1/ரும்மதேவன், நாரதருக்குக் கூறிய புராணத்தை உங்க களுக்குச் சொல்கிறேன்‘ என்று கூறிவிட்டு, லோமஹர்ஷணர், நைமிசாரண்யத்தில் கூடியிருந்த ரிஷிகளுக்கு, சிவபுராணத்தை விவரித்தார்:
ஆரம்பத்தில், எதுவுமே இல்லாத நிலையில், எல்லா இடத் திலும் பிரும்மனின் (இறைவன்; பிரும்மன் என்றால் பிரும்ம தேவன் அல்ல என்று ஏற்கெனவே விளக்கப்பட்டிருக்கிறது) அம்சமே நிறைந்திருந்தது. எங்கும் வியாபித்திருந்த தண்ணீரி லிருந்து பின்னர் விஷ்ணு தோன்றினார். அதன் பின்னர் பிரும்ம தேவன் தோன்றினான். அசரீரி வாக்கு, அவனை தவம் செய்யுமாறு பணித்தது. அவன் கடும் தவம் புரிந்த பின்னர், அவன் முன் விஷ்ணு தோன்றினார். நீ யார்?’ என்று பிரும்மதேவன் கேட்க; ‘என் னிடமிருந்துதான் நீ தோன்றினாய்‘ என்று விஷ்ணு கூறினார். இரு வருக்குள் வாக்குவாதம் நடந்தது. அப்போது, அவர்கள் முன் ஒளி வீசிக் கொண்டு ஒரு லிங்கம் தோன்றியது.
விஷ்ணு, ‘நாம் நமது வாக்குவாதத்தை நிறுத்தி விட்டு, இந்த லிங்கத்தைப் பற்றி அறிய முயற்சிப்போம். நீ ஒரு அன்னத்தின் உரு வெடுத்து, பறந்து சென்று மேல்புறம் பார்ப்பாயாக. நான் ஒரு காட்டுப் பன்றி உருவம் எடுத்து, கீழ்ப்புறம் சென்று பார்க்கிறேன். இந்த லிங்கத்தின் தொடக்கமும், முடிவும் எங்கிருக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்வோம்‘ என்று கூறினார்.
பிரும்மதேவனும் இணங்க, இருவரும் மேலும் கீழுமாகச் சென்று தேடினர். ஆனால் லிங்கத்தின் தொடக்கத்தையோ, முடிவையோ (ஆதி, அந்தம்) அவர்களால் காண முடியவில்லை. பின்னர் இருவரும் பழைய இடத்திற்கே திரும்பி வந்து, துதித்தனர். ‘ஓம்‘ என்ற ஒலி கேட்டது. அவர்கள் முன் மகாதேவன் எனும் சிவன் தோன்றினார்.
‘எங்கள் சண்டையும் நன்மையில் முடிந்தது. அதனால் அல்லவா, தங்களைக் காண முடிந்தது!’ என்று விஷ்ணு மகிழ்ச்சி யுடன் கூறினார்.
சிவன் ‘நாம் மூவருமே ஒன்றுதான். படைப்பிற்கு பிரும்ம தேவன், காத்தலுக்கு விஷ்ணு, அழித்தலுக்கு நான் என நாம் மூவராகப் பிரிந்திருக்கிறோம். என்னிடமிருந்து ருத்ரன் தோன்று வார். ஆனால் அவரும் என்னுடைய அம்சமே என்பதால், அவரும் நானே. பிரும்மதேவன் இப்போது படைப்புத் தொழிலைத் தொடங்கட்டும் என்று கூறினார்.
