வாமன புராணம்

ஒருமுறை,நாரதர், புலஸ்திய மகரிஷியை அணுகி, வாமன புராணம் பற்றி கூறுமாறு கேட்டுக் கொண்டார். புலஸ்தியர், நாரதருக்குக் கூறிய விவரங்களே வாமன புராணம்.

வாமனன் என்றால் குள்ளமானவன். மஹாவிஷ்ணு வாமனனாக அவதரித்து, பலிச் சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண்ணை யாசகமாகக் கேட்டு, உலகளந்த நிகழ்ச்சியை வாமன புராணம் விவரிக்கிறது. அது தவிர, வேறு சில நிகழ்ச்சிகளும், சிவன் தொடர்புடைய சில சம்பவங்களும் கூட, இப்புராணத்தில் இடம் பெறுகின்றன.

வாமனாவதார நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். ப்ரும்ம தேவனிட மிருந்து தோன்றிய காச்யபருக்கு அதிதி, திதி என்று இரண்டு மனைவிகள். அதிதிக்கு பிறந்தவர்கள் நற்குணங்களை மிகுதி யாகக் கொண்டு, தேவர்களாக விளங்கினார்கள்; இவர்கள் ஆதித் யர்கள். திதிக்கு பிறந்தவர்கள் உணர்ச்சிகளுக்கு அடிமைகளாகி, தீச்செயலும் புரிகின்ற அஸுரர்கள் ஆனார்கள்; இவர்கள் தைத் யர்கள். அதிதியின் மகன்களுக்கும், திதியின் மகன்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டது. அவைதான் தேவா ஸுரப் போர்கள். கிட்டத்தட்ட அண்ணன், தம்பி சண்டைதான் இது! அஸுரர்கள், தீச்செயல்களில் ஈடுபட்டாலும் கூட, அவர்கள் எல்லோருமே அப்படிப்பட்டவர்கள் அல்ல. பெரும் பக்திமானான பிரஹலாதன் ஒரு அஸுரனே. அவனுடைய மகன் விரோசனன்; அவனும் கூட பக்தியுடையவனாகத் திகழ்ந்து, பிரஹலாதனின் குணங்களை உடையவனாகவே வாழ்ந்தான். அவனுடைய மகன், அதாவது பிரஹலாதனின் பேரன் பலி. இவன் பெரும் சக்ரவர்த்தியாக, அஸுரர்களின் தலைவனாகத் திகழ்ந்தான். தர்மிஷ்டன், நல்ல அரசன், பண்டிதன் என்றெல்லாம் வர்ணிக்கப் படக் கூடிய இவனுக்கு, தகாத ஆசை ஒன்று தோன்றியது. தேவலோகத்தையும் கைப்பற்றி, தானே தேவேந்திரன் ஆகிவிட வேண்டும் என்ற பேராசை அவன் மனதில் குடிகொண்டது. இந்த ஆசையினால் உந்தப்பட்டு, தனது பராக்கிரமத்தினால் அவன் மூவுலகங்களையும் வென்றான்.

தேவர்கள், தங்கள் தாயான அதிதியிடம் சென்று தங்கள் நிலையை எடுத்துக் கூற, ‘உங்கள் தந்தை காச்யபரிடம் சென்று, யோசனை கேளுங்கள்என்று கூற, அவர்கள் காச்யபரை அணு கினர். அவர்என்னால் இதற்கு என்ன செய்ய முடியும்? ப்ரும்ம தேவனிடம் சென்று, அவன் கருத்தைக் கேளுங்கள்என்று சொன்னார்.

தேவர்களின் முறையீட்டைக் கேட்ட ப்ரும்ம தேவன், ‘இதற்கு தீர்வு விஷ்ணுவிடம்தான் இருக்கிறது. நீங்கள் அவரிடம் முறையிடுங்கள். காச்யபரையும், அதிதியையும் விஷ்ணுவைக் குறித்து துதிக்கச் சொல்லுங்கள்என்றான்.

