நான் யார்?

சிருஷ்டிக்கப்பட்ட உலகம்எத்தகையதுஅதில்இருக்கிற ஜீவன்களின்தன்மை என்ன? – இவற்றிற்குக்காரணமான இறைத்தத்துவம்என்பது என்ன? – என்ற விஷயங்களை ஆராய்வதில்தான்உபநிஷத்துக்கள்பெரும்கவனம்செலுத்துகின்றன. இவை எல்லாம்சாதாரண விஷயங்கள்அல்ல என்பதை எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொண்டு விடலாம்‌. உபநிஷத்துக்களுக்கு இவற்றில்கிடைக்கிற பதில்களோ சுருக்கமானவை; அவற்றைப்பற்றிய பெரியவர்களின்விளக்கங்களோ பல மாறுபாடுகளை உள்ளடக்கியவை. ஆகையால்‌, நான்எழுதுகிற இந்த அறிமுகத்தில்‌, இறுதித்தீர்ப்பு எதுவும்கிடையாது. அதைத்தருகிற தகுதியும்என்னிடம்துளியும்இல்லை. நான்எழுத இருப்பது ஒரு மனிதனின்கருத்து. அந்த அளவிலேயே இதைப்பார்க்குமாறு வாசகர்களைக்கேட்டுக்கொள்கிறேன்‌. 

ஜீவன்என்றால்என்ன? ஜீவராசிகளுக்கு இருக்கிற உடலா? ‘எனக்குக்கால்வலிக்கிறது! என்கிறோம்‌. அந்தஎனக்குயார்‌? “என்னுடைய கண்ணில்தூசி விழுந்துவிட்டது‘. என்னுடையது என்றால்யாருடையது? ‘என்மனம்படாதபாடு படுகிறது. அந்தஎன்‌! யார்‌? ‘என்கண்ணில்‌ – என்காவில்‌ – என்கையில்‌ – என்மனதில்‌…” என்றெல்லாம்சொல்லும்போதே கண்‌, காது, உடம்பு, மனம்என்பதெல்லாம்வேறுநான்என்பது வேறு என்றாகிறது

அவனுக்கு இதயமே இல்லைஎன்று சொல்லும்பொழுதும்அப்படித்தான்‌. அவன்என்ற ஒருவன்‌; அவனுக்கு இதயம்என்று ஒன்று. ‘அவன்உடம்பு சரியில்லாமல்ஆஸ்பத்திரிக்குப்போய்இருக்கிறான்‌” எனும்போது, அவன்வேறு, அவன்உடல்வேறு  என்று ஆகிறது

ஒருவன்இறந்த பிறகும்கூட இப்படித்தான்‌. பேசுகிறோம்‌,  ” அவனுடையபாடியை இன்றைக்கு அடக்கம்பண்ணுகிறார்‌  கள்‌”. அவனுடைய பாடியை ஐஸில்வைத்திருக்கிறார்கள்‌!. இங்குபாடிஅதாவது சரீரம்அடக்கமாகிவிட்டது அல்லது ஐஸில்வைக்கப்பட்டுவிட்டது. ஆனால்‌ ‘அவன்‌’ விஷயம்வேறு

இந்த நான்‌! அல்லதுஅவன்‌* என்பதுதான்ஆத்மா. அது பிறப்பதும்இல்லை; அழிவதும்இல்லை. அது சாஸ்வதமானது. உடலுடன்சேர்ந்து அது மறைவதில்லை. இதை உபநிஷத்துக்கள்விளக்குகின்றன

ஆத்மா நிரந்தரமானவன்‌; அழிவற்றவன்‌; அளவிடத்தகாத வன்‌. எனினும்அவன்கொள்ளும்வடிவங்கள்இறுதித்தன்மை உடையவைஇவன்பிறப்பதுமில்லை; எக்காலத்திலும்இறப்பது: மில்லை. இவன்ஒருமுறை இருந்து, பின்னர்இல்லாமற்போவது மில்லை. இவன்பிறப்பற்றவன்‌; சாஸ்வதமானன்‌; உடம்பு கொல்லப்படுகையில்‌, இவன்கொல்லப்படமாட்டான்‌! – என்கிறது பகவத்கீதை. இவையும்உபநிஷத்துக்களில்சொல்லப்பட்டவைதாம்‌. 

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய 

நவானி கிருஹ்ணாதி நரோபரானி 

ததா சரீராணி விஹாய ஜிர்ணான்‌ 

அந்யானி ஸம்யாதி நவாநி தேஹி

நைந்த துணிகளைக்சுழற்றி எறிந்துவிட்டு, மனிதன்புதிய துணிகளைக்கொள்ளுவது போல, ஆத்மா நைந்த உடல்களைக்களைந்து விட்டு புதியனவற்றை எய்துகிறான்‌. 

