இது, பல கோணங்களில் பார்க்க வேண்டியது!

தர்மம்‌: என்பதை ஓரளவாவது புரிந்து கொள்ள, அதை பல கோணங்களிலிருந்து பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு முனிவர்ஒரு மரத்தடியில்அமர்ந்திருந்தார்‌. மரத்தின்மீது இருந்த ஒரு கொக்கு, அவர்மீது அசிங்கம்செய்து விட்டது. அவர்கோபத்துடன்நிமிர்ந்து கொக்கைப்பார்த்தார்‌. அவருடைய தவ வலிமையின்காரணமாக, அது பொசுங்கிச்சாம்பலாகி விட்டது. கெளசிகன்என்ற பெயருடைய அந்த முனிவர்அங்கிருந்து புறப்பட்டு, ஒரு வீட்டுக்குச்சென்றார்‌. பிக்ஷ கேட்டார்‌. அந்த வீட்டுப்பெண்மணி வெளியே வர நேரமாகி விட்டது

முனிவருக்குக்கோபம்வந்தது. அந்தப்பெண்வெளியே வந்தபோது, அவளைப்பார்த்து, ‘என்ன செய்வேன்தெரியுமா? என்றார்‌. 

அந்தப்பெண்‌, அந்த முனிவரைப்பார்த்து, ‘என்னை என்னகொக்கு என்று நினைத்தீர்களா?’ என்று கேட்டாள்‌. 

அவருக்கு ஒரே ஆச்சர்யம்‌ – எங்கோ நடந்த நிகழ்ச்சி, இவளுக்கு எப்படித்தெரிந்தது என்று. ‘அது எப்படி உனக்குத்தெரியும்‌?” என்று கேட்டார்‌.

அந்தப்பெண்மணி, ‘எனக்கு எல்லாமே தெரிகிறது. நீங்கள்கொக்கை எரித்து சாம்பலாக்கியது போல்‌, என்னையும்செய்து விடலாம்என்று நினைக்கிறீர்கள்என்பதும்புரிகிறது! என்று கூறினாள்‌. 

அவளுக்கு எப்படி அந்த சக்தி வந்தது? அவளுடைய பதி பக்திதான்காரணம்‌. கணவனுக்குப்பணிவிடை செய்வதை தனது தர்மமாக ஏற்றுக்கொண்டு, அதை விடாமல்காப்பாற்றி வந்ததால்‌, அவளுக்கு இவ்வளவு பெரிய சிறப்பு வந்தது. தன்னுடைய தர்மத்தை விடாமல்காப்பாற்றியதால்கிடைத்த மேன்மை இது

தர்மத்தைப்பற்றி எனக்கு உபதேசம்செய்‌” என்று அந்தப்பெண்மணியை முனிவர்கேட்டுக்கொண்டார்‌. 

அவளோ, ‘நீர்என்னிடம்கேட்டு பயனில்லை. தர்மவியாதனிடம்சென்று கேளுங்கள்‌’ என்று சொல்லி விட்டாள்‌. 

முனிவரும்தர்மவியாதன்யார்என்று விசாரித்து, அவனைத்தேடிச்சென்று அடைந்தார்‌. பார்த்தால்‌, அவன்ஒரு கசாப்புக்கடைக்காரன்‌! அவனிடம்முனிவர்‌, தர்மத்தைப்பற்றிய உபதேசத்தைக்கேட்டுக்கொண்டு, ‘உனக்கு எப்படி இந்த சக்தி வந்தது? என்று கேட்டார்‌. 

அவன்‌ ‘என்தாய்‌, தந்தையருக்கு நான்விடாமல்சிச்ருஷை செய்து வருகிறேன்‌. அதனால்எனக்குக்கிடைத்த உயர்வு இதுஎன்று விளக்கினான்‌. பெற்றோருக்குப்பணிவிடை செய்வதை தனது கடமையாக ஏற்றிருந்தான்அவன்‌, அது அவனுடைய தர்மமாகியது

ராமர்‌, ஸிதையை ராவணனிடமிருந்து மீட்ட பிறகு, அவளை அவர்நடத்திய விதம்தர்மமா, அதர்மமா? நெருப்பிலே விழச்செய்து, அதன்பிறகு யாரோ சொன்னதற்காக, ஊரை விட்டே விரட்டி, இறுதியில்வால்மீகி முனிவரே வந்துஇவள்புனித மானவள்‌’ என்று கூறிய பிறகும்‌, ‘சபையினருக்காக ஒருமுறை உன்னுடைய புனிதத்தன்மையை நிரூபித்து விடுஎன்று சொல்கிறார்‌. அப்பொழுதுதான்ஸீதை பூமிக்குள்ளே சென்று விடுகிறாள்‌. 