தேவர்கள், காச்யபருடனும், அதிதியுடனும் சேர்ந்து விஷ் ணுவை துதித்தார்கள். தானே காச்யபருக்கும், அதிதிக்கும் மகனாகப் பிறந்து, இப்பிரச்னைக்கு முடிவு காண்பதாக விஷ்ணு, வரமளித்தார். இப்படி விஷ்ணு கூறிய நேரத்திலிருந்தே, அஸுரர்களின் பலம் குன்ற ஆரம்பித்தது. காரணம் புரியாமலேயே அவர்களிடையே உற்சாகம் குறையத் தொடங்கியது. பலிச் சக்ரவர்த்தி, இதனால் கவலையுற்று தனது பாட்டன் பிரஹலாதனிடம் இதுபற்றிப் பேசினான்.

பிரஹலாதன், தான் மிகவும் பக்தி வைத்திருந்த விஷ்ணுவைத்துதித்து, நடப்பதை உணர்ந்து கொண்டான். ‘அதிதியின் வயிற்றில் பிறந்து, வாமனனாக நாராயணன் அவதரிக்கப் போகிறார். அவ ருடைய தோற்றம், அஸுரர்களைத் தாழ்த்தும். இப்போது அஸுரர் களிடையே ஏற்பட்டு வருகிற மனச்சோர்வு, உற்சாகக் குறைவு முதலியன, அதற்கான அறிகுறிகள்தான்‘ – என்று தெரிவித்தார்.

இது கேட்ட பலி, ஏளனமாகச் சிரித்து, ‘அந்த நாராயணன் என்னை விட சக்தி வாய்ந்தவனா?’ என்று கேட்க, ‘அழிவு காலம் நெருங்கி விட்டதால்தான், நீ இப்படி இறுமாப்புடன் பேசுகிறாய். உன் தந்தை என்பதால், உனக்கு விரோசனன் குரு ஆகிறான்; விரோசனனின் தந்தை என்பதால், நான் அவனுக்கு குரு ஆகிறேன்; எனக்கோ நாராயணனே குரு! அப்படிப்பட்டவனை நீ துச்சமாக நினைத்துப் பேசியதால், நீ உனது ராஜ்யத்தை இழப்பாய் என்று உனக்கு நான் சாபமிடுகிறேன்என்று மனம் நொந்து கூறினான் பிரஹலாதன்.

பலிச் சக்ரவர்த்தி மன்னிப்பு கோரினான். பிரஹலாதனுக்கு தனது பேரன் மீது பச்சாதாபம் தோன்றியது. தான் கொடுத்த சாபம் பலிக்கத் தான் செய்யும் என்றும்; ஆனால் அதை ஒரு வாய்ப்பாகவே மாற்றிக் கொள்ள, விஷ்ணுவிடம் பக்தி செலுத்தி அவரை துதிக்குமாறும், பலியிடம் கூறினான் பிரஹலாதன். மேலும் தர்மத்தைப் பற்றியும் உபதேசித்தான்.

இதற்கிடையில், அதிதியின் வயிற்றில் தோன்றிய கரு வளர்ந்தது; குள்ளமான உருவம் கொண்ட வாமனனாக விஷ்ணு அவதரித்தார். வாமனருக்கு உபநயனம் சிறப்பாக நடைபெற்றது; மான் தோலை பிரும்ம தேவனும், வியாழ தேவன் பூணூலும், மரீசி தண்டமும், ஆங்கிரஸ முனிவர் தர்ப்பையும், வசிஷ்டர் கமண்டல மும் தர, பரத்வாஜர் உபநயனத்தை நடத்தி வைத்தார்.

வாமனர், பரத்வாஜருக்கு, எந்தெந்த இடத்தில் எந்தெந்த தோற் றத்தில் தனது காட்சி காணக் கிடைக்கும் என்பதை விளக்கினார். இதில் இமயத்தில் சூல பாணியாகவும் (சிவன்), குருஜாங்கலத்தில் சங்கரனாகவும் (சிவன்), கைலாயத்தில் காளைக் கொடியுடைய வனாகவும் (சிவன்)… ‘ தான் தோற்றமளிப்பதாக வாமனர் கூறினார்ஹரியும், ஹரனும் ஒன்றே என்பது இப்படி வலியுறுத்தப்பட் டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், வாமனரும் அவரைத் தொடர்ந்து பரத்வாஜரும், மற்ற பல முனிவர்களும் புறப்பட்டு, பலிச் சக்ரவர்த்தி நடத்திக் கொண் டிருந்த யாகத்திற்குச் சென்றனர். அதிதியாக வந்த வாமனரை, பலி வரவேற்று உபசரித்தான்.

