முன்று தினங்கள் வாயிலில் காத்திருந்துவிட்ட நரிகேதஸை, முறையாக உபசரிக்க வேண்டும் என்று மந்திரிமார்கள் எமதர்ம னிடம் கூறியது, சாத்திர ரீதியான தர்மம்.
விருந்தாளிகளை அவமதிக்காமல் அவர்களைக் காத்திருக்கச் செய்யாமல், அவர்களுக்கு எல்லா உபசாரங்களையும் செய்ய வேண்டும் – என்று நமது தர்ம சாத்திரங்கள் பல இடங்களில் வற்புறுத்துகின்றன. அதுவும் தூயவனாகிய ஒருவன் விருந்தாளி யாக வந்தால், அது மிகப் பெரும் பாக்கியம். அவனைத் தக்க முறையில் உபசரிக்க வேண்டும். இந்தப் பண்பாடு நமது இதிகாசங்களிலும், புராணங்களிலும் தர்ம சாத்திர நூல்களிலும் எடுத்துச் சொல்லப்படுகிறது. அந்தத் தர்மம்தான் இங்கே எம தர்மனுக்குக் கூறப்படுகிறது.
மந்திரிகள் மேலும் கூறினார்கள் : ‘எவனுடைய வீட்டில் தூய வனாகிய ஒருவன் உணவின்றி இருக்க நேர்கிறதோ, அந்த அற்ப புத்தியுடையவனின் நம்பிக்கைகளும், எதிர்பார்பபுகளும் அழிகின் றன. அவன் ஏதாவது புண்ணியங்கள் செய்திருந்தால் அவற்றின் பலன்; அவன் இனிமையாகப் பேசியிருந்தால் அதனுடைய பலன்; யாகங்கள் முதலியவற்றைச் செய்திருந்தால் அவற்றுடைய பலன்; அவன் செய்திருக்கக்கூடிய நற்பணிகளின் பலன் – எல்லாவற்றை யும் அவன் இழந்து விடுகிறான். அவனுடைய மக்கட் செல்வ மும், கால்நடைச் செல்வமும் அழிகின்றன.
இவ்வாறு தர்மம் எடுத்துரைக்கப்பட்டபோது, எமதர்மன், நசிகேதஸிடம் சென்று அவனை உபசரித்து, ‘தரயவனே! வணங்கத் தக்கவனாகத் தெரிகிற நீ, விருந்தாளியாக வந்து, உணவின்றி என் வீட்டில் மூன்று இரவுகள் தங்க நேர்ந்துவிட்டது. குற்றம் எதுவும் இல்லாத பாலனே! நான் செய்த தவறு என்னைப் பாதிக்காமல், எனக்கு நன்மை உண்டாகட்டும்; உன்னை வணங்குகிறேன். நீ மூன்று இரவுகள் தங்க நேர்ந்ததற்காக, என்னிடமிருந்து நீ மூன்று வரங்களைப் பெற்றுச் செல்வாயாக!” என்று கூறினான்.
– இவ்வாறு கூறிய எமதர்மனுக்கு நசிகேதஸ் பதில் அளித்தான் : ‘எமதர்மனே! உன்னிடமிருந்து இரும்பிச் செல்கிற என்னை, எனது தந்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். என்னை ஏற்றுக் கொண்டு, தெளிந்த மனமுடையவராக, என் மீது எந்தக் கோப: மும் இல்லாதவராக அவர் என்னுடன் பழக வேண்டும். நீ அளிக்கிற மூன்று வரங்களில், இதையே முதல் வரமாக நான் கேட்கிறேன்”.
நசிகேதஸ் கேட்ட இந்த வரத்தை எமன் அளித்தான்.
