அரசனின் அதிகாரங்கள், கடமைகள்

துறவைப் பற்றியும்மனுஸ்ம்ருஇ பேசுகிறது : ‘பிரம்மச்சாரியாக இருந்து வேதங்களைக்கற்று, விதிமுறைகளின்படி இல்லறம்நடத்தி, மக்களைப்பெற்று, சக்திக்கேற்ப யாகங்களைச்செய்து பின்னர்‌, மோக்ஷ மார்க்கத்தை நாட வேண்டும்‌… சகல ஜீவராசிகளுக்கும்தன்னால்எந்தக்கேடும்வராது என்ற விரதம்பூண்டு, வீட்டை விட்டு வெளியேறி துறவறம்பூண்டவன்மேன்மையான உலகங்களை எய்துகிறான்‌… துறவுக்கேற்ற சின்னங்களை ஏற்று, எல்லா ஆசைகளையும்புறக்கணித்து, பேச்சையும்பெருமளவு விடுத்து, கிராமத்தில்பிட்சை பெற்று, நண்பர்களோ, எதிரிகளோ இல்லாமல்‌, ஊதியத்திற்காக காத்திருக்கும்ஊழிய னைப்போல, அவன்மரணத்திற்காக காத்திருப்பானாக! தன்னை ஏசுபவர்களையும்அவன்பொறுப்பானாக! இவ்வுலக வாழ்க்கைக்குரிய விஷயங்கள்பற்றி பேசுவதை அவன்தவிர்ப்பானாக

 ‘சாஸ்திரம்கற்பிப்பது, சகுனம்சொல்வது, ஜோதிடம்பார்ப்பது போன்றவற்றைச்செய்து தானம்பெற அவன்முயற்சிக்கக்கூடாதுதண்டத்தையும்‌, கமண்டலத்தையும்ஏந்தி, யாருக்கும்எந்த சிரமத்தையும்ஏற்படுத்தாமல்‌, அவன்கால்போன வழியில்போக வேண்டும்‌… 

ஒரு தினத்திற்கு ஒருமுறை அவன்பிட்சையை நாடலாம்‌; ஆனால்அதிகமான அளவு உணவு பெறக்கூடாது; வீடுகளில்உள்ளவர்கள்அனைவரும்சாப்பிட்டு முடிந்த நேரத்திற்குப்பிறகு, அவன்பிட்சையை நாட வேண்டும்‌… பிட்சை கிடைக்காவிடில்அவன்வருந்தக்கூடாது; உயிர்வாழ்வதற்குத்தேவையான அளவு உணவையே அவன்பிட்சையாகப்பெற வேண்டும்‌… 

இந்த்ரியங்களை அடக்கி, விருப்புவெறுப்புகளைத்தவிர்த்து, எல்லா ஜீவராசிகளிடமும்கருணை காட்டி, அவன்வாழ்வானாக… 

இரவானாலும்சரி, பகலானாலும்சரி, சிறிய புழு, பூச்சிகள்கூட தன்னால்துன்புறுத்தப்படாத வகையில்‌, அவன்மிகவும்ஜாக்கிரதையாக நடந்து செல்ல வேண்டும்‌… துறவிக்குரிய வகையில்முறையாக வாழ்ந்தால்‌, அவன்பிரம்மத்துடன்ஐக்கியமாகிறான்‌’. 

அடுத்து, மனு ஸ்ம்ருதி பற்றி, ஒரு விஷயத்தைப்பார்ப்போம்‌. ப்ராம்மணன்‌, க்ஷத்ரியன்‌, வைச்யன்‌, சூத்ரன்‌ – என்ற நான்கு வர்ணங்களைச்சேராத, ‘பஞ்சமன்‌’ என்ற ஒரு பிரிவு உருவான தற்கு மனுஸ்ம்ருதியே ஆதாரம்‌ – என்று ஒரு விமர்சனமும்உண்டு. ஆனால்மனுஸ்ம்ருதி

நாஸ்தி து பஞ்சம

ஐந்தாவதாக ஒரு பிரிவு கிடையாது‘ 

என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல்தெளிவாகக்கூறியிருக்இறது.. 

அத்துடன்மனு ஸ்ம்ருதி நின்று விடவில்லை. ‘நான்கு வர்ணங்களில்சேராதவர்களாகச்சிலர்இருந்தால்‌, அவர்களை எப்படி, எதில்சேர்ப்பது? – என்ற கேள்வி எழக்கூடும்என்பதால்‌, அதற்கும்அது விடையளிக்கிறது

நான்கு வர்ணங்களில்சேராதவர்கள்‌, எதைச்சார்ந்தவர்கள்என்பதைக்கண்டறிய, அவர்களுடைய நடத்தையே, சரியான நிர்ணயத்திற்கு ஆதாரமாக அமைய வேண்டும்‌. 

