அத்வைத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற வேறு சில உதாரணங்களை மஹாஸ்வாமிகள் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
கிணற்றில் தண்ணீர் இருக்கிறது; அதில் ஒரு பாத்திரத்தை இறக்குகிறோம். அதில் நீர் நிரம்புகிறது. கிணற்றுத் தண்ணீர் வேறு, பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் வேறு அல்ல. ஆனால் அந்தப் பாத்திரத்தைக் கிணற்றினுள் இறக்கும்போதும் சரி, இழுக்கும்போதும் சரி, அதில் உள்ள தண்ணீர், கிணற்றுத் தண்ணீரி லிருந்து மாறுபட்டுத் தனியாகத் தெரிவது போன்ற தோற்றம் இருக் இறது. ஆனால், இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை; இரண்டுமே ஒன்றுதான். ப்ரம்மம் வேறு, ஆத்மா வேறு என்ற தோற்றமும் இப்படிப்பட்டதுதான்.
கிணற்றில் இறக்கப்பட்ட பாத்திரம், பெரியதாக இருந்தால், அதில் உள்ள நீரும் பெரிய அளவில் இருக்கிறது. பாத்திரம் சிறியதாக இருந்தால் நீரின் அளவும் சிறியதாக இருக்கிறது. அந்தப் பாத்திரத்தை உடைத்துவிட்டால், கிணற்றுத் தண்ணீர், பாத்திரத் தண்ணீர் என்ற வித்தியாசம் எல்லாம் மறைந்து போய் விடுகிறது. பரமாத்மாதான் ஜீவாத்மா – இரண்டும் ஒன்றுதான் என்பதை விளக்க இந்த உதாரணம் காட்டப்பட்டிருக்கிறது.
பாத்திரம் உடைக்கப்பட்டால் எப்படித் தண்ணீரில் தோன்றிய வித்தியாசம் மறைகிறதோ, அதே போல அஞ்ஞானம் உடைத் தெறியப்பட்டால், பரமாத்மாவும், ஜீவாத்மாவும் வெவ்வேறானவை என்கிற நினைப்பும் போய்விடும்.
ஈசாவாஸ்ய உபநிஷத்தில் ஆரம்பத்தில் வருகிற சாந்தி மந்திரம் இப்படிக் கூறுகிறது :
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே
(அது) இறைவன் முழுமையானவன்; (இது) இந்த உலகம் முழுமையானது; முழுமையான இறைவனிலிருந்து முழுமையான உலகம் தோன்றியுள்ளது. முழுமைமிலிருந்து, முழுமையை எடுத்த பின்பும் முழுமையே எஞ்சியுள்ளது.
ஈசாவாஸ்ய உபநிஷத்தில் ஆரம்பத்தில் வருகிற மேற்கண்ட மந்திரம், ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் முடிவில் வருகிறது.
இந்த உபநிஷத் வாக்கியத்தில் ‘அது‘ என்பது ப்ரம்மத்தை – அதாவது இறைவனைக் குறிக்கிறது. ‘இது‘ என்பது இந்த உலகைக் குறிக்கிறது. உலகம், பார்வைக்கு முழுமையாகவே தோன்றுவதால், அதுவும் ‘பூர்ணம்’ – முழுமையானது என்றே கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த உலகம் ‘ஸத்யம்” என்று உபநிஷத்துக்கள் கூறு வதாக மேற்கண்ட வாக்கியத்திலிருந்து எடுத்துக் கொள்ள முடி யாது. ஏன் என்று பார்ப்போம்.
முழுமையிலிருந்து (அதாவது ப்ரம்மத்திலிருந்து), முழுமையை (அதாவது இந்த உலகை) எடுத்த பின்பும், முழுமையே மிஞ்சி யிருக்கிறது. உலகம் உண்மையிலேயே முழுமையானது என்று எடுத்துக் கொண்டால், அந்த முழுமை எடுக்கப்பட்ட பிறகு, ப்ரம்மம் என்கிற முழுமையில் ஒன்றுமே மிச்சம் இருக்கக் கூடாது.
