மஹாபாரதம் பற்றிய ஒரு சில சந்தேகங்களை விளக்குமாறு, மார்க்கண்டேயரிடம் ஜைமினி கேட்டுக் கொள்வதில் தொடங்கு கிறது மார்க்கண்டேய புராணம். மார்க்கண்டேயர், ஜைமினி ரிஷியை விந்தியாசல மலைப் பகுதியில் வசிக்கிற நான்கு பறவைகளிடம் அனுப்புகிறார். அப்பறவைகளின் பூர்வ ஜன்ம வரலாறு காரணமாக, அவற்றுக்கு நல்ல ஞானமும், பேசும் சக்தியும் இருக்கிறது. மார்க்கண்டேயர், க்ரௌஸ்துகி என்பவருக்கு கூறிய பல விவரங்களை, இப்பறவைகள் ஜைமினிக்குச் சொல்கின்றன. மஹாபாரதம் பற்றிய ஜைமினியின் கேள்விகளுக்கும் விடை கிட்டுகிறது.
இதைத் தவிர, ஹரிச்சந்திரன், கார்த்தவீர்யன், ராணி மதாலஸா… போன்ற பலரின் வரலாறுகள்; நரகத்தைப் பற்றியும், பாவ புண்ணியங்களைப் பற்றியும் பல விளக்கங்கள்… ஆகியவையும் இப்புராணத்தில் இடம் பெறுகின்றன.
மேலும், தேவி மஹாத்மியம் இப்புராணத்தில் இடம் பெறுகிறது. இதில் சிவன், விஷ்ணு ஆகியோரை விட, பிரும்ம தேவன், இந்திரன், ஸூர்யன், அக்னி போன்றவர்களைப் பற்றியே அதிகம் கூறப்படுகிறது.
மஹாபாரதம் பற்றி, ஜைமினி ரிஷி கோரிய விளக்கங்களில் ஒன்று : ‘திரௌபதி ஐவரை மணக்க நேர்ந்தது ஏன்?’ என்பது. இதற்கு பறவைகளிடமிருந்து அவருக்கு விடை கிட்டியது : பாரம் தாங்க முடியாமல் பூமா தேவி, தேவர்களிடம் முறையிட்டபோது, பூமியில் பிறக்க, விஷ்ணுவின் ஆணையின்படி, தேவர்கள் முடிவெடுத்தனர்.
விருத்ராஸுரனை வெல்ல, அவனுக்கு பொய் வாக்குறுதி அளித்து, அவனை ஏமாற்றி கொன்று விட்ட இந்திரனை, பொய் சொன்ன பாவம் வந்தடைந்தது. அதனால் அவன் இழந்த சக்தியின் வெவ்வேறு பகுதிகளை, எமதர்மன், வாயு, அஸ்வினி தேவர்கள் ஆகியோர் பெற்றனர்.
இந்திரனின் பெருமையைப் பெற்ற தர்மதேவன், தர்மபுத்திர னாகப் பிறந்தான்; இந்திரனின் பலத்தைப் பெற்றிருந்த வாயு விடமிருந்து பீமன் பிறந்தான்; இந்திரனின் சக்தியிடமிருந்தே அர்ஜுனன் பிறந்தான்; இந்திரன் ஒளிவீசும் அழகைப் பெற்றிருந்த அஸ்வினி தேவர்கள், நகுலன் – ஸஹாதேவன் ஆகிய இருவராகப் பிறந்தனர். இவ்வாறு பாண்டவர்கள் ஐவரும், இந்திரனிடமிருந்து தோன்றியவர்களே. இந்திரனின் மனைவியே திரெளபதியாகப் பிறந்தாள். ஆகையால் திரௌபதி ஐவரை மணந்தபோது, இந்திர னின் மனைவி பூவுலகப் பிறப்பிலும், இந்திரனையே மணந்தாள். இதுதான் பாண்டவர்கள் ஐவரை திரௌபதி மணந்ததன் காரணம்.
