நாரதர் உபதேசம் பெற்றார்!

தன்மகன்ச்வேதகேதுவிற்கு விளக்கங்களை அளித்துக்கொண்டிருந்த உத்தாலகர்மேலும்சொன்னார்‌ : ‘பல திசைகளி லிருந்து வரும்நதிகள்சமுத்திரத்தில்கலந்த பிறகு, அவையும்சமுத்திரமாகவே ஆகி விடுகின்றன. அந்த நிலையில்அந்த நதி களுக்குஇன்ன நதி என்றுஅடையாளம்கிடையாது; எந்த தனித்தன்மையையும்உணராமல்அவை கடலோடு ஐஜக்கதியமாகின்றன. ஜீவராசிகளும்இவ்வாறே தங்களுடைய தோற்றத்தை உணர்வ இல்லை. அந்த அணு மாத்திரமாகவுள்ள சூட்சுமமான வஸ்து வாகிய ஆன்மாவாக நீ இருக்கிறாய்‌. 

அவர்மேலும்தனது விளக்கங்களைத்தொடர்ந்து கூறுகை யில்‌, ஒரு ஆலம்பழத்தைக்கொண்டு வருமாறு அவனிடம்கூறினார்‌. அவனும்கொண்டு வந்தான்‌. அதைப்பிளந்து பார்க்கச்சொன்னார்‌. அவனும்அவ்வாறே செய்தான்‌. ‘அதில்என்ன பார்க்கிறாய்‌?” என்று தந்தை கேட்டார்‌.

 ‘அணு போன்ற விதைகளைப்பார்க்கிறேன்‌! என்று அவன்கூறினான்‌. 

அவற்றுள்ஒன்றை எடுத்துப்பிளந்து பார்‌. 

விதையைப்பிளந்து பார்த்து விட்டு, ச்வேதகேதுஇதில்நான்ஒன்றும்காணவில்லை! என்று கூறினான்‌. 

தந்தை சொன்னார்‌ : ‘ஜீவசக்தியான அந்த சூட்சும பொருளை உன்னால்பார்க்க முடியவில்லை. அப்படிப்பட்ட சூட்சுமமான பொருளிலிருந்து அந்தப்பெரிய ஆலமரம்உருவாகி நிற்கிறது. அந்த ஆலமரத்திற்குக்காரணமான, அறிவதற்குக்கடினமான, சூட்சுமமான பொருள்அந்த விதையினுள்இருக்கிறது. அந்த சூட்சுமமான பொருளே ஆன்மா. அதுவே நீயாக இருக்கிறாய்‌”.

இதையடுத்து ச்வேதகேதுவின்தந்தை அவனிடம்கொஞ்சம்உப்பைத்தண்ணீரில்போட்டு நன்றாகக்கலக்கி, ஒருபுறமாக வைத்து விட்டு, அடுத்த நாள்காலையில்தன்னைப்பார்க்குமாறு கூறினார்‌. ச்வேதகேதுவும்ஒரு பாத்திரத்தில்தண்ணீரில்உப்பைப்போட்டு நன்றாகக்கலக்கி, ஒருபுறமாக வைத்து விட்டு உறங்கி னான்‌. அடுத்த நாள்காலையில்‌, தந்தை கூறியவாறே அவரை அணுகினான்‌. அப்பொழுது அவர்‌ ‘நீ நீரில்போட்டாயே, அந்த உப்பைச்கொண்டு வா என்று சொன்னார்‌. அவன்திகைத்தான்‌. இருந்தாலும்‌, அந்த நீரை நன்றாகப்பார்த்தான்‌. உப்பு கரைந்து விட்டிருந்தது.

திகைத்த அவனைப்பார்த்து, அவனுடைய தந்தை உத்தாலகர்‌, அந்தப்பாத்திரத்தில்இருக்கும்நீரில்‌, மேலாக எடுத்துக்கொஞ்சம்சாப்பிட்டுப்பார்‌; எப்படி இருக்கிறது என்று சொல்என்று சொன்னார்‌.

அவனும்அவ்வாறே செய்து விட்டுஉப்பாக இருக்கிறது! என்று கூறினான்‌.

நடுவில்இருந்து கொஞ்சம்நீரை எடுத்துச்சாப்பிட்டுப்பார்‌. எப்படி இருக்கிறது என்று சொல்‌.

உப்பாக இருக்கிறது.

