ஒவ்வொரு வழக்கிற்கும் நான்கு பாதங்கள் உள்ளன. சட்டம்; நடந்த நிகழ்ச்சி; வழக்கத்தில் வந்துவிட்ட வழிமுறை; மற்றும் அரசனின் உத்திரவு” – என்ற அந்த நான்கு பாதங்களில், முதலில் வருவதை விட அடுத்து வருவதற்கு வலு அதிகம்.
‘இவற்றில் சட்டம் – உண்மையை ஆதாரமாகக் கொண்டது; நிகழ்ச்சியோ, சாட்சியங்களை நம்பி தீர்மானிக்கப்படுவது; வழக்கு முறை, மனித சமுதாயத்தின் கருத்தையொட்டியது; அரசனின் உத்திரவோ அதிகாரத்தில் பிறப்பது…
“சட்டத்தின்படி செயல்பட்டு பிரஜைகளைப் பாதுகாக்கும் அரசன், தனது கடமையைச் செய்வதால், ஸ்வர்க்கக்தை அடை வான்; மக்களை பாதுகாக்காமல், நியாயமற்ற தண்டனைகளை வழங்குகிற மன்னன், இதற்கு நேர்மாறான நிலையை எய்துவான்…
குற்றத்தின் தன்மையைப் பொறுத்து தனது மகனுக்கும், தனது பகைவனுக்கும் ஒரே நியாயத்தை வழங்குகிற மன்னனால் இந்த பூமி பாதுகாக்கப்பட்டதாகிறது; அப்படிப்பட்ட மன்னன் பூமி யின் நான்கு இசைகளிலும் வெற்றிக் கொடி நாட்டுவான்….
‘சட்டத்தில் முரண்பாடுகள் தெரிகிறபோது, அரசனின் உத்திரவு மேன்மை பெறுகிறது.
இவ்வாறு சட்டத்தின் தன்மை பற்றியும், நீதி பரிபாலனம் பற்றியும் பொதுவான விளக்கங்களை அளிக்கிற அர்த்தசாஸ்திரம், வழக்குகள் நடத்தப்பட வேண்டிய முறையை விரிவாக எடுத்துச் சொல்கிறது.
‘மந்திரிகளுக்குச் சமமான அந்தஸ்தைப் பெற்றுள்ள மூன்று நீதிபதிகள் ஒரு வழக்கை விசாரிக்க வேண்டும்… வருடம், பருவம், மாதம், தினம், இடம், நடந்த நிகழ்ச்சி, வாதி மற்றும் பிரதிவாதியின் பெயர் குடும்பம், ஜாதி, தொழில் ஆகிய விவரங்களை நீதிமன்றத்தின் ஊழியர் எழுத்தில் வடிக்க வேண்டும்; பின்னர் வாதி, பிரதிவாதி ஆகயோர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் விடைகளை எழுத வேண்டும்.
‘தனது பிராதுக்கு பதில் அளித்துள்ள பிரதிவாதியின் வாதத்திற்கு, முறையாக அதே இனத்தில் பதில் கூறாத வாதியின் வழக்கு தள்ளுபடியாகும். ஏனென்றால், வழக்கைத் தொடுத்தவன் வாதி; என்ன செய்யப்பட வேண்டும் என்பதை அறிந்தவனாக முன் வருபவன் அவனே; ஆகையால் அவன் அன்றைய தினமே பதில் தர வேண்டும். பிரதிவாதி தனது பதில் வாதத்தைக் கூறுவதற்கு மூன்று நாட்கள் அவகாசம் தரப்படலாம். இதில் தாமதம் நிகழ்ந்தால், அவனுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். தலைமறைவாகும் பிரதிவாதிக்கு அபராதம் விதிக்கப்படும்; தலைமறைவாகிற வாதியின் வழக்கு தள்ளுபடியாகும்…’
இவை மட்டுமல்லாது, சாட்சிகளின் விசாரணையிலிருந்து, முரண்பாடுகள் தோன்றும்போது காட்டப்பட வேண்டிய அணுகு முறை, வழக்கு விசாரணையின் விதிமுறைகள் ஆகியவை விரிவாக எடுத்துச் சொல்லப்படுகின்றன.
திரைப்படங்களிலும், சரித்திரக் கதைகளிலும் கதாநாயகன் அரச சபையில் பொரிந்து தள்ளுவதையும், அரசன் திடீரென ஒரு முடிவிற்கு வருவதையும் பார்த்து விட்டு, நமது நாட்டில் இருந்து வந்த நீதிபரிபாலன முறை பற்றி நாம் ஒரு தவறான முடிவிற்கு வந்திருப்போம். எல்லாமே ஒரு ‘கட்ட பஞ்சாயத்து முறை‘ மாதிரி நமக்குக் காட்சி அளித்திருக்கலாம். ஆனால் அர்த்தசாஸ்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ள விதிமுறைகளையும், வழிமுறைகளையும் பார்த்தால் – அப்போதே நம் நாட்டில் நீதிபரிபாலனம் மிக வும் முதிர்ச்சி அடைந்து, பெரும் பொறுப்புணர்வுடன் நடத்தச் செல்லப்பட்டிருக்கிறது என்பது புரியும்.
