உபநிஷதங்கள் பல இருந்தாலும், அவற்றில் பத்து உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. ஆதி சங்கரர் இவற்றுக்குத்தான் விளக்கங்களை அளித்தார். ராமானுஜ ௬ம், மத்வாச்சாரியாரும்கட இவற்றுக்கு விளக்கம் அளித் இருக்கிறார்கள். இவ்வாறு ஆச்சாரியர்கள் பத்து உபநிஷதங் களுக்கு விளக்கம் அளித்தபொழுது, அவற்றை அவர்கள் கீழ்க்கண்ட வரிசையில் எடுத்துக் கொண்டார்கள். ஈசாவாஸ்ய உப நிஷதம், கேன உபநிஷதம், கட உபநிஷதம், ப்ரச்ன உபநிஷதம், முண்டக உபநிஷதம், மாண்டுக்ய உபநிஷதம், தைத்திரீய உப நிஷதம், ஐதரேய உபநிஷதம், சாந்தோக்ய உபநிஷதம், ப்ருஹ தாரண்யக உபநிஷதம். அதே வரிசையில் இந்த உபநிஷதங்கள் கூறுவதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
இந்தப் பத்து உபநிஷதங்களில் மிகவும் சிறியது ஈசாவாஸ்ய உபநிஷதம். ஆனால் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள சில சொற் களுக்கு, இன்றும்கூட பலவித வியாக்யானங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது யஜூர் வேதத்தைச் சார்ந்தது. இதன் தொடக்கத் இல் வருகிற சாந்தி மந்திரத்தை ஏற்கெனவே 22-ஆவது அத்தி யாயத்தில் பார்த்தோம். ‘இறைவன் முழுமையானவன்; இந்த உலகம் முழுமையானது; முழுமையான இறைவனிலிருந்து முழுமை யான உலகம் தோன்றியுள்ளது. முழுமையிலிருந்து, முழுமையை எடுத்த பின்பும் முழுமையே எஞ்சியுள்ளது. இது சாந்தி மந்த்ரம். ஒவ்வொரு உபநிஷதத்தின் தொடக்கத்திலும் இம்மாதிரி ஒரு சாந்தி மந்த்ரம் வருகிறது.
எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும், அதற்கான மன நிலையுடன் அதைத் தொடங்க வேண்டும். ஓர் உபநிஷதத்தைப் படிப்பதற்கு முன்பாக, நமது மனநிலையைச் சீர்படுத்தி, பார்க்கப் போகும் கருத்துடன் நாம் ஒருமைப்பட்டு நிற்பதற்கு, சாந்தி மந்த்ரம் உதவுகிறது. மேற்கூறப்பட்ட சாந்தி மந்த்ரம் ‘உலகம் முழுமை யானதுதான் என்றாலும், அது ஒரு தோற்றமே. அதனால் முழுமை யான இறைவனிடமிருந்து, இந்த முழுமையான உலகம் எடுக்கப் பட்ட பின்பும், இறைவனின் முழுமை அப்படியே இருக்கிறது என்று கூறுகிறது. இறை தத்துவத்தை உணர்த்துகிற உபநிஷதக் கருத்துக்களைப் படிப்பதற்கு முன்பாக, இறைவன் எப்படி வியா பித்து நிற்கிறான் என்பதை உணர்ந்து கொண்டு, படிக்கத் தொடங்கு வதற்கு இந்த சாந்தி மந்த்ரம் ஓர் அறிமுகமாக அமைகிறது.
ஈசாவாஸ்ய உபநிஷதத்தில் முதல் மந்த்ரம் இப்படி அமைந்திருக்கிறது.
ஓம் ஈசாவாஸ்யமிதக்ம் ஸர்வம்
யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்
தேன த்யக்தேன புஞ்ஜீதா மா க்ருத:
கஸ்யஸ்வித் தனம்.
மாறுகிற இயல்புடைய இந்த உலகில் உள்ள அனைத்தும் இறைவனால் சூழப்பட்டவை. அந்தத் தியாக மனப்பான்மையுடன் வாழ்க்கையை அனுபவிப்பாயாக. செல்வம் யாருடையது? அதற் காக நீ ஆசைப்படாதே. உலக வாழ்க்கையைத் துறந்து காட்டுக்கு ஓடிப் போய், தனிமை யில் வாழுமாறு இந்த மந்த்ரம் கூறவில்லை. ‘வாழ்க்கையின் தன்மையை உணர்ந்து, உன் வாழ்க்கையை நடத்து! என்றுதான் சொல்கிறது. எல்லாவற்றிலும் இறைவன்தான் நிரம்பியிருக்கிறான்; அவனால்தான் எல்லாமே சூழப்பட்டிருக்கின்றன‘ என்கிற எண் ணம் வந்துவிட்டால், அதன் பிறகு விரோதங்கள் ஏது? மத, ஜாதி, பகைமைகள் ஏது? உன்னிலும் இறைவன் இருக்கிறான், என்னிலும் இருக்கிறான் என்ற சமப் பார்வை இட்டிவிட்டால், அதன் பிறகு துன்பம் இல்லை. வாழ்க்கையை அப்படி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது இந்த மந்த்ரம்.