இப்படி அவன்கூறிய பிறகு அவனுடைய தந்தை, ‘அந்த நீரைக்கொட்டி விட்டு இங்கே வா: என்றார்‌. அவனும்அவ்வாறே செய்தான்‌. அவனுடைய தந்தைஅந்த நீரில்உப்பை நீ காணவில்லை; ஆனால்அது அங்கே இருக்கத்தான்செய்கிறது. அதனால்தான்அந்த நீர்உப்பாக உனக்குக்கரிக்கிறது. அதாவதுக்அந்த உப்பு இப்போது உன்கண்களுக்குத்தெரியா விட்டாலும்‌, அது அந்த நீர்முழுவதும்வியாபித்திருக்கிறது. அதேபோலத்தான்இந்த உலகில்பரம்பொருள்எங்கும்நிறைந்திருக்கிறது. அதை நாம்பார்க்கா விட்டாலும்‌, அது இருக்கத்தான்செய்கிறது. அந்த சூட்சுமமான பொருள்எதுவோ, அதுவே நீயாக உள்ளாய்‌ (தத்த்வம்அஸி). 

உத்தாலகர்‌, தன்மகனுக்கு மேலும்ஒரு உதாரணத்தைச்சொன்னார்‌. தன்னுடைய சொந்த ஊராகிய கந்தார தேசத்திலிருந்து ஒரு மனிதனை, யாரோ கண்ணைக்கட்டிக்கொண்டு போய்ஜனநடமாட்டமே இல்லாத ஒரு இடத்தில்விட்டு விடுகிறான்‌. கண்கட்டப்பட்ட மனிதன்‌, இழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நாற்திசைகளிலும்இரும்பித்இரும்பி நின்றுநன்றாகக்கண்ணைக்கட்டி விட்டானே; எந்தத்இசையில்போவது என்று தெரியவில்லையே; வந்த வழி எது என்று புரியவில்லையே: என்று கதறுகிறான்‌. 

அப்போது வேறு யாரோ ஒருவன்வர, அவன்இவனுடைய கண்கட்டை மெதுவாக அவிழ்த்து விட்டுகந்தார தேசம்இந்தத்இசையில்இருக்கிறது; அந்த வழியில்செல்வாயாக! என்று சொல்கிறான்‌. 

அவன்அந்தத்இசையில்நடந்து, வழியில்ஒவ்வொரு இராமம்கிராமமாகச்செல்ல வேண்டிய இசையைக்கேட்டு அறிந்து கொண்டு, தன்னுடைய சொந்த ஊராகிய கந்தார தேசத்தைச்சென்று அடைகிறான்‌.

 ‘அவ்வாறே நல்ல ஆச்சார்யரை அடைந்த மனிதன்‌, அவ னுக்கு புத்தி தெளிவு உண்டாகி, பிறகு விடுதலை அடைகிறான்‌. அதன்பின்னர்அவன்பரம்பொருளுடன்ஒன்றாகி விடுகிறான்‌. அணு மாத்திரமான அந்த சூட்சுமமான வஸ்து எதுவோ அதுவே நீயாக உள்ளாய்‌ (தத்த்வம்அஸி). 

இந்த உதாரணம்எதை விளக்குகிறது? மனிதன்‌. தன்னுடைய கர்ம வினை என்கிற இருடர்களால்கவரப்பட்டு, சம்சாரம்என்ற காட்டில்விடப்படுகிறான்‌. அவன்கண்ணைக்கட்டுகிற விஷயமோ, மோகம்‌, ஆசை, பாசம்‌. இது என்னுடைய வெற்றி என்கிற மகிழ்ச்சி, இது என்னுடைய தோல்வி என்கற சோகம்‌, இது என்னுடைய பிள்ளை என்கிற பாசம்‌, இவள்என்னுடைய மனைவி என்கிற ஆசை, இவர்கள்என்உறவினர்கள்என்ற பரிவு, இது என்செல்வம்என்கிற பெருமிதம்‌… என்று பல வகையான உணர்ச்சிகள்எல்லாம்பலவிதங்களில்அவனை அலைக்கழிக்க, தான்இறந்து விட்டால்என்ன நேர்ந்து விடுமோ என்ற கவலை அவன்மனதை அரிக்க, அவன்தனது உள்ளத்இல்கதறுகிறான்‌. அந்த நிலையில்ஒரு நல்ல குரு அவனுக்குக்இட்டினால்‌, அவர்அவனுக்குக்செய்கிற உபதேசத்தால்‌, அவ னுடைய கண்கட்டாகிய மோகம்என்பது அவிழ்ந்து விழுகிறது. அப்போது அவன்தெளிவு பெறுகிறான்‌. தான்செல்ல வேண்டிய வழி என்ன என்பதை உணர்கிறான்‌. மேன்மையுறுகிறான்‌. அதனால்தன்சொந்த இடமாகய ப்ரம்மத்துடன்ஐக்கியமாகிறான்‌.