அதையடுத்து நசிகேதஸ் இரண்டாவது வரத்தைக் கோரினான்: ‘ஸ்வர்க்கத்தில் பயம் என்பது கிடையாது. அங்குப் பசி, தாகம் போன்றவை இல்லை. அங்கே இருப்பவர்கள் கவலையற்றவர் களாக இருக்கிறார்கள். அவர்கள் தேவத் தன்மையைப் பெறு கிறார்கள். அங்கே அழைத்துச் செல்லக்கூடிய யாகம் பற்றி நீ நன்றாக அறிந்திருப்பாய். சிரத்தையுடன் கேட்கிற எனக்கு அதைப் பற்றிச் சொல். இதைத்தான் நான் இரண்டாவது வரமாகக் கேட் றேன்”.
ஸ்வர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிற யாகம் பற்றி நசிகேதஸ் கேட்ட கேள்வியை, பெரியவர்கள் இவ்வாறு விளக்குகிறார்கள் : யாகங்கள் இரு வகைப்பட்டவை என்று கொள்ளலாம். ஒன்று – புறத்தே செய்யப்படுவது; அதாவது ஹோம குண்டம் வளர்த்து, வேத மந்த்ரங்களை ஓதி, காணிக்கைகளைச் செலுத்தி, குறிப்பிட்ட பொருள்களை அக்னியில் சமர்ப்பித்துத் தெய்வத்தை வேண்டிக் கொள்வது; இன்னின்ன காரியத்திற்கு, இன்னின்ன வகையில் யாகம் செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளையொட்டி, அவற்றைச் செய்வது. இன்னொரு வகை – அகத்தே செய்யப்படும் யாகம். அதாவது மனதை ஒருமுகமாக்கி, இறைவனையே தியானித்து, மனதாற எல்லாவற்றையும் இறை தத்துவத்திற்கே அர்ப்பணித்து, இயானத்தினால் செய்யப்படுகிற யாகம். இங்கே நசிகேதஸ் அறிந்து கொள்ள விரும்பியது இரண்டாவது வகையில் செய்யப் படுகிற யாகம் என்றும் சில விளக்கங்கள் கூறுகின்றன; அது புறத்தே செய்யப்படுகிற யாகம்தான் என்றும் பல விளக்கங்கள் சொல்கின்றன.
நசிகேதஸ் கோரிய இந்த இரண்டாவது வரத்தையும் எமன் அளித்தான். ‘நசிகேதா! ஸ்வர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற யாகத்தைப் பற்றிக் கேட்டாய். அது எனக்குத் தெரிந்ததே. அதை உனக்குச் சொல்கிறேன். விழிப்புள்ள மனதுடன் அதைக் கேட் பாயாக! சுத்தத்தைத் தருவதும், உலகத்திற்கு ஆதாரமானதுமான அந்த அக்னி, இதய குகையில் உள்ளது‘. இதைக் கூறிவிட்டுக் கட உப நிஷதம் மேலும் சொல்கிறது.
அந்த யாகத்திற்கான விவரங்களையெல்லாம் எமதர்மன் வர்ணித்தான். அவன் கூறியவற்றை நசிகேதஸ் அப்படியே இரும்பவும் ஒருமுறை சொன்னான். தான் கூறியதை நசிகேதஸ் நன்றாகப் புரிந்து கொண்டான் என்பதில் எமதர்மன் மகிழ்ச்சி அடைந்து, ‘உனக்கு இதோ இன்னொரு வரம் தருகிறேன். இந்த யாகம் இனி உன் பெயராலேயே விளங்கும்! பல வர்ணங்களைக் காட்டி, ஒளி வீசுகின்ற இந்த மாலையையும் நீ பெற்றுக் கொள் வாயாக! என்று கூறி ஒரு மாலையையும் அளித்தான்”.
