ஸ்மிருதிகள்!

ஜோதிஷம்பற்றிய மஹாஸ்வாமிகளின்உபன்யாசங்களில்ஒன்று கூறப்பட்டிருக்கிறது. சகுனம்என்பது வேறு; நிமித்தம்என்பது வேறு. சகுனம்என்றாலே பறவை என்று அர்த்தம்‌. பறவைகளால்ஏற்படும்குறிப்புகளுக்குத்தான்சகுனம்என்று பெயர்‌. ஒரு பறவை வலம்இருந்து இடப்பக்கம்போனால்‌, என்ன பலன்ஏற்படும்‌; ஒரு பறவை ஒரு நேரத்தில்கத்தினால்என்ன விளைவு உண்டாகும்‌ – என்பதை எல்லாம்கூறுவது சகுன சாஸ்த்ரம்‌. மற்றவை எல்லாம்நிமித்தம்‌. 

அதாவது ஒரு பூனை குறுக்கே போனால்‌, அது நிமித்தம்‌. ஏனென்றால்அது பறவை அல்ல. கருடன்குறுக்கே போனால்அது சகுனம்‌. ஏனென்றால்அது பறவை. ஒரு நிமித்தம்தோன்றுவதால்ஒரு விளைவு உண்டாவதும்இல்லை; ஒரு பலன்ஏற்படுவதும்இல்லை. ஒரு பலன்கிட்டப்போகிறது அல்லது ஒரு விளைவு ஏற்படப்போகிறது, என்பதை நாம்காண்கிற நிமித்தம்முன்கூட்டியே நமக்கு சமிக்ஞையாகத்தெரிவிக்கிறது. பூர்வ கர்மத்தின்விளைவாக, நமக்கு பல அனுபவங்கள்நிகழ்கின்றன; இதை நமக்கு நிமித்தம்எடுத்துக்காட்டுகிறது

பூமிக்கு ஒரு ஆகர்ஷண சக்தி உண்டு என்பதை நியூட்டன்தான்கண்டுபிடித்தார்என்று சொல்லப்படுகிறது. ஆனால்‌, இது வராஹமிஹிரரின்ப்ருஹத்ஸம்ஹிதையில்இருக்கிறது.

சூரியன்தான்பூமியைச்சுற்றுகிறது என்று மேலைநாட்ட வர்கள்வெகு நாட்கள்நம்பிக்கொண்டிருந்தார்கள்‌. பூமிதான்சூரியனைச்சுற்றி வருகிறது என்பதை மற்றவர்கள்கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே, நம்நாட்டில்வராஹமிஹிரர்முதலானவர்கள்‌. சொல்லி இருக்கிறார்கள்‌. சொல்லப்போனால்‌, ‘சூரியன்இருந்தபடிதான்இருக்கிறது. பூமிதான்அதைச்சுற்றி வருது! என்பது ரிக்வேதத்திலேயே கூட வருகிறது

இதே போல்‌ ‘உலகம்தட்டையானது! என்று மேலைநாட்ட வர்கள்நினைத்தபோதே, பாரத நாட்டில்‌, ‘உலகம்தட்டையானது அல்ல; முட்டை வடிவுள்ளதுஎன்று கண்டுபிடித்தார்கள்‌. அண்டம்என்றாலே முட்டை என்றுதான்அர்த்தம்‌. நக்ஷத்திர லோகங்களை யும்கொண்ட உலகை பிரம்மாண்டம்என்திறோம்‌. பிரம்மனால்படைக்கப்பட்ட அண்டம்‌, அது பிரம்மாண்டம்‌. அதாவது முட்டை வடிவுள்ளது. நவீன விஞ்ஞானிகள்பூமி உருண்டை வடிவம்என்று கூறினாலும்‌ – ‘அது சுத்தமான உருண்டை அல்ல; ‘ஓவல்ஷேப்உடையது; அதாவது முட்டை வடிவம்கொண்டது! என்று கூறி யிருக்கிறார்கள்‌. 

ஜோதிஷத்தை அடுத்து வருவது கல்பம்‌. இது வேத புருஷனின்ஆறாவது அங்கம்‌. அவனுடைய கை. ‘எந்த கர்மாவை எப்படிச்செய்வது? யார்யார்எந்தெந்த காரியங்களைச்செய்ய வேண்டும்‌? எந்தெந்த மந்த்ரம்‌, எந்தெந்த பொருள்‌, யாகங்களில்பயன்படுத்தப்பட வேண்டும்‌? எந்த மாதிரியான பாத்திரங்களை உபயோகப்படுத்த வேண்டும்‌? என்பதை எல்லாம்கல்ப சாஸ்த்ரம்நிர்ணயிக்கிறது. ஆபஸ்தம்பர்‌, போதாயனர்‌, பரத்வாஜர்‌, ஆச்வலாயனர்போன்ற பலர்‌, கல்ப ஸுத்ரங்களை இயற்றி இருக்கிறார்கள்‌. 