என்று பகவத்இதை சொல்கிறது. சரி. ஆத்மா ஏன்இவ்வாறு வேறு உடல்களை அடைய வேண்டும்‌? பாவம்தருகிற வரையில்இது தொடர்ந்து கொண்டிருக்கும்‌. 

ஆத்மாவால்புண்ணிய பாவங்களின்பலன்களை அனுபவிக்க நேடியாது. ஆகையால்செய்த கர்மத்தின்பலனை அனுபவிப்பதற்கு உடம்பு தேவைப்படுகிறது. நாம்செய்த பாவ புண்ணியத்திற்கேற்ப கடவுள்நமக்கு ஓர்உடம்பைக்கொடுத்து, அதையே நான்‌! என்று நினைக்கச்செய்து தண்டிக்கிறான்‌. இந்த உடம்பு போனதோடு நமது பாவம்தீர்ந்து போகாவிட்டால்‌, மறுபடியும்ஓர்உடம்பைக்கொடுத்துத்தண்டிக்கிறான்‌. நாம்செய்கிற பாவம்தான்இந்த உடம்புக்குக்காரணம்‌. பாவம்செய்யாமல்இருந்தால்‌, மற்றொரு உடம்பு வராது!” என்று பரமாச்சார்யார்விளக்கி. இருக்கிறார்‌. அதாவது பாவம்தீர்ந்துவிட்டது என்ற நிலையை அடைந்துவிட்டால்அதுதான்மோட்சம்‌. 

ஆத்மாவிற்கும்‌, பிரம்மத்திற்கும்‌ – அதாவது இறுதித்தத்துவமான இறைவனுக்கும்இடையே உள்ள தொடர்பு என்ன? உபநிஷத்துக்களைக்கொண்டும்‌, வெவ்வேறு பெரியவர்கள்அளித்துள்ள விளக்கங்களைக்கொண்டும்இந்தக்கேள்விக்கு விடை காண முயலும்போது சிக்கல்வருகிறது. இந்தச்சிக்கல்களுக்கு உபநிஷத்துக்களும்இடம்அளிக்கின்றன. ஆனால்இவை தீராத சிக்கல்கள்அல்ல. முயற்சி பலன்அளிக்கும்‌. 

ஆத்மா என்பது இறைவனிலிருந்து மாறுபட்டது; இறைவன்எல்லாம்அறிந்தவன்‌ – ஆத்மாவின்சக்தி இப்படி அளவிட முடி யாதது அல்ல; இறைவனோ எங்கும்இருக்கிறான்‌ – ஆனால்ஆத்மாவோ ஓர்உடம்பில்உறைகிறது; இறைவன்லட்சியம்‌ – அதை அடைய முயற்சிப்பது ஆத்மா…’ இது ஒரு வகை த்தாந்தம்‌. இப்படிச்சொல்வதற்கும்‌, உபநிஷத்துக்களில்சில பகுதி களே ஆதாரமாக முடியும்‌. இது த்வைதம்‌ – அதாவதுஇரண்டானது‘. இதைப்பிரகடனம்செய்தவர்களில்முக்கியமானவர்மத்வாச்சாரியார்‌. 

ஆத்மாவும்பிரம்மனும்ஒன்றேஎன்று கூறுகிற பகுதிகளும்உபநிஷத்துக்களில்உண்டு. இதை அடிப்படையாக வைத்துஇவை இரண்டல்ல ஒன்றுதான்‌’ – என்று கூறுவது ஒரு சித்தாந்தம்‌. இது அத்வைதம்‌. ‘இரண்டானது அல்லஎன்ற இந்த தத்துவ விளக்கம்அளித்தவர்களுள்முதன்மையானவர்ஆதிசங்கரர்‌. 

இவை இரண்டுக்கும்இடையே உள்ளது, ராமானுஜர்பிரபலப்படுத்தியவிசிஷ்டாத்வைதம்‌’ என்கிற சித்தாந்தம்‌. ‘இரண்டானது அல்லதான்‌ – ஆனால்சில விசேஷங்களுடன்‌’. இதன்படி ஆத்மா, ஜீவாத்மா என்று அழைக்கப்படுகிறது. இது பரமாத்மாவிலிருந்து மாறுபட்டது. ஆனால்இறுதியில்ஒன்றாவது