எமன் வர்ணித்த அந்த யாகம், அதாவது நசிகேத யாகம் ஒரு வித்யையாக வர்ணிக்கப்படுகிறது. வித்யை என்பது பற்றி ஏற்கெனவே நாம் பார்த்தோம். அந்த உயர்ந்த ஸ்தானத்தை இது பெறுகிறது. ஆனால் இது பற்றிய விவரங்கள் கட உபநிஷதத்தில் இல்லை. உபநிஷதங்களில் கூறப்படும் வித்யைகள் பற்றிய விவரங்கள் நமக்குக் இடைக்கவிவ்லை – என்று பலர் விளக்கி இருப்பதையும் நாம் ஏற்கெனவே கண்டோம். அவற்றில் ஒன்று தான் இந்த நசிகேத வித்யை. இங்கே குறிப்பிடப்படுகிற இதய குகையில் உள்ள அக்னி, ஆன்ம அக்னி. இதை விளக்கத்தினால் மட்டும் ஒருவர் பெற்றுவிட முடியாது. இதைப் பற்றிய உணர்வு வந்தால்தான் இதைப் பெற முடியும்.
‘இதை நாம் கற்றுக் கொள்ள முடியாதா?! என்ற கேள்வி எழலாம். கற்றுக் கொள்ள முடியும். தகுந்த குரு அமைய வேண்: டும். அதாவது, எமதர்மன் போன்ற ஒரு குருவை நாம் பெற வேண்டும். அது மட்டுமல்ல. அந்தக் குருவிடமிருந்து உபதேசம் பெறுகிற தகுதியும் நமக்கு இருக்க வேண்டும். அப்பொழுது நாமும் இதைக் கற்றுக் கொள்ளலாம். இது தொடர்பாக ஒரு சிறிய உதாரணத்தைப் பார்க்கலாம். ஒருமுறை கிருபானந்த வாரியார் ராமா யணத்தைப் பற்றிக் காலட்சேபம் செய்து கொண்டிருந்த பொழுது, கூட்டத்திலிருந்த ஒருவர், ‘பலை, அதிபலை என்கிற இரண்டு மந்த்ரங்களைக் கற்றுக் கொண்டு, ராமர் பசி, தாகமற்று இருந்தார் என்று சொல்கிறீர்கள். அந்த மந்த்ரங்கள் என்ன? அதைச் சொல் லுங்கள். நாங்களும் கற்றுத் தெரிந்து கொண்டு, பசி, தாகமற்று இருக்கிறோமே‘ என்று கேட்டாராம்.
அதற்கு கிருபானந்த வாரியார், ‘செய்யலாம். ஆனால் ஒரே ஒரு பிரச்னை… அந்த மந்த்ரங்களைத் தெரிந்து கொண்டு உபதேசம் செய்கிறவனுக்கு, விச்வாமித்திரருக்கு உள்ள தகுதி இருக்க வேண்டும். அதைக் கேட்டுக் கொண்டு, பலனைப் பெறுகிறவருக்கு ராமருக்கு உள்ள தகுதி இருக்க வேண்டும். விச்வாமித்திரருக்கு உள்ள தகுதி எனக்கும், ராமருக்கு உள்ள தகுதி உமக்கும் இருந்து, நான் உங்க ளுக்கு அந்த மந்த்ரங்களைத் தெரிந்து கொண்டு உபதேசம் செய் தால், அது உங்களுக்குப் பயன் அளிக்கும். அந்த மாதிரி தகுதி நம்மிடம் இருக்கிறதா?” என்று கேட்டாராம். கேள்வியை எழுப்பியவர் பேசாமல் அமர்ந்துவிட்டார்.
இந்த மாதிரி விஷயங்களை எல்லாம், அதாவது மிக உயர்ந்த பொருளை எல்லாம், புரிய வைப்பதற்கு ஏற்ற குரு அமைய வேண்டும். அதை கிரஹித்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு, தகுதியுள்ள சிஷ்யன் அமைய வேண்டும். அந்த மாதிரி தகுதிகள் இல்லாத நிலையில், ‘நசிகேத வித்யையை நான் கற்றுக் கொண்டு, ஸ்வர்க்கத்தை அடைந்து விடலாமா‘ என்று கேட்பதில் அர்த்தமில்லை.
