ஆறு கேள்விகள்

*ப்ரச்னம்‌: என்றால்கேள்வி. சில கேள்விகளை எழுப்பி, அவற்றிற்கான பதில்களையும்தருகிற இந்த உபநிஷத்‌, ப்ரச்ன உபநிஷத்என்று அழைக்கப்படுகிறது. இதன்தொடக்கத்தில்வரு இற சாந்தி மந்த்ரம்இவ்வாறு அமைந்திருக்கிறது

தேவர்களே! நாங்கள்‌, நல்ல விஷயங்களையே எங்கள்காதுகளால்கேட்க. வேண்டும்‌. பூஜிக்கத்தகுந்தவர்களே! நாங்கள்‌, நல்ல விஷயங்களையே எங்கள்கண்களால்பார்க்க வேண்டும்‌. உறுதி படைத்த அங்கங்கள்கொண்ட உடலுடன்வாழ்நாள்முழுவதும்‌, உங்களை நாங்கள்துஇக்க வேண்டும்‌. தேவர்களுக்குச்சம்மதமான விஷயங்களை செய்த வண்ணமே நாங்கள்வாழ வேண்டும்‌. ற்‌, பெரும்புகழ்பெற்ற இந்திரன்நன்மை செய்யட்டும்‌. அனைத்தையும்அறிகின்ற சூரியன்நன்மை செய்யட்டும்‌. இமையை அழிக்கின்ற கருடன்நன்மை செய்யட்டும்‌. ப்ரஹஸ்பதி நன்மை செய்யட்டும்‌” 

இந்த வேண்டுகோளுடன்ப்ரச்ன உபநிஷதம்தொடங்குகிறதுசுகேசன்‌, ஸத்யகாமன்‌, கார்க்யன்‌, கெளஸல்யன்‌, பார்கவன்‌, கபந்தி ஆகியோர்‌, இறைவனாகிய ப்ரம்மத்தை நாடுபவர்கள்‌. அந்த உணர்விலேயே நிலை பெற்றவர்கள்‌. அவர்கள்ப்ரம்மத்தை முழுமை யாக அறிய விரும்பினார்கள்‌. தெய்வத்திற்கு நிகராக வணங்கத்தக்க முனிவராகிய பிப்பலாதர்என்பவர்‌, இறைவனைப்பற்றி முழுமையாக விளக்கக்கூடியவர்என்று அறிந்ததும்‌, அவர்கள்அவரை அணுகினார்கள்‌ – என்று ஆரம்பிக்கிறது இந்த உபநிஷதம்‌. 

விளக்கங்களை நாடி பிப்பலாத முனிவரை அணுகிய ஆறு பேரும்சாதாரணமானவர்கள்அல்ல. அவர்களே இறை உணர்வில்நிலை பெற்றவர்கள்‌. அப்படி இருந்தும்கூட, தாங்கள்‌: பெற்ற ஞானம்முழுமையானது அல்ல என்று நினைத்து, அந்த ஞானத்தை முழுமையாக அடைவதற்கான பாதையில்இட்டுச்செல்பவரை நாடி, அவர்கள்பிப்பலாதரிடம்வந்து சேர்ந்தார்கள்‌. அரைகுறையாக படித்து விட்டு, தனக்கு எல்லாம்தெரிந்து விட்டது என்று நினைத்துக்கொள்கிறவன்‌, என்றுமே சரியான கல்வியைப்பெற முடியாது என்பதை தற்காலத்தில்பார்க்கிறோம்‌. இந்த ஆறு பேரும்நாடியதோ, மிகவும்கடினமான இறுதி உண்மை. அதனால்தான்தங்களுக்கே மேன்மை இருந்தும்கூட, அவர்கள்தெய்வ முனிவர்என்று கருதப்பட்ட பிப்பலாதரை நாடிச்சென்றார்கள்‌. 

இந்த ஆறு பேரும்வந்த காரணத்தைப்புரிந்து கொண்ட பிப்ப: லாதர்‌, அவர்களிடம்‌ ‘இங்கே ஒரு வருட காலம்உரிய முறையில்நீங்கள்வாழ்ந்து கொண்டிருங்கள்‌. தவம்‌, ப்ரம்மச்சரியம்‌, நம்பிக்கை, முனைப்புஆகியவற்றோடு வாழுங்கள்‌. அதன்பிறகு நீங்கள்விரும்பிய கேள்விகளைக்கேளுங்கள்‌. நான்அவற்றிற்கான பதிலை அறிந்திருந்தால்‌, நிச்சயமாக உங்களுக்குச்சொல்கிறேன்‌’ என்றார்‌. 