திரௌபதியின் மகன்கள், அஸ்வத்தாமனின் இரவு நேரத் தாக்குதலில் மாண்டுபோனது தொடர்பாக, ஜைமினியின் அடுத்த சந்தேகம் அமைந்தது. ‘திரௌபதியின் மகன்கள், ராஜ்யபாரம் செய்யக் கொடுத்து வைக்காதவர்களாக, அற்ப ஆயுளில் மடிய நேரிட்டது ஏன்?’ என்பது அவர் கேள்வி. இதற்கும் விடை கிட்டியது. இந்த சந்தேகத்தைத் தீர்த்து வைக்க, பறவைகள், ஹரிச்சந் திரன் வரலாற்றை ஆரம்பித்தன. ஏனென்றால் ஹரிச்சந்திரனின் சரித்திரத்தில் வருகிற ஒரு நிகழ்ச்சியின் காரணமாகத்தான், திரௌ பதியின் மகன்கள் அற்ப ஆயுளில் மடிய நேரிட்டது.
ஹரிச்சந்திரன் வாழ்ந்தது திரேதா யுகத்தில் (அதற்கடுத்த த்வாபர யுகத்தில் மஹாபாரத நிகழ்ச்சிகள் நடந்தன.) ஒருமுறை ஹரிச்ஒன்று : ‘திரௌபதி ஐவரை மணக்க நேர்ந்தது ஏன்?’ என்பது. இதற்கு பறவைகளிடமிருந்து அவருக்கு விடை கிட்டியது : பாரம் தாங்க முடியாமல் பூமா தேவி, தேவர்களிடம் முறையிட்டபோது, பூமியில் பிறக்க, விஷ்ணுவின் ஆணையின்படி, தேவர்கள் முடிவெடுத்தனர்.
விருத்ராஸுரனை வெல்ல, அவனுக்கு பொய் வாக்குறுதி அளித்து, அவனை ஏமாற்றி கொன்று விட்ட இந்திரனை, பொய் சொன்ன பாவம் வந்தடைந்தது. அதனால் அவன் இழந்த சக்தியின் வெவ்வேறு பகுதிகளை, எமதர்மன், வாயு, அஸ்வினி தேவர்கள் ஆகியோர் பெற்றனர்.
இந்திரனின் பெருமையைப் பெற்ற தர்மதேவன், தர்மபுத்திர னாகப் பிறந்தான்; இந்திரனின் பலத்தைப் பெற்றிருந்த வாயு விடமிருந்து பீமன் பிறந்தான்; இந்திரனின் சக்தியிடமிருந்தே அர்ஜுனன் பிறந்தான்; இந்திரன் ஒளிவீசும் அழகைப் பெற்றிருந்த அஸ்வினி தேவர்கள், நகுலன் – ஸஹாதேவன் ஆகிய இருவராகப் பிறந்தனர். இவ்வாறு பாண்டவர்கள் ஐவரும், இந்திரனிடமிருந்து தோன்றியவர்களே. இந்திரனின் மனைவியே திரெளபதியாகப் பிறந்தாள். ஆகையால் திரௌபதி ஐவரை மணந்தபோது, இந்திர னின் மனைவி பூவுலகப் பிறப்பிலும், இந்திரனையே மணந்தாள். இதுதான் பாண்டவர்கள் ஐவரை திரௌபதி மணந்ததன் காரணம்.
திரௌபதியின் மகன்கள், அஸ்வத்தாமனின் இரவு நேரத் தாக்குதலில் மாண்டுபோனது தொடர்பாக, ஜைமினியின் அடுத்த சந்தேகம் அமைந்தது. ‘திரௌபதியின் மகன்கள், ராஜ்யபாரம் செய்யக் கொடுத்து வைக்காதவர்களாக, அற்ப ஆயுளில் மடிய நேரிட்டது ஏன்?’ என்பது அவர் கேள்வி. இதற்கும் விடை கிட்டியது. இந்த சந்தேகத்தைத் தீர்த்து வைக்க, பறவைகள், ஹரிச்சந் திரன் வரலாற்றை ஆரம்பித்தன. ஏனென்றால் ஹரிச்சந்திரனின் சரித்திரத்தில் வருகிற ஒரு நிகழ்ச்சியின் காரணமாகத்தான், திரௌ பதியின் மகன்கள் அற்ப ஆயுளில் மடிய நேரிட்டது.
