், வார்த்தைகளுக்கும் இருக்கின்ற நல்ல பொருளை விட்டு விட்டு, வேண்டாத அர்த்தத்தை எடுத்துக் கொண்டு, விபரீதமான விளக்கங்களை பலர் அளித்துள்ளார்கள். வேண்டாத பல வழக்கங்கள் தோன்றி, ஹிந்து மதத்தில் பல கொடுமைகள் நிகழ்கின்றன – என்பதும் இவர்களுடைய குற்றச் சாட்டுகளில் ஒன்று. உதாரணத்திற்கு உடன்கட்டை ஏறுதல் – ஸதி. இது ஏதோ வேத காலத்திலிருந்து கட்டாயமாக வந்து விட்ட பழக்கம் போல இன்று கண்டனம் செய்யப்படுகிறது.
ஆனால் உண்மை என்ன? நாம் பேச வேண்டாம். வேதத்தைப் பேச விடுவோம். ‘கணவன் இறந்து விடுகிறான்; தன்குழந்தைகளைக் காப்பாற்றவோ, தான் ஜீவிக்கவோ கூட இனி வழி கிடையாது என்ற முடிவுக்கு வந்து, அவனுடைய மனைவி உடன்கட்டை ஏறி, அவனுடன் பரலோகம் சென்று விட தீர் மானிக்கிறாள்’. வேத வாக்கியம் அவளைத் தடுத்து நிறுத்துகிறது:
‘பெண்ணே! இறந்து போய்விட்ட இவனுடள் நீ ஏன் சிதையில் படுக்க நினைக்கிறாய்? உலகில் மற்றவர்கள் வாழ்வதைப் பார். கைபிடித்த உன் கணவனின் உடலை எரிப்பதற்கு அனுமதி அளித்து, விலகி நில். இனி அவன் மேல் உலகம் சென்று, தேவ னாகத் திகழ்வான். அதை நீ தடை செய்யாதே! உனக்குத் தேவைப் படுகிற பொருளை உனக்குத் தருகிற பொறுப்பையும், உன் குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பையும் உன்னுடைய உறவினர் களாகிய நாங்கள் ஏற்கிறோம்!”
இதைச் சொல்லி உடன்கட்டை ஏற நினைக்கிற பெண்ணை, உறவினர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேதம் கூறுகிறது. ஆனால் இன்றைய விமர்சகர்களோ, ‘இதெல்லாம் வேத காலத்தில் இருந்து வந்த கொடுமைகள்! என்று சுலபமாகச் சொல்லி விடுகிறார்கள்.
இது ஒன்று தான் என்றில்லை. இது போன்ற பல விஷயங் களில், வேதங்களில் கூறப்பட்டிருக்கிற உயர்ந்த எண்ணங்களைப் புரிந்து கொள்ளாபலேயே அவற்றை விமர்சனம் செய்கிறவர் களின் கூட்டம் பெருகி வருகிறது.
அறியாமையுடன், அகங்காரமும் சேர்ந்து கொள்வதால் வரு கிற வினை இது. வேண்டாத இந்தக் கலவையை விலக்கி வைத்து, வேதங்களின் இறுதிப் பகுதியான உபநிஷத்துக்கள் என்ன சொல்இன்றன என்று பார்ப்போம்.