ராமருடைய இல்லற தர்மம்என்று பார்த்தால்‌, அவர்செய்தது அதர்மம்தான்‌; அதில்சந்தேகமே கிடையாது. ஒரு மனைவியை இவ்வளவு கொடுரமாக நடத்தியதை தர்மம்என்று ஏற்க முடியாதுஅதை இல்லற தர்மம்என்று பார்க்கும்போது

ஆனால்இதையே ராஜ தர்மம்என்று அணுகினால்‌, அது மிகவும்சிறப்பு வாய்ந்த செயலாகத்தெரிகிறது. சீஸரின்மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்‌. மன்னனைப்பற்றி இப்படி ஒரு சந்தேகம்வந்து விட்டால்‌, அதற்குப்பிறகு அந்த ராஜாங்கத்திற்கு மரியாதை கிடையாது. அந்த ஆட்சியின்அதிகாரம்எடுபடாது; நிர்வாகம்சீர்குலைந்து, நாடு உருப்படாமற்போகும்‌. அதனால்அப்படிப்பட்ட ஒரு சிறிய சந்தேகம்கூட ஆட்சியைப்பற்றி இருக்கக்கூடாது என்பதற்காகத்தான்‌, ஸீதை வெளியே அனுப்பப்பட்டாள்‌. அங்கே ராஜ தர்மம்மேலோங்கி நின்றது

இப்படி முரண்பாடாகத்தெரிகிற பல விளக்கங்கள்தர்மத்திற்கு உண்டு

இப்போது யுத்தம்நடத்துகிறோம்என்று வைத்துக்கொள்ளுங்‌. கள்‌. அது தர்மமா, அதர்மமா? ஆயிரக்கணக்கான பேரைக்கொல்இறோம்‌. சாத்திரத்தில்‌ ‘அஹிம்ஸா பரமோ தர்ம: என்று கூறப்பட்டிருக்கிறது. எல்லா தர்மங்களைக்காட்டிலும்‌, உயர்ந்த தர்மம்அஹிம்ஸை. ஆனால்யுத்தம்என்றாலே ஹிம்ஸைதான்‌. ஹிம்ஸை இல்லாத யுத்தமே கிடையாது. அது தர்மமா, அதர்மமா? நாட்டைக்காப்பாற்ற ஓர்அரசன்மேற்கொள்கிற யுத்தம்ராஜ தர்மம்‌; அதில்யுத்த தர்மத்தை ஒட்டி, எதிரிகள்கொல்லப்படுகிறார்கள்‌. ஆகையால்அது தர்மமே

போலீஸ்நடவடிக்கை ஒன்று வருகிறது. ஒரு கூட்டத்தைக்கட்டுப்படுத்த தடியடிப்பிரயோகம்நடக்கிறது. உடனே பெரிய எதிர்ப்பு கிளம்புகிறது. ஆனால்அப்படி அடித்தது போலீஸ்காரர்களுக்கு தர்மமா இல்லையா? போலீஸ்காரர்என்ன ஸ்கவுட்டாச கூட்டத்தினரைப்பார்த்து போலீஸ்காரர்‌, ‘எல்லோரும்தயவு செய்து விலகி விடுங்கள்‌; மஹாத்மா காந்தி இப்படித்தான்அமைதியாக இருக்க வேண்டும்என்று சொல்லி இருக்கிறார்‌; ராமகிருஷ்ண பரமஹம்ஸர்‌, ரமண மஹரிஷி போன்ற பெரியவர்கள்எல்லாம்சொல்லியிருக்கிறார்கள்‌. யாரும்‌, எந்தச்சண்டையும்போடக்கூடாது; ஆகையால்எல்லோரும்அமைதியாக விலக வேண்டும்‌’ என்று கூறி விட்டு, மூலையில்போய்உட்கார்ந்து கொள்ள முடி யுமா? அதுதான்போலீஸாரின்கடமையா? அதுதான்அவர்களது தர்மமா? நாலு பேரையாவது அங்கே பிடித்து அடி அடி என்று அடித்தால்தான்‌, கூட்டமே சிதறி ஓடும்‌. அது அவர்களுடைய தர்மம்‌. 

