மனுஸ்ம்ருதி என்றவுடன் பலருக்கு நினைவுக்கு வரக் கூடியது, அது பற்றிய கண்டனங்கள்தான். ‘இது உயர் ஜாதியினரின் சதி… அதுவும் குறிப்பாக ப்ராம்மணர்களின் சூது… மனிதர்களை நாலு வகையாக்கி, அதில் நாலாம் வகையினரை மிகவும் தாழ்ந்த நிலையில் வைத்து புரியப்பட்ட கொடுமை… மொத்தத்தில் பெரும் அநீதியை இழைத்த நூல்’ என்றெல்லாம் மனுஸ்ம்ருதியைப் பற்றிய விமர்சனங்கள் பல ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வருகின்றன.
அப்படிப்பட்ட மனுஸ்ம்ருதியிலிருந்து, எடுத்த எடுப்பிலேயே சில பகுதிகளை நாம் பார்த்து விடுவோம்.
சூத்ரோ ப்ராம்மணதாமேதி
ப்ராம்மணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷ்த்ரியாஜ்ஜாதமேவம் து
வித்யாத்வைச்யாத்ததைவச
சூத்ரன், ப்ராம்மணன் ஆகலாம்); ப்ராம்மணனும் சூத்ரன் ஆகலாம்; அதே போல் க்ஷத்ரிய மற்றும் வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களின் மகன்களும் வேறு வர்ணத்தை அடையலாம்.
குரும் வா பாலவ்ருத்தெள வா
ப்ராம்மணம் வா பஹுச்ருதம்
ஆததாயினமாயாந்தம்
ஹன்யாதேவாவிசாரயந்
குருவோ, இளைஞனோ, வயோதிகளோ, ப்ராம்மணனோ, மெத்த கற்றவனோ ஆயினும் சரி, ஒருவன் வன்முறை எண் ணத்துடன் வந்தால், அவனை தயக்கமின்றி கொன்றுவிட வேண்டும்.
அஷ்டாபத்யம் து சூத்ரஸ்ய
ஸ்தேயே பவதி இல்பிஷம்.
க்ஷோடசைவ து வைச்யஸ்ய
த்வாத்ரிம்சத் க்ஷத்ரியஸ்யச.
ப்ராம்மணஸ்ய சது: வூஷ்டி:
பூர்ணம் வாபி சதம் பவேத்
த்விகுணா வா சது:
ஷஷ்டி தத் தோஷகுணா வித்தி: ஸ:
அறிந்து இருட்டு குற்றத்தைச் செய்கிற சூத்ரனுக்கு, வழக்கமான தண்டனையை விட எட்டு மடங்கு அதிகமான தண்டனையை விக்க வேண்டும்; வைசியனுக்கு பதினாறு மடங்கு; க்ஷத்ரியனுக்கு முப்பத்திரண்டு மடங்கு; குற்றத்தின் தன்மையை அறிந்தவன் என்பதால், ப்ராம்மணனுக்கு அறு பத்தி நான்கு மடங்கு தண்டனை அல்லது நூறு மடங்கு அல்லது நூற்றி இருபத்தெட்டு மடங்கு தண்டனை விதிக்க வேண்டும்
அப்ராம்ணாத் அத்யயனம்
ஆபத்காலே விதீயதே
அனுவ்ரஜ்யா ச சுச்ருஷா
யாவத் அத்யயனம் குரோ:
தவிர்க்க முடியாத நேரங்களில், ப்ராம்மணனானவன் ப்ராம்மணன் அல்லாத குருவிடமிருந்து போதனை பெறலாம்.
அப்படி போதனை பெறுகின்ற காலத்தில், அந்த குருவுக்கு அந்த மாணவன் பணிவிடை செய்ய வேண்டும்.
கோரக்ஷ்கான்வாணிஜிகாம்ஸ்ததா
காருகுசலவான்
ப்ரேஷ்யான்வார்துஷிகாம்ஸ்சைவ
விப்ராச்சூத்ரவதாசரேத்
மாடு மேய்ப்பது, வர்த்தகம் செய்வது, தொழில்களை நடத்துவது, நடிப்பு அல்லது சங்கதத்தை தொழிலாக மேற் கொள்வது, வட்டிக்கு பணம் விடுவது மற்றும் பிறரிடம் பணி செய்வது – போன்றவற்றில் ஈடுபடுகிற ப்ராம்மணர்கள், சூத்திரர்களாகவே நடத்தப்பட வேண்டும்.
