தேவர்களின் திகைப்பு

யார் வெற்றுச்செயல்களில்மட்டுமே ஈடுபடுகிறார்களோ, அவர்கள்இருளில்மூழ்குகிறார்கள்‌; யார்ஞான நிலையிலேயே ஈடுபடுகிறார்களோ, அவர்கள்அதையும்விட இருளில்மூழ்கு கிறார்கள்‌! என்று ஈசாவாஸ்ய உபநிஷதம்கூறுகிறது

செயல்கள்என்றால்‌, யாகங்கள்போன்ற கர்மாக்களைச்செய்வது என்றும்கொள்ளலாம்‌; ஆனால்பொதுவாக ஒரு மனிதனின்இயக்கத்தில்அடங்கக்கூடிய எல்லாச்செயல்களையுமே இது குறிக்கும்என்றும்விளக்கங்கள்அளிக்கப்பட்டிருக்கின்றன. செயல்களில்மட்டுமே மூழ்கிக்கிடப்பவர்கள்‌, ஞானப்பாதையில்செல்ல வேண்டிய அவசியத்தை நினைத்தும்பார்ப்பதில்லை: அவர்கள்இருளில்மூழ்குகிறார்கள்என்றால்புரிந்து கொள்ள முடிகிறது; ஆனால்ஞான நிலையிலேயே ஈடுபட்டுக்கிடப்பவர்கள்அதையும்விட இருளில்மூழ்குகிறார்கள்என்பது எவ்வாறு

இங்கே ஞானம்என்பது ஏட்டுச்சுரைக்காய்அறிவைக்குறிக்கிறது. ‘கற்றுக்கொண்டுவிட்டோம்‌; புரிந்து கொண்டுவிட்டோம்‌! என்ற அகங்காரத்தைத்தருகிற அறிவைக்குறிப்பது இது. தெய்வங்களின்தத்துவம்பற்றியோ, ப்ரம்மத்தின்பொருள்பற்நியோ, அறிய வேண்டியது அனைத்தையும்அறிந்துவிட்டதாக ஒருவன்நினைத்தால்‌, அந்த அறிவு அவனை இருளில்வீழ்த்து கிறது; அது அறியாமை என்னும்இருளைவிட மோசமானது

இதனால்தான்இதற்குப்பின்னர்‌, ஈசாவாஸ்ய உபநிஷதம்இப்படிக்கூறுகிறது

வித்யாம்சாவித்யாம் யஸ்தத்‌ 

வேதோபயக்ம்ஸஹ 

அவித்யயா ம்ருத்யும்இர்த்வா 

வித்யயாம்ருதமச்நுதே 

ஞானம்‌, செயல்கள்இரண்டையும்சேர்த்து எவன்அறி கிறானோ, அவன்செயல்களால்மரணத்தைக்கடந்து, ஞானத்இனால்இறவா நிலையை எய்துகிறான்‌. 

மரணத்தைக்கடப்பது என்றால்‌, சாவே கிடையாது என்பது அல்ல. தன்னுடைய வினைப்பயன்களிலிருந்து விடுபடுவதே மரணத்தைக்கடப்பது என்று கூறப்படுகிறது. அதே போல இறவா நிலை என்பது, இறை நிலையைப்ரம்மத்தைச்சார்வது என்று அர்த்தம்‌. 

விஞ்ஞானம்‌, கலைகள்‌, வேதங்களைக்கற்பது போன்றவை எல்லாம்கூடஅவித்யைஎன்று கூறப்படுகின்றன. இறைவனை நாடுவது ஒன்றுதான்வித்யை. அதுதான்ஞானத்திற்கு இட்டுச்செல்வது. அதே சமயத்தில்‌, செயல்களில்ஈடுபடாமல்ஒருவன்இந்த நிலையை அடைந்துவிட முடியாது. தன்னுடைய கடமை களைச்செய்வது, தானம்‌, ஜெபம்‌, சேவை போன்ற சாதனைகளைச்செய்வது போன்ற செயல்கள்மனதைத்தூய்மையாக்குகின்றன; ஆற்றலைத்தருகின்றன. இதைப்பெற்றவன்ஞானத்தைப்பெற முயற்சிக்க வேண்டும்‌. அதாவது செயல்களின்மூலம்தன்னைப்பக்குவப்படுத்திக்கொண்டு, முதற்படியைக்கடந்து, அதன்பிறகு ஞானப்பாதையில்செல்ல வேண்டும்‌. 