அதாவது முழுமை – முழுமை – 0 என்றுதான் ஆக வேண்டும். ஆனால் உபநிஷத்தோ அப்படிச் சொல்லவில்லை. இந்த உலகம் என்கிற முழுமையை எடுத்த பின்பும், ப்ரம்மத்தின் முழுமை, முழுமையாகவே மீதமிருக்கிறது. அதாவது எடுக்கப்பட்டது பூஜ்யம்தான். முழுமை – பூஜ்யம் – முழுமை. இதைத்தான் மந்திரம் கூறுகிறது. அதாவது, இந்த உலகம் என்பது இல்லாதது. அதுதான் மாயை. பார்வைக்கு உண்மை போல தெரிந்தாலும், இது கானல் நீர் போன்றது. சுட்டெரிக்கும் வெயிலில், தார் போட்ட தெருவில் தொலைவில் நீர் இருப்பது போல் தெரிகிறது. சற்று நெருங்கி னால் அது இல்லை; அது வெறும் தோற்றமே என்பது அப்போது புரிகிறது. இந்த உலகமும் அப்படிப்பட்டதே என்பது அத்வைதம். அதற்கு மேற்கண்ட உபநிஷத் வாக்கியம் ஒரு சான்று.
தந்திர சாஸ்திரத்தில் பல ‘முத்திரைகள்! பயன்படுத்தப்படு இன்றன. விரல்களைக் கொண்டு செய்யப்படுகிற இந்த அபிநயங்களில் ஒன்று சுவாரஸ்யமானது. ஆள்காட்டி விரலை ஒரு நபரைக் காட்டுகிற மாதிரி நீட்டி, கட்டை விரலை தன்னை நோக்கி வைத்துக் கொண்டு, காட்டப்படுகிற முத்திரை இது. ஆள்காட்டி விரல் ‘அது‘ என்ற ப்ரம்மத்தைக் காட்டுகிறது; கட்டை விரல் தன்னையே காட்டுகிறது. ‘ப்ரம்மம்” என்கிற அது வேறு எங்கேயோ இருப்பது அல்ல; தனக்குள்ளே இருக்கும் பரமாத்மாதான் அது. அதுதான் இது.
நான் யார்? என்கிற விசாரணையை முனைப்போடு செய்தால் என்ன நடக்கும்? என்னுடைய கண், என்னுடைய காது என்றெல் லாம் சொல்நெபோது, கண்ணோ, காதோ மற்ற இந்திரியங்களோ நான் அல்ல என்பது தெளிவாகி விடுகிறது. என் மனம் என்பதும் நானாக இருக்க முடியாது. பிறகு அந்த நான் யார்? ஒவ்வொன்றாக ‘அது நான் இல்லை, அது நான் இல்லை‘ என்று கழித்துக் கொண்டே வந்தால், இறுதியில் நிற்பது ப்ரம்மம்தான். அதுதான் நான். இப்படி புரிந்து கொள்பவன் உண்மையை உணர்ந்தவன் ஆகிறான்.
ஒவ்வொரு வேதத்தைச் சார்ந்த உபநிஷத்துக்களிலும் ஒரு முக்கியமான வாக்கியம் வரும். இப்படி நான்கு வேதங்களைச் சார்ந்த உபநிஷத்துக்களில் கூறப்பட்டுள்ள நான்கு வாக்கியங்கள் ‘மஹா வாக்கியங்கள்! என்று கூறப்படுகின்றன.
‘உயர்ந்த அனுபவஞானம்தான் ப்ரம்மம்” என்ற மஹா வாக்கியம் ரிக் வேதத்தைச் சார்ந்த ஐதரேய உபநிஷத்தில் வருகிறது.
‘நானே ப்ரம்மம்” என்பது யஜூர் வேதத்தைச் சார்ந்த ப்ருஹதாரண்யக உபநிஷத்தைச் சார்ந்தது.
‘நீயும் பரமாத்மாவும் ஒன்றுதான்” என்ற மஹா வாக்கியம் ஸாம வேதத்தைச் சார்ந்த சாந்தோக்ய உபநிஷத்தில் வருகிறது.
‘இந்த ஆத்மா என்பது ப்ரம்மமேதான்’ என்ற மஹா வாக்கியம் அதர்வ வேதத்தைச் சார்ந்த, மாண்டூக்ய உபநிஷத்தில் வருகிறது.
