நாரத புராணம்!

ஸனத்குமாரர், பிரும்மதேவனின் புதல்வர். அவரும் அவ ருடைய சகோதரர்கள் மூவரும், நாரதரைச் சந்தித்தபோது, அவர், அவர்களுக்கு கூறிய புராணம், நாரத புராணம். இதை ஸுதீர் என்ற பௌராணிகர் பல மகரிஷிகளுக்கு எடுத்துரைத்தார்.

ஒரு பணிப்பெண்ணின் மகனாகப் பிறந்து, ஸந்யாசிகளுக்கு பணிவிடை செய்து, தெய்வத்திடம் ஈடுபாடு பெற்றவனாகி, பிரும்மதேவனின் கருணையினால், அவருடைய மானசபுத்ரனாகப் பிறந்தவர் நாரதர்.

தனது மகன்களை எல்லாம், ராஜ்ய பாரத்தை ஏற்பதிலிருந்தும், இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவதில் இருந்தும் திருப்பி, அவர் களை ஆன்மீக சிந்தனையிலேயே நாட்டமுடையவர்களாக மாற்றி விட்ட நாரதரைப் பார்த்து கோபம் கொண்ட தக்ஷன், ‘இனி நீ எந்த இடத்திலும் ஒரு முகூர்த்த நேரத்திற்கு மேல் தங்கியிருக்க மாட்டாய். அப்படி நீ தங்கி விட்டால், உன் தலை வெடித்து விடும்என்று சாபமிட்டான். இதனால்தான் நாரதர் மூவுலகங்களையும் சுற்றிக் கொண்டே இருக்கிற திரிலோக ஸஞ்சாரியானார்.

பிரச்னைகளுக்குக் காரணமாக இருந்தாலும், அவற்றைத் தீர்த்து வைப்பதும் மனமே ; ஆசைகள் தோன்றுவதற்கு காரணமாக இருந்தாலும், அவற்றை அறவே அறுத்து விட உதவுவதும் மனமே; நாரதர்தான் இந்தமனம்என்பதன் வடிவம். பூகோளத்தைப் பற்றி பல விளக்கங்களைக் கூறுகிற நாரத புராணம், (பாரத தேசம் என்கிற) பாரதவர்ஷத்தின் மேன்மையை குறிப்பாக எடுத்துச் சொல்கிறது : இது தர்ம பூமி. இந்த பூமியில் பிறப்பது பெரும் பாக்கியம். நற்காரியங்களைச் செய்யத் தூண்டு கிற நிலம் இது.

மார்க்கண்டேயரின் மேன்மை, கங்கையின் உயர்வு போன்ற வற்றை விளக்கிவிட்டு, நாரத புராணம், ஸகரன் என்ற மன்னனைப் பற்றிப் பேசுகிறது. அவனுக்கு கேசினி என்ற மனைவியின் மூலம் அஸமஞ்சன் என்கிற மகனும், ஸுமதி என்கிற மனைவியின் மூலம் பல மகன்களும் பிறந்தனர். அஸமஞ்சன் கொடுமைக்காரனாகத் திகழ்ந்தான்; ஸுமதியின் மகன்களும் இவனையே பின்பற்றி, தீயவர்களாகவே திகழ்ந்தனர்.

இவர்கள், முனிவர்களின் யாகங்களைக் கலைத்தனர். மது அருந்துவது, கொள்ளை அடிப்பது என்று பல தீய நடத்தைகளிலும் ஈடுபட்டனர். இவர்களை அழிப்பதுதான் சிறந்த வழி என்று முடிவு செய்த தேவர்கள், கபிலர் என்ற முனிவரை அணுகி, ஸகரனின் மகன்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டனர்.