செயல்கள்‌, ஞானம்ஆகிய இரண்டுமே வெவ்வேறு நிலை களில்தேவை என்று மேற்கூறியவாறு சொல்கிற இந்த உப நிஷதம்‌, உருவ வழிபாடு, உருவமற்ற நிலையாகிய ப்ரம்மத்தின்வழிபாடுஇரண்டுமே தேவை என்றும்கூறுகிறது. உருவ வழிபாட்டினால்‌, மரணத்தைக்கடந்துப்ரம்மத்தைப்பேணுவ தால்இறவா நிலையை ஒருவன்அடைகிறான்என்று இந்த உபநிஷதம்சொல்கிறது. ஒரு தகுதியும்பெறாமலே, ‘உருவமுள்ள தெய்வங்களை நினைத்து வழிபடுவதில்அர்த்தமில்லை. நான்ப்ரம்மத்தையே நினைக்கிறேன்‌! என்று ஒருவன்சொல்லிக்கொண்டால்‌, அவன்தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்பவன்‌. சிவன்‌, விஷ்ணு, முருகன்‌, விநாயகர்‌, அம்பிகை, காளி என்ற பல்வேறு வடிவங்கள்ஒரே உண்மைப்பொருளின்மாறுபட்ட தோற்றங்களே. இந்த மாதிரி வழிபாட்டில்ஈடுபட்டுப்பின்னர்அதையும்கடந்து, ப்ரம்மத்தையே நினைப்பதில்ஒருவன்தன்னை ஈடுபடுத்திக்கொண்டால்‌, அவன்வினைப்பயன்களிலிருந்தும்மிள்கிறான்‌; இறுதியில்ப்ரம்மத்தையும்சார்கிறான்‌. 

இந்த உடம்பு சாம்பலாகி விடும்‌. உடலிலிருந்து வெளியேறு கிற பிராணன்எங்கும்நிறைந்த அழிவற்ற பிராணனுடன்கலந்து விடும்‌. மனமே! செய்தவற்றை நினைத்துப்பார்‌. மனமே! செய்த வற்றை நினைத்துப்பார்‌!” என்று இந்த உபநிஷதம்இறுதியில்வற்புறுத்துகிறது. வாழ்வு நிலையற்றது; இறுதியில்சாம்பலாவது. இது மறக்கத்தகாத உண்மை. அப்படிப்பட்ட வாழ்வில்நாம்செய்யும்செயல்கள்எத்தகையவை? அதை அடிக்கடி நினைத்துப்பார்ப்பதால்‌, நம்முடைய செயல்களை ஒழுங்குபடுத்திக்கொள்வது சாத்தியமாகும்‌. ஏதாவது ஒரு நிலையிலாவது, நல்லது செய்ய, நம்மை. இந்தச்சிந்தனை தூண்டும்‌. ‘இதுவரை என்ன செய்து வந்தோம்‌?! என்று அவ்வப்போது நினைத்துப்பார்த்துக்கொள்வது, நம்மை நாமே உயர்த்திக்கொள்கிற ஒரு வழி.

 ‘ஒளிப்பொருளே! அக்னி தேவனே! எங்களுடைய செயல்கள்‌. எல்லாவற்றையும்நீ அறிவாய்‌. எங்களைக்கொடிய தவறுகளி லிருந்து விலக்கி விடு! என்று வேண்டிக்கொள்வதுடன்‌, ஈசா வாஸ்ய உபநிஷதம்முடிகிறது

அடுத்து கேன உபநிஷதம்‌. ‘கேனஎன்றால்‌ ‘யாரால்‌” என்று அர்த்தம்‌. இந்தச்சொல்லுடன்தான்இந்த உபநிஷதமே தொடங்கு கிறது. ஒவ்வொரு உபநிஷதமும்‌, ஒவ்வொரு சாந்தி மந்திரத்துடன்ஆரம்பிக்கிறது என்பதைச்சென்ற அத்தியாயத்தில்பார்த்தோம்‌. கேன உபநிஷதத்தின்சாந்தி மந்த்ரம்‌, இவ்வாறு வேண்டுகிறது

ஓம்ஸஹ நாவவது. ஸஹ நெள புனக்து 

ஸஹ விர்யம்கரவாவஹை 

தேஜஸ்வி நாவதீதமஸ்து – 

மா வித்விஷாவஹை

ஓம்சாந்தி: சாந்தி: சாந்தி

(குரு, சடன்ஆகிய) நம்இருவரையும்இறைவன்காப்பாராக. நம்இருவரையும்ஊக்குவிப்பாராக. நாம்இருவரும்சேர்ந்து ஆற்ற லுடன்உழைப்போமாக! கற்றது, நமக்குப்பயனுள்ளதாக விளங்கட்டும்‌. நாம்இருவரும்பரஸ்பரம்வெறுப்படையாமல்இருப்போமாக. மூவகை சாந்தி நிலவட்டும்‌. 

