அமைச்சர்கள் நியமனம்!

நடைமுறை வாழ்க்கை, ஒழுங்கு முறையுடன்‌ இருக்க வேண்டும்‌ என்பதற்காக, அரசன்‌ தனது கோலை (ஆட்‌8ி) உயர்த்திப்‌ பிடிக்க வேண்டும்‌. மக்களை ஒழுங்குப்படுத்த கோலைப்‌ போன்ற தொரு சாதனம்‌ வேறெதுவும்‌ இல்லை‘ – என்று பல ஆச்சார்யர்கள்‌ கூறியிருக்கிறார்கள்‌.

இதை கெளடில்யன்‌ மறுக்கிறான்‌. ஏனெனில்‌ கொடுமையான ஆட்சியையே நடத்துகிற அரசன்‌ மக்களால்‌ வெறுக்கப்படுகிறான்‌; மென்மையான ஆட்சியையே நடத்துகிற அரசனோ அலட்சியப்‌ படுத்தப்படுகிறான்‌; நியாயமான ஆட்சியை நடத்துகிற அரசன்‌ கெளரவிக்கப்படுகிறான்‌… 

‘ஆத்திரத்தினாலோ, மற்றவர்களை அவமதிக்கும்‌ தன்மை யினாலோ, அரசனின்‌ கோல்‌ (ஆட்சி) தவறாகப்‌ பயன்படுத்தப்பட்‌ டால்‌ துறவிகளுக்கும்‌ கூட கோபம்‌ பொங்கி எழும்‌; அப்படி யிருக்க இல்லற தர்மத்தில்‌ இருக்கும்‌ மக்களைப்‌ பற்றி கேட்பானேன்‌? ஆனால்‌, அரசனின்‌ கோல்‌ பயன்படுத்தப்படாமலே இருந்தால்‌, மீன்களின்‌ விதிமுறைதான்‌ நிலவும்‌ – பலவான்‌, பலவீனமானவனை ஒடுக்குவான்‌; அரசனின்‌ கோலினால்‌ பாது காக்கப்பட்டால்‌ பலவினனும்‌ வாழ்வான்‌… 

– என்று ஆரம்பிக்கிற கெளடில்யர்‌, மேலும்‌ சொல்கிறார்‌ :

அரசன்‌ இந்த்ரியங்களை வெல்ல வேண்டும்‌. தர்மம்‌, அர்த்தம்‌, காமம்‌ என்ற மூன்றில்‌, எது ஒன்றிலும்‌ மிகை இருக்கக்‌ கூடாது. ஆனால்‌, ‘அர்த்தம்‌’ என்பதுதான்‌ மிக முக்கியமானது என்று கெளடில்யன்‌ கூறுகிறான்‌. ஏனெனில்‌, அதை ஒட்டியே தர்மமும்‌, காமமும்‌ கூட இருக்கின்றன…” 

தர்மம்‌, அர்த்தம்‌, காமம்‌, மோட்சம்‌ (அறம்‌, பொருள்‌, இன்பம்‌, வீடு) என்கிற நான்கில்‌ மோட்சத்தைத்‌ தவிர்த்து இருக்கின்ற மூன்றில்‌, பொருள்‌ ஈட்டல்‌ ஆகிய – அர்த்தமே முக்கியமானது என்ற கெளடில்யர்‌ கருத்து, மற்ற பலருடைய கருத்திலிருந்து மாறுபட்டது. ‘இன்பத்தைவிட, பொருள்‌ ஈட்டல்‌ மேலானது என்பதை புரிந்து கொள்ள முடியும்‌. ஆனால்‌ ‘தர்மத்தையும்‌ விட பொருள்‌ ஈட்டலே மேலானது‘ என்பதை எப்படி ஏற்பது? ‘- என்ற கேள்வி சிலர்‌ மனதில்‌ எழலாம்‌. ஆனால்‌, இந்த கருத்து, இதிஹாஸங்களில்‌ கூட சிலரால்‌ சொல்லப்படுகிறது. நல்ல காரியங்களைச்‌ செய்வதற்குக்‌ கூட பொருள்‌ வேண்டுமல்லவா? அதனால்‌ அது முக்கியத்துவம்‌ பெறுகிறது. 

