ஜீவாத்மா பரமாத்மா என்று இரண்டு கிடையாது; ஆத்மா ஒன்றுதான். அதுதான் ப்ரம்மம் – என்கிற அத்வைத தத்துவத் இலிருந்து, விசிஷ்டாத்வைதம் என்கிற சித்தாந்தம் மாறுபடுகிறது. போதாயனர் முதல் பலர் இதை விளக்கி இருந்தாலும், இதை மிகச் சிறப்பாக ஸ்தாபித்தவர் ராமானுஜர். ஆத்மாவும், ப்ரம்மமும் ஒன்றே தவிர, இரண்டானதல்ல – என்று கூறுகிற அத்வைத சத் தாந்தத்தை விசிஷ்டாத்வைதம் ஏற்கவில்லை. ‘இரண்டானது அல்ல தான் – ஆனால் சில விசேஷங்களுடன்’ என்று விசிஷ்டாத்வைத சித்தாந்தம் கூறுகிறது. இதன்படி ஜீவாத்மா என்பது பரமாத்மா வினுடைய சரீரம், உடல். அதாவது பரமாத்மா, ஜீவாத்மாவின் ஆன்மா. ”ஒரு விளக்கு அல்லது சூரியன் இருக்கிறது. அதிலிருந்து ஒளி வருகிறது. ஒரு வகையில் பார்த்தால், அந்த ஒளி, அந்த விளக்கு அல்லது சூரியனைச் சார்ந்ததுதான். ஆனால் விளக்கிலிருந்தும், சூரியனிலிருந்தும் அந்த ஒளி மாறுபட்டதாகவும் இருக்கிறது. அது வேறு, இது வேறு என்று ஆகிறது. இதனால்தான், ‘இரண்டானது அல்ல – ஆனால் சில விசேஷங்களுடன்’ என்று கூற வேண்டி இருக்கிறது.” இது விசிஷ்டாத்வைதம் சொல்வது.
ஆத்மாவை ‘சரீரி‘ என்று இந்த சித்தாந்தம் வர்ணிக்கிறது. சரீரத் இற்கும், சரீரிக்கும் உள்ள தொடர்பு விசிஷ்டாத்வைத சம்பிர தாயத்தின் மிக முக்கியமான அம்சமாகும். சரீரம், சரீரியினால் தாங்கப்படுகிறது. அதாவது தாயின் கர்பத்தில் ஆன்மா உட்புகுந்து சரீரம் பிறக்கிறது. ஆன்மா விலகும் போது சரீரம் அழிகிறது; மரணம் எய்துகிறது. சரீரம் இயங்குகிற வரையில், அது ஆன்மாவுக்குக் கட்டுப்பட்டு இருக்கிறது. சொல்லப் போனால், ஆன்மாவின் இஷ்டங்களைப் பூர்த்தி செய்வதற்காகத்தான் சரீரமே இருக்கிறது. மனதின் வழியாக, ஆன்மா ஒரு செயலை விரும்புகிறது; அதற் கேற்றபடி சரீரம் இயங்குகிறது. தாங்குதல், கட்டுப்படுத்துதல், அதிகாரம் செலுத்துதல் – என்ற மூன்றையும் இந்த சரீரத்தைப் பொறுத்து ஆத்மா செயல்படுத்துகிறது. இது, சரீர – சரீரி தொடர்பு முறை பற்றிய சுருக்கமான விளக்கம்.
இந்த சரீரி அல்லது ஜீவாத்மாவிற்கு, ஓர் ஆத்மா உண்டு; அதுதான் ப்ரம்மம், பரமாத்மா. ஜீவாத்மாக்கள் கணக்கற்றவை. அவை ஒரு சரீரம் சாய்கிறபோது, அதை விட்டு வேறு ஒரு உட லுக்குப் போகின்றன. ஆனால் பூர்வஜன்ம கர்மத்திற்கேற்றபடி அவற்றின் நிலை அமைகிறது. ஒருவன் மரணமடைகிறபோது, ஜீவாத்மா அந்த உடலிலிருந்து பிரிகிறது. அது மோட்சத்தை அடைந்து பரமபதத்தைப் பெறலாம்; அல்லது சுவர்க்கத்திற்குச் சென்று, தான் செய்த புண்ணியங்களுக்கேற்ப பலன்களை அனுபவித்து, பின்னர் மீண்டும் ஒரு சரீரத்தில் புகுந்து பூமிக்கும் இரும்பலாம். அந்தப் பிறவி மனிதப் பிறவியாகவும் அமையலாம்; அல்லது மிருகம், பறவை என்றவாறும் அமையலாம். இது பூர்வஜன்ம கர்மத்தைப் பொறுத்தது.