சாஸ்த்ர விதிமுறைகளின்படி நடக்காத ப்ராம்மணனை, மனு தர்மம் எவ்வாறு அணுகுகிறது என்பதையும் பார்த்து விட்டு, மேலே செல்வோம் :
சாதுவைப் போல் வேடம் அணிந்து கொண்டு மற்றவர் களின் பொருளின் மீது விருப்பம் வைத்து, பொய்யைப் பரப்பி, கர்வம் கொண்டு, மற்றவர்களைப் பற்றிய நல்ல ் வார்த்தைகளைப் பொறுக்க முடியாத பொறாமைக்காரனாகத் இகழ்பவன், பூனையின் தன்மையை உடையவன் எனப் படுகிறான். தான் தேடுகிற இரை வெளியே வருகிற வரையில் அடக்க குணம் உள்ளது போல் நடித்து, இரை வெளியே வந்தவுடன் பாய்ந்து பிடித்து, அதைக் கொன்று இன்று விடுகிற குணம் பூனையினுடைய குணம்… இப்படிப்பட்ட குணமுடைய ப்ராம்மணன் நரகத்தில் வீழ்கிறான்… பூனை குணமுடைய ப்ராம்மணனுக்கோ, வேதங்களைக் கற்றறியாத ப்ராம்மணனுக்கோ ஒரு சிறிய தானத்தையும் கூட, நன்னடத்தை உள்ள மனிதன் செய்து விடக் கூடாது. இப்படிப்பட்ட ப்ராம்மணர்களுக்கு தானம் செய்யப்பட்டால், தானம் வாங்கியவனோடு சேர்ந்து தானம் கொடுத்தவனும் ௯ட துன்பத்தையே அனுபவிப்பான். வேதங்களிலும், சாஸ்த்ரங்களிலும் கூறப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்காத ப்ராம்மணனுக்கு சிராத்தத்தில் உணவளிக்கப்பட் டால், அந்த உணவு அரக்கர்களால் உட்கொள்ளப்பட்ட தாகிறது.
“ப்ராம்மணர்களுக்கு பல சலுகைகளை அளித்து, வசதி களைச் செய்து கொடுத்து விடுகிற நூல்! – என்று விமர்சிக்கப்படுகிற மனு ஸ்ம்ருதி, ப்ராம்மணர்களைப் பற்றிச் சொல்லியிருக்கிற சல நிபந்தனைகளை மேலே பார்த்தோம். ‘ப்ராம்மணனும் சூத்திர னாகலாம்; சூத்திரனும் ப்ராம்மணனாகலாம்… தன்னைக் கொல் இன்ற எண்ணத்தோடு வருகிற ப்ராம்மணனை, சற்றும் தயக்கம் இல்லாமல் கொன்றுவிட வேண்டும்… ஒரு குற்றத்தைப் புரிகிற ப்ராம்மணனுக்கு சாதாரண தண்டனையை விட, அறுபத்தெட்டு மடங்கு அதிக தண்டனையைக் கொடுக்க வேண்டும்… சில நேரங்களில் ப்ராம்மணர் அல்லாதவரிடத்திலும், ப்ராம்மணன் வேதம் கற்கலாம்… சூத்திரன் விருந்தாளியாக வந்தால், ப்ராம்மணன் அவனை உபசரிக்க வேண்டும்… வர்த்தகம், தொழில்கள் ஆகியவற்றில் ஈடுபடுகிற ப்ராம்மணர்கள், சூத்திரர் களாகவே நடத்தப்பட வேண்டும்… வேதத்தை நன்கு கற்று அறி யாமலும், சாஸ்த்ர விதிமுறைகளின்படி நடக்காமலும் உள்ள.ப்ராம்மணனுக்கு தானம் செய்தால், தானம் செய்கிறவன் நரகத்திற்குப் போவான்…! என்றெல்லாம் சொல்கிற ஒரு நூல், ப்ராம்மணர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து, அவனை மிகவும் செளகரியமாக வைக்கிற நூல் என்று கருதப் படுவது விந்தைதான்.
ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடக் கூடாது. நான்கு வர்ணங் களை சிருஷ்டி செய்தது மனு ஸ்ம்ருதி அல்ல. வர்ணங்கள் பற்றிய குறிப்பு ரிக் வேதத்திலேயே வருகிறது. ஆனால் வேத காலத்தில், பிறப்பினாலேயே ஒருவன் எந்த வர்ணத்தையும் சார்ந்தவனாகி விடவில்லை. பின்னர் இந்த நிலை மாறியது. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் இயல்புகளுக்கேற்ப ஒவ்வொரு வகையில் வாழ; ஒரு மனிதனின் வாழும் வகையே அவன் சந்ததிகளின் வாழும் வகையாக விட; காலப் போக்கில் இதுவே குடும்பத்தின் வாழும் வகையாக விட, வர்ணங்கள் பிறப்பினாலேயே அடையப் படுகின்றன என்ற நிலை தோன்றிவிட்டது. இந்த நிலை எப்போது தோன்றியது என்று சொல்ல முடியாவிட்டாலும், மஹாபாரதத்திலேயே ‘ப்ராம்மணன் யார்? மற்ற வர்ணத்தவர் யார் யார்? என்றெல்லாம் வருகிற விவாதங்களிலிருந்து, சுமார் 5000 வருடங் களுக்கு முன்பாகவே இந்த நிலை தோன்றியிருக்கலாம் என்று கருதக் கூடும். அப்படிப்பட்ட நிலையில்தான் மனு ஸ்ம்ருதி வந்திருக்கிறது. அப்படி இருந்தும் கூட, பிறப்பினால் மட்டுமே ப்ராம்மணனாகிறவனுக்கு முதன்மையைத் தர மனு ஸ்ம்ருதி முன் வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மனு ஸ்ம்ருதி ப்ராம்மணனுக்கு விதித்திருக்கிற நிபந்தனைகளை எல்லாம் பார்க்கும்பொழுது, ப்ராம்மணன் என்பது ஒரு அந்தஸ்தா அல்லது ஒரு தண்டனையா என்ற சந்தேகமே கூட வந்து விடும்; அவ்வளவு நிபந்தனைகள். அந்த நிபந்தனைகளை எல்லாம் ஏற்று, அந்த விதிமுறைகளுக்கெல்லாம் உட்பட்டு, நெறிமுறை தவறாத வாழ்க்கை வாழ்கிற ப்ராம்மணனுக்குத்தான், மனு தர்மம் சலுகைகளை அளித்தது. பிறப்பில் மட்டுமே ப்ராம்மணனாக இருந்து, மற்றபடி ப்ராம்மணனுக்குரிய விதிமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் வாழ்கிறவனுக்கு மனுதர்மம் அளித்த ஒரே ஒரு சலுகை, அரசனின் நீதி நிர்வாகத் துறையில் பதவி வகிப்பது மட்டும்தான். இப்படி ஒரே ஒரு ஷரத்தில் ‘பிறப்பினால் மட்டுமே ப்ராம்மணன்’ என்று இருப்பவனுக்கு முன்னுரிமை தரப்பட்டிருப் பதில் இருந்தே – மற்ற ஷரத்துகவில் குறிப்பிடப்பட்டிருக்கிற ப்ராம்மணர்கள் பிறப்பினால் மட்டுமல்லாமல், வாழும் வகையினாலும் ப்ராம்மணர்களாகத் திகழ வேண்டும் என்பது எளிதாகப் புரிகிற விஷயம். அதாவது மனு ஸ்ம்ருதியில் ப்ராம்மணர்களுக்கு அளிக்கப்படுகிற சலுகைகள் (மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றைத் தவிர) எல்லாமே பிறப்பினால் மட்டுமல்லாமல், வாழும் வகையினாலும் ப்ராம்மணனாகத் திகழ்ந்தவர்களுக்கே.
பல கடுமையான நிபந்தனைகளையும், வாழும்,வகைகளையும் ப்ராம்மணனுக்கு விதித்து விட்ட மனு ஸ்ம்ருதி, அப்படிப்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு வாழ்கிற ப்ராம்மணனுக்கு சில சலுகைகளைத் தந்தது. இன்றைய இடஒதுக்கீட்டை எடுத்துக் கொண்டால் கூட, அதனால் பயன் பெறுபவர்களுக்கு எந்த நிபந்தனையும் கிடையாது. ஆனால் அன்று சில விஷயங்கீளில் ப்ராம்மணனுக்கு முன்னுரிமை தந்த மனு ஸ்ம்ருதி, அவனுக்கு விதித்த டிஸிப்ளின் மிகவும் கடுமையானது. அந்த டிஸிப்ளினை ஏற்று ஒருவன் வாழ்ந்தால், அவனுக்கு எந்த சமூகமுமே மரியாதை அளிக்கும்.