இந்த உபதேசத்திற்குப்பிறகு சாந்தோக்ய உபநிஷத்தில்வருவது நாரதர்பற்றிய ஒரு நிகழ்ச்சி. ஸநத்குமாரரை நாரதர்அணுகி, தனக்கு உபதேசம்செய்யுமாறு வேண்டிக்கொண்டார்‌. ஸநத்குமாரர்தான்ஸ்கந்தன்‌ (முருகன்‌) என்று சான்றுகள்உண்டு. ஸ்கந்தன்ஞானத்தின்உறைவிடம்‌. ஆகையால்ஸநத்குமாரர்ஞானவான்‌. (இது தவிர, வேறு சில புராணங்களில்ஸநத்குமாரர்அஹிம்சை, நற்குணம்ஆகியவற்றின்அம்சம்என்று கூறப்பட்டுள்ளது. அவர்சாஸ்வதமாக குழந்தை பருவத்தை உடையவர்என்றும்ஒரு புராணம்உண்டு. இப்படி அவரைப்பற்றி பல வர்ணனைகள்இருந்தாலும்‌, அவர்சர்வ வல்லமை படைத்த இறைவனாகய நாராயணனிடமிருந்தே ஞானத்தைப்பெற்றவர்என்பதை, பொது வாக எல்லா சான்றுகளுமே வலியுறுத்துகின்றன. அப்படிப்பட்ட ஞானவானை அணுகி, நாரதர்உபதேசம்வேண்டி நின்றார்‌.)

ஸநத்குமாரர்‌ ‘நீங்கள்ஏற்கெனவே என்ன அறிவீர்களோ அதைத்தெரிவியுங்கள்‌. அதற்கு மேல்சொல்ல வேண்டியதை நான்சொல்கிறேன்‌! என்று கூறினார்‌. 

நாரதர்தன்னடக்கத்தை மீறாமலே, விவரத்தைத்தெரிவிக்கும்வகையில்பதிலளித்தார்‌. ‘எனக்கு ரிக்வேதம்தெரியும்‌. யஜூர்வேதம்‌, ஸாம வேதம்‌, அதர்வண வேதம்ஆகியவற்றையும் அறிவேன்‌. இதிகாச புராணங்களையும்அறிவேன்‌. இலக்கணம்‌, கணித சாஸ்திரம்‌, சகுன சாஸ்திரம்‌, கால நிர்ணயம்‌, தர்க்கவாத சாஸ்திரம்‌, நீதி சாஸ்திரம்‌, சிகைஷ எனும்நூல்‌, போர்முறை, வான சாஸ்திரம்‌, சர்ப்ப வித்தை, கந்தர்வ வித்தை இவற்றை எல்லாம்கற்றுள்ளேன்‌’.

நாரதர்மேலும்தொடர்ந்தார்‌ : ‘இவ்வளவு கற்றும்கூட நான்மந்திரங்களை மட்டும்அறிந்தவனாக இருக்கிறேனே தவிர, ஆன்மாவை அறிந்தவனாக மாறவில்லை. ஆன்மாவை அறிந்தவனே சோகத்தைக்கடந்து நிற்பான்என்று உங்களைப்போன்ற மகான்கள்சொல்லக்கேட்டிருக்கிறேன்‌. நான்சோகத்திற்கு உட்பட்ட வனாக இருக்கிறேன்‌. சோகத்தை தாண்டும்படி என்னைச்செய்விக்க வேண்டும்‌.

இவ்வாறு கேட்டுக்கொண்ட நாரதரைப்பார்த்து ஸநத்குமாரர்‌, ‘நீங்கள்எதையெல்லாம்கற்றுள்ளீர்களோ, அவையெல்லாம்வெறும்பெயர்கள்தான்‌! என்று சொன்னார்‌.