பரமாத்மாவிற்கும், ஜீவாத்மாவிற்கும் உள்ள தொடர்பு என்ன? எள்ளில் எண்ணெய் இருப்பது போல, தயிரில் வெண்ணெய் இருப்பது போல, மரத்தில் நெருப்பு இருப்பது போல – ஜீவாத்மாவில், ப்ரம்மம் ஆகிய பரமாத்மா இருக்கிறான். புண்ணிய பாவங்களினால் அவன் இண்டப்படுவதில்லை. ஜிவாத்மாவிற்கு செயல்படும் தன்மையை ப்ரம்மம் அளிக்கிறது. அந்த வகையில் அனைத்திற்கும் காரணம் ப்ரம்மமே; ஆனால், செயல்படுவது ஜீவாத்மாதான். இதை விளக்க ஓர் உதாரணம் கூறப்படுகிறது. ஒரு செடி வளர்வதற்கு நிலம், தண்ணீர், விதை ஆகியவை தேவைப்படுகின்றன. நிலமும், தண்ணீரும் எல்லா செடிகளுக்குமே ஒன்றுதான். ஆனால், விதைகள் வெவ்வேறா னவை. எல்லா செடிகளுக்கும் பொதுவான நிலமும், தண்ணீரும், செடி வளர்வதற்கு உதவுகின்றன; அதுதான் ப்ரம்மம். அதே சமயத்தில் விதையும் தேவைப்படுகிறது; இது பல வகை யானது; அதுதான் ஜீவாத்மா. நிலமும், தண்ணீரும் உதவினாலும் கூட, செடியின் தன்மை, விதையையும் பொறுத்து இருக்கிறது. அதுபோல, ப்ரம்மத்தினால் இயக்கப்பட்டாலும், ஜீவாத்மாவின் செயல்பாடுகள் ஓரளவு சுதந்திரமுடையவை.
விசிஷ்டாத்வைதம் மேலும் இப்படிச் சொல்கிறது : ஜீவாத்மா வின் ஆன்மாவாக ப்ரம்மம் இருந்தாலும், அவன் எந்த விதத் இலும் பாதிக்கப்படுவதில்லை. தாமரை இலை மீது இருக்கிற தண்ணீர், அந்தத் தாமரை இலையின் தன்மைகளால் எப்படிப் பாதிக்கப்படுவதில்லையோ, அது போல ப்ரம்மம் இருக்கும். ஜீவாத்மா அப்படி அல்ல. அது பாதிக்கப்படுகிறது. இதற்கு ஆதாரமாக விசிஷ்டாத்வைதிகள், முண்டக உபநிஷத்திலிருந்து, ஒரு பகுதியைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
த்வா ஸுபர்ணா ஸயுஜா ஸகாயா
ஸமானம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே
தயோரன்ய: பிப்பலம் ஸ்வாத்வத்தி அ
னச்னன் அன்யோ அபிசாகசதி
இணை பிரியாத, ஒரே மாதிரி இரண்டு பறவைகள் ஒரே மரத்தில் அமர்ந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று, பழத்தை ருசித்துச் சாப்பிடுகிறது. மற்றொன்று, அப்படித் இன்னாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.
விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின்படி, அந்த மரம் – மனித உடல்; இரண்டு பறவைகள் – ஜீவாத்மாவும், பரமாத்மாவும்; ஜீவாத்மா, கர்மத்தின் பலன் என்ற பழத்தைத் இன்கிறது; அதாவது பூர்வஜன்ம கர்மபலனுக்கு உரிய வகையில் இன்ப, துன்பங்களை ஜீவாத்மா அனுபவிக்கிறது; பரமாத்மாவோ, அதே உடலில் இருந் தாலும்கூட, இந்த இன்ப துன்பங்களினால் பாதிக்கப்படாமல், அவற்றுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது.
ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு என்பதற்கும் – அவை இரண்டும் சரீரத்ிதிவேயே உறைகின்றன என்பதற்கும் – ஜீவாத்மா போல பரமாத்மா புண்ணிய பாவங்களினால் பாதிக்கப்படுவதில்லை என்பதற்கும் – முண்டக உபநிஷத்தில் வருகிற இந்தப் பகுதியை விசிஷ்டாத்வைதம் எடுத்துக் காட்டுகிறது.
அத்வைதமோ, அதே முண்டக உபநிஷத், இதற்கு அடுத்துச் சொல்வதையும் சுட்டிக் காட்டுகிறது. புருஷனும், ஆன்மாவும் ஒரே மரத்தில் உள்ளனர். புருஷன் – அதாவது – மனிதன் அறி யாமையில் மூழ்கி, மோக வசப்பட்டு வருந்துகிறான். ஆன்மா வின் மகிமையை அவன் உணர்ந்து பார்க்கும்போது, இந்தக் கவலையிலிருந்து விடுபடுகிறான்! என்றும் முண்டக உபநிஷத் கூறுகிறது. ஆக, அத்வைத சித்தாந்தத்தின்படி பழத்தைத் தின்கிற பறவை மனிதன் – ஜீவன் – புருஷன்; அது நிழல். பழத்தைத் தின்னாமல் இருக்கிற பறவை ஆன்மா – ப்ரம்மம்; அது ஸத்யம்.