ஹிந்து தர்மமே கூட, இல்லறத்தைப்‌ பெரிதும்‌ மதிக்கிறது. பிரம்மச்சர்யம்‌, இல்லறம்‌, வானப்ரஸ்தம்‌ (காட்டில்‌ வாழ்தல்‌), ஸன்யாஸம்‌ – என்ற நான்கு நிலைகளில்‌ இல்லறம்‌ மிக முக்கிய மானது என்று பல நூல்கள்‌ வற்புறுத்திக்‌ கூறுகின்றன. இல்லறத்தில்‌ இருப்பவர்களால்தான்‌, மற்ற மூன்று நிலையில்‌ உள்ளவர்கள்‌ போளஷிக்கப்படுகிறார்கள்‌ – என்பதால்‌, இல்லறம்‌ முக்கியத்துவம்‌ பெறுகிறது. பிரம்மச்சாரியிடமோ, வானப்ரஸ்தத்தை ஏற்றவரி டமோ, ஸன்யாஸியிடமோ– பொருள்‌ இருக்காது. இல்லறத்தானிடம்‌ பொருள்‌ இருக்கும்‌. அதைக்‌ கொண்டே அவன்‌ மற்றவர்களுக்கு உதவுவான்‌. ஆக, பொருளீட்டல்‌ என்பது ஹிந்து தர்மத்தினால்‌, முக்கியமானதாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. நடைமுறை உண்மைகளைப்‌ புறக்கணித்து, கண்மூடித்தனமாக, கனவுலகில்‌ சஞ்சரித்துக்‌ கொண்டு, உலக வாழ்க்கைக்கு ஒவ்வாத, கற்பனை நியாயங்களைக்‌ கூறுகிற சாத்திரம்‌ அல்ல, ஹிந்து தர்மம்‌. நடை முறையை ஏற்றுத்தான்‌ அது நியாயங்களைக்‌ கூறுகிறது. ஆகையால்‌, பொருள்‌ ஈட்டலுக்கு கெளடில்யர்‌ தருகிற முக்கியத்துவம்‌ வியப்புக்குரியது அல்ல.

அமைச்சர்கள்‌, ஆலோசகர்கள்‌ பற்றி கெளடில்யர்‌ கூறுவதை எடுத்துக்‌ கொள்வோம்‌ – இதைப்‌ படித்தாலே, அர்த்தசாஸ்இிரத்தை இயற்றிய கெளடில்யர்‌, இந்த மாதிரி விஷயங்களைப்‌ பற்றி எவ்‌ வளவு விரிவாக சிந்தனை செய்திருக்க வேண்டும்‌ என்பது புரியும்‌. இதைப்‌ பற்றி, தான்‌ கருதுவதை மட்டும்‌ கூறி மேலே போகாமல்‌, தனக்கு முன்பே வேறு பலர்‌ தெரிவித்துள்ள மாறுபட்ட கருத்துக்‌ களை சுட்டிக்காட்டி, இறுதியில்‌ தனது கருத்தையும்‌ கூறுகிறார்‌ அவர்‌. அர்த்தசாஸ்திரத்தின்‌ முதல்‌ பகுதியிலேயே வருகிற, இந்த விஷயத்தைப்‌ பார்ப்போம்‌ : 

”ஒரு சக்கரம்‌ சுழன்று வண்டி செல்லாது; ஆகையால்‌ அரசன்‌ அமைச்சர்களை நியமித்து, அவர்களுடைய கருத்துக்களையும்‌ கவனமாகக்‌ கேட்டுக்‌ கொள்ள வேண்டும்‌…” 

சரி, யாரை அமைச்சர்களாக நியமிப்பது? கெளடில்யர்‌, மற்றவர்களின்‌ கருத்துக்களைக்‌ கூறி பின்னர்‌ தனது முடிவைச்‌ சொல்கிறார்‌. 