இப்படி தர்மம்என்பதற்கான விளக்கம்மிகவும்சிக்கலானது. அதனால்தான்நமது நூல்கள்‌ ‘தர்மத்தின்பாதை மிகவும்சூட்சம மானதுஎன்று மீண்டும்மீண்டும்எடுத்துச்சொல்கின்றன. பின்இந்த சூட்சமத்தை எப்படித்தான்அறிந்து கொள்வது? ‘எது தர்மம்என்று நிச்சயமாக நம்மால்உணர முடியாத நேரங்களில்‌, பெரியோர்கள்காட்டிய வழி எதுவோ, அதைப்பின்பற்றுவதுதான்தர்மம்என்ற வழியும்இதற்கு விடையாகச்சொல்லப்பட்டிருக்இறது

இதில்வேறு ஒரு விஷயத்தையும்கவனிக்க வேண்டும்‌. தர்மத்திற்கு பெரும்முக்கியத்துவம்தரப்படுகிறது; ஆனால்அதன்காரணமாக தர்மம்‌, அர்த்தம்‌, காமம்‌, மோக்ஷம்‌ (அறம்‌, பொருள்‌, இன்பம்‌, வீடு) என்கிற நான்கு நிலைகளில்‌, மற்ற மூன்று நிலைகளை அறவே ஒதுக்கிவிட வேண்டும்என்று எந்த நூலும்சொல்லவில்லை. உலக வாழ்க்கையில்மனிதன்அறத்தையும்கடைப்பிடிக்க வேண்டும்‌; பொருளையும்ஈட்ட வேண்டும்‌; இன்பத்தையும்நுகர வேண்டும்‌; நற்கதி அடையும்வழியை யும்நாட வேண்டும்‌. ஆனால்பொருள்ஈட்டும்போதும்சரி, இன்பத்தை நுகரும்போதும்சரி, ஒரு மனிதன்அதர்மமான வழியில்செல்லக்கூடாது. தர்மம்‌, அர்த்தம்‌, காமம்என்ற மூன்றும்இணைந்து செயல்பட்டு, ஒரு மனிதனின்நல்வாழ்க்கைக்கு வழி வகுக்கின்றன. ஆனால்‌, அர்த்தமோ, காமமோ, தர்மத்திற்கு விரோதமாக அமையுமானால்அதை விட்டு விட வேண்டும்‌’ என்று மனு ஸ்மிருதி கூறுகிறது.

மனு ஸ்மிருதி மேலும்‌, ‘அஹிம்சை, சத்தியம்‌, பிறர்பொருளைக்கவராமை, சுத்தம்‌, இந்திரியங்களை அடக்குதல்‌ – ஆகியவை எல்லோருக்குமே பொதுவான தர்மங்கள்என்று சுருக்கமாகச்சொல்லலாம்‌! என்று சொல்கிறது. இதையே இன்னும்கொஞ்சம்விரிவாக மஹாபாரதம்எடுத்துக்கூறுகிறது. ‘உண்மையே பேசுவது; கோபத்திற்கு அடிமையாகாமல்இருப்பது; தன்னுடைய செல்வத்இல்பிறருக்கும்உதவுவது; மன்னிக்கும்மனப்பான்மை உடைய வனாகத்இகழ்வது; தன்மனைவியிடத்தில்குழந்தைகளைப்பெறுவது; தூய்மை; பகைமை பாராட்டாமல்இருப்பது; நேர்மை; தன்னை நம்பி இருப்பவர்களைக்காப்பாற்றுவதுஎன்ற ஒன்பதும்எல்லோரும்கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள்‌! என்று மஹா பாரதம்சொல்கிறது.

சரி. இந்த தர்ம விதிமுறைகளுக்கெல்லாம்எது ஆதாரமானது? வேதங்களே இவற்றுக்கெல்லாம்ஆதாரமானது என்று எல்லா நூல்களும்அடித்துச்சொல்கின்றன. ஆனால்‌, ஸ்மிருதிகளிலோ, மற்ற தர்ம சாஸ்த்ரங்களிலோ காணப்படுவது போல, வேதங்களில்ஒவ்வொரு செயலுக்கும்‌, ஒவ்வொரு சூழ்நிலைக்கும்ஏற்ற விதிமுறைகள்வகுத்துத்தரப்படவில்லை. இருந்தாலும்கூட தர்ம சாஸ்த்ரங்களுக்கு எல்லாம்வேதமே ஆதாரமாகக்கூறப்படுகிறது.

