வருணனின் உபதேசம்!

இன்பத்தை அளவிட முனைகிற இந்த உபநிஷதம்‌, ஒரு நல்ல மனஉறுதி கொண்ட இளைஞனை ஒரு அளவுகோலாக எடுத்துக்கொள்கிறது. இந்த பூமியே அவனுக்கு உரியதாக இருந்தால்‌, அவன்பெறுகிற இன்பம்எவ்வளவு பெரிதாக இருக்கும்‌! அதுஒருமனித இன்பம்‌’. இந்த மாதிரி நூறு சேர்ந்தால்அதுமனித கந்தர்வ இன்பம்‌. நூறு மனித கந்தர்வ இன்பம்சேர்ந்தால்‌, ஒருதேவ கந்தர்வ இன்பம்‌”. நூறு தேவ கந்தர்வ இன்பங்கள்சேர்ந்தால்ஒருபித்ரு இன்பம்‌”. நூறு பித்ரு இன்பங்கள்‌, ஒருதேவ இன்பத்திற்குசமம்‌. நூறு தேவ இன்பங்கள்‌, ஒருகர்ம தேவ இன்பம்‌. நூறு கர்ம தேவ இன்பங்கள்ஒரு முக்கியமான தேவ இன்பம்‌. நூறு முக்கியமான தேவ இன்பங்கள்சேர்ந்தது, ஒருஇந்திர இன்பம்‌’, நூறு இந்திர இன்பங்கள்ஒருபிரகஸ்பதி இன்பத்இற்கு சமம்‌. நூறு பிரகஸ்பதி இன்பங்கள்‌, ஒருப்ரஜாபதிஇன்பம்‌. நூறு ப்ரஜாபதி இன்பங்கள்ஒருப்ரம்ம இன்பம்‌”. 

அதாவது, இந்த உலகையே தன்னுடையதாகக்கொண்ட ஒரு நல்ல இளைஞன்பெறக்கூடிய இன்பத்தைப்போன்று, பற்பல பலபல மடங்கு உயர்வானது ப்ரம்ம இன்பம்‌. அதை, ஆசை களைத்துறந்த மனிதன்அடைகிறான்என்று கூறுகிறது தைத்திரீய உபநிஷதம்‌. இன்பம்என்பது சில பொருட்களை அனுபவிப்ப தால்ஏற்படுகிற சந்தோஷமல்ல. அது திருப்தியைத்தர முடியாதது. மேலும்வேண்டும்என்ற ஆசையைத்தோற்றுவிப்பது. அதனால்விளைவது அதிருப்தியே. அதுவல்ல இன்பம்‌. ஏனென்றால்அதற்குப்பின்கவலை இல்லை, துன்பம்இல்லை, சோதனை இல்லை, ஆசை இல்லை, ஏமாற்றம்இல்லை. எந்த மனக்குழப்ப மும்இல்லை. அத்தகைய இன்பத்தை ஒருவன்அடைந்தால்அது ப்ரம்ம இன்பம்‌.

இவ்வாறு இன்பத்தைப்பற்றி விளக்கி விட்டு, வருணன்‌, அவனுடைய மகன்ப்ருகு ஆகியோர்சம்பந்தப்பட்டு நடந்த ஒரு நிகழ்ச்சியை வர்ணித்து, அதன்மூலம்இறை தத்துவத்தை விளக்க, தைத்திரீய உபநிஷதம்முற்படுகிறது. வருணனின்மகன்ப்ருகு, தந்தையை அணுகிகடவுள்என்பவர்யார்‌ – என்று எனக்கு நீங்கள்உபதேசிக்க வேண்டும்‌” என்று கேட்டுக்கொண்டான்‌. அதற்கு வருணன்‌, ‘உணவு, ப்ராணன்‌, கண்‌, காது, மனம்‌, பேச்சு ஆகிய எல்லாமே கடவுள்தான்‌” என்று கூறினான்‌.

இவ்வாறு கூறி விட்டு, அவன்மேலும்‌ ‘சகல ஜீவராசிகளும்யாரிடமிருந்து தோன்றுகின்னனவோ, தோன்றியவை அனைத்தும்யாரால்வாழ்கின்றனவோ, வாழ்வின்முடிவில்மரணத்தை எய்தி, அதன்பின்னர்யாரிடம்அவை ஒடுங்குகின்றனவோஅவரே கடவுள்‌. அவரை அறிய நீ முயற்சி செய்ய வேண்டும்‌! என்று கூறினான்‌.

