கிராம நிர்வாகம் பற்றி கூறுகையில், யார் யாருக்கு நிலங்களை அளிக்கலாம் என்று விவரித்து விட்டு, ‘யார் யார் தங்கள் நிலங்களை பயிரிடாமலே வைத்திருக்கிறார்களோ, அவர்களிடமிருந்து நிலங் களை அரசன் பறிமுதல் செய்து, மற்றவர்களுக்கு அந்த நிலங்களைக் கொடுக்க வேண்டும்’ என்று அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. ‘நீர்ப்பாசன வசதிகள் முறையாகச் செய்யப்பட வேண்டும்; தண்ணீர் பற்றாக் குறை உள்ள பகுதிகளுக்கு, வேறு பகுதிகளிலிருந்து தண்ணீர் வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்… குழந்தைகள், முதியவர்கள், ஆதரவற்றவர்கள் போன்றவர்களையும், மகப்பேறு இல்லாத பெண்மணிகளையும், கவனிக்க யாருமில்லை என்றால், அரசன் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்… படையெடுப்பின் விளைவாகவோ, பஞ்சம், நோய் ஆகியவற்றின் காரணமாகவோ பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்…’ என்றெல்லாமும் அர்த்த சாஸ்திரம் விதிக்கிறது.
வனங்கள் பாதுகாப்பு, யானை முதலிய மிருகங்களுக்கு பாதுகாப்பு போன்ற பொறுப்புகள், வனங்களின் அதிகாரியிடம் விடப்படுகின்றன. கூட்டமாகவோ, தனியாகவோ உலவிக் கொண் டிருக்கிற யானைகளின் கணக்கு முறையாக எழுதப்பட்டிருக்க வேண்டும் – என்ற விதிமுறைகள் இந்த நூலில் காணப்படு வதிலிருந்து, இந்த மாதிரி விஷயங்களில் கூட எவ்வளவு அக்கறை அந்த காலத்தில் செலுத்தப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஒரு ஆறுதலான விஷயம். கள்ள நாணயம் அடிப்பது அப்போதே இருந்திருக்கிறது! நாணயங்களை பரிசோதிக்கும் அதிகாரி ஏற்ற பிறகே, தன்னிடம் வரும் நாணயங்களை கிடங்கு களின் அதிகாரி ஏற்க வேண்டும் என்று அர்த்தசாஸ்திரம் கூறுகிறது; கள்ள நாணயங்கள் வெட்டிவிடப்பட வேண்டும் என்றும் இந்த நூல் கூறுகிறது; கள்ள நாணயங்களைக் கொண்டு வருவதற்கு அபராதமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே இந்த குற்றம் அப்போதே கூட செய்யப்பட்டு வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. மனிதன் பேராசை பிடித்தவன் என்பது இன்றைய நவநாகரிகத்தின் விளைவு அல்ல. சில மனிதர்களின் இயல்பு அது. அதற்கு கடுமையான தண்டனை விதிக்கிற சமூகம், ஒழுங்குமுறையைக் காப்பாற்றிக் கொள்: இறது; அன்றைய சமூகம் அப்படிப்பட்டதாக இருந்தது.
இன்றைய நிதி நிர்வாகத்தின் சில அம்சங்கள் கூட அன்றே இருந்திருக்கின்றன. அன்றாட வருமானம், செலவு; கையிருப்பு; அதிலிருந்து செலவு; ஒரு துறையிலிருந்து நிதி, மற்றொரு துறையின் செலவிற்கு மாற்றப்படுவது… என்றெல்லாம் வகைப்படுத்தப் பட்டு நிதி நிர்வாகம் சரமைக்கப்பட்டிருந்தது. இதை கெளடில்யர் மிக விரிவாகவே எடுத்துரைக்கிறார்.
ஆவணங்களின் – தஸ்தாவேஜுகளின் – முக்கியத்துவம் வலி யுறுத்தப்படுகிறது. ‘ஒவ்வொரு துறையின் வருமானம்; பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்படுவதில், எது அதிகமாகிறது, எது குறைகிறது என்ற கணக்கு; உபரி செலவுகள்; ஊழியர்களின் ஊதியச் செலவு; நகைகள் பற்றிய தரம், எடை. போன்ற கணக்குகள்; வன வளத்தின் மூலம் கிட்டும் வருமானம்; தங்கம் மற்ற வளங்கள் மூலமான வருவாய்; கிராமங்கள் எண்ணிக்கை; மக்கள் தொகை எண்ணிக்கை; இயற்கை சீற்றங்களை ஒட்டிய நிவாரணச் செலவு பற்றிய கணக்குகள்; எதிரிகளின் பகைகளை வென்று பெற்ற வகையறா.. போன்ற கணக்குகளும், ஆவணங்கள் நிலையத்தில் பதிவாக வேண்டும். அதுவரை இது, ஆவண அதிகாரியின் கட்டுப்பாட்டின் ழ் இருக்கும்! என்று கெளடில்யர் விவரிக்கிறார்.