“பரத்வாஜர்‌, தன்னுடன்‌ கல்வி பயின்றவர்களின்‌ திறன்‌ மற்றும்‌ நேர்மை பற்றி ஏற்கெனவே தெரிந்திருக்கும்‌ என்பதால்‌, அப்படிப்‌ பட்டவர்களை அமைச்சர்‌ பதவிகளில்‌ அரசன்‌ நியமிக்க வேண்டும்‌ என்று கூறுகிறார்‌.” 

”விசாலாக்ஷர்‌ இதை மறுத்து, ‘ஒருவனுடன்‌ கல்வி பயின்ற வர்கள்‌, அவனிடம்‌ மரியாதை காட்ட மாட்டார்கள்‌; தனது சொந்த வாழ்க்கையில்‌, தன்னுடன்‌ சேர்ந்து சம்பந்தப்பட்டவர்களையே அமைச்சர்களாக ஒரு அரசன்‌ நியமிக்க வேண்டும்‌. அரசனுக்கும்‌ அவர்களுக்கும்‌ ஒரே மாதிரியான குணமும்‌, ஒரே வகையான பல வினங்களும்‌ இருக்கும்‌. அவர்களுடைய ரகசியங்கள்‌ அரசனுக்குத்‌ தெரிந்திருக்கும்‌ என்பதால்‌, அவர்கள்‌ அரசனிடம்‌ மரியாதை காட்டுவார்கள்‌! என்று கூறுகிறார்‌.

‘”பராசரரை ஏற்பவர்களோ, இதை ஏற்கவில்லை. ‘அவர்களுக்‌ கும்‌ (மேற்குறிப்பிட்டவர்களுக்கு) அரசனுடைய ரகசியங்கள்‌ தெரிந்திருக்கும்‌. அதனால்‌ அரசன்‌ அவர்களிடம்‌ பயந்து அவர்கள்‌ செய்வதையும்‌, செய்யத்‌ தவறியதையும்‌ பொறுத்துக்‌ கொள்ள நேரிடும்‌. எத்தனை பேரிடம்‌, அரசனின்‌ ரகசியங்கள்‌ பகிர்ந்து கொள்ளப்படுகின்தனவோ, அத்தனை பேரிடம்‌, அவன்‌ சக்தியற்ற வனாகிறான்‌. ஆபத்துக்‌ காலத்திலும்‌ தனக்கு அனுசரணையாக இருந்தவர்களை அரசன்‌ தனது அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்‌. ஏனெனில்‌ அவர்களுடைய விசுவாசம்‌ ஏற்கெனவே நிரூபணம்‌ ஆிவிட்டது‘ என்பது பராசரரின்‌ சீடர்கள்‌ சொல்வது.” 

”பிசுனர்‌, இதை ஏற்க மறுக்கிறார்‌. ‘விசுவாசம்‌ என்பது பக்தி பூர்வமானது; அது ஒரு அறிவுத்திறன்‌ அல்ல. ஒரு பணியை ஏற்கும்‌ போது, அதன்‌ மூலம்‌ அரசுக்குச்‌ சே வேண்டிய அளவு நிதியையோ, அதற்கு மேலாகவோ, எவன்‌ கொண்டு வருகிறானோ, அவனே நல்ல அமைச்சன்‌. அப்படிப்பட்டவர்களின்‌ நோமை தெளிவாகத்‌ தெரிவதால்‌, அவர்களையே அமைச்சர்களாக ஒரு அரசன்‌ நியமிக்க வேண்டும்‌’ என்கிறார்‌ அவர்‌. ” 