இதைக்கேட்ட ப்ருகு தவம்செய்தான்‌. இந்த்ரியங்களை எல்லாம்அடக்கி, மனதை ஒருமுகப்படுத்தி நிறுத்துவது, தவம்‌. இப்படிப்பட்ட தவத்தில்ஈடுபட்ட ப்ருகு ஒரு உண்மையைக்கண்டான்‌. உணவே கடவுள்என்று அவன்உணர்ந்தான்‌. ‘உண விலிருந்துதான்உயிரினங்கள்எல்லாம்தோன்றுகின்றன. தோன்றி யவை எல்லாம்உணவினாலேயே வாழ்கின்றன. மரணத்திற்குப்பின்அவை உணவிலேயே உறங்குகின்றன! என்று அவன்நீர்மானித்து, வருணனை மீண்டும்அணுகி, தான்உணர்ந்ததைச்சொன்னான்

வருணன்பதில்ஏதும்கூறவில்லை. ப்ருகு உணர்ந்தது, சரி, தவறு என்று எதுவும்சொல்லாமல்‌, ‘தவத்தால்இறைவனை அறி வாயாக!” என்று சொல்லி விட்டான்‌. ப்ருகு மீண்டும்தவத்தில்ஈடுபட்டான்‌.

இப்போது அவன்‌ ‘ப்ராணனே கடவுள்‌! என்று இர்மானித்தான்‌. ஏனென்றால்ப்ராணனிலிருந்து ஜீவராசிகள்தோன்றுகின்றன. அவை ப்ராணனினால்வாழ்கின்றன. இறுதியில்ப்ராணனிலேயே ஒடுங்குகின்றன. இப்படி உணர்ந்த அவன்மீண்டும்வருணனை அணுகியபோது, அவன்‌ ‘தவத்தால்இறைவனை உணர்வாயாகஎன்றே மீண்டும்கூறிவிட்டான்‌.

ப்ருகு மீண்டும்தவம்செய்தான்‌. இம்முறை அவன்‌ ‘மனமே கடவுள்என்று இர்மானித்தான்‌. இதற்கும்வருணன்முன்பு கூறிய மாதிரியே, ‘தவத்தால்இறைவனை அடைய வேண்டும்‌” என்று கூறிவிட்டதால்‌, ப்ருகு மேலும்தவம்செய்தான்‌.

இம்முறைஆனந்தமே கடவுள்‌, அதிலிருந்துதான்உயிரினங்கள்தோன்றுகின்றன; தோன்றியவை அதனால்வாழ்கின்றன. மர ணத்திற்குப்பின்ஆனந்தத்திலேயே ஒடுங்குகின்றன. ஆகையால்ஆனந்தமே இறைவன்‌’ என்று ப்ருகு உணர்ந்து கொண்டான்‌. இது இறுதி நிலை.

ஆனந்தம்என்றால்ஏதோ களியாட்டம்அல்ல. சாந்தி. அமைதி. சலனமில்லாத நிலை. சஞ்சலமற்ற தன்மை. கவலைகளுக்கும்‌, துன்பங்களுக்கும்‌, சோர்வுக்கும்‌, களைப்புக்கும்‌, ஆசாபாசங்களுக்கும்இடம்தராத ஒரு பேரமைதியைக்காண்கின்ற நிலை. அதுவே ஆனந்தம்‌. அதுதான்இறைவன்என்று ப்ருகு உணர்ந்து கொண்ட போது, வருணனிடம்அவன்பெற்ற உபதேசம்முடிவுற்றது.

இதில்ஒரு விஷயத்தைக்கவனிக்க வேண்டும்‌. உணவே கடவுள்‌, ப்ராணனே கடவுள்‌… என்றெல்லாம்ப்ருகு கூறியபோது, வருணன்அதை மறுத்துஅப்படி அல்ல என்று கூறிவிடவில்லை. ‘நீ சொல்வது சரிதான்‌’ என்றும்ஆமோதித்து விடவில்லை. மாறாக தவத்தில்ஈடுபடு! என்று மட்டும்கூறினான்‌. ஏனென்றால்‌, ப்ராணன்தான்கடவுள்‌, மனம்தான்கடவுள்‌, உணவுதான்கடவுள்என்பதெல்லாம்கூட உண்மையே; ஆனால்அதே சமயத்தில்அவை முழு உண்மையல்ல. அதனால்தான்ப்ருகு கூறியது தவறு என்றோ, சரி என்றோ சொல்லாமல்வருணன்அவனை மேலும்தவத்தில்ஈடுபடச்சொன்னான்‌. ப்ருகு மேலும்மேலும்முயன்று இறுதி உண்மையைக்கண்டறிந்தான்‌. முயற்சியைக்கைவிடாமல்‌, மனதை ஒரு நிலையில்நிறுத்தி, மேலும்மேலும்முனைந்தால்‌, இறைவனை உணர முடியும்என்பதையும்இந்த நிகழ்ச்சி உணர்த்துகிறது