ஹரிச்சந்திரன் வாழ்ந்தது திரேதா யுகத்தில் (அதற்கடுத்த த்வாபர யுகத்தில் மஹாபாரத நிகழ்ச்சிகள் நடந்தன.) ஒருமுறை ஹரிச்சந்திரன் வேட்டையாடச் சென்றான். அப்போது விச்வாமித்திரரின் ஆச்ரமத்திலிருந்து ஏதோ சப்தம் வருவதாக நினைத்து, யாரோ ஆபத்தில் இருப்பதாகத் தீர்மானித்து, ஆச்ரமத்தினுள் ஹரிச்சந்திரன் நுழைந்தான்.விச்வாமித்திரர் அப்போது தவம் செய்து கொண் டிருந்தார். யாராலும் அறிந்து கொள்ள முடியாத மூன்று வித்யைகளைப் பெற்று விட அவர் முனைந்திருந்தபோது, அந்த மூன்று வித்யைகளும் பெண்ணுருவில் எழுப்பிய அபயக்குரல் தான், ஹரிச்சந்திரனை ஆச்ரமத்தினுள் இழுத்தது.
விச்வாமித்திரர், தன்னுடைய பெரும் முயற்சியில் குறுக்கிட்ட ஹரிச்சந்திரன் மீது கோபம் கொண்டார்.
மற்றவர்களைக் காப்பாற்றுவதும், பாதுகாப்பு அளிப்பதும், போர் செய்வதும் அரசனின் கடமை என்பதால், அபயக்குரல் கேட்டு நான் உள்ளே வந்து விட்டேன்‘ என்று ஹரிச்சந்திரன் பணிவுடன் விளக்கம் அளித்தான்.
தர்மத்தைப் பற்றி இவ்வளவு அறிந்திருக்கிற நீ, என் கேள்விக்குப் பதில் சொல்வாயாக! ஒரு அரசன் யாருக்கு தானம் அளிக்க வேண்டும்? யாருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்? யாருடன் சண்டை செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்.
அந்தணர்களுக்கும், புனிதமானவர்களுக்கும் தானம் அளிக்க வேண்டும். ஆபத்தில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற வேண் டும். எதிரிகளுடன் போரிட வேண்டும்‘ என்று பதில் கூறினான் ஹரிச்சந்திரன்.
சரி. யாக தீட்சை ஏற்றுள்ள நான் தானம் பெற தகுதியுடையவன் என்பதால், நான் கேட்பதை நீ எனக்கு தானம் செய் என்றார் விச்வாமித்திரர்.
‘என்ன தானம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். மனதாரச் செய்கிறேன். பொன், பொருள், ஆபரணங்கள், நிலம், ராஜ்யம், எதுவாக இருந்தாலும் தானம் செய்கிறேன் என்று கூறினான் ஹரிச்சந்திரன்.
‘நகரங்கள், கிராமங்கள், காடு, மலைகள் உள்ளிட்ட உனது ராஜ்யம்; ரதங்கள், யானைகள், படை வீரர்கள், பொக்கிஷங்கள், கிடங்குகள், உனது பிரஜைகள், வேலையாட்கள்…. ஆகிய அனைத்தையும் எனக்கு அளித்து விடு‘ என்றார் விச்வாமித்திரர்.
‘தந்தேன்‘ என்றான் ஹரிச்சந்திரன்.
எல்லாவற்றையும் பெற்றுக் கொண்ட விச்வாமித்திரர், ஹரிச்சந்திரன் ஏற்கெனவே நடத்திய யாகத்திற்காக, தனக்கு தட்சணை தர வேண்டும் என்று கேட்டு, அதற்கு ஒரு மாதகாலம் அவகாசம் அளித்து, அவனை விடைபெற்றுச் செல்ல அனு மதித்தார். ஹரிச்சந்திரனுக்கு, விச்வாமித்திரர் இழைத்த கொடுமை களைக் கண்டு மனம் பொறுக்க முடியாத விஸ்வ தேவர்கள் ஐவர், ‘கொடுமை! கொடுமை!’ என்று உரக்கக் கூற, விச்வாமித்திரர் கோபம் கொண்டார்.
நீங்கள் தேவர்கள் என்ற கர்வத்தினால் அல்லவா இப்படிப் பேசுகிறீர்கள்! என் தவ வலிமையை நீங்கள் உணருமாறு செய் கிறேன். நீங்கள் பூலோகத்தில் மானிடர்களாகப் பிறந்து, அற்ப ஆயுளில், சந்ததி உண்டாக்குவதற்கு முன்பாகவே உயிரிழப்பீர் களாக!’ என்று அவர்களை அவர் சபித்து விட்டார்.