வீட்டோடு பண்ணும்கர்மாக்களை விவரித்து, அவற்றிற்கான வழிமுறைகளைக்கூறுவது, க்ருஹ்ய ஸூத்ரம்‌. வெளியே யாக சாலை அமைத்து செய்யும்கர்மாக்கள்‌, ச்ரெளத ஸுத்ரத்தில்அடங்கும்‌. மனிதனுக்கு விதிக்கப்பட்டுள்ள, நாற்பது ஸம்ஸ்காரங்கள்‌, கல்பத்தில்வருகின்றன. இவற்றில்பெரும்பாலும்க்ருஹ்ய ஸூத்ரங்களில்அடங்குகின்றன. சில, ச்ரெளத ஸூத்ரங்களில்வருகின்றன. இந்த நாற்பது ஸம்ஸ்காரங்களில்தான்‌ – உபநயனம்‌, திருமணம்‌, இறுதிச்சடங்குபோன்றவை எல்லாம்அடங்கும்‌. இவற்றில்சிலவற்றைப்பற்றி பின்னர்பார்ப்போம்‌. 

இவற்றோடு கூட தர்ம ஸூத்ரங்கள்என்ற வகையில்அடங்கக்கூடிய, சில ஸலூத்ரங்களும்கல்பத்தில்இருக்கின்றன. இவற்றி லிருந்தே பிற்காலத்தில்தர்ம சாஸ்த்ரங்கள்தோன்றியதாகச்சொல்லப்படுகிறது

ஆக, வேதங்கள்‌ (உபநிஷத்துக்கள்உட்பட) நான்கு; வேத அங்கங்கள்ஆறுஆக மொத்தம்பத்து. தர்மத்தை முழுமையாக அறிவதற்கு பதினான்கு வித்யைகளைக்கற்க வேண்டுமென்று கூறப்படுகிறது. இதில்இந்த பத்து போக, மீதமுள்ள நான்கு மீமாம்ஸை, நியாயம்‌, புராணங்கள்‌, தர்ம சாஸ்த்ரங்கள்‌. இவை வேத உபாங்கங்கள்‌ – உப அங்கங்கள்‌; அதாவது அங்கங்களுக்கு துணையாக இருக்கிறவை. இவற்றில்மீமாம்ஸை பற்றி ஏற்கெனவே நாம்பார்த்து விட்டோம்‌. மீமாம்ஸை என்றால்கர்மாக்களை மிக முக்கியமாக வைத்து, ஈச்வரனைக்கூட கருதாமல்கர்மாக்களை செய்வதே மனிதனுக்கு ஏற்பட்டுள்ள வழிமுறைஎன்றெல்லாம்பேசுகிறபூர்வ மீிமாம்ஸைதான்எடுத்துக்கொள்ளப்படுகிறது. பாதராயணரின்‌ (வியாஸரின்‌) ப்ரம்ம ஸூத்ரம்‌, உத்தர மீமாம்ஸை என்று அழைக்கப்பட்டாலும்‌, பொதுவாக மீமாம்ஸை எனும்பொழுது, பூர்வ மீமாம்ஸையைத்தான்குறிப்பிடுவதாசு எடுத்துக்கொள்ள வேண்டும்‌. இது பற்றி நாம்ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்‌. 

அடுத்து வருவது நியாயம்‌. இது, பலவித விதிமுறைகளைக்கொண்டு, உலகைப்படைத்தது இறைவனே என்று தர்க்க ரீதியாக நிர்ணயிப்பது. நியாய ஸூத்ரத்தை இயற்றியவர்‌, கெளதம மஹரிஷி. இவருடைய ஸுூத்ரங்களுக்கு பாஷ்யம்எழுதியவர்வாத்ஸ்யாயனர்‌. கணாத மஹரிஷி என்பவரும்ஒரு ஸூத்ரம்இயற்றினார்‌. 