பிப்பலாத முனிவர்காட்டிய அடக்க உணர்வு, குருமார்களிடம்இருக்க வேண்டும்‌. ‘எனக்குத்தெரியுமானால்சொல்கிறேன்‌! என்று கூறினார்அவர்‌. இதைக்கொண்டு, அவருக்குத்தெரியாது என்று அர்த்தம்செய்து கொள்ள இடமில்லை. அவர்இறுதி உண்மையை அறிந்தவர்‌. இறைவனை உணர்ந்தவர்‌. இருந்தாலும்கூட சற்றும்கர்வமில்லாமல்‌, தன்னுடைய அறிவு பற்றி ஒரு மமதை இல்லா மல்‌, ‘எனக்குத்தெரியுமானால்‌, சொல்கிறேன்‌! என்று சொன்னார்‌. 

வந்தவர்களோ ஏற்கெனவே தகுதி படைத்தவர்கள்தான்‌. ஆனால்‌, அவர்களையும்கூட ஒரு வருடம்தவம்இருக்கச்சொன்னார்பிப்பலாதர்‌. அது மட்டுமல்லாமல்‌, அவர்களை ப்ரம்மச்சரியத்தைக்கடைபிடிக்குமாறும்சொன்னார்‌. விவேகானந்தரின்சாதனைகளுக்குக்காரணம்‌, அவருடைய ப்ரம்மச்சரியமே என்று கூறுகிற ஸ்வாமி ஆசுதோஷானந்தர்‌, விவேகானந்தரே இது பற்றி குறிப்பிட்டிருப்பதை மேற்கோள்காட்டுகிறார்‌. “சிகாகோவில்என்னுடைய முதல்பிரசங்கத்தில்நான்எல்லோரையும்அமெரிக்க நாட்டின்சகோ தரர்களே! சகோதரிகளே! – என்று அழைத்தவுடன்‌, அனைவரும்எழுந்து மகழ்ச்சி ஆரவாரம்செய்தது உங்களுக்கெல்லாம்தெரியும்‌. ஆனால்அவர்கள்அப்படி பரவசப்பட்டதற்கு என்ன காரணம்தெரியுமா? ஏதோ ஒரு அதிசய ஆற்றல்என்னிடம்இருக்கிறது என்று நீங்கள்நினைக்கலாம்‌. உண்மைதான்‌. என்னிடம்அத்தகைய ஒரு ஆற்றல்உள்ளது. அது இதுதான்‌ – ஒருமுறை கூட காம எண்ணம்‌, என்மனதில்புக நான்அனுமதித்ததில்லை. என்மனம்‌, என்னுடைய சிந்தனை, பொதுவாக மனிதன்அந்த வழியில்செல வழிக்கின்ற ஆற்றல்கள்அனைத்தையும்ஒரு உயர்ந்த போக்கில்போகுமாறு பயிற்சி அளித்தேன்‌. அது யாராலும்தடுக்க முடியாத ஒரு பெரும்ஆற்றலாக உருவெடுத்தது.”

 அதாவது, ப்ரம்மச்சரியம்என்பது ஆற்றலை வளர்க்கக்கூடி யது. ஆகையால்தான்பிப்பலாதர்ஞானத்தைத்தேடி தன்னிடம்வந்தவர்களை, ஒரு ஆண்டு காலம்ப்ரம்மச்சரியத்தை அனுஷ்டிக்க மாறும்‌, தவம்செய்யுமாறும்கூறினார்‌. பிப்பலாதர்கூறியபடியே அந்த ஆறு பேரும்‌, தவத்தையும்‌, ப்ரம்மச்சரியத்தையும்கடைப்பிடித்து ஹாண்டு காலம்கழித்தனர்‌. அதன்பின்னர்அவர்கள்ஒவ்வொருவரும்‌, ஒவ்வொரு கேள்வியை பிப்பலாதர்முன்வைத்தனர்‌. அந்த ஆறு கேள்விகளுக்கு பிப்பலாதர்அளித்த விளக்கங்களே ப்ரச்னோபநிஷதம்‌. 

மனிதர்களின்தோற்றம்‌; மனிதர்களை தாங்குகிற தேவர்கள்‌; ப்ராணனின்இயக்கம்‌; விழிப்பு, உறக்கம்‌, கனவு ஆகிய நிலைகள்‌; ஓம்என்கிற ப்ரணவ மந்த்ர த்யானம்‌; ஆன்மாவின்தன்மைஆகய ஆறு பொருள்கள்பற்றி வந்தவர்களின்கேள்விகள்அமைந்தன. அவற்றிற்கு ஒவ்வொன்றாக பிப்பலாதர்விளக்கங்களை அளித்தார்‌. அந்த விளக்கங்களின்சாராம்சத்தைப்பார்ப்போம்‌. 