நாரதரும்அசாதாரணமானவரே; அவர்அறியாத சாஸ்திரம்இல்லை; அவர்ஸநத்குமாரர்முன்வைத்த பட்டியல்மட்டுமல்லாமல்‌, கற்க வேண்டியது அனைத்தையுமே கற்றுணர்ந்தவர்நாரதர்‌. அப்பேற்பட்ட சகல சாஸ்திர விற்பன்னர்‌, முழுமையாக ஞானம்அடையவில்லை என்ற உணர்வோடு தனக்கு உபதேசம்செய்து அருளுமாறு ஒரு மகானை அணுகுகிறார்‌. எவ்வளவுதான்கல்வி அறிவு பெற்றிருந்தாலும்‌, தகுந்த குருவின்உபதேசம்இல்லாமல்ஆன்ம ஞானம்பெற முடியாது என்பதை, இந்த நிகழ்ச்நமக்குக்காட்டுகிறது.

நேரடியாக இறைவன்அருள வேண்டும்‌; அல்லது தகுதியான குரு நமக்கு உபதேசம்செய்து, எது வழி என்பதை காட்ட வேண்டும்‌. இந்த இரண்டு வழிகள்அல்லாமல்‌, வேறு வழியில்ஆன்ம ஞானத்தைப்பெற்று விட முடியாது. இறைவனே நமக்கு அருளினால்நமக்குச்சிரத்தை உண்டாகும்‌; முனைப்பு உண்டாகும்‌; தவம்செய்வது போன்ற நிலையை அடைவோம்‌; ஞானத்தைத்தேடி அலைவோம்‌. அற்ப சுகங்களே வாழ்க்கை என்ற எண்ணத்திலிருந்து விடுபடுவோம்‌. இதற்கு நேரிடையாக இறை அருள்வேண்டும்‌. அல்லது ஒரு நல்ல குருவின்உபதேசம்கிடைத்து, அதன்மூலம்நாம்ஊக்கம்பெற்று, பயன்அடைய வேண்டும்‌. 

நாரதர்கற்றறிந்த சாஸ்திரங்களோ மிக முக்கியமானவை: ஆனால்அவற்றை எல்லாமே கூட வெறும்பெயர்கள்என்று ஸநத்குமாரர்சொல்லி விட்டார்‌. ஆனால்இன்று நாமோ ஒரு சில புத்தகங்களைப்படித்து, ஒரு சில விஷயங்களைத்தெரிந்து கொண்டு, ஒரு சில பட்டங்களைப்பெற்று, ‘இனி நாம்அறிந்து கொள்ள வேண்டியது எதுவும்இல்லைஎன்று நினைக்கத்தொடங்கி விடுகிறோம்‌. விஞ்ஞானம்‌, கணிதம்‌, சரித்திரம்‌, சட்டம்‌, மருத்துவம்‌… போன்ற இவை எல்லாம்வெறும்பெயர்களே அன்றி, உண்மையான ஞானமல்ல என்ற உணர்வு நமக்கு வர ஆரம்பித்தால்‌ – வேறு எது இல்லை என்றாலும்‌ – தன்னடக்க மாவது நம்மை வந்து சேரும்‌. 

எறும்பும்தன்கையால்எண்சாண்!‌’ மிகவும்குறுகிய நமது அளவுகோலை வைத்துக்கொண்டு நம்மை நாமே அளந்து, அறி வாளி என்று இர்ப்பளித்துக்கொண்டு விடுகிறோம்‌. கல்வி பெற்ற வன்என்று முடிவு செய்து விடுகிறோம்‌. ‘கற்றது கைம்மண்அளவு; ‘கல்லாதது உலகளவுஎனும்போது – ‘கற்றது சட்டம்அல்லது சரித்திரம்‌; இன்னும்கற்க வேண்டியது மருத்துவம்‌, தொழில்நுட்பம்என்று பல உள்ளன! – என்பதல்ல அர்த்தம்‌, கல்லாதது உலகளவு எனும்போது, பரந்து விரிந்த ஞானத்தை நாம்பெறுவதைத்தான்‌, கல்லாதது உலகளவு என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்‌. அந்த ஞானம்என்ன? நான்யார்என்பதை உணர்வது தான்அது. அந்த உணர்வைப்பெறுகிறவன்தான்உயர்வைப்பெறுகிறான்‌. உண்மையான மேன்மை அதுவே. அதைத்தான்‌. உபநிஷதங்கள்மீண்டும்மீண்டும்வலியுறுத்துகின்றன.