இதைக் கண்ட அஸுர குரு சுக்ராச்சாரியார், ‘வந்திருப்பது மகாவிஷ்ணு. தேவர்களுக்கு நன்மை புரிவதற்காகவும், அஸுரர் களை அழிப்பதற்காகவும் அவர் வந்திருக்கிறார். ஏமாந்து விடாதேஎன்று பலியை எச்சரித்தார்.

பலி அந்த எச்சரிக்கையை ஏற்க மறுத்தான். ‘சாதாரண விருந்தாளிகளையே உபசரிக்க வேண்டியது கடமை எனும்போது, மஹாவிஷ்ணுவே விருந்தாளியாக வந்துவிட்ட பிறகு, அந்தக் கடமை இன்னமும் பெரிதாகிறது‘ – என்று பதிலளித்தான் அவன்.

கபடமாக வந்திருக்கிற அதிதியை வரவேற்பதோ, உபசரிப் பதோ கடமையல்லஎன்று வாதாடினார் சுக்ராச்சாரியார்.

மஹாவிஷ்ணுவுக்கே தானம் செய்யக் கூடிய பெரும் பாக்கியம் எனக்குக் கிட்டியுள்ளபோது, என் மீது தயை வைத்து, அதை நீங்கள் தடுக்காமல் இருக்க வேண்டும்என்று கேட்டுக் கொண்டான் பலிச் சக்ரவர்த்தி.

உபசரிப்புகளை ஏற்றுக் கொண்ட வாமனரைப் பார்த்து பலி, அவர் விரும்பியதைக் கேட்குமாறு வேண்டிக் கொண்டான். தன் னுடைய குருவாகிய பரத்வாஜர் ஹோமம் முதலியவற்றைச் செய்ய ஒரு இடமில்லாத நிலை உள்ளதாகவும், அதனால் தன்னுடைய கால்களால் அளக்கப்படுகிற மூன்றடி நிலம் தந்தால் போதும் என்றும் கூறினார் வாமனர்.

மிகச் சிறிய உருவம் கொண்ட அவர், தனது கால்களினால் அளக்கப்படக் கூடிய மூன்றடி நிலம் போதும் என்று கூறியது பலிச் சக்ரவர்த்தியை வியப்பில் ஆழ்த்தியது. நீங்கள் மூன்றடி நிலம் கேட்டு, அதை நான் கொடுப்பது என்பது, என் கௌரவத்திற்கும், பெருமைக்கும் இழுக்கு. வேறு எதை வேண்டுமானாலும் கேளுங்கள்என்றான் அவன்.

வாமனரோ, மூன்றடி நிலமே போதுமானது என்பதில் உறுதி யாக இருந்து விட்டார். மனைவி தண்ணீரை தாரையாக வார்க்க, பலிச் சக்ரவர்த்தி தானம் செய்ய முனைந்தான். தண்ணீர் தாரை யாக ஊற்றப்படுவது, தானத்தில் முக்கிய அம்சம்; அதைத் தடுக்க முனைந்த சுக்ராச்சாரியார், பலியின் மனைவி கையில் இருந்த பாத்திரத்தின் மூக்கை தனது சக்தியினால் அடைத்தார்; இதைப் புரிந்து கொண்ட வாமனர் ஒரு தர்ப்பையினால் அந்த அடைப்பை நீக்கினார். தானம் முடிந்தது.

வாமனர், ஓங்கி உலகளந்த பெருமானாக உருவெடுத்து, ஓரடியில் பூமியையும், இரண்டாவது அடியினால் விண்ணுலகை யும் அளந்து விட்டு, மூன்றாவது அடியை எங்கே வைப்பது?’ என்று கேட்க, பலிச் சக்ரவர்த்தி, அந்த மூன்றாவது அடியை தன் தலை மீது வைக்குமாறு கேட்டுக் கொண்டான்.

அவ்வாறு செய்து பலியை அனுக்கிரஹித்த விஷ்ணு, அவன் பாதாள உலகின் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்து, பூமியில் இருந்தது போன்ற சுகங்களை அங்கும் அவன் துய்ப்பான் என அருளினார்.

