[ஈச – கேன – கட – ப்ரச்ன – முண்டக – மாண்டுக்ய – இத்ரி – ஐதரேய – சாந்தோக்ய – ப்ருஹதாரண்யகம் ஆய பத்து உபநிஷதங்களை நாம் சுருக்கமாகப் பார்த்தோம். இதைத் தவிர இன்னும் பல உபநிஷதங்கள் இருக்கின்றன. மொத்தம் 108 உபநிஷதங்கள் இடைத்திருக்கின்றன என்று பண்டிதர்கள் கூறு கிறார்கள்.
நாம் பார்த்த பத்து உபநிஷதங்களைத் தவிர, மற்றவை எல் லாம் முக்கியமானவை அல்ல என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. எல்லா உபநிஷதங்களிலும் உயர்ந்த கருத்துக்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. எல்லாமே வேதங்களைச் சார்ந்தவைதான். ஆனால், ஆதிசங்கரர், ஸ்ரீ ராமானுஜர் போன்ற பெரியவர்கள் உரை எழுதி, பலருக்கு ஓரளவாவது அறிமுகமாகி உள்ளவை – நாம் பார்த்த பத்து உபநிஷதங்கள். மற்றவற்றிலும் சில முக்கியமான கருத்துக்கள் எல்லாம் கூறப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்றே ஒன்றைப் பார்ப்போம்.
வஜ்ரஸுசிகா உபநிஷதம் என்று ஒரு உபநிஷதம். வஜ்ரஸு9ி என்றால் வைரத்தினால் ஆன ஊசி. அதாவது மிகவும் கூர்மை யான, வலுவான ஊ8. ‘அறியாமையைப் பிளந்து எறியும் வஜ்ர ஸுசி தத்துவத்தை, நாம் இப்போது கூறுவோம்! என்றே இந்த உபநிஷதம் ஆரம்பிக்கிறது.
பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் என்று நான்கு பிரிவுகளில், பிராமணன் முதன்மையானவன். ஆனால் பிராமணன் யார் என்பது ஆராயத் தக்கது. அவன் ஆன்மாவா அல்லது உடலா? பிறப்பினால் ஒருவன் பிராமணனாகிறானா? அல்லது அறிவினால் பிராமணனாகிறானா? அல்லது செய்கையினால் பிராமணனா இிறானா? அல்லது யாகம் போன்ற கர்மங்களைச் செய்வதினால் பிராமணனாகிறானா?’
இப்படி தொடங்கி விட்டு, தனது விளக்கங்களை இந்த உப நிஷதம் கூறுகிறது. ‘எல்லா சரீரங்களிலும் இருக்கும் ஆன்மா ஒன்றுதான். ஆகையால் அதில் பிரிவுகள் இருக்க முடியாது. உடலே பிராமணன் என்றும் கூற முடியாது. ஏனென்றால், எல்லா உடல்களுமே பஞ்சபூதங்களால் ஆனவைதான்; எல்லா உடல் களுமே மூப்படையும் தன்மை கொண்டவைதான்; எல்லாமே மரணத்திற்கு உட்பட்டவைதான். ஆகையால் உடலிலும் விசேஷத் தன்மை எதுவும் கிடையாது‘.
வஜ்ரஸுசிகா உபநிஷத் தனது விளக்கத்தை மேலும் தொடர் இறது. பிறப்பினால் ஒருவன் பிராமணனாகிறான் என்றும் சொல்ல முடியாது; ஏனென்றால் மிகப் பெரிய ரிஷிகள் கூட வெவ்வேறு வகையான பிறப்புகளை உடையவர்கள்; அப்படி பல்வேறு வகையான பிறப்புகளை உடையவர்களானாலும், அவர்கள் எல்லோருமே மஹான்களாகப் போற்றப்பட்டனர்; ஆகையால், பிறப்பும் பிராமணத் தன்மையைத் தந்து விடாது. ஒருவனுடைய அறிவுதான் அவனை பிராமணனாக்குகிறது என்றும் சொல்ல முடியாது; ஏனென்றால், மற்ற வர்ணங்களைச் சார்ந்தவர் களும், உண்மையை உணர்ந்து பேரறிவைப் பெற்றிருக்கின்றனர். ஆகையால், ஒருவன் பெற்ற அறிவும் கூட அவனை பிராமண னாக்காது. தனது கர்மவினைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மனிதனும் இப்பிறவியில் செயல்படுகிறான் எனும்போது, அவனுடைய செயல்களும் கூட ஒருவனை பிராமணனாக்கி விடாது. யாகம் போன்ற கர்மங்களை பல வர்ணத்தவரும் செய்வதால், அதுவும் ஒருவனை பிராமணனாக்காது.