எல்லா செல்வங்களும் இறைவனுடையவை. அவன்தான் எல்லா வற்றிலும் நிரம்பி இருக்கிறான். அப்படி இருக்க, என்னுடையது என்ற எண்ணம் கொண்டு துன்பத்தில் உழல்வானேன்? ஏனென் றால், என்னுடையது என்கிற எண்ணத்தினால்தான் பிரச்னைகள் வருகின்றன; கவலைகள் தோன்றுகின்றன; ஆசைகள் வளருகின்றன. சமுத்திரத்தைப் பார்க்கிறோம், அது என்னுடையது என்ற நினைப்பு மனிதனுக்கு வருவதில்லை. அவன் அதன் அற்புதக் காட்சியை அனுபவித்து விட்டுப் போகிறான். மழை பொழிநெது. ‘இந்த மழை என்னுடையது! என்ற எண்ணம் மனிதனுக்குத் தோன்றுவதில்லை. அதனால் அவன் அந்த இன்பத்தை நுகர்கிறான். இதிலேயே ‘என் னுடையது‘ என்ற எண்ணம் வந்துவிட்டால், அடுத்த வீட்டுக் காரனுக்கு மழை பொழியக் கூடாது என்கிற துவேஷ எண்ணம் வரும். மழை நீர் அனைத்தையும் சேகரித்து வீட்டுக்குள் எடுத்துக் கொண்டு போய் வைத்துக் கொண்டுவிட வேண்டும் என்ற பேராசைகூட வரலாம்.
எல்லோருக்கும் பொழியும் மழை என்றால், அது ஈச்வரனின் வடிவம். அதை நடைமுறையிலேயே, நம்மைப் போன்ற சாதா ரண மனிதர்கள்கூட உணர்வதால், அதில் உன்னுடையது, என் னுடையது என்ற பிரச்னை வருவதில்லை. இதே போன்ற எண் ணம், ஒரு மனிதனுக்கு மனித வளங்கள் எல்லாவற்றையும் பற்றி ஏற்பட்டுவிட்டால், அதன் பின்னர் அவனுக்கு நிம்மதிதான்.
இதற்கு அடுத்த மந்திரம் இப்படிச் சொல்கிறது :
கடமைகளைச் செய்தபடியே நூறு ஆண்டு காலம் வாழ விரும்புவாயாக. இப்படிப்பட்ட மனிதனாக நீ வாழ்ந்தால், உன் செயல்கள் உன்னைப் பற்றிக் கொள்வதில்லை. இதைத் தவிர, (இந் நிலையை அடைவதற்கு) வேறு வழி கிடையாது.
நமக்குரிய வேலைகள் எதையும் செய்யாமல், எல்லா கர்மங் களையும் துறந்து வாழ்வதுதான் சிறந்தது என்று இந்த மந்த்ரம் சொல்லவில்லை. ‘உன்னுடைய பணிகளை நீ செய், ஆனால் அவற்றை உனது கடமைகளாக நினைத்து நிறைவேற்று. மனதில் பேராசை கொண்டு, இதைச் செய்வதால் என்ன பலன் இட்டும் என்பதை மட்டுமே கவனத்தில் வைத்து நீ காரியத்தைச் செய்தால், அந்தச் செயல் உன்னைப் பற்றிக்கொள்ளும். அதன் பலன்களை நீ அனுபவிக்கத்தான் வேண்டி இருக்கும். ஆனால் எல்லாம் ஈச னுடையவை என்ற நினைப்புடன், உன்னுடைய கடமைகளை நீ செய்து கொண்டு போனால், அவற்றின் பலன்கள் உன்னைக் கட்டுப்படுத்தாது. உபநிஷத்துக்களின் சாரமாகிய பகவத் கீதையும் இதைத்தான் உபதேசம் செய்கிறது.