இவ்வாறு இறை தத்துவத்தை உணரும்வழியை வருணன்மூலமாக உபதேசிக்க தைத்திரீய உபநிஷதம்‌, ‘இது பார்கவி வித்யை; இதை அறிபவன்ஆன்மாவில்நிலை பெறுகிறான்‌! என்று கூறுகிறது

இந்த உபநிஷதத்தில்உணவின்மேன்மை வெகுவாகப்போற்றப்படுகிறது

அன்னம் நிந்த்யாத்‌  

தத்வ்ரதம்‌ 

உணவை பழிக்கக்கூடாது; அது உன்னுடைய விரதம்‌. 

அன்னம்பஹு குர்வீத் 

தத்வ்ரதம்‌ 

உணவை ஏராளமாக உற்பத்தி செய்யுங்கள்‌. அது உங்கள்‌. விரதம்‌. 

கஞ்சன வஸதெள ப்ரத்யாசகஷ$ 

தத்வ்ரதம்

இவ்வாறெல்லாம்கூறி உணவின்முக்கியத்துவத்தையும்‌, விருந்தோம்பலின்அவசியத்தையும்இந்த உபநிஷதம்வற்புறுத்து இறது

இறுதியாக தைத்திரீய உபநிஷதம்கூறுகிற அறிவுரை இது : “இறைவனை எல்லாவற்றுக்கும்ஆதாரமானவன்என்று போற்ற வேண்டும்‌. அப்படி போற்றுபவன்‌, மனம்நிலைபெற்றவனாகத்இகழ்கிறான்‌. மனிதனில்குடி கொண்டுள்ளவரும்‌, அந்த சூரியனில்இருப்பவரும்அதே இறைவன்தான்‌. இந்த உண்மையை அறிகிறவன்மேன்மையுறுகிறான்‌’. 

இவ்வாறு கூறி, நிறைவு பெறுகிற தைத்திரீய உபநிஷதத்தை அடுத்து, நாம்பார்ப்பது ஐதரேய உபநிஷதம்‌. ஐதரேயர்என்ற ரிஷியின்மூலமாக வந்துள்ளதால்‌, இதற்கு ஐதரேய உபநிஷதம்என்ற பெயர்வந்தது என்று பண்டிதர்கள்கூறுகிறார்கள்‌. ஒரு ஜீவன்தாயின்கர்ப்பத்தில்உறைவது, அவன்பிறந்து, வாழ்ந்து, மரணம்எய்தி மீண்டும்பல பிறவிகள்எடுப்பதுஎன்று சுழல்கிற இந்தச்சக்கரத்தை, குறிப்பிடுகிற ஐதரேய உபநிஷதம்‌, ஆன்மாவை உணர்வதால்மட்டுமே ஒருவன்விடுதலை பெற முடியும்என்று கூறுகிறது

இதனுடைய தொடக்கத்தில்வருகிற சாந்தி மந்த்ரம்‌, ‘எனது பேச்சு என்னுடைய மனதில்நிலை பெறட்டும்‌. என்னுடைய மனம்என்னுடைய பேச்சில்நிலை பெறட்டும்‌” என்று ஆரம்பிக்கிறது. அதாவது மனதில்ஒன்று, சொல்லில்ஒன்று என்பது கூடாது என்பதை வலியுறுத்துகிற அறிவுரையுடன்இந்த சாந்தி மந்த்ரம்தொடங்குகிறது. பல சமயங்களிலும்நாம்மனதில்இருப்பதை வெளியே சொல்வதில்லை. வெளியே சொல்வதை மனதாரச்சொல்வது இடையாது. இந்தத்தன்மை இழிவுடையது. இம்மாதிரி அல்லாமல்மனமும்‌, வாக்கும்ஒன்றுபட்டு நிற்கட்டும்என்ற ப்ரார்த்தனையுடன்தொடங்குகிற சாந்தி மந்த்ரம்‌, மேலும்என்னால்கேட்கப்பட்டவை எல்லாம்என்னை விட்டு விலகா இருக்க வேண்டும்‌. நான்கற்றவற்றை, பகலிலும்இரவிலும்நான்இந்திக்க வேண்டும்‌. நடைமுறை சட்டமாயயரிதம்‌’ என்பதை நான்‌  மீறாமல்இருக்க வேண்டும்‌. சத்தியம்தவறாமல்இருக்க வேண்‌: டும்‌! என்றெல்லாமும்வேண்டிக்கொள்திறது