இதன் பின்னர் படைப்பு நடந்தது. பிரும்மதேவனால் முதலில் படைக்கப்பட்டவர்களில் ஒருவனாகிய தக்ஷனின் மகள் ‘ஸதி‘யை ருத்ரன் மணந்தார். தக்ஷன் நடத்திய யாகத்திற்கு, அவன் ருத்ரனை அழைக்கவில்லை. ஸதியும் அழைக்கப்படாவிட்டாலும், அவள் யாகத்திற்குச் சென்றாள். அவளையும் தக்ஷன் அவமதித்தான். பொறுக்க முடியாத கோபத்தில், ருத்ரன் தனது கணங்களை அனுப்ப, அவர்கள் யாகத்தையும் தடுத்து, அங்கு கூடியிருந்த தேவர்களையும் கொன்றனர். பின்னர் சமாதானப்படுத்தப்பட்ட ருத்ரனால், அவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டனர். ஆனால் அவமானப்படுத்தப்பட்ட தால், மனமுடைந்த ஸதி தன்னையே அழித்துக் கொண்டு, ஹிமவானின் மகளாகப் பிறந்து, பார்வதி என்று அழைக்கப்பட்டு, சிவனைக் குறித்து துதி செய்தாள்.
இதற்கிடையில் அஸுரர்களின் தலைவனாகி, தேவர்களுக்குப் பெரும் தொல்லை கொடுத்து வந்த தாரகாஸுரனை அழிப்பதற்காக, தேவர்கள் பிரும்மதேவனின் உதவியை நாடினார்கள். பிரும்மதேவன், ‘சிவனுடைய மகனைத் தவிர வேறு யாராலும் தன்னை அழிக்க முடியாது என்ற வரத்தை என்னிடமிருந்து தாரகாஸுரன் பெற்றிருக்கிறான். ஆனால் சிவனோ தவ நிலை யில் இருக்கிறார். அவரை மணப்பதற்காக பார்வதி காத்திருக்கிறாள். ஏதாவது செய்து அவர்கள் இருவரையும் மணம் புரிய வையுங்கள். அவர்களுக்குப் பிறக்கும் மகன், தாரகாஸுரனை அழிப்பான்‘ என்று கூறிவிட்டார்.
இந்திரனின் யோசனைப்படி, சிவன் தவத்தைக் கெடுத்து, அவர் பார்வதியை விரும்புமாறு செய்வதற்காக, மன்மதன் அனுப்பப் பட்டான். அவன் தனது தவத்திற்கு இடையூறு செய்தபோது, கோபம் கொண்ட சிவன், தனது முக்கண்ணைத் திறந்து, அவனை எரித்து சாம்பலாக்கி விட்டார்.
மன்மதனின் மனைவி ரதிதேவி, தேவர்களிடம் சென்று கதறி னாள். அனைவரும் சென்று சிவனிடம் “மன்மதன் தானாக வந்து உங்களுடைய தவத்தில் குறுக்கிடவில்லை. தாரகாஸுரனை அழிக்க உங்கள் மகனால்தான் முடியும் என்பதால், நீங்கள் பார் வதியை மணம் புரிவதற்காக, அவன் தேவர்களால் அனுப்பப் பட்டான். இப்போதோ ரதி பரிதாபகரமான நிலையை அடைந்து விட்டாள். நீங்கள்தான் அருள் புரிய வேண்டும்” என்று முறை
யிட்டனர்.
”நடந்தது,நடந்ததுதான். ஆனால் மன்மதன் துவாரகையில் கிருஷ்ணனுடைய மகன் பிரத்யும்னனாகப் பிறப்பெய்தி, பின்னர் ரதியுடன் இணைவான்‘ என்று கூறினார்.
நாரதரின் யோசனையின் பேரில், பார்வதி மிகக் கடுமையான தவத்தை மேற்கொண்டாள். தேவர்களும், ரிஷிகளும் சிவனிடம் சென்று, பார்வதியை மணக்குமாறு கேட்டுக் கொண்டனர். சிவன் ஒரு வயோதிக அந்தணனாக உருக்கொண்டு பார்வதியின் முன் தோன்றி, ‘நீ எதற்காக இப்படித் தவம் புரிகிறாய்? உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.