குறிப்பிட்ட இனத்தில் கணக்குகள் சமர்ப்பிக்கப்படும்; அப்போது கணக்குகளை சமர்ப்பிக்காத அதிகாரிகள் தண்டனைக்குள்ளாவார் கள். இது தவிர, பொக்கிஷம் தொடர்பான மோசடிகள் நாற்பது வகைகள் என்று அர்த்தசாஸ்திரம் குறிப்பிடுகிறது.
செய்யாத காரியத்தை செய்து முடித்ததாகக் காட்டுவது; செலுத்தப்படாத தொகையைச் செலுத்தப்பட்ட தொகையாகக் காட்டுவது; குறைந்த விலைக்குரிய பொருளை, அதிக விலை உள்ளதாகக் காட்டுவது… என்று தற்காலத்தில் நடக்கிற பல மோசடி வகைகள் அன்றே விவரிக்கப்பட்டிருக்கின்றன.
இப்போது வருமான வரி இலாகா, சுங்கத் துறை போன்றவற்றுக்கு, தகவல்களைத் தெரிவிப்பவர்கள் அதற்காக “சன்மானம்! பெறுகிறார்கள். இந்த வழக்கமும் அன்றே இருந் இருக்கிறது! ‘இன்ஃபார்மர்கள்’ என்று இவர்களை அழைக்கிறோம். இவர்களால் தகவல் தெரிவிக்கப்பட்ட விவகாரத்திற்கு என்ன மொத்த மதிப்போ, அதில் ஆறில் ஒரு பங்கு இவர்களுக்குத் தரப்பட வேண்டும் என்று விதிக்கிறது அர்த்தசாஸ்திரம்.
வருமானத்திற்கு மீறிய சொத்து ஒருவரிடம் இருந்தாலோ, வருமானத்தை மீறுகிற செலவுகளை ஒருவர் செய்து கொண்டிருந் தாலோ, அவர் பக்கம் இன்றைய வருமானவரி இலாகாவின் பார்வை போகிறது. இது பற்றியும் கெளடில்யர் பேசுகிறார் : ‘அளவான ஊஇயமே பெறுகிற அதிகாரி, நிறைய செலவுகளைச் செய்து கொண் டிருந்தால், அவன் அரசு பணத்தை எடுக்கிறான் என்று புரிந்து கொள்ளலாம் – என்று ஆச்சார்யர்கள் கூறியிருக்கிறார்கள்; உண்மை; இதை உளவாளிகள் மூலம்தான் கண்டறிய வேண்டும் என்றும் சொல்கிறான் கெளடில்யன்’ என்று அர்த்தசாஸ்திரம் கூறுகிறது.
இது பற்றி அர்த்தசாஸ்திரம் தருகிற உதாரணங்களிலிருந்தே, இவ்விஷயத்தில் மிகவும் கவனம் தேவை என்பது, அக்காலத் திலேயே உணரப்பட்டிருந்தது என்பது புரியும்.
நாக்கின் நுனியில் வைக்கப்பட்டு விட்ட தேனையோ, விஷத்தையோ, கொஞ்சமாவது விழுங்காமல் இருக்க முடி யாது; அதே போல அரசு நிதியை நிர்வகிப்பவர்கள், ஒரு சிறிதளவேனும் அப்பணத்தை விழுங்குவார்கள் என்று நிச்சய மாக எதிர்பார்க்கலாம் ‘.
“தண்ணீரில் நீந்திக் கொண்டிருக்கிற மீன், அந்தத் தண்ணீரை கொஞ்சம் குடித்தால், அதை கண்டுபிடிக்க முடியாது; அதே போல் பல காரியங்களுக்காக நியமிக்கப்படுகிற அரசு அதிகாரிகள், எப்போது பணத்தை கையாடல் செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதும் கடினமே‘.
‘ஆகாயத்தில் பறந்து சென்று கொண்டிருக்கும் பறவைகள் போகிற பாதையைக் கூட கண்டுபிடித்து விடலாம்; ஆனால் (அரசு பணத்தை கையாடல் செய்கிற) அதிகாரிகள், தங்கள் எண்ணத்தை மறைத்துக் கொண்டு நடமாடுகிற வழிகளைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்”.
‘இப்படி அரசின் பணத்தை கையாடல் செய்து, பெரும் நிதியைத் இரட்டி விட்டவர்களிடமிருந்து அது கைப்பற்றப்பட வேண்டும்; அவர்கள் அகற்றப்பட வேண்டும்”.
தாமிரபரணி பகுதி, பாண்டிய நாடு ஆகியவற்றிலிருந்து வருகிற முத்துக்கள் பற்றி அர்த்தசாஸ்திரம் குறிப்பிடுகிறது. இவ்வாறே பல்வேறு உலோகங்களையும், பொருட்களையும், குதிரை, யானை போன்ற மிருகங்களையும் பெற்றுள்ள நாட்டின் பல பகுதிகள் குறிப்பிடப்படுகின்றன. உலோகங்கள், அவற்றின் உபயோகங்கள், அவற்றைக் கொண்டு பொருட்களைத் தயார் செய்யும் தொழிற் சாலைகள் பற்றியெல்லாம் கெளடில்யர் விதிமுறைகளை விதித் இருக்கிறார்.