”கெளணதந்தர்‌, இதை மறுதளித்து ‘மேற்குறிப்பிடப்பட்ட வர்கள்‌ மற்ற தகுதிகள்‌ அற்றவர்களாக இருக்கக்‌ கூடும்‌. தன்னுடைய தந்தை, அல்லது பாட்டனார்‌ ஆகியோரின்‌ கழ்‌ பணிபுரிந்தவர்‌ களையே, அரசன்‌ தனது அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்‌.  ஏனென்றால்‌, அவர்களுடைய தகுதியும்‌, நடத்தையும்‌ ஏற்கெனவே நிரூபணம்‌ ஆனவை. அரசன்‌ அவர்களிடம்‌ சரியாக நடந்து கொள்ள வில்லை என்றால்‌ கூட, அவர்கள்‌ அவனை விட்டு விலகுவதில்லை. மிருகங்களின்‌ நடத்தையிலிருந்தே இதை உணரலாம்‌. ஒரு மந்தையைச்‌ சார்ந்த ஆடு – மாடுகள்‌, மற்றொரு மந்தையைச்‌ சார்ந்தவற்றை எதிர்கொண்டால்‌ கூட, அவற்றோடு சேர்ந்து விடுவ இல்லை; தங்கள்‌ மந்தையுடனேயே செல்கின்றன! என்று வாதாடுகிறார்‌. 

”வாதவ்யாதியோ, இதை ஏற்கவில்லை. ‘இப்படி பரம்பரை பரமபரையாகப்‌ பணிபுரிந்தவர்கள்‌, அரசனின்‌ உடமைகளைக்‌ கூட தங்கள்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள விஷயங்கள்‌ போலக்‌ கருதி விடு இறார்கள்‌; அவர்களே எஜமானர்கள்‌ போல நடந்து கொள்கிறார்கள்‌. ஆகையால்‌ அரசன்‌, ஆட்சி முறையில்‌ நல்ல அறிவு பெற்ற, புதியவர்களையே அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்‌. கொலை (ஆட்சியை) கையில்‌ ஏந்தியுள்ள அரசனை, புதியவர்கள்‌ அவமதிப்ப இல்லை; அவனை யமனைப்‌ போலவே நினைத்து நடந்து கொள்‌ கிறார்கள்‌ ‘ என்று அவர்‌ சொல்கிறார்‌. 

‘பாஹுதந்தீபுத்ரர்‌, இப்படி முற்றிலும்‌ புதியவர்களை நியமிப்பதை ஒப்புக்‌ கொள்ளாமல்‌, “தத்துவத்தை மட்டும்‌ கற்றறிந்து, நடைமுறை அனுபவம்‌ சற்றும்‌ இல்லாதவன்‌, காரியங்களை நடத்துவதில்‌ திணறுவான்‌. ஆகையால்‌ நற்குடிப்‌ பிறப்பு, அறிவுக்‌ கூர்மை, நேர்மை, துணிவு, விசுவாசம்‌, அனுபவம்‌ ஆகியவற்றைப்‌ பெற்றவர்களையே அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்‌! என்று சொல்கிறார்‌, 

இப்படி அமைச்சர்கள்‌, மற்றும்‌ ஆலோசகர்கள்‌ நியமனம்‌ பற்றி மற்ற ஆச்சார்யர்கள்‌ பலர்‌ சொன்னதை எல்லாம்‌ பட்டியலிட்டு விட்டு, தன்‌ கருத்தைக்‌ கூறுகிறார்‌ கெளடில்யர்‌.

 ‘ மற்றவர்கள்‌ கூறியவை எல்லாவற்றிலுமே, ஒவ்வொரு நியாயம்‌ இருக்கிறது. ஒருவனுடைய பணியை: நிறைவேற்றும்‌ திறனை வைத்து, அதற்கேற்ப அமைச்சர்களை நியமிக்க வேண்டும்‌. 