அவரை உபசரித்து வணங்கிய பார்வதி, ‘சிவனை கணவனாக அடையவே நான் தவம் புரிகிறேன்‘ என்று கூறினாள்.பிரும்மதேவன், ‘சிவனுடைய மகனைத் தவிர வேறு யாராலும் தன்னை அழிக்க முடியாது என்ற வரத்தை என்னிடமிருந்து தாரகாஸுரன் பெற்றிருக்கிறான். ஆனால் சிவனோ தவ நிலை யில் இருக்கிறார். அவரை மணப்பதற்காக பார்வதி காத்திருக்கிறாள். ஏதாவது செய்து அவர்கள் இருவரையும் மணம் புரிய வையுங்கள். அவர்களுக்குப் பிறக்கும் மகன், தாரகாஸுரனை அழிப்பான்‘ என்று கூறிவிட்டார்.
இந்திரனின் யோசனைப்படி, சிவன் தவத்தைக் கெடுத்து, அவர் பார்வதியை விரும்புமாறு செய்வதற்காக, மன்மதன் அனுப்பப் பட்டான். அவன் தனது தவத்திற்கு இடையூறு செய்தபோது, கோபம் கொண்ட சிவன், தனது முக்கண்ணைத் திறந்து, அவனை எரித்து சாம்பலாக்கி விட்டார்.
மன்மதனின் மனைவி ரதிதேவி, தேவர்களிடம் சென்று கதறி னாள். அனைவரும் சென்று சிவனிடம் “மன்மதன் தானாக வந்து உங்களுடைய தவத்தில் குறுக்கிடவில்லை. தாரகாஸுரனை அழிக்க உங்கள் மகனால்தான் முடியும் என்பதால், நீங்கள் பார் வதியை மணம் புரிவதற்காக, அவன் தேவர்களால் அனுப்பப் பட்டான். இப்போதோ ரதி பரிதாபகரமான நிலையை அடைந்து விட்டாள். நீங்கள்தான் அருள் புரிய வேண்டும்” என்று முறை
யிட்டனர்.
”நடந்தது,நடந்ததுதான். ஆனால் மன்மதன் துவாரகையில் கிருஷ்ணனுடைய மகன் பிரத்யும்னனாகப் பிறப்பெய்தி, பின்னர் ரதியுடன் இணைவான்‘ என்று கூறினார்.
நாரதரின் யோசனையின் பேரில், பார்வதி மிகக் கடுமையான தவத்தை மேற்கொண்டாள். தேவர்களும், ரிஷிகளும் சிவனிடம் சென்று, பார்வதியை மணக்குமாறு கேட்டுக் கொண்டனர். சிவன் ஒரு வயோதிக அந்தணனாக உருக்கொண்டு பார்வதியின் முன் தோன்றி, ‘நீ எதற்காக இப்படித் தவம் புரிகிறாய்? உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.
அவரை உபசரித்து வணங்கிய பார்வதி, ‘சிவனை கணவனாக அடையவே நான் தவம் புரிகிறேன்‘ என்று கூறினாள். இது அறியாமை. கங்கை நீர் இருக்கையில், யாராவது கிணற்று நீரை அருந்துவார்களா? கண்ணாடித் துண்டிற்காக, தங்கத்தை விடுவார்களா? மண்ணாங்கட்டிக்காக, மணம் வீசும் சந்தனக் கட் டையைப் புறக்கணிப்பார்களா? எண்ணற்ற தேவர்கள் இருக் கிறார்கள்; அவர்களில் ஒருவரை திருமணம் செய்து கொள். தேவேந்திரன் இருக்கிறான்; அவனை மணம் புரிந்து கொள். சிவன் எப்படிப்பட்டவன்? ஐந்து முகங்கள்; மூன்று கண்கள்; சடைமுடி; பாம்புகளை மாலையாக அணிகிறான்; உடல் முழுதும் சாம்பலைப் பூசிக் கொள்கிறான்; அவன் செல்வமற்றவன்; யார் அவன் என்பது எவருக்கும் தெரியாது; அவனுடைய கழுத்தோ அவன் விஷமுண்ட போது நீல நிறமுடையதாகி விட்டது. இப்படிப்பட்டவனை நினைத்து, உன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாதே!’ என்றார் வயோதிக பிராம்மணன் உருவில் வந்திருந்த பரமசிவன்.