இதை அடுத்து வருவது புராணம்‌. இதை பின்னர்நாம்கொஞ்சம்விரிவாகப்பார்ப்போம்‌. புராணத்திற்குப்பிறகு வருவது பதினாலாவது வித்தையாகிய தர்ம சாஸ்த்ரம்‌. தர்ம ஸூத்ரங்கள்பற்றி மேலே நாம்பார்த்தோம்‌. அவை சிறிய சிறிய வாசகங்கள்‌. சுருக்கமாக விஷயத்தைச்சொல்பவை; தர்ம ஸுத்ரங்கள்‌, கல்பத்தில்இடம்பெறுகிறவை. அவை எல்லா அம்சங்களையும்சொல்லி விடவில்லை

ஆனால்‌, தர்ம சாஸ்த்ரமோ ஒரு மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய பல தர்மங்களைப்பற்றி மட்டுமின்றி, வேறு பல விஷயங்களையும்விவரமாகச்சொல்கிறது. இந்த தர்ம சாஸ்த்ரங்கள்தான்ஸ்ம்ருதி என்பதில்அடங்கும்‌. வேதம்‌ – ச்ருதி அதாவது கேட்கப்பட்டது. இந்த தர்ம சாஸ்த்ரங்களோ ஸ்ம்ருதி, அதாவது நினைவுக்குறிப்புகள்‌, அல்லது செய்யப்பட்டவை. நமது அடுத்த பார்வை ஸ்ம்ருதிகளைப்பற்றியது

ஸ்ம்ருதிகள்தான்பொதுவாக தர்ம சாஸ்த்ரங்கள்என்றும்அழைக்கப்படுகின்றன. ஒரு மனிதன்தனது சொந்த வாழ்க்கை யில்கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும்‌, சமூகத்துடன்உள்ள தொடர்புகளை அவன்முறையாக நடத்திச்செல்ல வேண்டிய வழிமுறைகளும்‌, தர்ம சாஸ்த்ரங்களில்விதிக்கப்படுகின்றன. வேதங்களில்இவையெல்லாம்ஆங்காங்கே சிறு குறிப்புகளாக வருகின்றன. அவற்றை எல்லாம்விரிவுபடுத்தி, வகைப்படுத்தித்தருவது தர்ம சாஸ்த்ரங்கள்‌. அதாவது வேதங்கள்தான்இந்த ஸ்ம்ருதிகளுக்கெல்லாம்மூலம்‌. தர்ம சாஸ்த்ரங்கள்எனப்படும்ஸ்ம்ருதிகளில்‌, ஒரு விஇமுறை வேதத்திற்கு முரணாக இருந்தால்‌, அது விடத்தக்கது, செல்லுபடியாகாதது

ஸ்ம்ருதிகள்பல இருக்கின்றன. மனு, பராசரர்‌, கெளதமர்‌, ஹாரீதர்‌, யாக்ஞவல்க்யர்‌, விஷ்ணு, ப்ரஹஸ்பதி, அத்ரி, ஆபஸ்தம்பர்‌… போன்ற பதினெட்டு பேர்களால்ஸ்ம்ருதிகள்இயற்றப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு ஸ்ம்ருதிக்கும்அதை இயற்றியவர்பெயரே அமைந்திருக்கிறது. அதாவது மனு இயற்றியது, மனு ஸ்ம்ருதி. யாக்ளாவல்க்யர்இயற்றியது, யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதிஇப்படி. இந்த ஸ்ம்ருதிகளைத்தவிர, உப ஸ்ம்ருதிகள்என்றும்பதினெட்டு இருப்பதாகக்கூறப்பட்டுள்ளது.

இப்படி பல ஸ்ம்ருஇகள்இருக்கிறபோது, அவற்றை ஒருங்இணைத்துத்தர சில விளக்கங்கள்தேவைப்படுகின்றன. சில பண்டிதர்கள்இந்த ஸ்ம்ருதிகளை ஒருங்கிணைத்து, அவை கூறு வதன்அடிப்படையில்‌ ‘நிபந்தனம்‌! என்ற நூல்களை இயற்றி இருக்கிறார்கள்‌. நிபந்தனம்என்றால்ஒருங்கிணைப்பது என்று பொருள்உண்டு. இந்த மாதிரி நிபந்தனை நூல்களில்ஒன்று வைத்தியநாத இக்விதீயம்என்பது. சுமார்‌, 200, 300 ஆண்டுகளுக்கு முன்பாக இது வைத்தியநாத இக்ஷிதர்என்பவரால்இயற்றப்பட்டது. கடைசியாகச்செய்யப்பட்ட நிபந்தனம்இதுவே. இப்போது தென்னாட்டில்உள்ளவர்கள்‌, இந்த வைத்தியநாத இக்ஷியத்தில்உள்ள வழிமுறைகளைத்தான்‌, தங்களுடைய பல வை$கக்காரியங்களிலும்கடைப்பிடிக்கிறார்கள்‌. 