“பின், யார் பிராமணன்? தோஷங்கள் எதுவுமற்ற, சாஸ்வதமான, பிறப்பு இறப்பு அற்ற, எல்லா உயிர்களுக்கும் உள்ளே நின்று இயங்குகின்ற, மனதிற்கெட்டாத, அனுபவத்தால் மட்டுமே அறியக் கூடிய ஆன்மாவின் வடிவாகவே இகழ்ந்து, எவன் இருக்கிறானோ – ஆசாபாசங்களைத் துறந்து, நிம்மதியான நிலையை அடையப் பெற்று, துவேஷம், பொறாமை, எதிர்பார்ப்புகள், திகைப்பு, விருப்பு, வெறுப்பு போன்ற உணர்வுகள் அற்று எல் லோரையும் சமமாகப் பார்க்கின்ற மனிதன் எவனோ – அவனே பிராமணன். இதுதான் வேதங்கள் கூறுகின்ற கருத்து. இப்படி அல்லாமல் வேறு எந்த வகையிலும் பிராமணத் தன்மையை எய்த முடியாது.
இவ்வாறு அடித்துச் சொல்கிறது ஸாம வேதத்தில் இடம் பெறுகிற வஜ்ரஸுசகா உபநிஷத். ஆக, பிறப்பினால் ஒருவன் உயர்ந்தவனாகவும், ஒருவன் தாழ்ந்தவனாகவும் ஆகிறான் என்று வேதங்கள் கூறவில்லை. மஹாபாரதத்தில் யக்ஷ்ப் ப்ரசனத்தில் இதே கருத்து வலியுறுத்தப்படுகிறது. அது மட்டுமல்லாமல், வேறு பல இடங்களிலும் இந்த விளக்கம் இர்மானமாகக் கூறப்படுவது.
சரி, நாம் பார்த்த வரையில் உபநிஷதங்களின் மையக் கருத்து என்ன என்பதை ஒருமுறை கவனித்து விடுவோம் :
ஆன்ம உணர்வைப் பெறுவதுதான் இறுதி லட்சியமாக ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டும். அதை எங்கோ தேடி அலைய வேண்டாம். அது நம்மிடம்தான் இருக்கிறது. பரம்பொருள் நமக்கு மிக அருகாமையில்தான் இருக்கிறது. ஆனால் நாம்தான் அதைப் பார்க்க மறுக்கிறோம் என்பதை விளக்க, காஞ்சி மஹா ஸ்வாமிகள் ஒரு கதையைச் சொல்லி இருக்கிறார். இது நகைச்சுவை கலந்த ஒரு உதாரணம்.
‘கல்யாணமாக வேண்டிய பெண் ஒருத்தி இருந்தாள். அவளுடைய பெற்றோர், உறவினர்களுக்குள்ளேயே ஒரு பையனைப் பார்த்து, அவனுக்கு அவளைக் கல்யாணம் செய்து வைக்க இர்மானித்தார்கள். ஆனால் அந்தப் பெண்ணோ, ‘எல்லா மனிதர் களையும் விட உயர்ந்தவன் எவனோ, அவனைத்தான் கல் யாணம் செய்து கொள்வேன்’ என்று பிடிவாதம் பிடித்தாள். ‘சரி, உன் இஷ்டம்! என்று மற்றவர்களும் விட்டு விட்டார்கள்.
அந்தப் பெண், மனிதர்களில் உயர்ந்தவன் அரசன்தான் என்று நினைத்து, அந்த ஊர் அரசன் பல்லக்கில் போகும்போது, அவன் பின்னால் சென்று கொண்டிருந்தாள். அப்போது எதிரே ஒரு ஸந்யாஸி, நடந்து வந்து கொண்டிருந்ததைப் பார்த்த அரசன், பல்லக்கை விட்டு இறங்கி, அந்த ஸந்யாஸிக்கு நமஸ்காரம் செய்து விட்டு, மீண்டும் பல்லக்கில் ஏறிச் சென்றான்.