ஒரு ட்ரஸ்ட் – அறக்கட்டளை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு நிறைய சொத்துக்கள் இருக்கின்றன. டிரஸ்டிகள் அதை நிர்வகிக்கிறார்கள். அவர்கள் அதைத் தங்க ளுடைய சொத்து என்று நினைத்து நிர்வகிப்பதில்லை. ‘இதை நிர்வகிப்பது நமது கடமை என ஏற்றிருக்கிறோம்; அதைச் செய்து முடிப்போம்! என்று நினைத்து அதைச் செய்கிறார்கள். அந்த நிர் வாகத்தில் பல காரியங்கள் நடக்கும். அவற்றின் விளைவுகள் இந்த புரஸ்டிகளைப் பாதிக்கப் போவதில்லை. அவர்களுடைய தனிப் பட்ட சொத்துக்கள் அப்படியேதான் இருக்கப் போகின்றன. அவற் நிற்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. டிரஸ்டின் சொத்துக்கள் வளர்ந் தால், டிரஸ்ட் மேன்மையுறுகிறது. ஏதோ சில தவறுகள் காரண மாகவோ, எதிர்பாராத நிகழ்ச்சிகள் காரணமாகவோ தவறான முத லீடு போன்றவை நிகழ்ந்துவிட்டால், பாதிக்கப்படப்போவது டிரஸ்ட்தானே தவிர, அந்த டிரஸ்டி அல்ல. அவர்கள் உண்மையாக வேலை செய்தால் – இது நமது கடமை என்று நினைத்து அந்த டி.ரஸ்ட்டை நிர்வகித்தால் – விளைவு அவர்களைச் சாரப் போவ இல்லை. இதே போல, ‘நமக்கு இருக்கும் செல்வம், நமக்கு இருக்கும் தொழில், நமக்கு இருக்கும் குடும்பம் எல்லாமே ஒரு டிரஸ்ட். இறைவன் நம்மிடம் ஒப்படைத்திருக்கும் ஓர் அறக் கட்டளை! என்று நினைத்துக் கொண்டுவிட்டால், அதன் பிறகு நம்முடைய செயல்களின் விளைவு நம்மைப் பாதிக்காது.
டிரஸ்ட் சொத்தைத் தன்னுடைய சொத்தாக நினைத்துக் கொண்டு, தனக்கு இதில் என்ன பலன் கடைக்கும் என்று ஆசைப்பட்டு, வேலை செய்ய ஆரம்பித்தால் என்ன நடக்கும்? டிரஸ்ட் சொத்தில் ஒரு பங்கு வீட்டுக்குப் போய்ச் சேரும்; உண்மைதான். ஆனால் வழக்குகள் வரும். புகார்கள் எழும்பும். ஊரில் பெயர் கெட்டுப் போகும். நடவடிக்கைகள் வரும். பொறாமைகள் வளரும். இன் னொரு டிரஸ்டி நம்மைவிட அதிகமாக எடுத்துக் கொண்டு போய் விட்டால், அவர் மீது பொறாமை வரும். இந்த கையாடலில் கூட்டாளிகளும் வந்து சேருவார்கள். அவர்களோடு மோதல்கள் வரும். மொத்தத்தில் நிம்மதி குலையும். இது நம் செயலின் விளைவு. இந்த மாதிரி விளைவுகள் நம்மைப் பற்றாமல் இருக்க வேண்டுமென்றால், ‘இது நமது கடமை” என்று ஏற்று டிரஸ்டின் காரியங்களைச் செய்து முடிக்க வேண்டும். கர்ம பலனும் இப் படித்தான். செய்கின்ற பணியை, செய்கின்ற கர்மத்தை, ஒரு கடமை யாக நாம் செய்து முடித்தோமேயானால், கர்மபலன் நம்மை அணு காது. இதைத்தான் ஈசாவாஸ்ய உபநிஷதம் கூறுகிறது.
ஆன்மா பற்றியும், இந்த உபநிஷதம் சொல்கிறது.
‘அது அசைகிறது; அது அசைவது கிடையாது. அது மிகத் தொலைவில் உள்ளது; அது மிகவும் அருகில் இருக்கிறது. அது அனைத்துக்கும் உள்ளே இருப்பது; அது அனைத்துக்கும் வெளியே இருப்பது‘.
ஆன்மா பற்றி இப்படி உபநிஷதம் சொல்வது முரண்பாடுகள் நிறைந்ததாக தோற்றம் அளிக்கலாம். ஆனால் சிந்தித்துப் பார்த்தால், இதனுடைய தத்துவம் புரியும். உலகின் இயக்கங்கள் எல்லா வற்றுக்கும் ஆதாரமாக இருப்பது – ஆன்மா; ஆகையால் அது அசைகிறது; ஆனால் எங்கும் நிறைந்த நிலையில் இருக்கும்போது, அதற்கு அசைவு கிடையாது. ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் ஆன்மா இருக்கிறது; ஆகையால் அது மிகவும் அருகில் உள்ள ஒன்று; அதை நாம் உணராத நிலையில் இருப்பதால், அது மிகவும் தூரத்தில் உள்ளது. இதே காரணத்தினால்தான், அது அனைத்தின் உள்ளேயும் உள்ளது. ஆனால் ப்ரம்மம் என்ற நிலையில் – நாம் அடைய முயற்சிக்கும் அந்த நிலையில் – அது அனைத்துக்கும் வெளியேயும் இருப்பது.