கவலையுற வேண்டாம். மற்றவர்களைக் கொடுமைப்படுத்து கிறவர்கள் நிச்சயமாக அழிவார்கள். இந்த அரச குமாரர்களும் தங்கள் கொடூரச் செயல்களின் பலனை அனுபவிக்கத்தான் போகி றார்கள். அமைதியாக இருங்கள்என்று தேவர்களிடம் கூறினார் கபிலர்.

இதற்கிடையில், ஸகரன் ஒரு அச்வமேத யாகம் நடத்த முனைந்தான். தேவேந்திரன், யாகக் குதிரையை அபகரித்து, அதை கபிலரின் ஆச்ரமத்தில் கொண்டு போய் விட்டு விட்டான். குதிரையைப் பாதுகாக்கிற பொறுப்பை ஏற்றிருந்த ஸகரனின் மகன்கள், குதிரை காணாமற் போனது கண்டு, பல இடங்களில் தேடி அலைந்து, இறுதியில் கபிலரின் ஆச்ரமத்தில் அதைக் கண்டனர்.

கபிலர்தான் குதிரையை அபகரித்து விட்டார் என்று தீர்மானித்த ஸகரனின் மகன்கள், அவரைக் கட்டிப் போட்டு உதைத்தனர். அதுவரை நிஷ்டையில் இருந்த கபிலர், கண்ணைத் திறந்து பார்க்க, ஸகரனின் மகன்கள் அனைவரும் பொசுங்கி சாம்பலாகி விட்டனர்.

நாரதர் மூலமாக செய்தி கேள்விப்பட்ட ஸகர மன்னன், மகன் களின் இறப்பு குறித்து துக்கப்படாமல், தேசத்திற்கு நன்மையே நடந் திருக்கிறது என்று நினைத்து திருப்தியுற்றான்.

யாகம் நடத்துவதற்கு மகன் தேவை என்பதால், அஸமஞ்சனின் மகன் அம்சுமானை, தனது மகனாக ஸகரன் வரித்துக் கொண்டான். அம்சுமான், தனது தந்தை அஸமஞ்சனைப் போல் அல்லாமல், எல்லா நற்குணங்களையும் கொண்டவனாக இருந்தான். ஸகரனின் கட்டளையை ஏற்று, யாகக் குதிரையைக் கொண்டு வரப் புறப்பட்ட அம்சுமான், கபிலரின் ஆச்ரமத்தை அடைந்து, அவரை வணங்கி நின்று, ‘என்னுடைய தந்தையையும், அவருடைய சகோதரர்களை யும் நீங்கள் மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினான்.

உன் பேச்சும், நடத்தையும், எனக்குத் திருப்தி அளிக்கின்றன். உனக்கு என்ன வேண்டுமோ, அதைக் கேள்என்றார் கபிலர்.

என் தந்தையும், அவருடைய சகோதரர்களும் நல்லுலகம் செல்வதற்கு என்ன வழி என்று சொல்லுங்கள். எனக்கு அது போதும்என்று அம்சுமான் கேட்டுக் கொண்டான்.

உனக்குப் பிறக்கப் போகிற பேரன், கங்கையை பூமிக்குக் கொண்டு வருவான். அப்போது, உன் தந்தையும், அவனுடைய சகோதரர்களும், தங்களது பாவங்களிலிருந்து விடுபட்டு, நல் லுலகை எய்துவார்கள். இப்போது இந்தக் குதிரையை எடுத்துச் செல்என்று கபிலர் கூறினார்.

இந்த அம்சுமானுடைய மகன் திலிபன்; அவனுடைய மகன் பகீரதன். (அவன்தான் தவமிருந்து, கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தான். கங்கை நீரினால் கழுவப்பட்டு, அஸமஞ்சனும், அவனுடைய சகோதரர்களும் நற்கதி அடைந்தனர்.)