அதாவது, ஒருவனின்நடத்தையை வைத்தே, அவனுடைய வர்ணப்பிரிவு நிச்சயிக்கப்பட வேண்டும்என்ற கருத்தை, மனுவும்இங்கே ஏற்கிறார்‌. வேறொன்றையும்கவனிக்க வேண்டும்‌. நான்கு வர்ணங்களில்‌, ப்ராம்மணனுக்குத்தான்மிகக்கடுமையான நிபந்தனைகள்விதிக்கப்பட்டன

நீண்ட நாட்களுக்குத்தேவைப்படக்கூடிய அளவு உணவுப்பொருட்களை சேமிக்கக்கூடாது என்பதிலிருந்துசெல்வம்ஈட்டுவதில்முனைப்பு இருக்கக்கூடாது என்பது உட்படநியமங்கள்மற்றும்நெறிமுறைகளிலிருந்து தவறினால்‌, சமூகத்தினால்ஒதுக்கப்பட வேண்டியவன்‌ – என்பது வரை, பல கடுமையான வழிமுறைகள்ப்ராம்மணனுக்கு மனுவினால்விஇிக்கப்பட்டுள்ளன

அரசன்‌, ப்ராம்மணனையும்விட உயர்ந்தவனாக, தெய்வாம்சம்பொருந்தியவனாக வர்ணிக்கப்படுகிறான்‌; வைச்யன்வர்த்தகம்செய்வதில்பூர்ண சுதந்திரம்பெறுகிறான்‌; வேதம்கற்பது தவிர மற்ற எல்லாவற்றையும்கற்று, பல வழிகளிலும்செல்வம்ஈட்டும்வாய்ப்பு சூத்ரனுக்கு அளிக்கப்பட்டது. ஆனால்ப்ராம்மணனுக்கோ, பெரும்கட்டுப்பாடுகள்‌. இதுதான்மனு சுண்டவர்ணப்பிரிவுகளின்உரிமைகள்‌ ‘. 

ஏற்கெனவே பார்த்தபடி, மனு ஸ்ம்ருதியில்ப்ராம்மணனுக்குக்கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கும்‌, நிபந்தனைகளுக்கும்‌, விதி முறைகளுக்கும்உட்பட்டு வாழ்கிறவன்‌, சமூகத்தினால்மிக்கப்படுவதில்எந்தத்தவறுமில்லை. ஏனென்றால்அப்படிப்பட்டவன்வாழ்வதே சமூகத்திற்காகத்தான்‌. அந்த மாதிரி ப்ராம்மணர்கள்இன்று எவரும்இல்லை

அடுத்து ஆட்சி முறை பற்றி மனுஸ்ம்ருதி சொல்வதைப்பார்ப்போம்‌. 

அரசனுக்கு மனு ஸ்ம்ருதி மிக உயர்ந்த ஸ்தானத்தை அளித்திருக்இறது. இந்திரன்‌, வாயுதேவன்‌, யமன்‌, சூரியன்‌, அக்னி தேவன்‌, வருணன்‌, சந்திரன்‌, குபேரன்‌ – ஆகியோரின்அம்சங்களை எல்லாம்ஒரு அரசன்கொண்டிருக்கிறான்என்று மனுஸ்ம்ருதி சொல்கிறது. ‘நெருப்பை தீண்டி விடுகிற மனிதன்ஒருவனை அந்தத்தீ சுட்டு எரித்துவிடும்‌; ஆனால்அரசனுடைய கோபம்என்கிற தீ, அதைத்தூண்டுகிறவனை மட்டுமல்லாது அவனுடைய குலத்தையும்‌, உடமைகளையும்சேர்த்து பொகக்கிவிடும்‌.”

அரசனின்மாட்சிமையைப்பற்றி மிகவும்சிறப்பாகப்பேசுற மனுஸ்ம்ருதி, அவனுடைய கடமைகளையும்விவரிக்கிறது. ‘அரசனிடம்இருக்கும்‌ ‘தண்டம்‌’ என்கிற தண்டனை அளிக்கிற அதிகாரம்பெரும்கமையுடையது. தகுதி இல்லாத அரசர்களினால்‌, அதை சுமக்க முடியாது. அப்படிப்பட்ட தகுதியற்ற அரசர்களையும்‌, அவர்களுடைய நண்பர்களையும்‌, சுற்றத்தார்களையும்அந்ததண்ட நீதியே அழித்து விடும்‌… உண்மையையே நாடுகிறவனாகவும்‌, அறிவுடையவனாகவும்‌, நல்ல ஆலோசகர்களை உடையவனாக வும்‌, தர்ம சாத்திரங்களை மீறாமல்நடக்கின்றவனாகவும்உள்ள ஒரு அரசனால்தான்‌, தண்ட நீதி என்கிற தண்டனை சாத்திரத்தை சரிவர பரிபாலிக்க முடியும்‌… 