இந்த விஸ்வ தேவர்கள்தான், திரௌபதியின் மகன்களாகப் பிறந்து, அஸ்வத்தாமனால் தாக்கப்பட்டு, அற்ப ஆயுளில் தங்கள் முடிவை எய்தினார்கள். இந்த விவரங்களை ஜைமினி முனிவ ருக்கு எடுத்துரைத்த பறவைகள், அவர் கேட்டுக் கொள்ள, ஹரிச்சந்திரன் வரலாற்றைத் தொடர்ந்து விவரித்தன.
விச்வாமித்திரரிடம் விடைபெற்று வாரணாஸிக்குச் சென்ற ஹரிச்சந்திரன், அவருக்குத் தர ஒப்புக் கொண்ட யாக தட்சணைக் காக, தன்னையும், தன் மனைவி, மகன் ஆகியோரையும் விற் றான். இறுதியில் சுடுகாட்டில் அவன் பணிபுரியும்போது, அவனுடைய மனைவி, பாம்பு கடித்து இறந்து விட்ட தனது மகனின் உடலை அங்கு எடுத்து வர, ஹரிச்சந்திரன் அவளை அடையாளம் கண்டு கொள்ள, மும்மூர்த்திகளும் தோன்றி அவ னுக்கு நல்லுலகம் அளித்து, அவன் மகனையும் உயிர்ப்பித்தனர். மார்க்கண்டேய புராணத்தில் பல தத்துவங்கள் இடம் பெறு கின்றன. மதாலஸாவின் வரலாறு இதற்கு ஒரு உதாரணம். மதாலஸா ஒரு கந்தர்வக் கன்னியாக இருந்தாள். அவளை குவல யாச்வன் என்ற அரசகுமாரன் மணந்தான். அவனுக்கு முடிசூட்டி விட்டு, அவனுடைய தந்தை வானப்ரஸ்தத்தை மேற்கொள்ள, குவலயாசவன் மன்னன் ஆனான். அவனுக்கும் மதாலஸாவிற்கும் நான்கு மகன்கள் பிறந்தார்கள். முதல் மூன்று மகன்களுக்கும், சிறு வயதிலேயே தர்மத்தைப் பற்றியும், ஆன்ம அறிவு பற்றியும் மதாலஸா உபதேசம் செய்ய, அவர்கள் மூவரும் ஆட்சியை விரும்பாமல், கானகம் சென்று தவத்தில் ஈடுபட்டு விட்டனர்.
நான்காவது மகன் பிறந்தபோது அவனுக்கு ‘அலர்க்கன்‘ என்று மதாலஸா பெயரிட்டாள்.
‘ஏன், அர்த்தமற்ற பெயரை வைக்கிறாய்?’ என்று குவல
யாசவன் கேட்டான்.
முதல் மூன்று மகன்களுக்கும், வீரம், தோள் வலிமை, பகைவர்களை வெல்லும் தன்மை ஆகியவற்றை குறிப்பிடும் பெயர்களை வைத்தோம். அப்பெயர்கள் யாரைக் குறிக்கின்றன? ஆன்மாவுக்கு அசைவே இல்லை; பலம் கொள்ள உடல் இல்லை; பகைவர்களும் இல்லை. அப்படியிருக்க நாம் வைத்த பெயர்கள் அர்த்தமற்றவைதானே? நமது பிள்ளையை நாம் அழைப்பதற்காக வும், பிறர் அடையாளம் காண்பதற்காகவும் ஒரு பெயர் வைக்கின்றோம். இதில் பொருத்தமோ, அர்த்தமோ, என்ன வேண்டிக் கிடக்கிறது?’ என்று கூறினாள் மதாலஸா.
அந்த நான்காவது மகனையும், ஆன்மீக வழியில் திருப்பி விடாமல், ராஜ்யம் ஆளத் தகுதி பெற்ற க்ஷத்ரியனாகவே அவன் விளங்குவதற்கு உதவுகிற வகையில், அவனுக்கு அறிவுரை கூறி வளர்க்குமாறு கேட்டுக் கொண்டான் குவலயாச்வன். மதாலஸா இதற்கு சம்மதித்து அலர்க்கனுக்கு ராஜ நீதியை போதித்தாள். ஒரு அரசனின் கடமைகளை விவரித்துச் சொன்னாள்.