இந்த வாமனவதார நிகழ்ச்சி, பெரும்பாலும் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், வாமன புராணத்தில் மற்றொரு வாமன வதார நிகழ்ச்சியும் கூறப்படுகிறது. இதுவே முதல் வாமனாவ தாரம் என்றும் இப்புராணம் பற்றிய நூல்கள் கூறுகின்றன. துந்து என்ற அஸுரன், ‘தனுவின் மகன்; தனுவின் பிள்ளைகள் தான வர்கள்; இவர்களும் அஸுர வகையைச் சார்ந்தவர்களே. தேவர் களாலும் தன்னை வெல்ல முடியாதுஎன்ற வரத்தை ப்ரும்ம தேவ னிடமிருந்து பெற்ற துந்து, கொடியவனாகத் திகழ்ந்தான்.

இவனை அழிப்பதற்காக தேவர்கள், விஷ்ணுவிடம் முறையிட, அவர் துந்து நடத்திக் கொண்டிருந்த யாகத்திற்கு, வாமனனாகச் சென்று, மூன்றடி நிலம் யாசிக்க, யாகத்தில் தானம் மறுக்கப்படக் கூடாது என்பதால், அவனும் சம்மதித்தான். மண்ணையும், விண்ணை யும் இரண்டடிகளில் அளந்துவிட்டு, விஷ்ணு மூன்றாவது அடியாக தனது காலை துந்துவின் மீது வைத்து அவனை அழித்தார். (பலிக்கு அருளிய மாதிரி, துந்துவிற்கு விஷ்ணு அருள் புரியவில்லை). மூன்றாவது அடியை அவர் எடுத்து வைத்த வேகத்தினால் தோன்றிய பள்ளத்திலேயே துந்து தள்ளப்பட்டு, பள்ளமும் மூடப்பட்டு விட்டது. இது முதலாவது வாமனவதார நிகழ்ச்சி.

விஷ்ணுவிற்கு, ‘முராரி’ என்ற பெயர் வந்த காரணத்தையும் புலஸ்திய முனிவர், நாரதருக்கு விவரித்தார். முரா என்ற அஸுரன் தவம் செய்து, ‘நான் யாரைத் தொட்டாலும், அவன் உயிரிழக்க வேண்டும்’ என்ற வரத்தை ப்ரும்ம தேவனிடமிருந்து பெற்றான். இவன் தன்னைத்தானே தொட்டு அழியுமாறு செய்ததால், விஷ்ணு முராரி என்ற பெயரைப் பெற்றார். ‘அரி’ என்றால் பகைவன்; முரனுக்கு அரி – முராரி.

ப்ரும்ம தேவன் தலைகளில் ஒன்றை சிவன் கிள்ளியபோது, அந்த மண்டை ஓடு சிவனின் கையிலேயே ஒட்டிக் கொண்டு விட்டது. என்ன செய்தும் அது, சிவனின் கையை விட்டு அகல வில்லை. இறுதியில் விஷ்ணுவிடம் சிவன் முறையிட்டுக் கொண்டபோது, வாரணம், அஸி என்ற இரு நதிகள் சந்திக்கிற வாரணாஸிக்குச் சென்று துதிக்குமாறு அவர் கூறினார். சிவனும் அவ்வாறே செய்ய மண்டை ஓடு மறைந்தது. கபாலம் – மண்டை ஓடு; இந்த நிகழ்ச்சியினால்தான் சிவனுக்கு, கபாலி என்ற பெயர் வந்தது.

இந்த நிகழ்ச்சி பற்றி வர்ணிக்கிற வாமன புராணம், மேலும் பல சம்பவங்களையும் விவரிக்கிறது. தக்ஷன் நடத்திய யாகத்தை சிவன் அழித்தது; மன்மதன் சிவனால் எரிக்கப்பட்டது; சுகேசி என்ற அஸுரனுக்கு சிவன் அருள் புரிந்தது; மஹிஷாஸுர மர்த்தனம்; உமையவள் தவமிருந்து சிவனை மணந்தது; விநாயகர் பிறப்பு; கார்த்திகேயன் (முருகன்) தேவர்களின் படைத் தலைவனாகியது; அந்தகன் எனும் அஸுரன் சிவனால் அழிக்கப்பட்டது… போன்ற பல சம்பவங்களைக் கூறி, முடிகிறது வாமன புராணம்.