‘இந்த மாதிரி தொழில்கள் எவ்வளவு பரவியிருந்தால், இதற் கான வழிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கும்’ என்று நாம் யூகித்துக் கொள்ளலாம். உலோகங்களுக்கென ஒரு தனி துறையும், தனி அதிகாரியும் குறிப்பிடப்படுகிறார்கள் என்பதும் கவனத்திற்குரியது.
வர்த்தக அதிகாரிக்கு நிறைய கடமைகள் விஇக்கப்பட்டிருக்கின்றன. அயல்நாடுகளிடமிருந்து, கப்பல்கள் மூலமாக பொருட் கள் வருவதை (இறக்குமதி) ஊக்குவிக்க வேண்டும் என்கிறார் கெளடில்யர்; அம்மாதிரி பொருட்களை கொண்டு வருகிற வர்த்தகர்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார்; அவர்களுக்கு எதிராக, பண விஷயத்தில் வழக்குகளை பஇவு செய்யக் கூடாது என்றும் விதிக்கிறார். இறக்குமதி அவ்வளவு முக்கியமாகக் கருதப்பட்டிருக்கிறது.
அரசாங்கமே நடத்துகிற ரேஷன் கடைகளிலிருந்து, பல கடை களிலும், வர்த்தகங்களிலும், ‘எடை அல்லது அளவு மோசடி ‘ நடப் பதை இன்று நாம் பார்க்கிறோம். அன்றும் இது இருந்திருக்கிறது என்பது அர்த்தசாஸ்இரத்தின் சில விஇமுறைகளிலிருந்து புரிகிறது.
பொருட்களின் தர நிர்ணயமும் அன்றே வழக்கத்தில் இருந் இருக்கிறது. தங்கத்இலிருந்து, வெண்ணெய் வரை பல்வகைப் பொருட்களுக்கு தர நிர்ணயம் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை, கெளடில்யர் விவரமாக எடுத்துரைக்கிறார். இந்த பொறுப்பும், எடைகள் சரியாக இருக்க வேண்டியதை உறுதி செய்கிற பொறுப்பும் – ‘தர நிர்ணய அதிகாரி‘யினுடையது என்று அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, எடைகள் பரிசோதிக்கப்பட்டு அரசு முத்திரையைப் பெற வேண் டும்- என்கிறது அர்த்தசாஸ்திரம். அரசு முத்திரை பெற்ற எடைகளைப் பயன்படுத்துநவர்களுக்கு அபராதம் விதிக்கிற ஷரத்தும், அர்த்த சாஸ்இரத்தில் இருக்கிறது.
கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள், அயல் நாடுகள் – என்ற மூன்று வகையான இடங்களிலிருந்து வியாபாரத்திற்கு பொருட்கள் வரக் கூடும் என்று கூறுறெ இந்த நூல், ‘வருநற மற்றும் எடுத்துச் செல்லப்படுகிற பொருட்கள்! என்று வகைப்படுத்தி, அவற்றிற்கான வரி விதிப்புகளை நிர்ணயிக்கிறது. வெவ்வேறு பொருட்களுக்கு, வெவ்வேறு விகிதத்தில் வரி, இந்த நூலில் நிர்ணயிக்கப்படுகிறது.
துணி உற்பத்தி, விவசாயம், உலோகம், மதுபானம்… என்று பற்பல விஷயங்களுக்கு வெவ்வேறு இலாகாக்கள் உருவாக்கப் பட்டு, தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கெளடில்யர் கூறுகிறார்.
மதுபானம் குறிப்பிடப்பட்ட இடங்களில்தான் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும், மற்ற இடங்களில் மதுபான விற்பனை நடந்தால், அது தண்டனைக்குரியது என்றும் அர்த்த சாஸ்திரம் விதிக்கிறது.
கப்பல் போக்குவரத்து பற்றி இந்த நூலில் விசேஷ கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. கடல் கடந்து சென்று வருகிற கப்பல்கள் வரி விதிப்புக்கு உள்ளாகின்றன. எதிரி நாட்டிலிருந்து வருகிற கப்பல்கள் அல்லது படகுகள் அழிக்கப்படத் தக்கவை என்றும் கெளடில்யர் எச்சரிக்கிறார்.
நிர்வாகத்தை, பல பகுதிகளாக்கி, ஒவ்வொன்றுக்கும் அதிகாரிகளைக் குறிப்பிட்டு, அவர்களுடைய கடமைகளையும் பொறுப்புகளையும் விவரித்து, அதன் காரணங்களையும் கூறி, அர்த்தசாஸ்திரம் வகுத்துள்ள விதிமுறைகளைப் பார்க்கும்போது, ‘சுமார் இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால், நம் நாட்டில் நிர்வாக சாத்திரம் இவ்வளவு சீராக அமைக்கப்பட்டதா!” என்ற பிரமிப்பு ஏற்படத்தான் செய்கிறது.