பழமையில் காணப்படும் புதுமை

மனு ஸ்ம்ருதியை தவிர உள்ள வேறு பல ஸ்ம்ருஇகளில்‌, பராசர ஸ்ம்ருஇக்கு ஒரு முக்கிய ஸ்தானம்அளிக்கப்படுகிறது. இது மிகப்பழமையானது. யுத்த காலம்‌, பயண காலம்போன்றவற்றில்தர்ம விதிமுறைகளை முறையாகக்கடைப்பிடிப்பது கடினம்என்பதால்‌, அந்த மாதிரி நேரங்களில்பல விதிவிலக்குகளை பராசரர்ஏற்படுத்தி இருக்கிறார்‌. இது மனுஸ்ம்ருஇக்கும்கூட முந்தையது என்ற கருத்து பண்டிதர்களிடையே நிலவுகிறது

யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி, ஹிந்து சட்ட வழிமுறைகளுக்கு முன்னோடியாகத்இகழ்வது. சந்தேகத்திற்கு இடமில்லாமல்விதி முறைகளை வகுப்பதில்‌, இது மனுஸ்ம்ருதியை விட ஏற்புடையது என்ற கருத்து உண்டு. எழுத்து மூலமான பத்திரங்களின்முக்கியத்துவம்‌, அடமானம்‌, கூட்டு வர்த்தகம்‌, போன்றவற்றைப்பற்றிய விஇமுறைகள்‌, போன்றவற்றிற்கு மனு ஆரம்பம்செய்து வைத்தார்என்றால்‌, யாக்ஞவல்க்யர்இந்த விதிமுறைகளை மிகவும்தெளிவாக்கி இருக்கிறார்‌. பல சிவில்‌, மற்றும்கிரிமினல்சட்டங்களுக்கு எல்லாம்முன்னோடியாகத்திகழ்கிற இந்த ஸ்ம்ருதிக்கு, எழுதப்பட்டுள்ளமிதாக்ஷரம்‌’ என்ற நூல்‌, சமீப காலம்வரை, ஹிந்து சட்டத்தைப்பொறுத்தவரையில்‌, நீதிமன்றங்களில்இறுதியான ஆதாரமாகக்கருதப்பட்டு வந்த நூல்‌. மனுஸ்ம்ருதியை ஒட்டியே, பிற்கால ஹிந்து சட்டங்கள்வகுக்கப்பட்டன என்ற கருத்து முற்றிலும்சரியானதல்ல. யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதியின்விதிமுறைகளை ஒட்டித்தான்பிற்கால ஹிந்து சட்டங்கள்வகுக்கப்பட்டன. மனுஸ்ம்ருதி காட்டிய கடுமையான அணுகுமுறை யில்பல யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதியில்பெரிதும்தளர்த்தப்பட்டன என்பது கவனத்திற்குரியது

நாரத ஸ்ம்ருதியில்‌, பல வைதிக விஷயங்கள்தவிர்க்கப்பட்டு, சிவில்மற்றும்கிரிமினல்சட்ட விதிமுறைகளே முக்கியத்துவம்பெற்றன. இந்த வகையில்‌, இது வேறு பல ஸ்ம்ருதிகளிலிருந்து மாறுபட்டது. நீதி பரிபாலன நடைமுறை பற்றி விரிவான விதிமுறைகளை வகுக்கிற நூல்இது. இன்று மிகவும்புரட்சிகர மான கருத்துக்கள்என்று வர்ணிக்கப்படுகிற பல சட்டத்தத்துவங்கள்நாரத ஸ்ம்ருதியில்காணப்படுகின்றன