சில வேத (உபநிஷத்துக்கள் உட்பட) வாக்கியங்கள் விசிஷ் டாத்வைதத்திற்கு வலுவூட்டுகின்றன; வேறு சில வாக்கியங் களோ அத்வைதத்திற்கு வலுவூட்டுகின்றன. இன்னும் சில, த்வைதம் என்ற ‘இரண்டானதுதான்’ என்கிற சித்தாந்தத்திற்கு க் வலுவூட்டுகின்றன.
வேதங்களில், இந்த மூன்று சித்தாந்தங்களுக்குமே ஆதாரமாக அமையக்கூடிய வாக்கியங்கள் இருப்பதால், அந்த மாதிரி பகுதிகளைப் பண்டிதர்கள் மூன்று விதமாகப் பிரிக்கிறார்கள். ஒன்று – அபேத ஸ்ருதி; அதாவது ‘இரண்டல்ல‘ என்று கூறுகிற அத்வைத சித்தாந்தத்திற்குப் பொருந்துகிற பகுதிகள். இரண்டு – பேத ஸ்ருதி; அதாவது இரண்டானதுதான் என்று சொல்கிற த்வைத தத்துவத்திற்குப் பொருந்துகிறவை. மூன்று – கடக ஸ்ருதி; இந்தப் பகுதிகள் ப்ரம்மத்திற்கும், ஜீவாத்மாவிற்கும் உள்ள தொடர்பைக் கூறுபவை; முதல் இரண்டு வகையான பகுதி களையும் இணைத்து, அவை முரண்பாடற்றவை என்று நிவை நிறுத்துபவை; இந்தப் பகுதிகள் விசிஷ்டாத்வைதத்திற்கு மிகவும் பொருந்தும். ஆக, இந்த மூன்று சித்தாந்தங்களுக்குமே வேதமும், அதன் இறுதிப் பகுதியாகிய உபநிஷத்துக்களும்தான் அடிப்படை என்பதை மறந்துவிடக் கூடாது.
‘உலகமே மாயையான ஒரு தோற்றம்’ என்று அத்வைதம் சொல்வது உபநிஷத்துக்களின் அடிப்படையில்தான். இதை விசிஷ் டாத்வைதம் மறுப்பதும், உபநிஷத்துக்களின் அடிப்படையில் தான். ‘உலகம் மாயை என்று உபநிஷத்துக்களில் கூறப்பட்டிருந் தாலும், நிறைய இடங்களில் அப்படி இல்லை என்பதால், ‘உலகம் மாயை அல்ல! என்று விசிஷ்டாத்வைதிகள் கூறுகிறார்கள். ஆனால் அத்வைதம், ப்ரம்மத்தைத் தவிர வேறு எதுவுமே முழுமை யான ஸத்யம் அல்ல என்று கூறுகிறது. ‘இருட்டிலே ஒரு கயிறு கடக்கிறது. அதைப் பார்த்துப் பாம்பு என்று நினைத்து ஒருவன் பயப்படுகிறான். அங்கே கொஞ்சம் வெளிச்சம் போட்டால், அது பாம்பல்ல, கயிறுதான் என்று புரிகிறது. மாயை விலகுகிறது. உலக மும் இப்படிப்பட்டதுதான்’ என்று அத்வைஇகள் கூறுவார்கள்.
த்வைதத்தை எடுத்துக் கொண்டால், ‘ஜீவாத்மாவும், பரமாத்மா வும் எப்போதுமே வெவ்வேறானவைதாம். இவை ஒன்றுதான் என்று கூறுகிற அத்வைதமும் தவறு; சரீர – சரீரி தொடர்பு முறை பற்றிப் பேசுகிற விசிஷ்டாத்வைதமும் தவறு. இவை இரண்டான தல்ல என்ற கருத்தை வலியுறுத்துகிற உபநிஷத் வாக்கியங்கள் குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கின்றன என்பதால், அவற்றை விட்டுவிட வேண்டும்! என்று அந்தத் தத்துவம் கூறுகிறது.
