அரசன் செய்த உபதேசம்!

அருணர்என்ற ரிஷியின்பேரன்ச்வேதகேது. ச்வேதகேது பாஞ்சால நாட்டின்அரச சபைக்குச்சென்றான்‌. அரசன்இவனைப்பார்த்து மகிழ்ந்து, ‘உன்தகப்பனார்உனக்கு உபதேசங்களைச்செய்திருக்கிறாரா?’ என்று கேட்டான்‌. 

ஆம்‌. செய்திருக்கிறார்‌! என்று ச்வேதகேது சொன்னான்‌. 

மனிதர்கள்இறந்த பிறகு இங்கிருந்து புறப்பட்டு எங்கு செல்கிறார்கள்என்பது பற்றி உனக்குத்தெரியுமா?” என்று அரசன்கேட்டான்‌. 

தெரியாது‘ 

அவர்கள்எப்படி மீண்டும்திரும்பி வருகிறார்கள்என்பது தெரியுமா

தெரியாது‘ 

தேவயானம்‌, பித்ருயானம்என்ற மார்க்கங்களின்பிரிவு பற்றி தெரியுமா?! 

தெரியாது‘ 

இப்படி தன்கேள்விகளுக்கெல்லாம்தெரியாது என்ற பதிலையே கூறிய அந்த சிறுவனைப்பார்த்து அரசன்‌, ‘இவற்றை எல்லாம்அறியாமல்‌, உன்தந்தையினால்உபதேசிக்கப்பெற்றவன்‌ என்று நீ எவ்வாறு சொன்னாய்‌? இந்த விஷயங்களை அறியாதவன்‌, தன்னை உபதேசிக்கப்‌ பெற்றவனாக எப்படிக்‌ கருதிக்‌ கொள்ள முடியும்‌?” என்று கேட்டான்‌. 

ச்வேதகேது மன வருத்தத்துடன்‌ அரசனிடமிருந்து விடை பெற்று, தந்தையிடம்‌ வந்து சேர்ந்தான்‌.

அவனுடைய தந்தை கெளதமர்‌. இவர்தான்‌ சத்யகாம 4 ஜாபாலிக்கு உபதேசம்‌ செய்தவர்‌ என்று எண்ணிவிட வேண்டாம்‌. அவர்‌ வேறு, இவர்‌ வேறாகக்‌ கூட இருக்கலாம்‌. ஏனென்றால்‌, ஒரே பெயரைக்‌ கொண்ட அரசர்களும்‌ உண்டு, ரிஷிகளும்‌ உண்டு. அரச சபையில்‌ நடந்த நிகழ்ச்சியை ச்வேதகேது வர்ணித்தான்‌. கெளதமர்‌ அவற்றைக்‌ கேட்டுக்‌ கொண்டு, தனக்கும்‌ அந்தக்‌ கேள்வி களுக்குச்‌ சரியாக விடை தெரியாது என்பதை ஒப்புக்‌ கொண்டார்‌. ஆகையால்‌ அக்கேள்விகளுக்கு விடையை அரசனிடமே கேட்டுக்‌ கொள்வது என்று தீர்மானித்து, அவர்‌ அரச சபைக்குச்‌ சென்றார்‌. 

அரசன்‌ அவரை வரவேற்று, ‘வேண்டிய பொருள்களை எல்‌லாம்‌ வரமாகக்‌ கேளுங்கள்‌. தருகிறேன்‌’ என்று சொல்லி உபசரித்தான்‌. 

கெளதமர்‌ அவற்றை மறுத்து, ‘நீங்கள்‌ தரக்‌ கூடிய அந்தப்‌ பொருள்கள்‌ எல்லாம்‌ உங்கள்‌ வசமே இருக்கட்டும்‌. என்‌ மகனிடம்‌ நீங்கள்‌ பேசியது பற்றி தெரிந்து கொண்டேன்‌. எனக்கு நீங்கள்‌ அந்த உண்மைகளை எல்லாம்‌ விளக்கிச்‌ சொல்ல வேண்டும்‌. உபதேசத்தை நாடி வந்திருக்கிறேன்‌ என்று கூறினார்‌.