இந்த நான்கு மஹா வாக்கியங்களும் அத்வைத சித்தாந்தத் தையே உறுதி செய்கின்றன என்பது அத்வைஇதிகளின் வாதம். அத்வைத சித்தாந்தத்தைத்தான் உபநிஷத்துக்கள் வலியுறுத்துகின்றன என்பதைக் காட்டுவதற்கு, மஹாஸ்வாமிகள் வேறு ஒரு விஷயத்தை யும் சொல்கிறார். த்வைதத்தால் பயமும், துக்கமும், உபத்திரவமும் உண்டாகின்றன என்று பல இடங்களில் உபநிஷத்துக்கள் கூறுகின் றன: இங்கே த்வைதம் என்பதை, ஒரு சித்தாந்தமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. மத்வாச்சாரியார் கூறிய, அந்த சித்தாந்தம் பற்றி இங்குப் பேசப்படவில்லை. இரண்டு வித்தியாசமான விஷயங்கள் இருந்தால்தான் ஆசை, பயம், துக்கம் போன்றவை உண்டாகின்றன. ஒரு வீடு இருக்கிறது; நாம் இருக்கிறோம்; அது வேறு, நாம் வேறு என்ற நினைப்பினால்தான் அதன்மேல் ஆசை உண்டாகிறது. மிகவும் நெருக்கமானவன் ஒருவன் இறந்து போகிறான்; அவன் வேறு, நான் வேறு என்ற நினைப்பினால்தான் அவனுடைய மர ணம் பற்றிய துக்கம் உண்டாகிறது. நமக்கு வேறுபட்டு இன் னொன்றாக நாம் எதை நினைக்கிறோமோ, அதன் மீதுதான் நமக்குப் பற்று, அதை நினைத்துத்தான் நமக்குப் பயம், அதைப் பற்றித்தான் நமக்கு வருத்தம். அதன் மேல்தான் நமக்கு ஆசை – எல்லாமே உண்டாகின்றன.
இறைவனே வேறொருவர், என்று நினைத்தாலும் இதே கதிதான். அந்த நினைப்பு நீங்கினால் அது மோட்சம். அதை இந்த உடல் இருக்கும்போதே ஒருவன் அனுபவிக்க முடியும். அப்படிப்பட்ட நிலையை எய்துகிறவன் ஜீவன் முக்தன். அதாவது இந்த உடலில் இருக்கும்போதே அவன் மோட்ச நிலையை எய்துகிறான்; முக்தி அடைகிறான். இதைக் கூறுவது அத்வைதம்.
இந்த அத்வைதம் கவிகளால் எப்படிப் பார்க்கப்பட்டது என்ப தற்கு ஒரு சுவையான உதாரணம். நள சரித்திரத்தை எழுதியவர் ஹர்ஷர். அந்த நள சரித்திரத்தில் ஒரு கட்டத்தில் தமயந்திக்கு ஸ்வயம்வரம் நடக்கிறது. அவள் நளனிடம் மனதைப் பறி கொடுத்துவிட்டாள். அவனையே மணக்க வேண்டுமென்ற விருப்பத்தில் இருக்கிறாள். ஆனால் இந்திரன், வருணன், அக்னி, யமன் ஆகிய நான்கு தேவர்களும்கூட, தமயந்தியின் மேல் விருப்பம் கொண்டுள்ளனர். தன்னையே அவள் மணக்க வேண்டும் என்று அவர்கள் ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். ஸ்வயம்வரத்திற்கு அவர்களும் வந்திருக்கிறார்கள். அதுவும் எப்படி? அவர்கள் ஒவ்வொருவரும் நளனைப் போலவே ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, நளனுடன் கூடவே நிற்கிறார் கள். உண்மையான நளன் யார் என்பதைத் தமயந்தி புரிந்து கொள்ள வேண்டும். இந்த இடத்தில் ஹர்ஷர் வர்ணிக்கிறார் :
பஞ்சம கோடி மாத்ரே… மதானாம்
அத்வைததத்வ இவ ஸத்யதரேபி லோக: இந்து மதங்களுக்கு நடுவே ஸத்யதரமான அத்வைதம் இருக்கிற மாதிரி,
ஐந்து நளன்களுக்கிடையே இருந்த ஸத்யமான நளனை புரிந்து கொள்ள முடியாமல்…
இதில் முதலில் ஒன்றைப் பார்த்துவிட வேண்டும். ஐந்து மதங்கள் என்பவை எவை? ‘ஆதித்யம் – அம்பிகாம் – விஷ்ணும் – கணநாதம் – மஹேச்வரம்’. அதாவது சூரியன், அம்பிகை, மஹா விஷ்ணு, விநாயகர், பரமேச்வரன் என்ற ஐந்து தெய்வங்களைப் பூஜை செய்பவர்கள் உண்டு. இவர்கள் ஸ்மார்த்தர்கள். ஸ்மார்த்தன் என்றால் ஸ்மிருதியைப் பின்பற்றுகிறவன் என்று அர்த்தம். ஸ்மிருதி என்பது தர்மசாஸ்திரமே.