மூவகை சாந்தி என்று ஏன்சொல்லப்படுகிறது? தடைகள்மூன்று வகையானவை. ஒன்றுஆத்யாத்மிகம்‌. நம்மால்வருகிற தடை; உடல்நோய்‌, மனக்கவலைகள்போன்றவை. அடுத்தது ஆதி பெளதிகம்‌ – பிற உயிர்களினால்ஏற்படுகிற தடை. அடுத்து ஆதி தைவிகம்‌ – இயற்கையின்சக்திகளால்வருகிற தடை; பெரு மழை, புயல்‌, தீ போன்றவற்றால்வருகிற தடைகள்‌. இந்த மூன்று வகையான தடைகளிலிருந்து விடுபடுவதற்காகத்தான்‌ “ஓம்சாந்தி: சாந்தி: சாந்தி:’ என்று சொல்லப்படுகிறது

யாரால்ஏவப்பட்டு மனம்இயங்குகிறது? எதனால்வாக்குப்பேசுகிறது? கண்‌, காது போன்ற இந்திரியங்களை எந்தத்தேவன்செயல்படுத்துகிறான்‌?’ என்ற கேள்விகளுடன்இந்த உபநிஷதம்தொடங்குகிறது. பின்னர்‌ ‘காதின்காதாக, மனதின்மனமாக, வாக்இன்வாக்காக, பிராணனின்பிராணனாக, கண்ணின்கண்ணாக இருப்பது ஆன்மா. இந்த உண்மையை உணர்பவன்இந்த உலகி விருந்து விலகி, மரணமற்ற நிலையை (வினைப்பயன்களிலிருந்து மிள்திற நிலையை) அடைகிறான்‌’ என்றும்இது விடையளிக்கிறது

ஆன்மா எத்தகையது என்பதைப்புலன்களால்அனுபவித்து உணர முடியாது. ஆகையால்அதைப்புலன்களால்விளக்கவும்முடியாது. மேலும்உடலின்ஒவ்வொரு செயல்பாட்டிலும்‌, மனதின்ஒவ்வொரு இயக்கத்திலும்‌, ஆன்ம உணர்வு வெளிப்படு வதை உணர்ந்து கொள்ள வேண்டும்‌. ஆன்மாவை அறிந்து கொண்டவன்‌, ஆற்றல்பெறுகிறான்‌. மரணமில்லாத்தன்மையை எய்துகிறான்‌’ என்று கேன உபநிஷதம்கூறுகிறது.

வேறு எந்த ஆற்றல்இருந்தாலும்அது கூடவே பயத்தையும்தருகிறது. ‘இந்த ஆற்றல்பயனற்றுப்போய்விடுமோ! என்ற அச்சத்தைத்தராத ஆற்றல்எதுவும்கிடையாது. மற்றொருவனின்ஆற்றல்‌, சந்தர்ப்ப சூழ்நிலை, கால நேரம்‌, இடம்‌, பொருள்‌… போன்றவற்றில்ஏதாவது ஒன்று, பல வகையான ஆற்றல்களை பயனற்றதாகச்செய்துவிட முடியும்‌. ஆனால்ஆன்ம உணர்வினால்கடைக்கும்ஆற்றல்‌, இத்தகையது அல்ல. அந்த ஆற்றலை அழிக்கக்கூடிய சக்தி எதுவும்கிடையாது

ஆன்மாவைப்பற்றியும்‌, ஆன்ம உணர்வைப்பற்றியும்இப்படி எல்லாம்கூறிவிட்டு, குரு, ஒரு நிகழ்ச்சியைச்சீடனுக்கு வர்ணிக்கறார்‌. ப்ரம்மம்‌, அதாவது இறைவனாகிய இறுதித்தத்துவம்‌, தேவர்களுக்காக வெற்றியைப்பெற்றுத்தந்தது. தேவர்களோ இந்த வெற்றி தங்களுடையதே என்று பெருமைப்பட்டார்கள்‌. அவர்களு டைய எண்ணத்தைப்பார்த்த இறைவன்‌, அவர்கள்முன்ஒரு யக்ஷன்‌. வடிவில்தோன்றினான்‌. அந்த யக்ஷன்யார்என்று தெரியாமல்தேவர்கள்குழப்பம்அடைந்தார்கள்‌. 