அரசன்‌ அவரை சில காலம்‌ தங்க வைத்துவிட்டு, பின்னர்‌ அவரிடம்‌ இம்மாதிரி கூறினான்‌ : ‘எவர்கள்‌ காடுகளில்‌ வாழ்வதை விரும்பி, அங்கு சென்று தவம்‌ செய்து ஞானத்தைப்‌ பெற்றவர்கள்‌ ஆகிறார்களோ – அவர்கள்‌ ஒளி நிறைந்த மார்க்கத்தை எய்து இறார்கள்‌; அதற்குப்‌ பெயர்‌ தேவயானம்‌. எவர்கள்‌ மக்களிடையிலேயே வாழ்ந்து கொண்டு, விருப்பங்களையும்‌ அடைந்து, அதே சமயத்தில்‌ பொது நலன்களையும்‌ கவனித்து, தானங்‌களையும்‌ செய்து வருகிறார்களோ – அவர்கள்‌ வேறு மார்க்கத்தை அடைகிறார்கள்‌; இது பித்ருயானம்‌. இவர்களில்‌ நல்ல வழி தவ றாமல்‌ நடந்தவர்கள்‌ எவர்களோ – அவர்கள்‌ மீண்டும்‌ நற்பிறப்பு எய்தி, பூமியை அடைகிறார்கள்‌. எவர்கள்‌ தவறான வழிகளில்‌ நடந்து கொண்டார்களோ – அவர்கள்‌ மிக விரைவிலேயே ஒரு மிருகமாகவோ, இகழத்தக்க மனிதனாகவோ பிறப்பெய்தி பூமியை அடைகிறார்கள்‌! – இவ்வாறு தொடங்கி அரசன்‌, அந்த ரிஷிக்கு உபதேசம்‌ செய்தான்‌. 

வேதங்களை முறையாகப்‌ படித்து, விரதங்களை அனுஷ்டித்து, விருப்பங்களைத்‌ துறந்து ஒரு நெறி மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்து, அரசர்களுக்கே கூட உபதேசம்‌ செய்யும்‌ அருகதையை பிராமணர்கள்‌ பெற்றிருந்தார்கள்‌. ஆனால்‌ இங்கோ க்ஷத்ரியன்‌, அதாவது பிராமணனிடம்‌ உபதேசம்‌ பெறுகிறவன்‌ – நியமம்‌ தவறாத பிராமணருக்கே உபதேசம்‌ செய்கிறான்‌. ஏன்‌? அதற்கான தகுதி அவனுக்கு இருந்தது. ஜனகருக்கும்‌ அந்தத்‌ தகுதி இருந்தது. அவரிடமும்‌ பிராமணன்‌ உபதேசம்‌ பெற்ற வரலாறு உண்டு. 

இதைப்‌ போலவே மற்றொரு நிகழ்ச்சியையும்‌ சாந்தோக்ய உபநிஷதம்‌ வர்ணிக்கிறது. வேத நெறிப்படி வாழ்ந்தவர்களும்‌, கர்மங்களை முறையாகக்‌ கடைப்பிடித்து வந்தவர்களும்‌, இல்லற தர்மத்தில்‌ ஈடுபட்டவர்களுமாகய ஐந்து பேர்‌ ஒரு சமயம்‌ ‘ஆன்மா யார்‌? ப்ரம்மம்‌ எது?” என்றெல்லாம்‌ ஆராயத்‌ தொடங்கினர்‌. ஒரு முடிவுக்கு வர முடியாமல்‌ அவர்கள்‌, ‘உத்தாலக ஆருணி, ஆன்மாவை உணர்ந்தவர்‌. அவரிடம்‌ சென்று நாம்‌ விளக்கம்‌ கேட்‌ போம்‌ என்று தீர்மானித்துக்‌ கொண்டார்கள்‌. 

இவர்கள்‌ ஐவரும்‌ தன்னை நாடி வருவதைக்‌ கண்ட உத்தாலக ஆருணி, ‘இவர்கள்‌ இல்லற தர்மத்தை முறையாகக்‌ கடைப்பிடிப்‌ பவர்கள்‌. வேதம்‌ அறிந்தவர்கள்‌, அவர்கள்‌ என்னைக்‌ கேட்கப்‌ போகிற கேள்விக்கு முழுமையான விடைகளை அளிக்க என்னால்‌ இயலாது. ஆகையால்‌, அவர்களை வேறு ஒருவரிடம்தான்‌ அழைத்துச்‌ செல்ல வேண்டும்‌! என்று இர்மானித்துக்‌ கொண்டார்‌. 

அவர்கள்‌ தன்னை நெருங்கி வந்தவுடன்‌, அவர்களைப்‌ பார்த்து உத்தாலக ஆரணி, ‘நீங்கள்‌ கேட்கப்‌ போகிற கேள்விக்கு, முழுமை யான விடையை அறிந்தவர்‌ கேகயனின்‌ மகனாகிய அச்வபதி என்ற அரசன்‌. நாம்‌ அவரை அணுகுவோம்‌! என்று கூறி, அந்த ஐவரையும்‌ அழைத்துக்‌ கொண்டு அச்வபதியை அணுகினார்‌.

