குருவிற்கு நெருக்கமாக இருந்து… நான் யார்? நீ யார்? இந்த உலகம் எத்தகையது? இது எப் படி உண்டாகியது? இதன் காரணகர்த்தா யார்? மரணம் என்பது என்ன? அதற்குப் பின் நடப்பது என்ன? ஆன்மா என்பது என்ன? ஜீவாத்மா எது? பரமாத்மா யார்? ப்ரும்ஹம் என்கிற இறைவன் எத்தகையவன்? அவனை உணர்வது எவ்வாறு?… என்பன போன்ற மிகவும் சிக்கலான கேள்விகளுக்கு விடை காண முயல் இன்றவை, உபநிஷத்துக்கள். அவற்றைப் படித்து, இந்தக் கேள்வி களுக்கான விடைகளைப் புரிந்து கொண்டு, ப்ரம்மனை உணர்ந்து விடலாமா? அது அவ்வளவு எளிதான விஷயமல்ல.
இதை உபநிஷத்துக்களே கூறுகின்றன :
நாயமாத்மா ப்ரவசனேன லப்யா:
நமேதயா ந பஹுூனா ச்ருதேன.
அதாவது – பிரசங்கங்கள் மூலமாகவும், அறிவுத்திறன் கொண் டும், பெரிய படிப்பினாலும் மட்டுமே இதை அறிந்து கொண்டு விட முடியாது.
பின் எப்படித்தான் புரிந்து கொள்வது? அதுவும் கூறப் பட்டிருக்கிறது.
தத்வித்தி: ப்ரணிபாதேன
பரிப்ரசச்னேன ஸேவயா
தன்னடக்கத்துடன் தன்னை அர்ப்பணித்து விடுவதாலும், விடா முயற்சியுடன் உணர்ந்து கொள்ள முனைவதாலும், பணி விடையினாலும் இதை அறியலாம்.
அதாவது தவம் செய்ய வேண்டும். தவம் என்றால் நெருப் பின் மீது நிற்பதோ, ஆணிகள் மீது நிற்பதோ, வெய்யில் – மழை பாராமல் பட்டினி கிடந்து, வெட்டவெளியில் ஒற்றைக் காலில் நிற்பதோ அல்ல. முனைப்புதான் தவம். ‘தபஸ்’ என்ற சொல் லிற்கு தகப்பது, உஷ்ணம் என்ற பொருள்கள் உண்டு. ஒரு விஷ யத்தைத் தொடர்ந்து அழுத்தத்துடன் செய்தால், ஃப்ரிக்ஷன் மூல மாக உஷ்ணம் உண்டாகிறது. அதுவே சக்தி – எனர்ஜி. விடா முயற்சியுடன், ஒரு விஷயத்தில் ஒருவன் முனையும்போது, ‘தவம் கிடக்கிறான்’ என்று இன்றும் பேசுகிறோம். அந்த முனைப்பு தான் தவம்.
ஒரு விஞ்ஞானி, ஒரு பரிசோதனையைப் பற்றி விடாமல் சிந் இக்கிறான்; ஓர் ஓவியன் தான் வரைய இருக்கும் சத்திரம் பற்றிச் சிந்தித்துக் கொண்டே இருக்கிறான்; ஒரு கவிஞன் தான் எழுத நினைக்கிற கவிதை பற்றி முனைப்புடன் சிந்தனை செய்கிறான். இதுதான் அப்யாஸம். இந்த அப்யாஸம் கடுமையாகப் பின் பற்றப்படுகிறபோது, அதுவே தவம்.
யஸ்மின் விஞ்ஞாதே ஸர்மிதம்
விஞ்ஞானம் பவதி
இதை உணர்ந்து கொண்டால், அறிய வேண்டியவை அனைத் தையும் அறிந்து கொண்டதாகும்.
உபநிஷத்துக்கள் கூறுகிற தத்துவங்கள் இத்தகையவை எனில், அவற்றைப் பற்றி இந்தத் தொடரில் அளிக்கப்படுகிற விளக்கங் களைக் கொண்டு, அந்த உண்மைகளைப் புரிந்து கொள்வது எப் படி? புரிந்து கொண்டுவிட முடியாது; ஓர் அறிமுகம் பெறலாம். இந்தத் தொகுப்பின் நோக்கம் – பயனுள்ள ஓர் அறிமுகத்தைத் தருவதுதானே தவிர, இவ்வளவு பெரிய விஷயங்களை எல்லாம், சந்தேகமற விளக்கி விடுவது அல்ல. அறிமுகம் பெறுவோம்.
உபநிஷதம் என்ற சொல்லிற்கு ‘அருகே அமர்வது! என்று ஒரு பொருள். குருவுக்கு நெருக்கமாக இருந்து, சடன் பெறுகிற உபதேசம் இது.
வேறு ஒரு வகையிலும், இந்தத் தத்துவ போதனைகளுக்கு, ‘உபநிஷத!’ என்ற பெயர் பொருந்துகிறது. ‘ஸத்’ என்ற சொல்லிற்கு தளர்த்துவது, அழிப்பது, செல்வது என்ற அர்த்தங் கள் உண்டு. சம்ஸாரத் தளைகளைத் தளர்த்திவிட்டு, அறியா * மையை அழித்து, பிரும்ஹனைப் பற்றிய உணர்வுக்கு இட்டுச் செல்வது, உபநிஷத்.