பகீரதன் மிகப் பெருமை வாய்ந்த நல்லரசனாகத் திகழ்ந்தான். யமனே வந்து பகீரதனின் சிறப்புகளை நேரில் கண்டறிய முனையும் அளவிற்கு, அவனுடைய புகழ் பரவியிருந்தது. அவ்வாறு யமன் வந்தபோது பகீரதன், பாவ புண்ணியங்கள் பற்றியும், தர்மத்தின் தன்மை பற்றியும், தனக்கு எடுத்துரைக்குமாறு யமனிடம் கேட்டுக் கொண்டான். யமன் கூறிய விஷயங்களின் சுருக்கத்தைப் பார்ப்போம்:

அந்தணர்களுக்கு தானம் செய்வது; குளங்கள் வெட்டுவது; சிவன், விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கு ஆலயங்கள் எழுப்பு வது; ஏழைகளுக்கு ஆடு,மாடுகளையோ, நிலத்தையோ தானம் செய்வது; நல்ல தோட்டங்களை அமைத்து, மரங்களை நடுவதுஆகியவை புண்ணியத்தை ஈட்டுத் தரும்.

பசித்தவர்களுக்கு உணவளிப்பதும், தாகத்தினால் தவிப்பவர் களுக்குத் தண்ணீர் அளிப்பதும் கூட, பெரும் புண்ணியங்கள். மற்ற தானங்களைப் போலவே, கல்வி அறிவை கொடுப்பவனும், புண்ணியம் எய்துவான்ஏகாதசி, த்வாதசி, சதுர்த்தசி, பஞ்சமி, அஷ்டமி ஆகிய திதிகளில், சிவலிங்கம், விஷ்ணுவின் விக்ரஹம் ஆகியவற்றை தேங்காய்ப் பால், கரும்புச் சாறு, நெய் போன்ற வற்றினால் அபிஷேகம் செய்வது விசேஷமானது.

புண்ணியம் செய்பவர்கள்மற்றவர்களைப் பற்றி அவதூறு பேச மாட்டார்கள்; தீயோர்களோடு நட்பு கொள்ள மாட்டார்கள்; இந்த்ரியங்களை அடக்கியவர்களாகத் திகழ்கிற அவர்கள், அதிக மான உணவு உட்கொள்வதையும் தவிர்ப்பார்கள். எப்போதுமே அவர்கள் மனதில் தெய்வ சிந்தனையே நிறைந்திருக்கும்

நரகங்கள் பல வகைப்பட்டவை. பாவம் செய்து கிணற்றில் வீழ்கிற மனிதர்கள் பெரும் துன்பத்தை அனுபவிப்பார்கள். அவர்களுக்குப் பல கடுமையான தண்டனைகள் அங்கு விதிக் கப்படும். அந்த தண்டனைகளை எல்லாம் வர்ணிக்கத் தொடங்கி னால், அதற்கே பல ஆண்டுகள் தேவைப்படும்

இந்த நரகங்களுக்குப் போகிற மனிதர்கள், செய்திருக்கக் கூடிய பாவங்கள் பல. திருடுவது, பெரியோர்களை நிந்திப்பது; தானம் தருவதாகச் சொல்லி விட்டு, தனது வார்த்தையை தானே மீறுவது; மருந்துகள், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றி எதுவும் அறிந்து கொள்ளாமலே, அவற்றை வர்த்தகம் செய்வது; கொலை, அவதூறு,

141வந்தபோது பகீரதன், பாவ புண்ணியங்கள் பற்றியும், தர்மத்தின் தன்மை பற்றியும், தனக்கு எடுத்துரைக்குமாறு யமனிடம் கேட்டுக் கொண்டான். யமன் கூறிய விஷயங்களின் சுருக்கத்தைப் பார்ப்போம்:

அந்தணர்களுக்கு தானம் செய்வது; குளங்கள் வெட்டுவது; சிவன், விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கு ஆலயங்கள் எழுப்பு வது; ஏழைகளுக்கு ஆடு,மாடுகளையோ, நிலத்தையோ தானம் செய்வது; நல்ல தோட்டங்களை அமைத்து, மரங்களை நடுவதுஆகியவை புண்ணியத்தை ஈட்டுத் தரும்.