அரசன்‌ அவர்களுக்கு மரியாதையைச்‌ செய்து, அன்றிரவு உறங்கி விட்டு மறுநாள்‌ பேசலாம்‌ என்று கூறினான்‌. அடுத்த இனம்‌, வேண்‌ டிய பொருள்களைத்‌ தன்னிடமிருந்து பெற்றுக்‌ கொள்ளுமாறு அவர்‌ களைக்‌ கேட்டுக்‌ கொண்டான்‌. அவர்கள்‌ தயங்கினார்கள்‌. அப்‌ போது அரசன்‌ அச்வபதி, ‘இந்நாட்டில்‌ திருடன்‌ இல்லை; கருமி இல்லை; குடிகாரன்‌ இல்லை; அக்னியை பூஜிக்காதவன்‌ இல்லை; கல்வி கற்காதவன்‌ இல்லை; விபசாரம்‌ செய்பவன்‌ இல்லை என்‌ பதால்‌, விபசாரியும்‌ இல்லை. ஆகையால்‌ என்னிடம்‌ பொருள்‌ பெற்றுக்‌ கொள்ளுங்கள்‌! என்று கூறினான்‌.

ஒரு விஷயத்தைக்‌ கவனிக்க வேண்டும்‌. நல்லவர்கள்‌, கற்ற நிந்தவர்கள்‌, எல்லோரிடமும்‌ தானம்‌ பெற்றுக்‌ கொண்டு விட மாட்டார்கள்‌. உரியவரிடம்தான்‌ தானம்‌ பெறுவார்கள்‌. அந்த மாதிரி தகுதியைத்‌ தருகிற ஆட்சியை நடத்துகிறவன்‌ அச்வபதி. அதைக்‌ கூறி, தன்னிடமிருந்து பொருள்‌ பெறுமாறு அவர்களை அவன்‌ கேட்டுக்‌ கொள்கிறான்‌.

அரசன்‌ இவ்வாறு கூறியும்‌, வந்தவர்கள்‌ பொருள்‌ வேண்‌ டாம்‌ என்று கூறி, ‘நாங்கள்‌ வந்த காரியத்தைச்‌ சொல்கிறோம்‌. நீங்கள்‌ ஆன்மாவை உணர்ந்தவர்‌. அதைப்‌ பற்றி எங்களுக்கு உப தேசிக்க வேண்டும்‌! என்று கேட்டுக்‌ கொண்டார்கள்‌. அடுத்த இனம்‌ அரசன்‌ அவர்களை அழைத்தான்‌. ஒவ்வொருவரிடமும்‌, அவர்கள்‌ எதை ஆன்மாவாகக்‌ கருதுகிறார்கள்‌ என்று விசாரித்‌ தான்‌. தேவலோகம்‌, சூரியன்‌, ப்ராணன்‌, ஆகாயம்‌, பூமி – என்று அவர்கள்‌ ஒவ்வொருவரும்‌ ஒவ்வொன்றைச்‌ சொன்னார்கள்‌. அரசன்‌, ‘நீங்கள்‌ ஆன்மாவின்‌ வெவ்வேறு அம்சங்களைப்‌ பார்க்கிறீர்கள்‌; அதற்குரிய நற்பலனையும்‌ அடைகிறீர்கள்‌. ஆனால்‌ இது முழுமை யான உணர்வு அல்ல. எங்கும்‌ வியாபித்திருக்கும்‌ ஆன்மாவை, தன்னிலேயே எவன்‌ காண்கிறானோ, அவனே உணர்ந்தவனாகிறான்‌’ என்று தொடங்கி, அவர்களுக்கு உபதேசம்‌ செய்தான்‌.

இந்த மாதிரி நிகழ்ச்சிகள்‌ நமக்கு எடுத்துக்காட்டுகிற உண்மை என்ன? மேன்மை, பிறப்பினால்‌ வந்து விடுவது கிடையாது; ஒருவனுடைய குணத்தினாலும்‌, அவனுடைய ஞானத்தினாலும்‌, அவனுடைய செயல்பாடுகளினாலும்‌ வருவதுதான்‌ மேன்மையே தவிர, பிறப்பினால்‌ வய்‌ருவது அல்ல – என்பதை வலியுறுத்துகிற  நிகழ்ச்சிகள் இவை. இம்மாதிரி நிகழ்ச்சிகள் உபனிஷதங்களிலும், புராணங்களிலும் நிறையவே இருக்கின்றன. அப்படி இருக்க, அன்றே பிறப்பினால் பேதம் கற்பிக்கப்பட்டு விட்டது என்று வாதிடுவது நியாய வாதமாகாது.