பல விஷயங்களை மிகவும்விவரமாக வைத்தியநாத தீக்ஷிதயம்கூறினாலும்‌, ஸ்ம்ருதிகள்வெவ்வேறான கருத்தை தெரிவிக்கும்போது, வைத்தியநாத இக்ஷிதர்‌ ‘ஒவ்வொரு பகுதியில்வாழ்கிற மக்கள்‌, ஆங்காங்கே வழக்கில்உள்ள வழிமுறைகளின்படியும்‌, தங்கள்தங்கள்குடும்பங்களின்‌ (குலங்களின்‌) கடைப்பிடிக்கப்படுகிற வழிமுறைகளின்படியும்நடந்து கொள்ள வேண்டியது என்று சொல்லி விடுகிறார்‌. அதாவது என்னதான்சட்டங்களை இயற்றினாலும்‌, விதிமுறைகளை வகுத்தாலும்‌, அவ்வப்போது அதற்குச்சில விதிவிலக்குகள்தேவைப்படத்தான்செய்யும்‌; அவை சமூகத்தின்வழக்கை ஓட்டி அமையும்என்பது நீக்ஷிதரால்ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது; இது அவர்கண்டுபிடித்த புது வழியும்அல்ல

ஏனென்றால்‌, தர்ம ஸுத்ரங்களில்ஒன்றாகிய ஆபஸ்தம்ப ஸலித்ரத்திலேயே கூட, (கல்பத்தில்வருவது) பல விஷயங்கள்விளக்கப்பட்டிருந்தாலும்‌, ஒன்று தெளிவாகச்சொல்லப்பட்டிருக்கிறது. ‘இந்த ஸலித்ரங்களில்நான்எல்லா தர்மங்களையும்கூறிவிடவில்லை. சொல்ல வேண்டியவைஇன்னமும்எவ்வளவோ இருக்கின்றன. பெண்களிடமிருந்தும்‌, நான்காவது வர்ணத்தைச்சார்ந்தவர்களிடமிருந்தும்‌, கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்இருக்கின்றன. அவர்களிடம்கேட்டு, அவற்றைப்புரிந்து கொள்ளலாம்‌! என்று அவர்கூறி விடுகிறார்‌. அதாவது யாரை எல்லாம்தர்ம சாஸ்த்ரங்கள்விலக்கி வைத்இருக்கின்றன என்று ஒரு பிரச்சாரம்நடந்து வருகிறதோஅவர்களை எல்லாம்சேர்ப்பது மட்டுமல்ல, அவர்களிடம்கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்உள்ளன. அவர்களிடம்கேட்டுப்புரிந்து கொள்ளுங்கள்‌! என்றே கூட கூறப்பட்டிருக்கிறது

இது மட்டுமல்ல, தாங்கள்வகுத்துள்ள வழிமுறைகள்அனைத்தும்‌, எந்தக்காலத்திற்குமே நிலைத்து நிற்கக்கூடியவை என்று கூட, ஸ்ம்ருதிகளை இயற்றியவர்கள்சொல்லவில்லை. மாறாக, ‘சில விதிமுறைகள்ஒரு சமூகத்திற்கும்‌, ஒரு காலகட்டத்இற்கும்ஒவ்வாமல்போக முடியும்‌. ‘ஒரு காலத்தில்தர்மமாகப்பார்க்கப்பட்ட வழிமுறை, பிற்காலத்தில்மக்களால்வெறுக்கப்படுகிற நிலையை அடைந்தால்‌, அந்த தர்மத்தைக்கைவிட்டுவிட வேண்டும்‌” என்று யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி சொல்கிறது

ப்ரஹஸ்பதி இயற்றிய தர்ம சாஸ்த்ர நூல்‌, ‘சாஸ்த்ரத்தின்படி மட்டுமே ஒரு விஷயத்தைப்பார்க்கும்பொழுது, சில தவறுகள்‌. நேர்ந்து விடலாம்‌. நியாயமான காரணத்திற்கு உட்படாத, அந்த மாதிரி முடிவு தர்மத்திற்கு இழுக்காக அமையும்‌. ஆகையால்நியாய சபையில்எடுக்கப்படும்முடிவுகள்சாஸ்த்ரத்தை ஒட்டி மட்டு மல்லாமல்‌, நடைமுறை காரண காரியங்களையும்ஒட்டி அமைய வேண்டும்‌” என்று கூறுகிறது

இதை எல்லாம்பார்க்கும்பொழுது, ஹிந்து மத தர்ம சாஸ்த்ரங்கள்நிர்ணயித்த நீதிமுறை முழுமையாக வெறுக்கத்தக்கதுஎன்ற பிரச்சாரம்மிகவும்தவறு என்பது புரியும்‌.