இதில் மட்டுமல்ல, திருமணங்கள் தொடர்பான விஷயங்களில் கூட, ‘இன்றைய வளர்ச்சி” என்று நாம் நினைக்கக் கூடிய பல வழிமுறைகள் அன்றே இங்கு அறிமுகமாகி உள்ளன. உதாரணத் இற்கு ஒரு சில விஷயங்களைப் பார்ப்போம்.
விதவைகள் மறுமணம் செய்து கொள்வது இன்று ஒரு பெரிய விஷயமல்ல. ஆனால், இந்நாட்டில், கணவனை இழந்த பெண் மணிகள், வாழ்நாள் முழுவதும் எந்த உரிவமையும் இல்லாமல் மிகவும் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்ததாகத்தான் நாம் நம்புகிறோம்.
ஆனால் அர்த்தசாஸ்திரமோ, விதவைகள் மறுவிவாகம் பற்றி பேசுகிறது. ‘கணவனை இழந்த பெண்மணி, பக்இி மார்க்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழ நினைத்தால் – திருமணத் இன்போது, அவளுக்கு அளிக்கப்பட்ட செல்வமும், நகைகளும், அவளையே சாரும். இவற்றைப் பெற்றுக் கொண்ட பிறகு, அந்தப் பெண் மீண்டும் திருமணம் செய்து கொண்டால், இவற்றை அவள் வட்டியுடன் இருப்பிக் கொடுக்க வேண்டும். ஆனால், விதவை யானவுடன், அவள் ஒரு குடும்பச் தலைவியாகவே வாழ விரும்பி னால், தன்னுடைய (இறந்துவிட்ட) கணவன் மற்றும் அவனுடைய தகப்பனார் ஆகியோரால் தரப்பட்ட செல்வம் அவளையே சாரும். அதே சமயத்தில், அவள் தன்னுடைய மாமனாரின் விருப்பத்திற்கு மாறாக மறுமணம் செய்து கொண்டால், அப்போது முதல் கணவன் மற்றும் மாமனார் அளித்த நிதி அவளைச் சாராது.
மகன்களைப் பெற்ற ஒரு பெண் விதவையான பிறகு, மறு விவாகம் செய்து கொண்டால், அவளுடைய கணவன் அளித்திருந்த செல்வம் அவளைச் சாராது; ஆனால் அது அவளுடைய மகன் களுக்குப் போய்ச் சேரும்’. இந்த வழிமுறைகளிலிருந்து, ‘விதவா விவாஹம்’ அப்போதேவழக்கில் இருந்தது என்பது தெளிவாகும். இல்லாத ஒரு நிலையை கெளடில்யர் கற்பனை செய்து பேசவில்லை. இருக்கிற வழி முறையை ஒழுங்குபடுத்தவும், சொத்துரிமை பற்றி தெளிவு ஏற்படவும், அவர் விதிமுறைகளைக் கூறியுள்ளார்.
ஆக, விதவா விவாஹம் என்பது கூட, மேலைநாட்டவர் நமக்களித்த புரட்சிக் கருத்து அல்ல. இங்கேயே அந்த சிந்தனை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாகவே இருந்திருக்கிறது.
இதே போல, ஒரு மனிதன் தன் இஷ்டம்போல, பல பெண் களை மணக்கலாம் என்ற நிலை இங்கே இருந்தது என்ற எண்ணம் இப்போது நம்மிடையே இருக்கிறது. ஆனால் அர்த்தசாஸ்திரம் வகுத்துள்ள விதிமுறைகளைப் பார்த்தால், இது ஒன்றும் அவ்வளவு சர்வ சாதாரணமான விஷயமாக அப்போதும் இருக்கவில்லை என்றே தெரிய வருகிறது. இது தொடர்பாக அர்த்தசாஸ்திரம் கூறு வதைப் பார்ப்போம்:
‘திருமணம் நடந்து, எட்டு ஆண்டுகள் கழிந்த பின்னரும் தன்னுடைய மனைவிக்கு குழந்தைகளே பிறக்கவில்லை என் றாலோ–அல்லது திருமணம் நடந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னரும் தன் மனைவிக்கு ஒரு மகன் பிறக்கவில்லை என்றாலோ – ஒரு மகனைப் பெறுவதற்காக அந்தக் கணவன், இரண்டாவது இருமணம் செய்து கொள்ளலாம், இந்த விதிமுறையை மீறுகறவன் –இருமணத்தின்போது முதல் மனைவி மூலம் கிட்டிய சொத்து மற்றும் செல்வங்களையும்; அந்த சொத்து மதிப்பில் சரி பாதி அளவிற்கு நஷ்டஈடுத் தொகையும்; அபராதத் தொகையும் சேர்த்து அவளுக்குச் செலுத்த வேண்டும்’.