பசித்தவர்களுக்கு உணவளிப்பதும், தாகத்தினால் தவிப்பவர் களுக்குத் தண்ணீர் அளிப்பதும் கூட, பெரும் புண்ணியங்கள். மற்ற தானங்களைப் போலவே, கல்வி அறிவை கொடுப்பவனும், புண்ணியம் எய்துவான்ஏகாதசி, த்வாதசி, சதுர்த்தசி, பஞ்சமி, அஷ்டமி ஆகிய திதிகளில், சிவலிங்கம், விஷ்ணுவின் விக்ரஹம் ஆகியவற்றை தேங்காய்ப் பால், கரும்புச் சாறு, நெய் போன்ற வற்றினால் அபிஷேகம் செய்வது விசேஷமானது.

புண்ணியம் செய்பவர்கள்மற்றவர்களைப் பற்றி அவதூறு பேச மாட்டார்கள்; தீயோர்களோடு நட்பு கொள்ள மாட்டார்கள்; இந்த்ரியங்களை அடக்கியவர்களாகத் திகழ்கிற அவர்கள், அதிக மான உணவு உட்கொள்வதையும் தவிர்ப்பார்கள். எப்போதுமே அவர்கள் மனதில் தெய்வ சிந்தனையே நிறைந்திருக்கும்

நரகங்கள் பல வகைப்பட்டவை. பாவம் செய்து கிணற்றில் வீழ்கிற மனிதர்கள் பெரும் துன்பத்தை அனுபவிப்பார்கள். அவர்களுக்குப் பல கடுமையான தண்டனைகள் அங்கு விதிக் கப்படும். அந்த தண்டனைகளை எல்லாம் வர்ணிக்கத் தொடங்கி னால், அதற்கே பல ஆண்டுகள் தேவைப்படும்

இந்த நரகங்களுக்குப் போகிற மனிதர்கள், செய்திருக்கக் கூடிய பாவங்கள் பல. திருடுவது, பெரியோர்களை நிந்திப்பது; தானம் தருவதாகச் சொல்லி விட்டு, தனது வார்த்தையை தானே மீறுவது; மருந்துகள், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றி எதுவும் அறிந்து கொள்ளாமலே, அவற்றை வர்த்தகம் செய்வது; கொலை, அவதூறு, மோசடி போன்ற கொடுமைகளைச் செய்வது; பாவம் செய்கிறவனோடு நட்பு பூணுவதுபோன்றவை பாவ காரியங்கள். இவற்றைச் செய்பவர்கள் நரகத்துக்குச் செல்கிறார்கள். அங்கு தண்டனையை அனுபவித்த பிறகு, பூமியில் மீண்டும் பிறப் பார்கள். பல தாழ்ந்த பிறவிகளை எய்தி, பின்னர் மனிதப் பிறவி பெற்று, அதன் பின்னர் உயர்வடைய இவர்களுக்கு வழி உண்டு.