ஏன்‌? காரணம்இருக்கிறது. அடிப்படை தர்மங்களை வேதம்வகுத்து விட்டது. ‘உண்மையைத்தான்பேச வேண்டும்‌; பொய்யை பேசவே கூடாது; யாரையும்துன்புறுத்தக்கூடாது; தாயையும்தந்தையையும்தெய்வமாகப்போற்ற வேண்டும்‌; புறக்கணிக்கத்தக்கவை என்று சாஸ்த்ரங்கள்சொல்கிற காரியங்களைச்செய்யக்கூடாது; தர்மத்தின்பாதையை விட்டு அகலக்கூடாது…” என்பது போன்ற விஜமுறைகளை, வேதங்கள்ஆங்காங்கே எடுத்துச்சொல்லி இருக்கின்றன. அவற்றின்அடிப்படையில்தான்தர்ம சாஸ்த்ரங்களும்‌, ஸ்மிருதிகளும்இயற்றப்பட்டன.

வேதத்திற்கு முரண்பட்ட ஒரு தர்மசாஸ்த்ர வழிமுறையோ, ஒரு ஸ்மிருதி விதமுறையோ இருந்தால்‌, அது புறக்கணிக்கத்தக்கதே. இப்போது நம்நாட்டின்அரசியல்சட்டத்திற்கு விரோத மாக ஒரு சட்டம்‌ வந்தால்‌, அது செல்லுபடியாகாது என்று இருப்பது போல, வேதத்திற்கு முரணானவை, செல்லுபடியாகாதவை என்று கூறப்பட்டிருக்கிறது. இப்படி வேதமே ஆதாரம்‌ என்று எல்லா ஸ்மிருதிகளுமே கூறுகின்றன. அதே சமயத்தில்‌, ‘வேதங்கள்‌, ஸ்மிருதிகள்‌, சமூகத்தினால்‌ ஏற்கப்பட்ட நடைமுறைகள்‌, நல்‌ லெண்ணத்தின்பாற்பட்ட மனசாட்சிக்கு விரோதமில்லாத நடத்தை, பெரியோர்கள்‌ காட்டியுள்ள வழிமுறைகள்‌ – இவை எல்லாமே தர்ம விதிமுறைகளுக்கு ஆதாரமானவை’ என்றும்‌ பல ஸ்மிருதிகளும்‌ சொல்கின்றன. 

மனு ஸ்மிருதி என்பதே பிரபலமாகப்‌ பேசப்பட்டாலும்‌, அது ஒன்று மட்டும்‌ ஸ்மிருதி நூல்‌ அல்ல. அதையும்‌ சேர்த்து, ஏற்‌கனவே சொன்னது போல, பதினெட்டு ஸ்மிருதி நூல்கள்‌ உள்ளன. இவற்றில்‌ யாக்ஞ்வல்க்ய ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி போன்றவை மனு ஸ்மிருதிக்கு நிகரான முக்கியத்துவம்‌ பெற்றவை. ஹிந்து சட்டங்களை வகுக்கிறபோது, இவற்றின்‌ முக்கியத்துவம்‌ உணரப்‌ பட்டது. இவை தவிர, புராணங்கள்‌, இதிகாசங்கள்‌ ஆகியவையும்‌ தர்ம விதிமுறைகளைக்‌ கூறுகின்றன. அர்த்த சாஸ்த்ரம்‌ – அரசியல்‌ விதிமுறைகளைக்‌ கூறுகிறது. சுக்ர நீதி – ராஜ நீதிகளை எடுத்துச்‌ சொல்கிறது. இது போன்ற நூல்களும்‌, ஸ்மிருதிகளும்‌, தர்ம சாஸ்த்‌ரங்களும்‌ சேர்ந்துதான்‌ ஹிந்து சட்டத்திற்கு ஆதாரமாக அமைந்தன. 

மேலை நாடுகளெல்லாம்‌ சட்டங்களையும்‌, விதிமுறைகளையும்‌ பற்றி எண்ணாமல்‌ இருந்த காலத்திலேயே, இங்கு அமைந்த நீதி நிர்வாக முறையும்‌, சட்ட விதிமுறைகளும்‌ எவ்வளவு துல்லிய மாக ஆராயப்பட்டு வகுக்கப்பட்டன என்பது இந்த நூல்களில்‌ இருந்தெல்லாம்‌ தெளிவாகிறது. இதை மேலை நாட்டு சட்ட ஆராய்ச்சியாளர்களே கண்டு வியந்து எழுதி இருக்கிறார்கள்‌. 

ஸ்மிருதிகளில்‌ இப்போது அடிக்கடி பேசப்படுவது மனு ஸ்மிருதி என்பதால்‌, அதைக்‌ கொஞ்சம்‌ விவரமாகப்‌ பார்ப்போம்‌.