மனு ஸ்ம்ருதி ப்ராம்மணர்களுக்கு விதிக்கிற கடுமையான நிபந்தனைகளை பிறகு பார்ப்போம். இப்போதைக்கு பிறப்பை மட்டும் வைத்துக் கொண்டு, எந்த வகுப்புக்கும் மனு ஸ்ம்ருதி பெரும் சலுகைகளைக் காட்டிவிடவில்லை என்பதை மட்டும் மனதில் வாங்கிக் கொண்டு, மேலே உள்ள பல விஷயங்களைப் பார்ப்போம். நல்ல குணங்கள்; ப்ரம்மச்சாரியின் கடமைகள்; மாணவர்களுக்கான விஇமுறைகள்; வெவ்வேறு இருமண வகைகள்; விருந்தாளிகள் நடத்தப்பட வேண்டிய விதம்; இதி என்றும், இவசம் என்றும் வழங்குகிற சிராத்தத்தின் முக்கியத்துவம்; பொதுவாக இல்லறத்தில் உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்; ஏற்கத் தகாத மற்றும் ஏற்கத் தக்க உணவு வகைகள்; மனைவியின் கடமை; நான்கு வர்ணத்தவர்களின் கடமைகள்; அரசனின் அதிகாரமும், கடமையும்; ஒரு ராஜ்யத்தைப் பாதுகாப்பதற்காக அரசன் கடைப்பிடிக்கக் கூடிய வழிமுறைகள்; நீதிமன்ற அமைப்பு: வழக்குகளை நடத்தும் வழிமுறைகள்: சாட்சியங்களை ஏற்பதற்கும் நிராகரிப்பதற்குமான விதிமுறைகள்; வெவ்வேறு குற்றங்களுக்கான தண்டனைகள்; சொத்துரிமைக்கான விதிமுறைகள்; பிராயச்சித்த வழிமுறைகள்; மறுபிறவி; ஞானம் எய்தும் வழிமுறைகள்; தன்னைத்தானே ஒருவன் உயர்த்திக் கொள்வதற்கான வழிமுறைகள்… என்று ஆட்சி நிர்வாகத்திலிருந்து, குடும்பக் கடமைகள் உட்பட, தனிமனித தர்மங்கள் வரை பல்வகையான விதிமுறைகளை மனுஸ்ம்ருதி வகுத்திருக்கிறது.
ஆனால், ஒரு விஷயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும். இப்போது பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டால், அது நாடு முழுவதும் செல்லுபடியாகிறது. அது செல்லுபடியாகும் வகையில் மக்களை நிர்பந்திக்கும் அதிகாரம், மத்திய அரசுக்கு இருக்கது. அதற்கான அதிகாரிகள் நாடெங்கும் இருக்கிறார்கள். ஆனால் மனுஸ்ம்ருதியில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் இப்படிப்பட்டவையல்ல. ஏனெனில் எல்லா அரசர்களும் அதை ஏற்று அதன்படியே நடந்தார்கள் என்று சொல்ல முடியாது. பாரத நாடு கலாச்சார ரீதியாக ஒன்றுபட்டு இருந்தாலும், நிர்வாகம் மற்றும் அரசியல் ரீதியாக பல ராஜ்யங்களாக இருந்தபோது, சில அரசர்கள் இதை ஏற்றிருக்கலாம்; பலர் இதைப் பற்றி கவலைப்படாமல் இருந்திருக்கலாம். மனுஸ்ம்ருதி மட்டுமல்லாமல் வேறு பல ஸ்ம்ருதிகளும் இருந்ததால், வெவ்வேறு ராஜ்யத்தில். வெவ்வேறு: நூலின் அடிப்படையில் அரசன் ஆட்சி செலுத்தி இருக்கக் கூடும்.
மனுஸ்ம்ருதி இயற்றப்பட்டது சுமார் கி.மு.200 ஆண்டுகளுக் கும் முன்பாக என்று இப்போது சொல்கிறார்கள். அதற்கு முன் பாகவே கூட மனுஸ்ம்ருதி இயற்றப்பட்டிருக்கலாம். ஆனால் இ.மு. 200 என்று எடுத்துக் கொள்ளும்பொழுதே – உலகன் பல்வேறு நாடுகளில், சட்டத்திட்டங்கள் ஒழுங்கு முறைப்படுத்தப்படாமல் இருந்த சமயத்திலேயே – நீதிமன்றம், வழக்கு விசாரணை வழி முறை, சாட்சியங்கள் ஏற்பு மற்றும் நிராகரிப்பு, குற்றங்களுக்கான தண்டனை… என்றெல்லாம், சட்டத் திட்டங்களை பாரதம் கிண்டிருந்தது என்பதற்கு, மனுஸ்ம்ருதி ஒரு அத்தாட்சி. இப்படிப் பட்ட வியக்கத்தக்க முறையில் அமைந்திருக்கிற இந்த நூலிலிருந்து சில பகுதிகளை அடுத்துப் பார்ப்போம்.