விஷ்ணுவிற்கே அர்ப்பணித்து எல்லாச் செயல்களையும் மனிதன் செய்ய வேண்டும். பக்தியிலேயே கூட ஒன்பது வகையான வழிமுறைகள் இருக்கின்றன. மற்றவரின் அழிவுக்காக செய்யப் படுகிற பிரார்த்தனை; அரைகுறை நம்பிக்கையுடன் செய்யப்படுகிற பிரார்த்தனை; மற்றவர்கள் செய்வதால் தானும் செய்வது என்று தீர்மானித்துச் செய்யப்படுகிற பிரார்த்தனை; செல்வத்தையோ, வேறு பலனையோ வேண்டி செய்யப்படுகிற பிரார்த்தனை; புகழை விரும்பி செய்யப்படுகிற பிரார்த்தனை; மாயையிலிருந்து விடுபட விரும்பி செய்யப்படுகிற பிரார்த்தனை; தனது பாவத்திற்கு பிராயச்சித்தம் காண்பதற்காக செய்யப்படுகிற பிரார்த்தனை; விஷ்ணுவிற்கு இது திருப்தியைத் தரும் என்று நினைத்து, அதற்காகச் செய்யப்படுகிற பிரார்த்தனை; பக்தி ஒன்றையே காரணமாகக் கொண்டு செய்யப்படுகிற பிரார்த்தனைஎன்று பலவகைப்பட்ட இந்த துதிகளைத் தவிர, வேறொன்றும் உண்டு. தனக்கும், மற்றவர்களுக்கும், விஷ்ணுவிற்கும் இடையே எந்த வித்தியாசத்தையும் காணாமல் இருப்பவர் செய்கிற இந்தப் பிரார்த்தனை, மற்ற எல்லாவற்றையும் விட விசேஷமானது.

இப்படியெல்லாம் பகீரதனுக்கு விளக்கிக் கூறிய யமதர்மன், இறுதியில் அரசனே! ஒரு உண்மையை மறக்காதே. சிவனும், விஷ்ணுவும் ஒன்றேஎன்று கூறி முடித்தான்.

இதன் பின்னர் தவம் புரிந்த பகீரதன் முன் விஷ்ணு தோன்றி, சிவனை வேண்டுமாறு சொல்ல, சிவனை வேண்டி கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தான் பகீரதன்.

இந்த வரலாற்றுக்குப் பின், பலிச் சக்ரவர்த்தி பற்றியும்; வாமன அவதாரம் எடுத்து விஷ்ணு அவனை பாதாள உலகில் ஆட்சி புரிய அனுப்பியது பற்றியும் – இப்புராணம் கூறுகிறது. விரதங்களின் மகிமைகளைப் பற்றியும் நாரத புராணம் விரிவாகப் பேசுகிறது. தன்னையும் அறியாமல் ஏகாதசி விரதம் இருந்து, அதனால் பலன் அடைந்தவர்கள் பற்றியும் கூறப்படுகிறது. வெவ்வேறு விதமான பாவ காரியங்களுக்கு உரிய பிராயச்சித்தங்களும் விவரிக்கப் படுகின்றன. அனசூயை, மார்க்கண்டேயர் போன்ற பலர் தொடர் பான நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெறுகின்றன.

இதையெல்லாம் தவிர, மற்ற புராணங்கள் பற்றிய விரிவான குறிப்புகளையும், நாரத புராணம் தருகிறது. கலியுகத்தில் தர்மம் பெரிதும் நசிந்து வருவதால், அந்த யுகத்தில் செய்யப்படுகிற ஒரு சிறிய நல்ல காரியம் கூட, பெரும் பலனை அளிக்கும். க்ருத யுகத்தில் பத்து ஆண்டுகள் முயற்சித்துப் பெறக் கூடிய நற்பலன்; த்ரேதா யுகத்தில் ஓராண்டு முயற்சித்துப் பெறுகிற அந்தப் பலன்; த்வாபர யுகத்தில் ஒரு மாத முயற்சிக்குப் பின் பெறப்படுகிற அந்தப் பலன்; கலியுகத்தில் ஒருநாள் முயற்சிப்பதினாலேயே கிட்டிவிடும். மற்ற யுகங்களில், தானம், யாகம் போன்றவற்றைச் செய்து பெறக் கூடிய நற்பலன்கள் யாவற்றையும், கலியுகத்தில் விஷ்ணுவின் பெயரை மீண்டும் மீண்டும் ஜபிப்பதினாலேயே பெற்றுவிட முடியும்.

இவ்வாறெல்லாம் விவரித்து, ஸுதர், மஹரிஷிகளுக்கு நாரத புராணத்தைக் கூறி முடித்தார்.