அதாவது, திருமணமான ஒருவன், இரண்டாவது மனைவியை அடைவது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்க வில்லை. ‘சரி, ஏதோ சில வழிகளில், ஆண்களுக்கு அந்த உரிமை இருந்ததே? ஆனால் பெண்களுக்கு அந்த உரிமையே இல்லையே?! என்றும் கேட்க முடியாது. அதற்கும் வழிமுறைகளும், விதிமுறை களும் அர்த்தசாஸ்இிரத்தில் கூறப்பட்டுள்ளன.
‘இழிவான செயலை செய்துவிட்ட – அல்லது அரசனுக்கு எதிராகக் குற்றம் புரிந்து விட்ட – அல்லது ஏதோ ஒரு அயல்நாடு சென்று, இரும்பி வராத – அல்லது தனது உயிருக்கு ஆபத்து விளைவிக்கிற – அல்லது தாம்பத்திய உறவுக்கு அருகதையற்ற நிலையில் உள்ள – கணவனை ஒரு பெண் கைவிடலாம்’.
கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன் – என்ற லட்சியம் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது உண்மையே; ஆனால் அந்த லட்சிய நிலையிலிருந்து சில விதிவிலக்குகளுக்கும் இடம் அளிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையும், அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும். இல்லாவிடில் மேற்சொன்னது போன்ற விதி முறைகளுக்கு இடமே இருந்திருக்காது.
இந்த மாதிரி சிந்தனையையொட்டியே, ‘விவாகரத்து க்கும் இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. சில வகையான இருமணங்கள் விஷயத்தில் விவாகரத்துக்கு இடமில்லை என்றும் அர்த்தசாஸ் இரம் கூறுகிறது. பெண்ணைப் பெற பணம் கொடுக்காமல் (பெண் வீட்டார் தரும் வரதட்சணை பற்றிய பேச்சே பழமையான நூல்களில் இல்லை), பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, தர்மத்தை காப்பதற்காக நடத்தப்படுகிற திருமணங்களில் இந்த வழி இருக்கவில்லை.
அர்த்தசாஸ்இரத்தின் மொழி பெயர்ப்புகளில், இது ‘விவாகரத்து – டைவோர்ஸ்” என்று குறிப்பிடப்பட்டாலும், அந்த நூலில் பயன் படுத்தப்படுகிற சொல் ‘மோட்சம்’ என்பதே – அதாவது ‘விடு தலை‘. நடந்த இருமணத்தலிருந்து விடுதலை என்பதால், அது விவாகரத்து என்றே மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. பிறப்பு, இறப்பு என்ற சக்கரத்திலிருந்து பெறுகிற விடுதலை, ‘மோட்சம்’ என்று ஆன்மிக ரீதியில் குறிப்பிடப்படுகிறது. இருமணத்திலிருந்து பெறப் படுகிற விடுதலையையும் கெளடில்யர் மோட்சம் என்றே குறிப் பிடுகிறார்.
ஆனால் ஒன்று. கணவன், மனைவி இருவரும் சேர்ந்து விடு தலையை விரும்புகிறபோதுதான் இதுசாத்யமாகறது. இப்போதும்கூட ‘டைவோர்ஸ் பை கன்ஸன்ட்’ எளிதானதல்ல. ஆனால் அப்போது அதற்கு வழி இருந்திருக்கிறது.
அமோக்ஷ்யா பர்துரகாமஸ்ய
த்விஷதி பார்யா, பார்யாஸ்ச பர்த்தா.
பரஸ்பரம் த்வேஷான் மோக்ஷ:
‘கணவன் மீது விருப்பம் அகன்றுவிட்ட பெண் கேட்பதாலோ, அதே போல கணவன் கேட்பதாலோ – விடுதலை கட்டாது; இருவருமே பரஸ்பரம் வெறுப்புற்று, நாடுகிறபோது தான் விடுதலை உண்டு‘.,
இவ்வாறு, விவாகரத்து, மறுமணம், விதவா விவாஹம் என்ற பல சிந்தனைகள் அன்றே தோன்றியிருக்கின்னன. இவை எல்லாம், நல்லதா அல்லவா என்பது பற்றி பலவித கருத்துகளுக்கு இட முண்டு. ஆனால், அன்று கட்டி போடப்பட்ட பெண், இன்று மேலைநாட்டு சிந்தனைகள் காரணமாக, விடுதவை பெற்றாள் – என்ற எண்ணம் தவறானது.
அர்த்தசாஸ்திரம் பற்றி மேலும் கொஞ்சம் பார்ப்போம்.