சீடனுக்கு, குரு உபதேசித்தார் என்றால், அவர்களிடையே இருந்த நெருக்கம் சாதாரணமானது அல்ல. சீடனுக்கு ‘அந்தே வாஸி! என்று ஒரு பெயர் உண்டு. இதற்கு ‘மிக அருகில் இருப் பவன்’ என்றும் பொருள் கூறலாம். ‘உள்ளே இருப்பவன்! என் றும் சொல்லலாம். அதாவது குருவின் உள்ளேயே இருப்பவன் போல, குருவிற்கு அவ்வளவு நெருக்கமாகச் சீடன் இருக்க வேண்டும்.
இன்று ‘இன்னார் என் குரு” என்று நாம் சர்வ சாதாரணமாகக் கூறுகிறோம். இன்னாரை நான் மதிக்கிறேன்’ என்றோ, ‘வணங்கு இறேன்’ என்றோ, ‘இன்னாரிடம் பக்தி செலுத்துகிறேன்’ என்றோ சொன்னால்கூட தவறில்லை. ஆனால் ‘இன்னார் என் குரு” என்று சொல்வது, அநேகமாக எல்லா சமயங்களிலுமே தவறான வார்த்தை யாகி விடுகிறது. குருவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர் உள்ளே உறைவது போல், அவ்வளவு நெருக்கமாக இருந்து, அவருக்குப் பணிவிடை செய்து, அவருடைய ஆரியின் மூலம் உபதேசம் பெறுகிறான் சீடன். அதை இவ்வளவு சாதாரணமாக, “இவர் என்னுடைய கணக்கு வாத்தியார்! என்று கூறுவது போல, ‘இவர் என்னுடைய குரு! என்று சொல்வது, பொருத்தம் இல் லாத பேச்சு.
இந்தக் குரு – சிஷ்ய தொடர்பு பற்றி இவ்வளவு பேசுவா னேன் – என்ற கேள்வி சிலர் மனதில் எழலாம். இந்தத் தொடர்பு இல்லையென்றால் உபநிஷத்துக்களே இல்லை. ஹிந்து மதமே இல்லை. குரு – சிஷ்ய உறவு முறை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு குரு, ஒரு சீடனுக்கு உபதேசிப்பதற்கு முன்பாக, அவனுக்கு எவ்வளவு கடுமையான பரீட்சைகளை வைத்தார் என் பதைப் பார்க்கும் போது, இந்தக் குரு – சிஷ்ய உறவின் தன்மை புரியும்.
உத்தாலகன் என்ற சீடனின் குரு அவனைப் பார்த்து, ‘மழைத் தண்ணீர் வெள்ளம்போல வருகிறது. வயல்களில் இந்தத் தண் ணீர் பாய்ந்தால், பயிர் நாசமாகிவிடும். அந்தத் தண்ணீரைத் தடுத்து, வயலில் அது பாயாமல் பார்த்துக் கொள்! என்று கட் டளை இட்டார். உத்தாலகன், மண்ணைப் போட்டு, கல்லைப் போட்டு, மரத் தைப் போட்டு, வயலுக்குள் மழைத் தண்ணீர் போகிற வழியை அடைக்க முயற்சித்தான். முடியவில்லை. குருவோ அந்த வழியை அடைக்குமாறு கட்டளையிட்டுவிட்டார்.
உத்தாலகன் பார்த்தான். ஒரு முடிவிற்கு வந்தவனாக, தானே அந்த வழியை அடைத்துக் கொண்டு படுத்துவிட்டான். பொழுது விடிந்தது. குரு வந்து பார்த்தார். உத்தாலகன் விறைத்துக் இடந்தான்.
குருவின் கட்டளையை நிறைவேற்ற, தன்னையே தியாகம் செய்ய முன்வந்த சீடனின் செயல் குருவின் மனதை நிரப்பியது. அவனை எழுப்பி, ‘நீ இந்த விநாடியிலிருந்து, எல்லாவற்றையும் உணர்ந்தவன் ஆவாயாக‘ என்று ஆசிர்வதித்து, உபதேசம் செய்தார்.
இதே போல, மற்றொரு இதிஹாச நிகழ்ச்சி. மாடுகளை மேய்க்கும் பணியை தமது சீடனிடம் ஒரு குரு ஒப்படைத்தார். காலையிலிருந்து மாலை வரை இந்த வேலையைச் செய்தும் களைப்புறாத சீடனைப் பார்த்து, ‘எப்படி இவ்வளவு தெம்புடன் இருக்கிறாய்?” என்று குரு கேட்டார். சிஷ்யன் ‘நான்தான் மாடு கள் சிலவற்றின் பாலைக் கறந்து குடித்து விடுகிறேனே! அத னால் களைப்பு இல்லை! என்றான்.