தன்னை உணர்ந்தவனைப் பற்றி, அதாவது ஆத்மாவை அறிந்தவனைப் பற்றி, ஈசாவாஸ்ய உபநிஷதம் இப்படிச் சொல்கிறது :
யஸ்து ஸர்வாணி
பூதான்யாத்மன்யேவானுபச்யதி
ஸர்வபூதேஷு சாத்மானம்
ததோ ந விஜுகுப்ஸதே.
யார் எல்லா உயிரினங்களையும் ஆத்மாவிலும், ஆத்மாவை எல்லா உயிரினங்களிலும் பார்க்கிறானோ, அவன் யாரையும் வெறுப்பதில்லை.
இதற்கு அடுத்த மந்திரமும் இதே கருத்தை மேலும் வலியுறுத்து இறது.
‘ஆன்மாவே எல்லா உயிரினங்களாகவும் ஆகயிருக்கின்ற ஒருமை உணர்வைப் பெறுகின்ற ஒருவனுக்கு, மன மயக்கம் என்ன, கவலை என்ன?
தன்னிலும் ஆத்மாவைக் கண்டு, மற்ற எல்லா உயிரினங்களி லும் அதையே பார்ப்பவனுக்கு வெறுப்பு, துவேஷம், பொறாமை போன்ற உணர்ச்சிகளைப் பெறும் வாய்ப்புக் கிடையாது. அது வேறு, நாம் வேறு என்று நினைத்து ஒரு பொருளையோ, மனிதனையோ பார்க்கும்போது – ஆசை, அன்பு, பற்று, பொறாமை, இழப்பு போன்ற பலவித உணர்வுகள் நம்மைத் இண்டுகின்றன. நம் மில் உள்ள ஆன்மாவையே மற்றவர்களிடமும் நாம் காணும் போது, இதற்கெல்லாம் இடமில்லாமல் போய்விடுகிறது. வெற்றி, தோல்வி, சுகம், துக்கம் – போன்றவற்றையெல்லாம் இவர்கள் கடந்து விடுகிறார்கள்.
இது எல்லோராலும் முடிகிற காரியம் இல்லைதான். ஆனால், அந்த மாதிரி நிலையை அடைந்த மகான்கள், நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்கள். இன்னமும்கூட பலர் இருப்பார்கள். அந்த நிலையை அடைந்தால் என்ன மேன்மை இட்டும் என்பதை இந்த மந்த்ரங்கள் சொல்கின்றன. நம்மைப் போன்றவர்களுக்கு, அது இயலாது என்பதால்தான், முதற்படியாக “எல்லாம் இறைவனுடையவை என்று உணர்ந்து கொண்டு, உன்னுடைய கடமையைச் செய்து, நூறாண்டு காலம் வாழ்வாயாக! – என்ற நடை முறைக்கேற்ற உபதேசத்தையும், இந்த உபநிஷதம் ஆரம்பத்திலேயே செய்து விடுகிறது.
பல மாணவர்கள் பரீட்சை எழுதுகிறார்கள். ஒருவன்தான் முதலில் வரப் போகிறான். அதற்காக மற்ற மாணவர்கள் எல்லாம் முதலிலேயே ‘ஒருவன்தானே முதலாவதாக வரப் போகிறான்; இது நம்மால் நடக்கிற காரியமல்ல; நமக்கேன் இந்த வம்பு? – என்று நினைத்துவிட்டால், பரீட்சையில் தோல்வி அடைய வேண் முயதுதான். முதலாவதை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்கள், அதற்கான முயற்சியை மேற்கொண்டால், முதலாவ தாக இல்லாவிட்டாலும், இரண்டாவதாகவோ, மூன்றாவதாகவோ வருகிறார்கள். முதலாவதாக இல்லாவிட்டாலும், நல்ல மார்க் பெற வேண்டும் என்ற முயற்சி உடையவன், பரீட்சையில் தேறு இறான். ஆக, இலக்கு உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
அது என்ன இலக்கு? ஆன்மாவை எல்லாவற்றிலும் கண்டு, எல்லாவற்றிலும் ஆன்மாவைக் காண்பதுதான் மேன்மை. அதுதான் லட்சியம். அதுதான் இலக்கு. அதை அடைவது மிக மிகக் கடினம் என்பதால், அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் விட்டு விடுவது நம்மைத் தாழ்வுக்குத்தான் இட்டுச் செல்லும். அந்தச் சிந்தனை மனதில் இருந்தால், அந்த லட்சியம் நம் முன்னே ஒரு தோற்றமாகவாவது இருந்தால், அது நம்மைச் சில படிகள் உயர்த்திக் கொள்ள பயன்படும். உபநிஷத உபதேசங்களை இந்த வகையிலாவது அணுகுவது, நம்மைப் போன்றவர்கள் ஒரு சில படிகளாவது ஏற்றம் அடைய உதவும்.