உயிரினங்களை இருஷ்டிக்க விரும்பிய படைப்புக்கடவுள்தவத்தில்ஈடுபட்டார்‌. அதன்பின்னர்ஆகாசத்தையும்‌, ப்ராண சக்தியை யும்உருவாக்கினார்‌. இவை இரண்டும்சேர்ந்து பல்வேறு உயிரினங்களையும்சிருஷ்டி செய்யும்என்று அவர்உணர்ந்திருந்தார்‌. சூரியன் ஆகாசத்தில்உதித்து, தன்னுடைய கதிர்களால்ப்ராணனை வழங்கு கிறான்‌. அந்த ப்ராண சக்தியின்மூலமாகத்தான்உயிரினங்கள்தோன்றின. யாகங்கள்‌, நற்பணிகள்போன்ற நல்ல செயல்களில்ஈடு படுவதே வாழ்க்கை என கொள்ளும்மனிதர்கள்நற்கதியை அடைந்தாலும்‌, மீண்டும்மீண்டும்பிறப்பெய்துகிறார்கள்‌. ஆனால்தவம்‌, ப்ரம்மச்சரியம்‌, முனைப்பு, தியானம்ஆகியவற்றை மேற்கொண்டு, ஆன்மாவைத்தேடுகிற மனிதர்கள்இப்படிப்பட்ட பாதையை அடைவதில்லை. அவர்களுக்கு இறை உலகம்வாய்க்கிறது. ஒழுக்க நெறியுடன்கூடிய வாழ்க்கையை வாழ்பவர்களுக்கே புனித மான அந்த இறை உலகம்இட்டும்‌. சூதும்‌, பொய்யும்‌, வஞ்சனை யும்நிறைந்தவர்களுக்கு அந்த உலகம்கிடையாது

மனிதர்களின்தோற்றம்பற்றி இவ்வாறு விளக்கிய பிப்பலாதர்முன்வைக்கப்பட்ட இரண்டாவது கேள்வி, மனிதர்களைத்தாங்குகிற தேவர்கள்பற்றியது. அதற்கு பிப்பலாதர்அளித்த விளக்கம்‌ : 

ஆகாயம்‌, காற்று, நெருப்பு, தண்ணீர்‌, பூமி, பேச்சு, மனம்‌, பார்வை, கேட்கும்தன்மை ஆகியவற்றிற்கான தலைவர்களே மனிதர்களைத்தாங்கும்தேவர்கள்‌. அவர்கள்தான்மனிதனை இயக்குகிறார்கள்‌. ஒரு சமயத்தில்‌, தாங்கள்தான்மனிதர்களைத்தாங்குகிறோம்என்ற எண்ணம்அவர்களுக்கு ஒரு கர்வமாகத்தோன்றி விட்டது. அப்போது ப்ராணன்அவர்களிடம்‌ ‘என்னையே நான்பலவாகப்பிரித்துக்கொண்டு, உங்கள்மூலமாக இந்த மனிதர்களை இயக்கு இறேன்‌’ என்று கூறியது. இவ்வாறு கூறிவிட்டு, உண்மையை அந்த தேவர்களுக்கு உணர்த்துவதற்காக ப்ராண சக்தி, வெளியேறுவது போல்காட்டியது. அப்போது புலன்கள்அனைத்தும்செயல்‌: இழந்தன. மீண்டும்ப்ராண சக்தி பிரவேசித்ததும்அவை செயல்படத்தொடங்கெ, அப்போது பேச்சு, மனம்‌, கண்‌, காது போன்ற புலன்கள்ப்ராணனை துதித்தன. ஆக, சூரியன்‌, மேகம்‌, இந்திரன்‌, வாயு, காற்று, பூமி, ஜடப்பொருள்கள்‌… என்று அனைத்துமாக ப்ராணனே விளங்குகிறது. அந்தச்சக்திதான்எல்லாவற்றையும்இயக்குகிறது. மூன்று உல கங்களிலும்எவை எல்லாம்இருக்கின்னனவோ, அவையெல்லாம்ப்ராணனின்கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன

ப்ராணன்‌, அதன்இயக்கம்‌ – ஆகியவை பற்றிய கேள்வி, பிப்பலாதரிடம்மூன்றாவதாகக்கேட்கப்பட்டது. அவர்சொன்னார்

ப்ராணன்ஆன்மாவிலிருந்து தோன்றுகிறது. மனிதனும்‌, அவ னுடைய நிழலும்போல, ஆன்மாவில்ப்ராணன்அடங்கி இருக்இறது. எப்படி ஒரு அரசன்பல அதிகாரிகளை நியமித்து, அவரவர்களுக்குரிய ஆளுகையில்சில கிராமங்களை விடுகிறானோ, அதே போல, ப்ராணன்சில சக்திகளிடம்தனித்தனியாக பொறுப்புகளை விடுகிறது. ப்ராணனின்தோற்றம்‌, அதன்இருப்பிடம்‌, அதன்செயல்பாடுஆகியவற்றை உணர்பவன்அழிவற்ற நிலையை அடைகிறான்‌. 