ஒருவர்மரணமடைந்த பின்‌, அவருடைய சொத்தில்மகன்களைப்போலவே, அவனுடைய மனைவிக்கும்சம பங்கு; கல்யாணமாகாத பெண்இருந்தால்அவளுக்கும்மகன்களைப்போலவே சொத்தில்பங்குஎன்றெல்லாம்பெண்கள்சொத்து உரிமைக்காக வழி செய்திருக்கிறது நாரத ஸ்ம்ருதி. ஆக, இந்த மாதிரி எண்ணமே இப்போதுதான்தோன்றிய விஷயம்என்று நினைப்பது தவறு. இந்த ஸ்ம்ருதியின்படி காணாமற்போய்விட்ட கணவன்‌, குறிப்பிட்ட காலத்திற்கு இரும்பி வரவில்லை என்றால்‌ – அவனுடைய மனைவி வேறு ஒரு திருமணம்செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறாள்‌. அதைப்போலவே விதவை விவாஹம்செய்து கொள்வதும்‌, இந்த ஸ்ம்ருதியில்அனுமஇக்கப்படுகிறது. விதிமுறைகளுக்கு உட்பட்ட, லைசென்ஸ்பெற்ற சூதாட்டம்இந்தஸ்ம்ருதியில்அனுமஇக்கப்படுகிறது

இன்றைய சட்டத்தில்‌, கூட்டு வர்த்தகம்நடக்கிறபோது, அந்த கூட்டில்‌ (பார்ட்னர்ஷிப்‌) உள்ள ஒரு கூட்டாளியின்‌ (பார்ட்னரின்‌) வர்த்தக நடவடிக்கைகள்‌, மற்ற கூட்டாளிகளையும்கட்டுப்படுத்தும்‌. ‘அவன்செய்து விட்டான்‌; எங்களுக்குத்தெரியாது; நாங்கள்பொறுப்பல்ல! என்று கூறி மற்ற பார்ட்னர்தப்பிக்க முடியாது. அவர்களும்பொறுப்பேற்க வேண்டும்‌. முன்னேறிய உலகின்இந்த சட்ட வழிமுறை, அன்றே ப்ருஹஸ்பதி ஸ்ம்ருதியில்காணப்படு கிறது. இதுவும்நாரத ஸ்ம்ருதி போலவே, வைதீக விஷயங்களை எடுத்துக்கொள்ளாமல்‌, சிவில்மற்றும்கிரிமினல்சட்ட வழி முறைகளையே பேசுறது

ஸ்ம்ருதி நூல்களில்கடைசியாக வந்ததாகக்கருதப்படுவது காத்யாயன ஸ்ம்ருதி. கடைசியாக வந்தது என்றால்‌, ஏதோ சமீப காலத்தில்வந்தது அல்ல. இதுவே, கி.பி. 300-ஆவது நூற்றாண்டில்வந்தது என்று கூறப்படுகிறது. கடைசியாக வந்தது ஸ்ம்ருதி நூலே, 8300 ஆண்டுகளுக்கு முன்பாக வந்தது என்றால்‌, அதற்கு பல நூற்றாண்டுகள்முன்னதாக வந்த மற்ற ஸ்ம்ருதி நூல்கள்எவ்வளவு பழமையானதாக இருக்க வேண்டும்‌! 

காத்யாயன ஸ்ம்ருதியில்‌, இன்றைய சட்டத்தத்துவங்களில்ஒன்றாகியரெஸ்ஜுடிகேடாஎன்ற தத்துவம்காணப்படுகிறது. அதாவது, ஏற்கெனவே இர்மானமாதி, தீர்ப்பு அளிக்கப்பட்டு விட்ட விஇமுறை. ஏற்கெனவே இர்ப்பாகி உறுதி செய்யப்பட்டு விட்ட விஷயத்தை ஒட்டியே மீண்டும்மீண்டும்வழக்கு தொடரப்படுவதைத்தடுக்கிற வழிமுறை கூட ஒரு ஸ்ம்ருதி நூலில்வகுக்கப்பட்ட வழிமுறைதான்என்பது, நமது சிந்தனையாளர்கள்எவ்வளவு ஆழமாக யோசனை செய்து இந்த விதிமுறைகளை எல்லாம்வகுத்துள்ளார்கள்என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு

வழக்குத்தொடுப்பவர்‌, வேறு ஒருவர்உதவி கொண்டு (வழக்கில்வைக்கிற வழிமுறை) தனது வழக்கை நடத்த காத்யாயன ஸ்ம்ருதி வழி செய்கிறது. ஒரு சொத்து, உரிமையாளனாகவே இருந்தால்கூட, அது அடமானம்வைக்கப்படலாம்என்ற விதி முறையையும்இந்த நூல்வகுத்திருக்கிறது. நீதிமன்றத்திற்கு உதவுகிற ஜூரி வழிமுறை கூட இந்நூலில்காணப்படுகிறது. மனு சமர்ப்பிப்பது, எழுத்து மூலமான ஆதாரங்களைக்கொடுப்பது, சாட்சியங்களை நீதிமன்றத்தின்முன்நிறுத்துவது, போன்ற வற்றிற்கான விதிமுறைகளையும்இந்நூல்விவரிக்கிறது. ப்ராம்மணனுக்கு தூக்குத்தண்டனை கிடையாது என்ற விதிமுறையை மாற்றி, இந்த ஸ்ம்ருதி சில குற்றங்களுக்கு ப்ராமணனுக்கும்தூக்குத்தண்டனை உண்டு என்ற விதிமுறைகளைக்கொண்டு வந்தது. இது நடந்தது 2300 வருடங்களுக்கு முன்பாக என்பதை நாம்மறக்கக்கூடாது.

இப்படி பல ஸ்ம்ருதிகள்உள்ளன. இவற்றைத்தவிர, ‘ஸுத்ரங்கள்‌! என்ற நூல்களும்‌, பல விதிமுறைகளை வகுத்திருக்கின்றன. இவை மூன்று வகையானவை. ச்ரெளத ஸுத்ரங்கள்‌, யாகங்கள்போன்ற சடங்குகளின்விதிமுறைகளை வகுப்பவை; க்ருஷ்ய ஸுத்ரங்கள்‌, மனிதனின்குடும்ப வாழ்க்கையை ஒட்டிய விதிமுறை களைக்கூறுபவை; தர்ம ஸூத்ரங்கள்‌; சட்டத்இட்டங்களை வகுப்பவைஇவைதான்ஹிந்து தர்மத்தின்படியான சட்ட நூல்களின்ஆரம்பம்‌; ஸ்ம்ருதி நூல்களுக்கும்இவை முற்பட்டவை என்பது பண்டிதர்களின்அபிப்பிராயம்‌.

இவற்றுள்கெளதம தர்ம ஸூத்ரம்மிகவும்பழமையானது. வைதீக காரியங்கள்‌; மற்றும்சட்டத்இட்டங்கள்ஆகியவற்றைப்பற்றிய விதிமுறைகளை இது கூறுகிறது. விவசாயிகள்‌, வர்த்தகர்கள்‌, வட்டிக்கு பணம்தருபவர்கள்போன்ற பல துறையினரின்பழக்க வழக்கங்களால்ஏற்பட்டு விட்ட விதிமுறைகளுக்கு, இந்த நூல்சட்ட அந்தஸ்தை அளிக்கிறது.

போதாயன தர்ம ஸுத்ரம்‌, வர்த்தகம்அரசனின்கட்டுப்பாட்டுக்குள்அடங்கியதாக இருக்க வேண்டும்என்று கூறுகிறது; கடல்கடந்து செய்யப்படுகிற வர்த்தகத்திற்கு வரி விதிப்பு, இன்றைய எக்ஸைஸ்ட்யூட்டி போல, உற்பத்தி செய்யப்படுகிற பொருட்கள்மீதான வரி விதிப்பு என்ற வழிமுறையை ஏற்படுத்தியுள்ள நூல்இது.

தர்ம ஸூத்ரங்களுக்கு இடையே சில மாறுபட்ட அணுகுமுறை கள்காணப்பட்டன. காலத்தை ஒட்டிய மாறல்களில்விளைந்த மாற்றங்கள்இவை. இதற்கு முந்தைய சில ஸூத்ரங்களைப்போல்அல்லாமல்‌, வசிஷ்ட தர்ம ஸூத்ரம்சுவீகாரம்எடுப்பதை அனு மதிக்கிறது. ஆபஸ்தம்ப ஸூத்ரம்‌, சுவீகாரத்தை தடை செய்கிறது. வைதீக சடங்குகள்‌, விவாகங்கள்போன்றவற்றிற்கெல்லாம்வழி முறைகளும்‌, விதிமுறைகளும்வகுத்துள்ள இந்த நூலில்இறுதியாகச்சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயம்‌, மிகவும்முக்கியமானது. “நான்எல்லாவற்றையும்சொல்லி விடவில்லை. ஆகையால்சந்தேகம்ஏற்படுகிறபோது, ஸ்த்ரீகளையும்‌, நான்காவது வர்ணத்தாரையும்கலந்து ஆலோசித்து, அவர்கள்சொல்கிறபடி செய்யவும்‌’ என்று கூறுகிறார்ஆபஸ்தம்பர்‌. 