இந்த ஐந்தில் சுப்ரமண்யரைக் காணோமே என்ற கேள்வி தேவையில்லை. அக்னி தொடர்பான எல்லா வைக செயல்பாடு களும் சுப்ரமண்யருக்குப் போய்ச் சேருகின்றன. இதைத் தெளிவு படுத்துகிற வகையில், ஷண்மத ஸ்தாபகர் (ஆறுமத ஸ்தாபகர்) என்ற பெயர் பெற்ற ஆதிசங்கரர், விநாயகரை வழிபடும் காணபத்யம், சுப்ரமண்யரை வழிபடுகிற கெளமாரம், அம்பிகையை வழிபடும் சாக்தம், ஈச்வரனை வழிபடும் சைவம், விஷ்ணுவை வழி படுகிற வைஷ்ணவம், சூரியனை வழிபடுகிற ஸெளரம் – என்று நம்பிக்கைகளின் அடிப்படையில், வழிபாடுகளைச் சர்படுத்திக் கொடுத்தார்.
இப்படி ஐந்து மதத்தின் நடுவில் அத்வைதம் மாதிரி ‘ஸத்யதரமாக நின்ற நளன் யார்?” என்று காண வேண்டியது தமயந்தியின் பொறுப்பாகியது. உயர்ந்த ஸத்யம் எது? அதுவே ஸத்யதரம். இந்த உதாரணம், வாதங்களுக்கு இடமளிக்கலாம். ஆனால் ஒன்று நிச்சயம்! ஹர்ஷர் அத்வைதியாக இருந்திருக்க வேண்டும்! அதனால் இந்த சித்தாந்தத்தை இப்படி வர்ணித்திருக் கிறார்!
உபநிஷத்துக்களின் அடிப்படையில் அமையப் பெற்ற அத்வைதம் உலகத்தையும், மனிதர்களையும் அஸத்தியம் என்று சொல்ல வில்லை. அத்வைத சித்தாந்தத்தை எடுத்துக் கூறியவர்களில் மிகவும் முக்கியமானவராகிய ஆதிசங்கரர், ஸத்தியத்தை மூன்று விதமாகப் பிரித்தார். இந்த மூன்றிலும் சேராதது மட்டுமே அஸத்தியம். அது என்ன ஸத்தியத்தில் மூன்று விதம்? பரமார்த்திக ஸத்தியம் என்பது எக்காலத்திலும் மாறாமலிருப்பது; அது ப்ரம்மம். வியாவஹாரிக ஸத்தியம் என்றால், நிஜம் போல நாம் பார்ப்பது; உலக வாழ்க்கை நிஜம் என்று நாம் நினைப்பது இந்த வகையைச் சார்ந்தது. ப்ராதிபாஸிக ஸத்யம் என்பது, சிறிது நேரமே இருக்கிற ஒரு தோற்றம் போன்றது; ஒரு சிறிய தகர டப்பியின் மூடி வெயிலில் இடக்கிறது. அது வெள்ளி நாணயம் போல தோன்றுகிறது. அந்த தோற்றம் இருப்பது உண்மைதான்; ஆனால் உண்மையில் அது நாணயம் அல்ல. இது ப்ராதிபாஸிக ஸத்யம்.
அஸத்தியம் என்பது எந்த விதத்திலும் இல்லாதது. இதற்கு குதிரைக் கொம்பு உதாரணமாகக் கூறப்பட்டிருக்கிறது.
ஒரு கயிற்றை அரை இருட்டில் பார்த்தால், அது ஒரு பாம்பாகத் தோற்றமளிக்றெது. அது பாம்பு என்பது பொய்; ஆனால் பாம்பு மாதிரி ஒரு தோற்றம் தெரிகிறது என்பது மெய். இது ப்ராதிபாஸிக ஸத்யம்.
இவற்றில் ப்ராதிபாஸிக ஸத்யமும், வியாவஹாரிக ஸத்யமும் உண்மையைத் தேடுகிறபோது இல்லாமற் போய் விடுகின்றன. இதற்கு ‘மித்யை‘ என்று பெயரே தவிர, இதை யாரும் அஸத்தியம் என்று சொல்வதில்லை. எப்பொழுதுமே மெய்யாகத் தெரியாதது! தான் அஸத்தியம். இந்த உலகம் மித்யை என்று உபநிஷத்துகள் காட்டுவதாக வாதிடுவது, அத்வைதம்.
விசிஷ்டாத்வைதம் என்ன சொல்கிறது?