இந்த மூன்று சித்தாந்தங்களிடையே உள்ள வித்தியாசங்களைப்புரிந்து கொள்ள ஓர்உதாரணம்கூறப்படுவது உண்டு. ஆகாயத்இல்சந்திரன்தெரிகிறான்‌. அந்தச்சந்திரனின்பிரதி பிம்பம்கழே பூமியில்உள்ள ஒரு நீர்நிலையில்தெரிவது. ‘வானில்உள்ள சந்திரன்இல்லை என்றால்‌, பூமியில்தண்ணீரில்தெரிகிற சந்திர னும்இல்லை. அது இருப்பதால்தான்‌, இது. அது இல்லாமல்இது இல்லை. இதற்கென்று ஒரு தனித்தன்மை கிடையாது. இரண்டுமே ஒன்றுதான்‌!” என்று கூறுவது அத்வைதம்‌ – இரண்டானது அல்ல என்பது

அசல்வேறு; பிம்பம்வேறு. இரண்டும்ஒன்றாக முடியாது. பிம்பமாக நீரில்தெரியும்சந்திரனைத்தொட்டுப்பார்க்கலாம்‌. அசல்சந்திரனைத்தொட்டுப்பார்க்க முடியுமா? அசல்சந்திர னுடைய குணங்கள்நீரில்தெரிகிற பிம்பத்திற்கு உண்டா? அது வேறு, இது வேறு. இது இரண்டான விஷயம்தான்‌’ என்று கூறுவது த்வைதம்‌.

 ‘வானில்உள்ள சந்திரனின்றி, நீரில்தெரியும்பிம்பம்கிடை யாது. ஆனால்இரண்டிற்கும்கொஞ்சம்வித்தியாசம்இருக்கிறது. வானில்உள்ள சந்திரனின்குணங்கள்முழுவதும்அப்படியே இந்தப்பிம்பத்திடம்இல்லை. ஆகையால்அவை வேறானவை யாகவும்இருக்கின்றனஎன்று கூறுவதுவித்தியாசத்தை உள்‌. எடக்கிய இரண்டாக இல்லாதது என்ற விசிஷ்டாத்வைதம்‌. 

இந்த மூன்று தத்துவங்கள்பற்றிப்பேசுகிறபோது, தனது விளக்கவுரையில்ஸ்வாமி மாதவானந்தா, ‘ஒரு விஷயத்தை நினைவில்கொள்ள வேண்டும்‌. இந்த மூன்று தத்துவங்களை ஆதிசங்கரர்‌, ராமானுஜர்‌, மத்வாச்சாரியார்ஆகியோர்பிரபலப்படுத்தினாலும்‌, இவற்றை ஸ்தாபிதம்செய்தவர்கள்அவர்கள்தான்என்று நினைத்துவிடக்கூடாது. எப்போது வந்தது என்று தெரி யாத அளவிற்கு முற்பட்ட காலத்திலிருந்து, பரம்பரை பரம்பரை யாக வந்து கொண்டிருக்கிற தத்துவங்கள்இவை. இவற்றை எடுத்துச்சொன்னவர்களில்மேற்கண்ட மூவரும்பெரும்சிறப்புடையவர்களாக விளங்கினார்கள்‌” என்று கூறுகிறார்‌.

இவற்றில்எந்த வழியை ஏற்பது? எதை ஏற்றாலும்தவ றில்லை. ஏனென்றால்‌, மூன்று தத்துவங்களுமே இறைவனை உணர்வதற்கு வழி வகுப்பவைதான்‌. பாதைகள்தாம்வெவ்வேறா னவையே தவிர, அடையும்இடம்ஒன்றுதான்‌. மிகவும்ஆழ மான தத்துவங்களை ஸ்தாபிக்கிறபோது விவாதம்எழத்தான்செய்யும்‌. ஆனால்முரண்பாடு இல்லை. ‘இறைவன்என்று எதுவும்கிடையாது. மனிதனுக்கு ஆத்மா என்று ஒன்று இல்லை. அது இறைவனுடன்சேரும்என்பதும்கிடையாது. கண்‌, காது, மூக்கு என்று வெவ்வேறு அவயவங்களை உடைய உடல்தான்எல்லாமேஎன்றெல்லாம்ஏதாவது ஒரு தத்துவம்வாதிட்டால்‌, அப்போது முரண்பாடு எழும்‌. ஆனால்இந்தத்தத்துவங்களிடையே அம்மாதிரி வாதங்கள்கிடையாது. ஆகையால்இவை முரண்பாடானவை அல்ல. மேலே சொன்ன மாதிரி பாதைகள்தாம்வெவ்வேறானவையே தவிர, லட்சியம்ஒன்றுதான்‌. 