எதிரிகளை வீழ்த்துவதில்கடுமையைக்காட்ட வேண்டிய அரசன்‌, தன்னுடைய நாட்டில்மிகவும்நியாயத்துடனும்‌, தர்மத்துடனும்நடந்து கொள்ள வேண்டும்‌…

 ‘கர்வம்ஒரு அரசனுக்கு இருக்கவே கூடாது. கர்வத்தினாலேயே அழிந்து விட்ட அரசர்கள்பலர்உண்டு. மாறாக, இழந்த ராஜ்யத்தையும்அடக்கத்தினால்மீண்டும்பெற்ற அரசர்களும்பலர்உண்டு… 

சதா வேட்டையாடுதல்‌, சூதாடுதல்‌, பகலில்உறங்குதல்‌, அவதூறு பேசுதல்‌, உடல்இன்பத்தையே நாடுதல்‌, குடி மயக்கத்திற்கு ஆளாவது, சங்கதம்‌, நடனம்போன்றவற்றில்அளவுக்கு அதிகமாக ஈடுபடுவது, சோம்பலுற்றிருப்பதுஆகிய குணங்கள்ஆசையிலிருந்து பிறப்பவை; ஏமாற்றுதல்‌, தொட்ட தெற்கெல்லாம்ஆத்திரமடைதல்‌, அஜாக்கிரதையாக இருப்பது, மற்றவர்களை துன்புறுத்துவதில்இன்பம்காண்பது, பொறாமை, எல்லோரிடமும்குற்றம்காண்பது, மற்றவன்உடமையை அப கரிக்க முனைவது, நியாயமாக இருப்பித்தர வேண்டிய நிதிகளை தராமல்இருப்பது, கடுமையான மொழிகளைப்பேசுவது, ஹிம்சிப்பதுஆகிய குணங்கள்கோபத்தினால்விளைகின்றவை

மேற்சொன்ன ஆசையினால்விளைகிற குற்றங்களையும்‌, கோபத்தினால்விளைகிற குற்றங்களையும்ஒரு அரசன்தவிர்க்க வேண்டும்‌. இவற்றுக்கு அடிமையாகி விட்ட அரசன்அழி கிறான்‌… 

அதாவது, அரசன்கண்டிப்புடன்நடந்து கொள்ள வேண்டும்என்று கூறுகிற மனுஸ்ம்ருதியே, அவனுடைய கண்டிப்பில்தர்மமும்‌, நியாயமும்இருக்க வேண்டும்என்பதை வலியுறுத்து இறது. ‘தண்டனைக்கு பயந்துதான்மனிதர்கள்ஒழுங்கு தவறாமல்இருப்பார்கள்‌! என்று கூறுகிற மனுஸ்ம்ருதியே, ‘அந்த தண்ட நீதியை அரசன்நேர்மை தவறாமல்செயல்படுத்த வேண்டும்‌” என்றும்வலியுறுத்துகிறது. ‘எதிரிகளை வீழ்த்துவதில்தயவு தாட்சண்யத்தை அரசன்காட்டக்கூடாது! என்று கூறுகிற மனு ஸ்ம்ருதியே, ‘தன்னுடைய ராஜ்யத்தில்அரசன்கருணை மிக்கவனாக நடந்து கொள்ள வேண்டும்‌’ என்றும்வலியுறுத்துகிறது

ஆக, அரசனுக்கு இரு முகங்கள்தேவை. ஒன்றுகருணை, இன்னொன்றுகடுமை. எந்தெந்த நேரங்களில்எதைப்பயன்படுத்த வேண்டும்என்று அறிந்து மனசாட்சிக்கு விரோதம்இல்லாமல்‌, அந்த வகையிலேயே செயல்படுகிற அரசன்மேன்மையுறுகிறான்என்பதையேமனுஸ்ம்ருதியின்கட்டளைகளில்இருந்து நாம்புரிந்து கொள்கிறோம்‌. 

அரசனின்ஆலோசகர்கள்‌, அவனுடைய நிர்வாகக்கடமைகள்‌, சொத்துரிமை, பல வகைக்குற்றங்களும்‌, அவற்றிற்கான தண்டனை களும்‌, போர்முறை போன்றவை பற்றியும்‌ – மனுஸ்ம்ருஇி நிறையவே சொல்லி இருக்கிறது. அது போன்ற விஷயங்களில்ஒரு சிலவற்றை அடுத்து பார்ப்போம்‌.