உண்மையில்நிலைத்து இருப்பதையும்‌, கல்வியை முறையாகக்கற்று அதில்முனைப்பு காட்டுவதையும்‌, அக்காலத்தில்எவ்வளவு முக்கியமாகக்கருதினார்கள்என்பதை விளக்கஇந்த மந்த்ரம்ஒன்றே போதும்‌. 

சகல ஜீவராசிகளின்சிருஷ்டி பற்றி விளக்கி விட்டு, ஒரு பெண்கருவுருவதை ஒரு ஜீவனின்முதல்பிறப்பு என்றும்‌ – அந்தப்பெண்ணிற்குப்பிரசவமாகிறபோது, அந்த ஜீவன்இரண்டாவது பிறப்பை எய்துகிறது என்றும்‌ – இறுதியில்மரணம்அடைந்து, மீண்டும்பிறவி எய்துவது மூன்றாவது பிறப்பு என்றும்‌ – இந்த உபநிஷதம்கூறுகிறது. அதாவது தாயின்கர்ப்பத்தில்புகுவதுமுதல்பிறப்பு: தாய்க்கு பிரசவமாகிறபோது, இந்த உலகல்பிறப்பதுஇரண்டாவது பிறப்பு; மரணமடைந்து மீண்டும்எய்து பிறப்புமூன்றாவது பிறப்பு

இந்த உண்மையை எல்லாம்வாம தேவர்என்ற முனிவர்‌, தாயின்கர்ப்பத்தில்இருக்கும்போதே உணர்ந்தார்என்று இந்த உப நிஷதம்கூறுகிறது. தான்பல பிறவிகள்எடுத்ததையும்‌, அந்தப்பிறவிகளின்தன்மைகளைப்பற்றியும்அவர்அப்போதே உணர்ந்து கொண்டார்‌. இறுதியில்அவர்மரணமில்லா நிலையை அடைந்தார்என்றும்இந்த உபநிஷதம்சொல்கிறது

மேலும்‌, ‘எதனால்நாம்பார்க்கிறோமோ, எதனால்நாம்கேட்கிறோமோ, எதனால்நாம்வாசனைகளை முகர்கிறோமோ, எதனால்நாம்பேசுிறோமோ, எதனால்ர௬ுசிகளை அறிகிறோமோஅது ஆன்மா. புத்தி, மனம்‌, உணர்வு, அறிவுக்கூர்மை, உள்ளுணர்வு, மனோதிடம்‌, சிந்தனைத்இறன்‌, மனத்தெளிவு, நினைவு, இர்மானம்‌… என்று கூறப்படுபவை எல்லாம்ஆன்மாவின்பல பெயர்களேயாம்‌. ஆன்மாவே படைப்புக்கடவுள்‌. ஆன்மாவே இந்திரன்‌. பூமி, காற்று, வானவெளி, தண்ணீர்‌, நெருப்புஎன்று பஞ்சபூதங்களாக இருப்பதும்ஆன்மாவே. அனைத்து ஜீவராசிகளிலும்இருப்பது ஆன்மாவே. ஆன்மாவே அனைத்திற்கும்ஆதாரம்‌. ஆன்மாவே இறைவன்‌! என்றும்ஐதரேய உபநிஷதம்கூறுகிறது

இவ்வாறெல்லாம்ஆன்மாவை வர்ணித்து விட்டு, ஆன்மாவை உணர்பவன்இறுதியில்மரணமில்லா நிலையை எய்துகிறான்‌ – என்று கூறி முடிகிறது, சிறிய உபநிஷதமாக அமைந்துள்ள ஐதரேய உபநிஷதம்‌. 

அடுத்து சாந்தோக்ய உபநிஷதம்‌, ப்ருஹதாரண்யக உபநிஷதம்ஆகியவற்றை நாம்பார்க்க இருக்கிறோம்‌. அத்துடன்உபநிஷதங்கள்பற்றிய நமது பார்வை நிறைவு பெறும்‌. முதலில்சாந்தோக்ய உபநிஷதத்தைப்பார்ப்போம்‌.