ஸ்வாமி மாதவானந்தா மேலும்சொல்கிறார்‌: ‘வெவ்வேறு ரிஷிகள்தாங்கள்கண்டதை (உணர்ந்ததை) கூறியிருப்பவை உப நிஷத்துக்களாக வந்திருக்கின்றன. மனித சமூகத்தில்‌, வெவ்வேறு பக்குவ நிலையில்உள்ளவர்களுக்கு, வெவ்வேறு வகைகளில்உண்மை விளக்கப்பட்டிருக்கிறது. ஒரு தாயார்ஒரே உணவை எல்லோருக்கும்படைத்து விடுவதில்லை; அவரவர்களுக்கு ஏற்ற உணவைத்தருகிறார்‌. அதே போல, வெவ்வேறு வகையானவர்களுக்கு வெவ்வேறு பாதைகளை உபநிஷத்துக்கள்காட்டு கின்றன. இதனால்தான்‌ ‘உண்மை ஒன்றுதான்‌ – அது அறிந்தவர்களால்வெவ்வேறு விதமாகக்கூறப்படுகிறது! – என்று வேதத்தில்சொல்லப்பட்டிருக்கிறது‘. 

இனி ஆத்மா பற்றி உபநிஷத்துக்களை மேற்கோள்காட்டி, இந்த மூன்று தத்துவங்கள்கூறுவதைச்சற்றுப்பார்ப்போம்‌. இது பற்றிப்பரமாச்சார்யார்எளிமையாக விளக்கி இருக்கிறார்‌. 

ஜீவாத்மா, பரமாத்மா என்று இரண்டு கிடையாது. பரமாத்மாவை அறிந்து கொள்ளலாம்என்று சொன்னால்‌, அது அறியப்படுகிற பொருளாகிறது. அப்படி எடுத்துக்கொண்டால்‌, ‘அறிபவன்என்று ஒருவன்இருக்கிறான்‌; அவன்பரமாத்மாவை அறிந்து கொள்கிறான்என்று அர்த்தமாகி விடும்‌. அதாவது ஜீவாத்மா, பரமாத்மாவை அறிந்து கொள்கிறது. இது த்வைதம்‌. ஆனால்அத்வைதம்‌ ‘அறிகிறவன்‌, அறியப்படுகிறவன்இரண்டுமே ஒன்றுதான்‌’ என்று அடித்துக்கூறுகிறது. இதை உறுதிப்படுத்துகிற வகையில்கேனோபநிஷத்என்னும்உபநிஷத்இப்படிச்சொல்கிறது

யஸ்ய அமதம்தஸ்ய மதம்‌ 

மதம்யஸ்ய வேத

பரமாத்மாவை] எனக்குத்தெரியும்என்பவனுக்குத்தெரி யாது; தெரியவில்லை என்பவன்தெரிந்தவன்‌. 

இங்கேதெரியவில்லைஎன்றால்என்ன அர்த்தம்ர பரமாத்மா வேறாக இருந்து, ஒருவனால்அறியப்படுவதில்லைஎன்பதே அர்த்தம்‌. ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. அதைப்பார்ப்பதற்கு மற்றொரு விளக்க தேவையில்லை

சூரியன்பிரகாசித்துக்கொண்டிருக்கிறான்‌. அப்போது கையில்தண்ணீரை எடுத்துத்தெளிக்கிறோம்‌. நூற்றுக்கணக்கில்நீர்த்துளிகள்விழுகின்றன. அவை ஒவ்வொன்றிலும்சூரியன்தெரி இன்றான்‌. ஒரே சூரியன்‌, இப்படி நூற்றுக்கணக்கில்தெரிவதால்‌, அது வேறு, இது வேறு ஆகி விடாது

இப்படிச்சொல்லப்படுகிற உதாரணத்தை ஒட்டியும்‌, மேலே கூறிய சந்திரன்அதனுடைய பிரதி பிம்பம்‌ – என்கிற உதார ணத்தை ஒட்டியும்ஒரு கேள்வி வருகிறது. ‘சந்திரன்தெரிகிற நீர்நிலை வற்றினாலோ, கையினால்தெளிக்கப்பட்ட நீர்த்துளிகள்வற்றிவிட்டாலோ, சந்திரனும்‌, சூரியனும்அவற்றில்காணப்படுவதில்லை. அப்போது, அந்த நீர்நிலைகள்சந்திரனாகவோ, அந்தத்தண்ணீர்துளிகள்சூரியனாகவோ ஆகி விட்டனவா?” 

அத்வைத தத்துவம்பற்றிய இந்தக்கேள்வியில்‌, நியாயம்இருக்கிறது. ஆனால்அத்வைதம்இந்த உதாரணங்களுடன்நின்று விடவில்லை. இவை ஆரம்ப உதாரணங்கள்‌ – அவ்வளவுதாம்‌. உபநிஷத்துக்களின்அடிப்படையில்அத்வைதம்மேலும்என்ன சொல்கிறது என்று பார்ப்போம்‌.