சாத்திர அறிவு, பழக்க வழக்கங்களை அனுசரித்தே செல்ல வேண்டும்என்ற எண்ணத்தின்அடிப்படையில்அமைந்துள்ளது ஆபஸ்தம்பரின்இந்த பிரகடனம்‌.  

இதைத்தவிர ஹரித தர்ம ஸூத்ரம்‌, விஷ்ணு தர்ம ஸித்ரம்‌, என்றும்வேறு தர்ம ஸூத்ரங்களும்உள்ளன. உலகில்வேறு எந்த பகுதியிலும்‌, மனித வாழ்க்கைக்கோ, விலங்கினங்களுக்கோ, விரிவான சட்டத்இட்டங்கள்எதுவும்வகுக்கப்படாத நிலையில்‌, அதைப்பற்றிய சிந்தனையே அங்கெல்லாம்எழாத சமயத்தில்‌, பாரத நாட்டில்இது பற்றி எல்லாம்விரிவான நூல்கள்இயற்றப்பட்டன என்பது பெருமைக்குரிய விஷயம்‌. இப்படி சட்டத்இட்டங்களை வகுத்ததோடு மட்டுமல்லாமல்‌, இவையெல்லாம்காலப்போக்கில்‌, மாறுதலுக்குட்படக்கூடியவை என்பதையும்அன்றைய சிந்தனையாளர்கள்உணர்ந்திருந்தது, அவர்களுடைய விரிந்த பார்வைக்கு அத்தாட்சியாக இருக்கிறது

ஒரு காலத்தில்தர்மம்என கருதப்பட்ட வழிமுறை, பின்னொரு காலகட்டத்தில்மக்களால்வெறுக்கப்படுகிற நிலையை அடைந்தால்‌, அப்போது அந்த வழிமுறைகளை கைவிட வேண்டும்என்று யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி கூறுகிறது

ப்ருஹஸ்பதி இயற்றிய நூல்இப்படியும்கூறுகிறது : சாத்திரத்தின்படி மட்டுமே விஷயத்தைப்பார்க்கும்போது, தவறு நேர்ந்து விடலாம்‌; நியாயமான காரணத்திற்கு உட்படாத அம்மாதிரி முடிவு தர்மத்திற்கே இழுக்காகும்‌. ஆகையால்நியாய சபையில்எடுக்கப்படுதிற முடிவுகள்‌, சாத்திரத்தை மட்டுமல்லாமல்‌, நடை முறை காரண காரியங்களை ஒட்டியும்அமைய வேண்டும்‌’, 

அதாவது கண்மூடித்தனமாகவோ, பிடிவாதமாகவோ எந்த சாத்திர விதிமுறையையும்வற்புறுத்தி விடாமல்‌, நடைமுறை காரண காரியங்களும்அன்றைய நூல்கள்ஏற்றன. காலத்திற்கு ஏற்றவாறு: மாறுதல்களைச்செய்து கொள்ளவும்வழி செய்யப்பட்டது. இவ்வளவு நியாயமாகவும்‌, ஆழமாகவும்செய்யப்பட்டுள்ள சிந்தனைகளைசில தவறான பிரச்சாரங்களினால்மயங்கி, ஒதுக்கத்தக்கவையாக நாம்நினைத்து விடக்கூடாது. நமது அரசியல்சட்டத்தின்வயது: அறுபதுக்குட்பட்டது; ஆனால்இந்த பழைய நூல்களின்விதிமுறைகளோ பற்பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை. இன்றைய அரசியல்சட்டத்திவேயே பல மாறுதல்கள்தேவைப்படுகின்றன; அப்படியிருக்க, மிகப்பழமையான நூல்களில்கூறப்படுகிற விதிமுறைகளில்சில மாறுதல்களுக்குட்பட வேண்டும்என்றால்‌, அந்த நூல்களையே நிராகரிப்பது அறிவுடமை ஆகாது.

அர்த்தசாத்திரம்சொல்வதை அடுத்துப்பார்ப்போம்‌.