அப்போது அவர்கள்‌, ‘இந்த யக்ஷன்யார்என்பதை அறிந்து வர வேண்டும்என்று அக்னி தேவனிடம்கேட்டுக்கொண்டார்கள்‌. அவனும்யக்ஷனிடம்விரைந்தான்‌. 

அந்த யக்ஷன்‌, அக்னி தேவனைப்பார்த்து, ‘நீ யார்‌?” என்று கேட்டான்‌. 

நான்அக்னி. அனைத்தையும்அறிந்தவன்‌! என்று அக்னி தேவன்பதிலளித்தான்‌.

 ‘உன்னிடமுள்ள சக்தி என்ன?’ என்று யக்ஷன்கேட்டான்‌.

 ‘எல்லாவற்றையும்என்னால்எரிக்க முடியும்என்றான்அக்னி தேவன்‌. 

இதைக்கேட்ட யக்ஷன்‌, அக்னி தேவனின்முன்பாக, ஒரு புல்லை எடுத்துப்போட்டு, ‘இதை எரிப்பாயாகஎன்றான்‌. 

அக்னி, அந்தப்புல்லை வேகத்துடன்அணுகினான்‌. அவனால்அதை எரிக்க முடியவில்லை. அவன்இரும்பிச்சென்று, மற்ற தேவர்களிடம்அந்த யக்ஷனைத்தன்னால்அறிந்து கொள்ள இயலவில்லை என்று தெரிவிக்க, அவர்கள்வாயு தேவனிடம்அந்த யக்ஷன்யார்என்று அறிந்து வருமாறு கேட்டுக்கொண்டனர்‌. அவனும்யக்ஷனிடம்விரைந்தான்‌.

யக்ஷன்வாயு தேவனைப்பார்த்து, ‘நீ யார்‌?” என்று கேட்டான்‌.

நான்வாயு! வானவெளியில்சஞ்சரிப்பவன்‌’ என்றான்வாயு தேவன்‌.

உன்னிடம்என்ன சக்தி இருக்கிறது?

அனைத்தையும்என்னால்தூக்கி அடிக்க முடியும்‌. ‘

இவ்வாறு வாயுதேவன்சொன்னவுடன்‌, அவன்முன்பாகவும்ஒரு புல்லை வைத்து, ‘இதைத்தூக்கு! என்றான்யக்ஷன்‌. வாயு தேவன்அதை வேகமாக அணுகி, தூக்க முயல, அவனால்முடிய வில்லை. அவனும்அக்னியைப்போலவே மற்ற தேவர்களிடம்சென்று, அந்த யக்ஷன்யார்என்பதைத்தன்னால்அறிந்து கொள்ள. முடியவில்லை என்று தெரிவித்தான்‌.

அடுத்து தேவர்கள்இந்திரனிடம்கேட்டுக்கொண்டார்கள்‌. அவன்யக்ஷனிடம்சென்றான்‌. யக்ஷன்மறைந்தான்‌. அப்போது அங்கே தோன்றிய உமா தேவியை இந்திரன்அணுகி, ‘இந்த யக்ஷன்யார்‌?” என்று கேட்டான்‌. உமா தேவி விளக்கமளித்தாள்‌.

அது ப்ரம்மம்‌. அவருடைய செயலைத்தான்உங்கள்வெற்றி யாக எண்ணி நீங்கள்மகழ்ந்தீர்கள்‌. இவ்வாறு உமா தேவி கூறியதைக்கேட்டவுடன்‌, யக்ஷனாகத்தோன்றியது ப்ரம்மமே என்‌: பதை இந்திரன்உணர்ந்து கொண்டான்‌.

தேவர்கள்ஒவ்வொருவரும்வெவ்வேறு வகையான ஆற்றல்பெற்றவர்கள்‌. ஆனால்‌, அவர்களுடைய அந்த ஆற்றல்கள்ய௯ஷனின்முன்பு செயலற்றுப்போயின. இறுதி உண்மையாகிய இறைவன்அளித்த வெற்றியை, தங்களுடைய ஆற்றலினால்பெற்ற வெற்றி யாகக்கருதியதன்விளைவாக, அந்தத்தேவர்களின்ஆற்றல்செயல்படாமல்போயிற்று.

இந்த நிகழ்ச்சி மூலம்‌, கூறப்படுகிற தத்துவம்என்ன?