ஆனால் அத்வைதிகளோ, சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்ட மஹா வாக்கியங்களை மிகவும் முக்கியமாகக் கருதுகிறார்கள். ‘மனிதனின் உடலில் உள்ள ஜீவாத்மாவினுடைய ஆத்மாதான் பரமாத்மா! என்று கூறுகிற விசிஷ்டாத்வைதம், இந்த மஹா வாக் இயங்களை நிராகரிக்கவில்லை. ‘நீயே ப்ரம்மம்” என்றால், ‘உன் னுடைய ஆத்மாவினுடைய ஆத்மாவாக இருப்பது ப்ரம்மமே‘ என்றுதான் பொருள் – என்று விசிஷ்டாத்வைதம் கூறுகிறது. மற்ற மஹா வாக்கியங்களும் இந்த அடிப்படையிலேயே விளக்கப் படுகின்றன.
இப்படி கூறுகிற விசிஷ்டாத்வைதம் பற்றி, அத்வைதம் என்ன சொல்கிறது என்பதை மஹா ஸ்வாமிகள் விளக்கி இருக் கறார். அத்வைதம் என்பது த்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய வற்றையும் தழுவி, முதல் படிகளில் அவற்றை ஒப்புக் கொள் இறது. இப்போது, விவகாரத்தில் உள்ளபடி, இது பேதமுடைய பிரபஞ்சமாகத்தான் தெரிகிறது என்பதால், அத்வைதியானவன் ஆரம்ப நிலையில், த்வைதத்தை ஒப்புக் கொள்கிறான். அதன் பின்னர், ‘இத்தனை பேதங்களுக்குள்ளும் உயிருக்கு உயிராக, ஒரே பொருள் இருக்கிறது” என்று கூறி பேதம், அபேதம் இரண்டையும் ஏற்கிற விசிஷ்டாத்வைதத்தையும், அத்வைதி ஒப்புக் கொள்கிறான். இந்தப் படிகளில் ஏறித்தான் பேதமில்லாத ஜீவ, ப்ரம்ம ஐக்கியத்தை அடைய வேண்டும் என்று அத்வைத சொல்கிறான்.” இப்படிச் சொல்லி விட்டு, மஹாஸ்வாமிகள் மேலும், உபநிஷத் வாக்கியத்தை மேற்கோள் காட்டிக் கூறுகிறார் : “முடிந்த முடிவாக மாண்டூக்ய உபநிஷத்தில் ப்ரணவ ஸ்வரூபத்தைப் பற்றி, ‘எல்லா நிலைகளையும் தாண்டி பிரபஞ்சம் ஒடுங்கி, லயிக்கின்ற இடம் எதுவோ, அதுவே சவம் (உயர்ந்த க்ஷேமம்) – அத்வைதம்; இப்படி இருக்கிற இந்த ஓங்காரம், ஆத்மாதான். எவன் இதை அறிந்தவனோ, அவனே அறிந்தவனாகிறான்’ என்று தெளிவாக அத்வைத நிலை பற்றிச் சொல்லி இருக்கிறது.
இப்படி, மூன்று சித்தாந்தங்களுக்கும் இடமளிக்கிற வகை யில், உபநிஷத்துக்களில் பல்வேறு பகுதிகள் இருப்பதைப் பற்றி வியப்பதற்கு இடமில்லை. ‘நமது அரசியல் சட்டம் ஒரு ஐக்கிய அரசைத்தான் அமைக்கிறது என்று வாதிடும் சட்ட நிபுணர்கள் இருக் கிறார்கள்; இது தவறு என்றும், ‘நமது அரசியல் சட்டம் பல சமஷ்டி அரசுகளைக் கொண்ட ஒர் அமைப்பு‘ என்று விளக்குகிற சட்ட வல்லுனர்களும் இருக்கிறார்கள்; ‘ஓர் ஐக்கிய அமைப்பின் தன்மைகளையும் கொண்ட, ஒரு சமஷ்டி அமைப்பைத்தான் நமது அரசியல் சட்டம் வகுக்கிறது” என்று கூறுகிற சட்ட அறிஞர்களும் இருக்கிறார்கள். இதனால் அரசியல் சட்டம் குழப்பமானது என்று அர்த்தமாகிவிடாது. சட்டம் அறிந்த பண்டிதர்களின் பார்வை வெவ் வேறு கோணத்தில் அமைகிறது. மத்திய அமைப்பின் இறுதி அதி காரத்தை மூன்று வகை நிபுணர்களுமே ஏற்கிறார்கள்.
இதே போலத்தான் உபநிஷத்துக்களின் அடிப்படையில் ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார் ஆகியோர் பிரபலப்படுத்திய அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத சத்தாந்தங்களும் இறுதி நிலை யாகிய மோக்ஷத்தை அடைகிறபோது, ப்ரம்மமே அடையப் பெறு இறது என்பதை ஏற்கின்றனர்.
இனி முக்கியமான பத்து உபநிஷத்துக்களிலிருந்து ஒரு சில பகுதிகளைப் பார்ப்போம்.