இதற்கு வேண்டிய தகுதி பற்றி இந்த உபநிஷதமே சொல் இறது. ‘நசிகேத யாகத்தை மூன்று முறை செய்தவன், மூவரிடம் தொடர்பு கொண்டு, மூன்று பயிற்சிகளைச் சரியாகச் செய்யும் பொழுது, பிறப்பையும் இறப்பையும் கடக்கிறான்’.
மூவருடன் தொடர்பு – என்றால் என்ன? தாய், தந்தை, குரு ஆய மூவர் காட்டும் வழியில் செல்ல வேண்டும். தாயின் அன்பு, தந்தையின் நடைமுறை வழிகாட்டுதல்கள், அகத்தூய்மை பெற குருவின் உபதேசங்கள் ஆகிய மூன்றுடனும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். இவற்றில் ஒன்று இல்லாமற் போனாலும் கூட, ஒருவனுடைய வாழ்வு, அவனுடைய இயக்கம், முழுமை பெறுவதில்லை.
மூன்று பயிற்சிகள் என்பவை என்ன? சொந்தத் தேவைகளை யும், ஆசைகளையும் சுருக்கிக் கொள்வது; தன்னுடைய வாழ்க்கை பிறருக்குப் பயனுள்ளதாக அமையும் வழியில் நடந்து கொள்வது இது ஒன்று. தர்ம சாத்திரங்களை நன்றாகக் கற்றறிதல், நல்ல கருத்துக்களைப் பிறருக்குச் சொல்லுதல் போன்றவை – அடுத்த பயிற்சி. மூன்றாவதாக, தானங்களைச் செய்வது. (இறைவனை உணரும் முயற்சியில் ஈடுபடுவது என்றும் சில விளக்கங்கள் கூறு ் இன்றன). இவ்வாறு மூன்று பயிற்சிகளையும் ஒருவன் பெற் றால், அவன் நசிகேத யாகம் செய்யலாம். ஸ்வர்க்கத்திற்குப் போகும் பாதையில் செல்லலாம்.
அதையே மூன்று முறை செய்தால், அவன் அமரத்துவம் எய்தலாம். இந்த யாகம் நசிகேதஸின் பெயரிலேயே வழங்கும் என்ற வரத்தையும் அளித்த எமதர்மன், மூன்றாவது வரத்தைக் கேட்கு மாறு நசகேதஸிடம் கூறினான். நரிகேதஸ், ‘மரணத்திற்குப் பிறகு வாழ்வு இருக்கிறது என்று சிலரும், இல்லை என்று சிலரும் கூறுகிறார்கள். இந்தச் சந்தேகத்தை உன்னிடம் கேட்டுத் தெளிவு பெற நான் விரும்புகிறேன். நான் கேட்க விரும்பும் மூன்றாவது வரம் இதுவே‘ என்று கூறினான்.
எமதர்மன், ‘இந்த விஷயம் பற்றித் தேவர்களுக்கும்கூட சந்தேகம் இருக்கிறது. இது மிகவும் நுணுக்கமானது. எளிதாக அறிந்து கொண்டுவிட முடியாது. ஆகையால், நீ வேறு வரம் எதையாவது கேள். என்னைக் கட்டாயப்படுத்தாதே‘ என்று கேட்டுக் கொண்டான்.
ஆனால் நசிகேதஸோ பிடிவாதமாக இருந்தான். ‘எமதர்மனே! இதை எளிதாக அறிந்து கொள்ள முடியாது என்று நீயே சொல் கிறாய். ஆகையால் இதைப் பற்றி எனக்கு உபதேசம் செய்வ தற்கு உன்னைப் போல வேறு ஒருவர் கிடைக்கமாட்டார். எனக்கு இந்த வரம்தான் வேண்டும். வேறு எந்த வரமும் இதற்கு ஈடாகாது! என்று கூறிவிட்டான் அவன்.