பார்வதி கோபமுற்றாள். ‘உமது வயோதிகத் தன்மை கண்டு, நான் உமக்கு மரியாதை காட்டினேன். சிவனைப் பற்றி நீர் என்ன அறிவீர்? அனைத்துக்கும் அரசர் அவரே! சிவனை நிந்திக்கிற உமக்கு மரியாதை காட்டியது என் குற்றம். சிவனை நிந்தித்த உமது முன் நான் நிற்கவும் மாட்டேன்‘ என்று கூறி அங்கிருந்து புறப்பட பார்வதி முனைந்தாள்.
சிவன், அவளைத் தடுத்து நிறுத்தி ‘எங்கே போகிறாய்? என்னை அடையத்தான் நீ தவம் செய்வதாக நான் நினைத்தேன். நீயோ என்னை விட்டுப் போகிறாயே?’ என்று கூறி தன் சுய உருவை மேற்கொண்டு, ‘உனக்கு என்ன வேண்டுமோ, அதைக் கேட் பாயாக!’ என்று இன்முகத்துடன் கூறினார்.
‘முறைப்படி என்னை தாங்கள் கைப்பிடிக்க வேண்டும் என்று பார்வதி வேண்டிக் கொள்ள, சிவனும் இசைந்தார். அவ்வாறே அவர்களுடைய திருமணம் விமரிசையாக நடந்தது. அவர்களுக்கு ‘ஸ்கந்தன், கார்த்திகேயன்‘ என்றெல்லாம் அழைக்கப்படுகிற சுப்ரமண்யர் மகனாகப் பிறந்தார். அவர் தேவர் படைக்குத் தலைமை தாங்கி, தாரகாஸுரனை வதம் புரிந்தார்.
தாரகாஸுரனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். பிரும்ம தேவனிடம் வேண்டி, தங்கம், வெள்ளி, எஃகு ஆகியவற்றினால் ஆன மூன்று கோட்டைகள் உடையவர்களாகவும், அந்த மூன் றும் இணைந்த திரிபுரம் என்ற ஒரு கோட்டையைப் பெற்றவர் களாகவும் அவர்கள் விளங்கினார்கள். ஒரே அம்பினால், திரிபுரத்தை அழிக்க வல்லவனே தங்கள் முடிவிற்குக் காரணமாக முடியும் என்ற வரத்தையும் அவர்கள் பிரும்மதேவனிடம் பெற்றார்கள்.
அவர்களுடைய மாட்சிமையைக் கண்ட தேவர்கள், சிவனிடம் முறையிட, அவர் ‘அவர்கள் ஏதாவது தவறு இழைத்தால்தான், நான் அவர்களை அழிப்பேன்‘ என்று கூறிவிட்டார்.
இதைக் கேட்ட தேவர்கள் விஷ்ணுவின் உதவியை நாடினார்கள். அவர், தாரகாஸுரனின் மகன்கள் மூவரும், தவறான வழிகளைப் பின்பற்றுமாறு செய்தால்தான், சிவன் அவர்களை அழிப்பார். அவர்கள் தவறான அணுகுமுறைகளைப் பின்பற்ற ஒரு வழி செய்வோம்‘ என்று கூறி, ஒரு மாயரூபனை உருவாக்கினார். அவன் தாரகாஸுரனுடைய மகன்களுக்கு, வேத நெறிகளுக்கு அப் பாற்பட்ட ஒரு புதிய, மதத்தைப் போதித்தான். அவர்களும் வேத நெறியை கைவிட்டு, புதிய மதத்தை மேற்கொண்டனர். அவர்களை ஸ்ரீதேவி கைவிட, அவர்களுடைய ராஜ்யத்தில் மூதேவி குடி கொண்டாள்.