இங்கும் ஒரு க்ஷத்ரியனிடமிருந்து, வேத நெறி தவறாத பிராமணர்கள் உபதேசம் பெற்றுச் செல்கிறார்கள். அடுத்து வேறு ஒரு நிகழ்சி.  இது, ‘நாம் எல்லாவற்றையும் கற்று விட்டோம்’ என்று அகம்பாவம் கொள்வது எவ்வளவு தவறானது என்பதைக் காட்டுகிற நிகழ்சி. அருணர் என்பவரின் பேரன் ச்வேதகேது‌, அவன் தனது தந்தையின் சொல்படி பன்னிரண்டாவது வயதில் குருகுல வாழ்க்கையை மேற்கொண்டு தனது ஆசாரியர்களிடம் கல்வி பயின்று, 24வது வயதில் கல்வி முடியப் பெற்று, தந்தையை வந்து அடைகிறான்.

வேதங்களை எல்லாம் கற்று, கல்வியில் தனக்கு நிகர் எவரும் இல்லை என்ற நிலையை அடைந்து விட்டதாக அவன் கர்வமுற்றிருக்கிறான் என்பதை அவனுடைய தந்தை உணர்ந்து கொண்டார். ‘கல்வியில் உனக்கு நிகர் இல்லை என்ற எண்ணம் உனக்கு வந்திருப்பதாகத் தோன்றுகிறது. எது ஒன்றினால் – கேள்விக்கு எட்டாதது  கேட்டு அறியப்பட்டதாகவும், நினைவுக்கு எட்டாதது நினைக்கப்பட்டதாகவும், அறிவுக்கு எட்டாதது ஆறியப்பட்டதாகவும் ஆகுமோ, அது பற்றிய உபதேசத்தை உன் குருவிடம் இருந்து கேட்டுப் பெற்றாயா?’ என்று தன் மகனைப் பார்த்து அவர் கேட்டார்.

ச்வேதகேது, ‘அப்படி ஒரு உபதேசம் இருக்க முடியுமா என்ன?’ என்று கேட்டான்.

தந்தை சொன்னார் : ‘ஒரு மண் கட்டியை அறிந்தால் – மண்ணால் செய்யப்பட்ட அனைத்தையுமே அறிந்ததாகும். மண்ணால் செய்யப்பட்ட பொருள்களில் இருக்கும் வேறுபாடெல்லாம், பெயரளவிலான மாற்றங்களே. அவை எல்லாவற்றிலும் உண்மையான பொருள் மண் என்பதுதான். அது போலவே இந்த விஷயத்தையும் ஆலோசிக்க வேண்டும்.

அப்போது ச்வேதகேது, தன்னுடைய கல்வி எல்லையற்றது என்ற கர்வத்தை விடுத்து, தந்தையிடம்‌ ‘எனக்கு மேலும்‌ நீங்கள்‌ விளக்கங்கள்‌ அளிக்க வேண்டும்‌! என்று பணிவுடன்‌ கேட்டுக்‌ கொண்டான்‌. 

அவர்‌ விவரமாக உபதேசம்‌ செய்தார்‌. அப்படி உபதேசம்‌ செய்‌ கையில்‌ சில உதாரணங்களையும்‌ கூறினார்‌ : ‘கயிற்றால்‌ கட்டப்‌ பட்ட ஒரு பறவை, நான்கு இசைகளிலும்‌ பறந்தாலும்‌, மீண்டும்‌ கட்டப்பட்ட இடத்திலேயே நிலை பெறுகிறது. அவ்விதமே மன மும்‌ நாலா பக்கம்‌ பறந்தாலும்‌, வேறு எங்கும்‌ உறைவிடம்‌ காண முடியாமல்‌, ப்ராணனிடமே வந்து நிலை பெறுகிறது. மனதிற்கு உறைவிடம்‌ ப்ராணன்தான்‌ என்பதை மனிதன்‌ உணர வேண்டும்‌. 

‘எது அணு அளவிலான சூட்சுமமான விஷயமோ, அதையே ஆன்மாவாகக்‌ கொண்டதுதான்‌ சகல ஜீவராசிகளும்‌, அது ஒன்று தான்‌ சத்தியம்‌. அதுதான்‌ ஆன்மா. அதுவே நீயாக உள்ளாய்‌”. 

இங்கு வருகிற ‘அதுவே நீயாக உள்ளாய்‌ என்பது மஹா வாக்கியங்களுள்‌ ஒன்றாகக்‌ கருதப்படுகிறது. 

தத்‌ த்வம்‌ அஸி 

அதுவே நீயாக இருக்கின்றாய்‌. 

தந்தையின்‌ உபதேசம்‌ தொடர்ந்தது.