கெளடில்யர்‌ இப்படி பொதுவாகச்‌ சொல்லி, அத்துடன்‌ அமைச்சர்கள்‌ நியமனம்‌ என்ற விஷயத்தை விட்டு விடவில்லை. ஒரு அமைச்சருக்கு வேண்டிய பல தகுதிகளை அவர்‌ பட்டிய விட்டுக்‌ காட்டுகிறார்‌, 

”தனது தேசத்தைச்‌ சார்ந்தவன்‌; நற்குடியில்‌ பிறந்தவன்‌; வித்யைகளில்‌ தேர்ந்தவன்‌; அறிவுக்‌ கூர்மை, விடா முயற்சி, பேச்சுத்திறன்‌, சாமர்த்தியம்‌ ஆகியவை உடையவன்‌; உடன்‌ பதில்‌ சொல்லும்‌ இறமை, சக்தி, நேர்மை, நற்குணம்‌, விசுவாசம்‌,  ஆரோக்யம்‌, மனவலிமை ஆகியவற்றை உடையவன்‌; சுமுகமாக: நடந்து கொண்டு, விரோதங்களை வளர்க்காமல்‌ இயங்குபவன்‌; சபலமும்‌, உறுதியின்மையும்‌ அற்றவன்‌ – என்ற தகுதிகளை எல்லாம்‌ உடையவர்கள்தான்‌ அமைச்சர்களாக நியமிக்கப்படத்‌ தகுதியானவர்கள்‌. 

”இவை எல்லாம்‌ ஒருவனிடம்‌ நிறைந்திருந்தால்‌, அவன்‌ உயர்ந்த அமைச்சனாவான்‌; இவற்றில்‌ ஒரு பகுதி ஒருவனிடம்‌ இல்லையென்றால்‌ அவன்‌ சாதாரண நடுத்தர அமைச்சனாவான்‌; இவற்றில்‌ பாதி ஒருவனிடம்‌ இல்லையென்றால்‌. அவன்‌ தாழ்ந்த நிலையில்‌ உள்ளவன்‌. ” 

இதையெல்லாம்‌ சொல்லி விட்டு, அர்த்தசாஸ்திரம்‌, இந்த குணங்கள்‌, தகுதிகள்‌, ஒருவனிடம்‌ இருக்கிறதா என்பதைக்‌ கண்டறிய யார்‌ யாரிடம்‌ விசாரிக்க வேண்டும்‌ என்பதையும்‌ கூறுகிறது. 

இன்று, ஒரு அமைச்சரை நியமனம்‌ செய்வதில்‌ – இதில்‌ பத்தில்‌ ஒரு பங்கு அக்கறையைக்‌ கூட நம்மால்‌ காண முடிவதில்லை. ஒரு அமைச்சருக்கு வேண்டிய தகுதிகள்‌ பற்றி அர்த்தசாஸ்திரம்‌ கூறுவது, இன்றும்‌ அர்த்தமுள்ளதே. இதோடு மட்டுமல்லாமல்‌, தன்னால்‌ நியமிக்கப்பட்ட மந்திரிகளை, அரசன்‌ பரீட்சித்துப்‌ பார்க்க வேண்‌ டும்‌ என்று கூறி, அதற்கான வழிமுறைகளையும்‌ கூட கெளடில்யர்‌ விவரித்திருக்கிறார்‌. 

இதில்‌ நமது விசேஷ கவனத்திற்குரிய ஒரு விஷயம்‌ என்ன வென்றால்‌ – கெளடில்யருக்கும்‌ முன்பாகவே பல சிந்தனை யாளர்கள்‌, அமைச்சர்கள்‌ நியமனம்‌ பற்றி சிந்தித்து, சில வழிமுறை களைக்‌ கூறியிருப்பதுதான்‌. அவர்கள்‌ யார்‌ யார்‌ என்பது கூட இன்றைய ஆராய்ச்சியாளர்களுக்கு விளங்கவில்லை. 

அப்படி எப்போதோ வாழ்ந்து, அரசியல்‌ பற்றியும்‌, ஆட்சி முறை பற்றியும்‌ சிந்தனைகளை வெளியிட்டுள்ளவர்களின்‌ பெயர்கள்‌, 2300 ஆண்டுகளுக்கு முன்‌ இயற்றப்பட்ட அர்த்தசாஸ்திரத்தில்‌ காணப்படு கிறது என்றால்‌ – இந்நாட்டில்‌ நிர்வாக சாத்திரம்‌ எப்போது தோன்றியது என்று யார்‌ சொல்வது!