வேத நெறியை கைவிட்ட திரிபுரி அதிபதிகளையும், திரி புரத்தையும் அழிக்க சிவன் சம்மதித்தார். ஒரே பாணத்தினால் திரிபுரத்தை அவர் எரித்தார். (மாயரூபன் போதித்த மதம், பின்னர் வந்த ஜைன மதமே என்று சில நூல்கள் கூறுகின்றன.)
இவ்வாறு சிவனின் பெருமைகளை விவரிக்கிற சிவபுராணம், விநாயகர் வரலாற்றையும் குறிப்பிடுகிறது. ஒரு மாங்கனிக்காக, முருகனும், விநாயகரும் போட்டியிட்ட கதை அனைவரும் அறிந்ததே. அது சிவ புராணத்தில் வருகிறது. ஆனால் இப் புராணத்தின்படி, அவர்கள் போட்டியிட்டது மாங்கனிக்காக அல்ல. இருவரில் யார் முதலில் உலகைச் சுற்றி வருகிறீர்களோ, அவ னுக்கே முதலில் திருமணம்‘ என்று சிவன் கூற, முருகன் உலகைச் சுற்றி வர வேகமாகப் புறப்பட்டு விட்டார். ஆனால் விநாயகர், தாய் தந்தையரை வலம் வந்து, உலகைச் சுற்றிய பலனை அடைந்தார்.
விசுவரூபன் என்பவனின் மகள்களாகிய சித்தி, புத்தி ஆகிய இருவரையும் விநாயகர் மணந்தார். தான் வஞ்சிக்கப்பட்டதாக நினைத்த முருகன், க்ரௌஞ்ச மலைக்குச் சென்று விட்டார். ‘மணமே வேண்டாம்‘ என்று அப்போது கூறியதால், அவர் குமரக் கடவுள் ஆனார்.
ஆயிரம் பெயர்களைக் கூறி விஷ்ணு, சிவனை அர்ச்சிக்க, அவர் விஷ்ணுவிற்கு சக்ராயுதத்தைக் கொடுத்தது; விஷ்ணு கூறிய சிவனின் ஆயிரம் பெயர்கள்; லிங்கம், விபூதி ஆகியவற்றின் மகிமைகள்; மயா னத்தில் சிவ நடனம்; சிவனின் உக்ரத்தைத் தாங்க முடியாத நிலையில், சந்திரனை தலையில் தரித்து, அவர் குளுமையடைய தேவர்கள் வேண்டியதால், அவர் பிறைச்சந்திரனை தலையில் தாங்கியது; பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகால விஷத்தை உண்டு, அதைக் கழுத்திலே தேக்கி, நீலகண்டன் என்ற பெயரை சிவன் பெற்றது; நந்தியின் வரலாறு; சிவனிடம், தான் பெற்ற உபதேசத்தை உபமன்யு என்ற ரிஷி, கிருஷ்ணருக்கு எடுத்துச் சொன்னது; அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை சிவன் அளித்தது; ராமேஸ்வரத்தில் ராமர், லிங்கத்தை பூஜித்தது; ராவணனின் சிவ பக்தி; அவன் கைலாய மலையையே அசைக்க முற்பட்டபோது, அவனுக்கு ராமர் கையினால் மரணம் ஏற்படும் என சிவன் விதித்தது… போன்ற பல நிகழ்ச்சிகள் சிவ புராணத்தில் வருகின்றன.
லோமஹர்ஷணர் ‘இந்த சிவபுராணத்தைப் படிப்பவர்களின் எல்லா பாவங்களும் அகலும். சிவனே அவர்களுக்கு அருள் புரிவார்‘ என்று சொல்லி, லிங்கத்தை வழிபடுவதால் கிட்டுகிற மேன்மை,ஜோதிர்லிங்கங்களின் மகிமை ஆகியவையும் விரிவாக டம் பெறுகிற இப்புராணத்தைக் கூறி முடித்தார்.