அவ்வாறு செய்வது தவறு என்று குரு சொல்லி அனுப்ப, மீண்டும் சில நாள்கள் கழித்து, சடன் முன்பு போலவே இருப் பதைப் பார்த்த குரு, அது எவ்வாறு என்று கேட்டார். ‘பசுக்களி டம் பால் குடித்த கன்றுகளின் வாய்களில் இருக்கும் நுரையை நான் சாப்பிட்டு வருகிறேன்! என்றான்.
அதையும் குரு கண்டித்துத் தடுத்தார். சீடனின் ஆரோக்கியம் பழுதில்லாமல் தொடர்ந்தது. எப்படி என்று குரு விசாரிக்க, ‘பல வீடுகளுக்குச் சென்று பிக்ஷை (யாசகம்) பெற்று உண்கிறேன். அதனால் களைப்பு இல்லை‘ என்று கூறினான் சிஷ்யன்.
பிகைஷ, குருவைச் சார்ந்தது என்பதால், சீடன் அதை தன்னி டம் சேர்ப்பிக்க வேண்டும் என்றும் குரு சொல்ல, அதுவும் நின்றது.
சில நாட்கள் கழித்து சடனைக் காணாமல் அவனைத் தேடிச் சென்ற குரு, ஒரு கிணற்றில் அவன் விழுந்து கிடப்பதைப் பார்த் தார். ‘பசியைத் இர்த்துக் கொள்ள எனக்குத் தெரிந்த வழிகளை, தவறு என்று நீங்கள் கூறியதால் விட்டு விட்டேன். உங்கள் சொல்லை மீற எனக்கு மனம் வரவில்லை. ஆகையால் பசியை அடக்க, கையில் இடைத்ததைச் சாப்பிட்டேன். அது எருக்கம் பூ. கண் பார்வை போய்விட்டது. கிணற்றில் விழுந்தேன்’ என்றான் சடன்.
அவனுடைய உண்மைப் பற்றைக் கண்டு வியந்த குரு அவ னுக்கு, அஸ்வினி தேவர்களைத் துதிக்கும் சில மந்திரங்களை உபதேசிக்க, அவன் அவற்றைக் கூறி கண் பார்வையை மீண்டும் பெற்றான். பின்னர் குரு அவனுக்கு முழுமையான உபதேசத் தைச் செய்தார்.
இந்த இதிஹாஸக் கதைகள் எடுத்துக் கூறுவதுபோல, கடும் பரீட்சைக்குப் பின்னரே, ஒருவனைத் தமது சீடனாக குரு ஏற் றார். அப்படி ஏற்கப்பட்ட சீடர்களுக்கு, ரிஷிகள் செய்த உபதே சங்கள் – உபநிஷத்துக்கள்.
ரிஷிகள் தாங்கள் உணர்ந்ததை – கண்டதை – அப்படியே சொல்லியது, வேத மந்த்ரங்களாக வந்திருக்கின்றன. இவை வேதங்களின் முதற் பகுதியான ஸம்ஹிதை, இரண்டாவது பகுதி யாய பிராம்மணம், மூன்றாவது பகுதியாகிய ஆரண்யகம் ஆகிய வற்றில் அடங்குகின்றன. வேதங்களின் இறுதிப் பகுதியாகிய உப நிஷத்துக்களில் ரிஷிகள் தாங்கள் உணர்ந்ததைக் கூறியதோடு மட் டுமல்லாமல், அவற்றைப் பற்றித் தர்க்க ரீதியான விவாதங்களை ஏற்று, விளக்கங்களை அளித்தனர்.
அறிவுப்பூர்வமான இந்த அணுகுமுறையைப் பாராட்டுக்குரி யதாக நினைத்த மேலைநாட்டு ஆராய்ச்சியாளர்கள், ‘உபநிஷத் துக்கள் வேதங்களுக்கு நெடுங்காலத்திற்குப் பிறகு வந்தவை. சொல்லப் போனால் வேதங்களை எதிர்த்து, அவற்றை நிராக ரித்து வந்தவை இவை‘ என்று இீர்ப்பளித்துவிட்டனர்.
இது ஏற்கக் கூடியது அல்ல என்பதை, பண்டைய நூல்களும் அவற்றை ஏற்கிற ஆய்வாளர்களும் ஆதாரங்களுடன் விளக்கு கிறார்கள். உபநிஷத்துக்கள் வேதங்களின் முற்பகுதியில் கூறப்பட் _ டுள்ள விஷயங்களை ஏற்று, அவற்றை மீண்டும் கூறுகின்றன. இவற்றைக் கண்ட ரிஷிகள் உபநிஷத்துக்களில் போற்றப்படு கிறார்கள். யாகங்களை, செயலை – வேதங்கள் வற்புறுத்தின. அந்த செயலுக்குப் பின், அந்தச் செயலினால் தூய்மை பெற்று, ஞானத்தை நாட வேண்டிய வழிகளை – உபநிஷத்துக்கள் வற் புறுத்தின. ஒன்று ஆரம்பம்; மற்றது முடிவு. இரண்டும், ஒன்றின் இரு பகுதிகளே தவிர, வெவ்வேறானவை அல்ல.