இதைப் பார்த்த அந்தப் பெண், அரசனை விட, இந்த ஸந் யாஸிதான் உயர்ந்தவன் என்று இர்மானம் செய்து கொண்டு, அவரையே கல்யாணம் செய்வது என்று நினைத்தாள். அவர் பின்னால் அவள் போகும்பொழுது ஒரு ஆலமரத்தடியில் ஒரு பிள்ளையார் விக்ரஹம் இருந்தது. ஸந்யாஸி அந்த விக்ரஹத்தின் முன்னால் மிகவும் மரியாதையுடன் நின்று, தோப்புக்கரணம் போட்டு நமஸ்கரித்தார். இதை அந்தப் பெண் பார்த்தாள். ஸந் யாஸியை விட, இந்தப் பிள்ளையார் உயர்ந்தவர் போல இருக் இறது – என்று நிச்சயித்துக் கொண்டு, என்ன செய்யலாம் என்று யோசித்தவாறு ஆலமரத்தின் அடியிலேயே உட்கார்ந்தாள்.
அங்கே மனித சஞ்சாரம் இல்லை. ஆனால், ஒரு நாய் அங்கே வந்து, அந்தப் பிள்ளையாருக்கு வெகு சமீபமாக, அலட்சியமாக நின்று அசிங்கம் பண்ணிவிட்டுப் போய் விட்டது. இதைப் பார்த்த பெண் இகைத்தாள். ‘என்ன இது? பிள்ளையாரை விட நாய் உயர்ந்ததா?” என்று புரியாமல் அவள் விழித்தபோது, ஒரு பையன் அந்த நாய் மீது கல்லை விட்டு எறிய, அது குரைத்துக் கொண்டே ஓடிற்று.
அந்தப் பெண்ணின் மனதில் மீண்டும் சந்தேகம். ‘பிள்ளை யாரையே அலட்சியமாக நினைத்த நாய், இப்பொழுது இந்தச் சறுவனுக்குப் பயந்து ஓடுகிறது. ஆகையால் இந்தச் சிறுவன்தான் எல்லோரைக் காட்டிலும் உயர்ந்தவன் போலிருக்கிறது” என்று அவள் நினைத்தாள். அப்போது ஒருவன் வந்து, அந்தச் சிறுவனைப் பிடித்து, ‘ஏஎன் இந்த நாயை அடித்தாய்?! என்று அதட்டி மிரட்டினான்.
பையன் பயந்து கொண்டு, ‘இனி அம்மாதிரி செய்வதில்லை” என்று சொல்லிவிட்டு மன்னிப்புக் கேட்டு விட்டுப் போய் விட்டான். பார்த்தாள் அந்தப் பெண். ‘இவன்தான் எல்லோரையும் விட உயர்ந்தவன்! என்று தீர்மானம் செய்தாள். அவன் யார் என்றால், அவள் வீட்டில் பெரியவர்கள் நிச்சயித்திருந்த உறவுக் காரப் பையன்தான். எங்கெங்கோ சுற்றி விட்டு, தான் தேடிய மனிதன் தன் அருகிலேயே இருப்பதை உணர்ந்தாள்.
இப்படித்தான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதை எதையோ உயர்ந்த பொருளாகவும், பெரிய விஷயமாகவும் கருஇக் கொண்டு, நாம் அலைந்து கொண்டிருக்கிறோம். நம் அருகிலேயே, நம் மிடமே, நமது ஆன்மாவாக பரம்பொருள் இருப்பதை நாம் உணர்வதில்லை – என்பதை விளக்க இந்தக் கதையை காஞ்சி மஹா ஸ்வாமிகள் கூறியிருக்கிறார்.
ஆசைகளுக்குப் பலியாகி பொறாமை, துவேஷம், கோபம் போன்ற குணங்களை எல்லாம் வளர்த்துக் கொண்டு நாம் அலைந் தோமானால், நமக்கு நிம்மதி என்பது கிடையாது. இவற்றிலிருந்து விடுபட்டு ஆன்மாவை உணர ஒருவன் முயற்சித்தால், அவனே நிம்மதி உள்ளவன் ஆகின்றான். அப்படிப்பட்டவன் இந்த சரீரத் இல் இருக்கும்போதே கூட ப்ரம்ம நிலையை அடைகிறான் – என்று உபநிஷதங்கள் கூறுகின்றன.