‘நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வழி செய்வதே அரசனின் முதல் கடமை. தனது அமைச்சர்களும், அதிகாரிகளும் முறைகேடாக நடப்பவர்களாக இல்லாமல் ஒரு அரசன் பார்த்துக் கொள்ள வேண்டும். எதிரிகளின் எண்ணங்களை முன்கூட்டியே புரிந்து கொள்ள, திறமையான உளவாளிகளை அமர்த்த வேண்டும். நண்பர்களையும்,உறவினர்களையும் கூட ஒரு அரசன் முழுமையாக நம்பிவிடக் கூடாது. சூழ்நிலைக்கேற்ப கடுமையாகவும், மிருது வாகவும் நடந்து கொள்ளும் தன்மை ஒரு அரசனிடம் இருக்க வேண்டும்…
இல்லறத்தில் உள்ள எல்லோருமே, உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். பிறர் பொருள் மீது ஆசைப்படக் கூடாது. யாருக்கும் துரோகம் நினைக்கக் கூடாது. சுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும். விருந்தாளிகளை உபசரிக்க வேண்டும். தன்னுடைய சம்பாத்தியத்தில், நான்கில் ஒரு பங்கை சேமிப்பாக எடுத்து வைக்க வேண்டும். காலையில் தர்ம சாத்திரங்களைப் பற்றி நினைத்து, அவற்றை நினைவில் கொள்ள வேண்டும்…
‘கடுமையான வார்த்தைகளையோ, பொய்களையோ பேசக் கூடாது. தீயவர்களுடன் உறவாடக் கூடாது; உதயமாகிறபோதும்; அஸ்தமனமாகிற போதும் சூரியனைப் பார்க்கக் கூடாது; தலை சீவிக் கொள்வது, பல் தேய்ப்பது, கண்ணாடியில் முகம் பார்ப்பது ஆகியவற்றை காலையில்தான் செய்ய வேண்டும்; மூத்தவர்களை எதிர்த்து வாதம் புரியக் கூடாது; தெருவில் செல்லும்போது, அரசர்கள், பிராம்மணர்கள், கற்றறிந்தவர்கள், சுமை தூக்கிச் செல்பவர்கள், அங்கஹீனம் உடையவர்கள், மனநிலை சரியாக இல்லாதவர்கள், குழந்தைகள் – ஆகியோருக்கு முதலில் வழி விட வேண்டும்…
மன வளர்ச்சி இல்லாதவர்கள், சித்த ஸ்வாதீனம் இல்லாத வர்கள், அங்கஹீனர்கள் ஆகியோரைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கக் கூடாது; வடக்கிலோ, மேற்கிலோ பார்த்தவாறு படுக்கக் கூடாது; கிரஹணம் இல்லாத நாளில், இரவில் குளிக்கக் கூடாது; சிகப்பு மற்றும் கருப்பு நிற உடைகளை அணியக் கூடாது; குளித்த உட னேயோ, சூரிய உதய அல்லது அஸ்தமன நேரங்களிலோ உறங்கக் கூடாது… இவ்வாறான அறிவுரைகள் பலவற்றை மதாலஸா தன் மகன் அலர்க்கனுக்கு எடுத்துச் சொன்னாள். அவன் பிற்காலத்தில் பெரும் அரசனாகத் திகழ்ந்தான். பின்னர் அவனுடைய மூத்த சகோதர னின் முயற்சியில், ஆன்மீக அறிவை அவன் மனம் நாடவே, தன் மூத்த மகனுக்கு பட்டம் சூட்டி விட்டு, அவன் கானகம் சென்று தவங்களில் ஈடுபட்டு மோட்சம் எய்தினான்.
இப்படி பல தகவல்களைக் கூறுகிற மார்க்கண்டேய புராணம், பூகோள ரீதியான பல விஷயங்களையும் விவரிக்கிறது. படைப்பு பற்றியும் பல விவரங்களை இப்புராணம் சொல்கிறது. இதை யெல்லாம் முழுமையாகக் கேட்டுக் கொண்டு, ஜைமினி முனிவர் தனது ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றதைச் சொல்லி, இப் புராணம் நிறைவு பெறுகிறது.