(இங்கே ப்ராணன்என்பதை ஜீவசக்தி என்று அர்த்தம்செய்து கொள்ளலாம்‌. இதுதான்விளக்கம்என்று சொல்ல முடியாவிட்டா லும்‌, ப்ராணன்என்பதைப்புரிந்து கொள்ள அதை ஜீவசக்தியாகக்கருதுவது ஓரளவிற்காவது உதவும்‌. கண்ணின்பார்க்கும்திறன்‌, காதின்கேட்கும்திறன்‌, ஒவ்வொரு அவயவத்தில்செயல்படும்இறன்எல்லாமே அந்த ஜீவ சக்தியினால்வருகிறவைதாம்‌… அந்த சக்தியைத்தருவதோ ஆன்மா. ஆன்மாவிலிருந்து வருகிற அந்த ஜீவசக்தியால்தான்உயிரினங்கள்தோன்றுகின்றன, இயங்குகின்றன. இதை உணர்பவன்மிகவும்உன்னதமான நிலையை அடைகிறான்‌.) 

விழிப்பு, கனவு, உறக்கம்ஆகிய நிலைகள்பற்றிய நான்காவது கேள்விக்கு, பிப்பலாதர்விளக்கம்கூறினார்‌: 

சூரியன்உதிக்கும்போது எல்லா கிரணங்களும்பரவுகின்றன. சூரியன்அஸ்தமனமாகும்போது, அவை அனைத்தும்ஒடுங்குகின்றன. அதே போல, முதன்மைப்புலனாகிய மனம்என்பதில்‌, மற்ற புலன்கள்எல்லாம்ஒடுங்குகின்றன. அந்த நிலையில்மனிதன்கேட்பது, பார்ப்பது, முகர்வது, சுவைப்பது, உணர்வதுஎன்று எதையும்செய்வதில்லை. இந்த நிலையே உறக்கம்என்று கூறப்படுகிறது

மற்ற புலன்கள்அனைத்தும்‌, மனம்என்கிற புலனில்ஒடுங்கிய அந்த நிலையில்‌, மனம்என்கிற தேவன்‌, விழிப்பு நிலையில்கண்டவை, காணதவை, கேட்டவை, கேட்காதவை, அனுபவித்தவை, அனுபவிக்காதவை, நிகழ்ந்தவை, நிகழாதவை என்ற அனைத்தையுமே காண்கிறான்‌, அனுபவிக்கிறான்‌. இது கனவு நிலை

இதை அடுத்தது ஆழ்ந்த உறக்கம்‌. இதில்மனம்அமைதியை அனுபவிக்கிறது. இதில்கலக்கமோ, இன்பமோ, துன்பமோ எது வும்கிடையாது. (நேற்று நான்நன்றாகத்தூங்கினேன்‌’ என்று கூறும்பொழுது, அது எப்படி நமக்குத்தெரியும்என்ற கேள்வி எழுகிறது. தூக்கத்தில்தான்ஒன்றும்தெரியாதே! பிறகு நன்றாகத்தூங்கியது மட்டும்எப்படித்தெரியும்‌? அது எப்படித்தெரிகிறது என்றால்‌ – மனம்என்கிற தலைமைப்புலன்அந்த அமைதியை அனுபவிக்கிறது. அந்த அனுபவத்தைத்தான்மனம்ஒரு மனிதனுடைய புலன்களுக்கு உணர்த்துகிறது. அதனால்தான்‌ ‘நன்றாகத்தூங்கினேன்‌” என்று நாம்சொல்கிறோம்‌.) 

புலன்கள்‌, ப்ராண சக்தி, இயக்கங்கள்‌ – ஆகியவையும்‌, நான்என்ன உணர்வும்‌, நிலை பெறுகிற இடம்ஆன்மா என்று அறிந்து, அந்த ஆன்மாவை உணர்பவன்‌, உண்மையில்அறிந்தவன்ஆகிறான்‌. இவ்வாறு முதல்நான்கு கேள்விகளுக்கு விளக்கம்அளித்த பிப்ப லாத முனிவர்‌, அடுத்து ஐந்தாவது கேள்விக்கு விளக்கம்அளிக்கத்தொடங்கினார்‌. இது ஓம்என்கிற ப்ரணவ மந்த்ரத்தைப்பற்றியது.