இந்த நிலையை அடைவது மிக எளிது என்று எந்த உபநிஷதமும் சொல்லவில்லை. கடும் முயற்சி வேண்டும். இந்த நிலையை அடைய முடியாதவர்கள் எல்லோரும் அழிந்து நாசமாக வேண்டியதுதான் என்ற சாபத்தையும் உப நிஷதங்கள் அளித்துவிடவில்லை. இல்லறத்தில் வாழ்ந்து கொண்டு ஆசாபாசங்களுக்கு உட்பட்டவர்களாக இருந்தும் கூட, நற்காரி யங்களையே செய்து, நல்லதையே நினைத்து வாழ்கிறவர்கள் மீண்டும் பிறப்பெய்தினாலும், அது நல்ல பிறப்பாக இருக்கும் என்ற உத்திரவாதத்தை இந்த உபநிஷதங்கள் எல்லாம் அளிக்கின்றன. ஆகையால், ஆன்ம உணர்வு என்கிற நிலையை அடைய முடி யாத நம்மைப் போன்ற கோடானு கோடி மக்கள் நல்லதையே நினைத்து, நல்லதையே செய்து வாழ்வது என்ற இர்மானத் இற்கு வந்தாலே போதும். அதுவே நமக்கு நற்கதி அளிக்கும்.
இந்த உபநிஷதங்களை எல்லாம் மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போதே கூட, ஒரு விஷயத்தை நாம் கவனித்இருக்கலாம். ஒவ்வொரு உபநிஷதத்திலும் பல விவாதங்கள் விவரிக்கப்படு இன்றன. பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. பல சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் விடைகளும் அளிக்கப் படுகின்றன. அந்த விடைகளை உடனடியாக முழுமையாகப் புரிந்து கொள்கிற சக்தி நமக்கு இல்லை என்பதால், அந்த விடைகள் அர்த்தமற்றவையாகி விடாது. மற்ற எந்த மத நூல்களிலும் இல்லாத அளவிற்கு கேள்விகள், குறுக்குக் கேள்விகள், சந்தேகங்கள் போன்றவை கொட்டிக் கிடக்கிற விவாதங்களை நடத்தி, அவற்றின் மூலம் தத்துவங்கள் நிலை நாட்டப்படுகின்றன; இவை உப நிஷதங்களின் தனிச் சிறப்பு.
வேதங்களில், தொடக்கத்தில் வருவது கர்ம காண்டம். ஆரம்பப் படிகளை வரையறுக்கிறவை அந்தப் பகுதிகள். யாகங் கள் போன்ற கர்மாக்களைச் செய்ய வேண்டிய அவசியத்தையும், அவற்றிற்கான வழிமுறைகளையும் கூறுபவை அவை. இந்தப் பகுதிகளில் பல தெய்வங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொன்றின் இறப்பும், மேன்மையும் வர்ணிக்கப்படுகின்றன. வேதங்களின் இறுதியில் வருவது, உபநிஷதங்களைக் கொண்ட ஞான காண்டம். இது இறுதி லட்சியத்தை நம்முன் வைக்கிறது. பரம்பொருள் ஒன்றுதான். அதற்கு ஒரு உருவத்தையோ, நிறத் தையோ கொடுத்து வர்ணிக்க முடியாது. அது வர்ணனைக்கு அப்பாற்பட்டது. அதனால்தான் உபநிஷதங்கள் பல இடங்களில் பரம்பொருளை, ‘தத்’ என்று கூறுகிறது. ‘தத்’ என்றால் ‘அது‘ என்று அர்த்தம் (‘தட்’ என்று ஆங்கிலத்தில் சொல்வது போல இருக்கிறது).
அதனுடைய பல சக்திகளும், பெருமைகளும், பல தெய்வங் களாகக் காட்சி அளிக்கின்றன; அவற்றை கர்ம காண்டம் வர்ணிக் இறது. அதை பின்பற்றி, கர்மாக்களைச் செய்து, அதன் மூலம் நம்பிக்கையையும், சுய கட்டுப்பாட்டையும் வளர்த்துக் கொண்டு, அதன் பின்னர், ‘எல்லாம் பரம்பொருளே! என்ற ஞானத்தைப் பெறுவதற்காக, ஞான காண்டத்தில் கூறப்பட்டிருப்பவற்றைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இது, வேதங்கள் மற்றும் அவற்றின் ஒரு பகுதியாகிய உபநிஷதங்கள் ஆகியவை, நமக்கு விளக்குறெ வழிமுறை. நாம் உணர வேண்டியது :
‘ஓம் தத் ஸத்
அது (பரம்பொருள்) உண்மை.