ஸ்ரீமத் பாகவதம் – 14

பாகவதத்தில் வருகிற ருக்மிணி கல்யாணத்தையொட்டிய நிகழ்ச்சிகளில், சில தர்மங்கள், சில நடைமுறை உண்மைகள் விளக்கப்படுகின்றன. விதர்ப்ப தேசத்தின் அரசனாகிய பீஷ்மகர் என்பவருக்கு ஐந்து மகன்களும், ருக்மிணி என்ற பெண்ணும் இருந்தனர். பேரழகும், நற்குணங்களும் கொண்டவளாகிய ருக்மிணி, கிருஷ்ணரின் குணாதிசயங்கள், வீரம் ஆகியவற்றைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு, அவரையே தனது கணவராக, தன் மனதில் வரித்து விட்டாள். கிருஷ்ணரும் இதே போல ருக்மிணியின் மேன்மை யான குணங்கள், அழகு ஆகியவற்றைப் பற்றி கேள்விப்பட்டு, அவளை மணக்க விருப்பம் கொண்டிருந்தார். ருக்மிணியின் பல உறவினர்களும்,கிருஷ்ணருக்கே அவளை மணமுடிக்க சம்மதித்

திருந்தனர்.

ஆனால், அவளுடைய சகோதரர்களில் ஒருவனான ருக்மி என்பவன் மட்டும் இதை எதிர்த்தான். கிருஷ்ணர் மீது வெறுப்பு கொண்டிருந்த அவன், சிசுபாலனுக்கே, ருக்மிணியை திருமணம் செய்விக்க வேண்டும் என்று விரும்பி, ருக்மிணி, கிருஷ்ணருக்கு திருமணம் செய்விக்கும் முயற்சிகளை தடுத்து விட்டான். சிசு பாலனுக்கே, ருக்மிணி என்பது தீர்மானமாகியது.

சிசுபாலனுடன் தனக்கு திருமணம் நடப்பதை விரும்பாத ருக்மிணி, தன் எண்ணங்களைத் தெரிவித்து, கிருஷ்ணருக்கு தூய்மையான ஒரு அந்தணரை தூது அனுப்பினாள். அந்தத் தூதுவர், கிருஷ்ணரை சந்தித்து, ‘விதர்ப்ப தேசத்தின் அரச னுடைய மகளாகிய ருக்மிணிக்கு திருமணம் நடக்க இருக்கிறது. உங்களிடம் தெரிவிக்குமாறு அவள் என்னிடம் கூறியனுப்பிய செய்தியைக் கேளுங்கள்என்று கூறி மேலே தொடர்ந்தார்.

உங்களுடைய குணங்களைப் பற்றி கேள்விப்பட்டு, என் னுடைய மனம் உங்களை நாடிவிட்டது. இது எனக்கு திருமண நேரம். இந்த நேரத்தைத் தவறவிட்டால், அதன் பிறகு, நான் என்னுடைய எண்ணத்தைத் தெரிவிக்க முடியாது. நீங்கள் மாபெரும் வீரர். உங்களிடம் மனதை பறி கொடுத்த ஒருவள், சிசுபாலனால் தீண்டப்படலாமா? ஒரு சிங்கத்தின் எதிரே வைக்கப்பட்டதை, ஒரு நரி அபகரித்து விடலாமா? நீங்கள் வந்து என்னைக் காப் பாற்றி, திருமணம் செய்து கொள்ள வேண்டும். விதர்ப்பதேசத் திற்கு வந்து, உங்கள் பராக்கிரமத்தைக் காண்பித்து, ‘ராக்ஷஸ முறை என்கிற திருமண முறைப்படி, என்னைக் கவர்ந்து சென்று மணப்பீராக! நான் பரமாத்மாவிடம் உண்மையாக பக்தி செலுத்தி யிருந்தால்இப்போது கிருஷ்ணர் வந்து என்னை ஏற்கட்டும்‘.

இவ்வாறு ருக்மிணி கூறியதை அப்படியே எடுத்துரைத்த தூதுவர், ‘யாதவர்களின் தெய்வமே! இதைப் பற்றி நன்றாக சிந்தனை செய்து, செய்யத் தக்கதை செய்வீராக!’ என்று கூறி முடித்தார்.

கிருஷ்ணர், ‘ருக்மி என்னிடம் கொண்டுள்ள விரோதத்தின் காரணமாக, ருக்மிணி என்னை மணக்காமல் தடுத்திருக்கிறான் என்பதை நான் அறிவேன். இப்போது ருக்மிணியே மனம் திறந்து பேசி விட்டாள். தர்மத்தில் நாட்டமின்றி நடந்து கொள்கிற அர சர்கள் கூட்டத்தை வென்று, ருக்மிணியை கவர்ந்து வந்து மணம் புரிவேன்என்று உறுதி கூறினார்.

அடுத்த தினம், ருக்மிணி சிசுபாலன் திருமணம் என்று ருக்மி ஏற்பாடு செய்திருந்தான்; ருக்மிணி மனத் தளர்ச்சி அடைந் தாள். ஒருவேளை தான் தூது அனுப்பியதை, தகாத செயலாக நினைத்து, கிருஷ்ணர் தன்னை ஏற்க சம்மதிக்கவில்லையோ என்று கூட அவள் அஞ்சினாள். கிருஷ்ணர் வந்து தன்னை காப் பாற்றா விட்டால், உயிரை விடுவது என்றும் ருக்மிணி தீர்மானித்தாள். அப்போது அவளால் தூதுவராக அனுப்பப்பட்ட அந்தணர் வந்து, அவளை ஏற்க கிருஷ்ணர் வரப் போகிறார் என்ற செய்தி யைத் தெரிவிக்க, ருக்மிணி அவரை வணங்கி, பெரும் மகிழ்ச்சி யில் திளைத்தாள்.

கிருஷ்ணர் வந்து சேர்ந்தார். அவருடைய வீர சாகஸங்களைப் பற்றி அறிந்திருந்த மக்கள், தங்கள் நகரத்திற்கு அவர் வந்திருப்பதை அறிந்து, அவரைப் பார்க்கக் கூடினார்கள். ‘நமது ருக்மிணியை மணக்க, இவரே தகுதியானவர்; அப்படியிருக்க, சிசுபாலனுக்கு அவளை மணம் முடிக்க ஏற்பாடு நடக்கிறதே!’ என்று அவர்கள் அனைவரும் வருந்தினர்.

காவலாட்கள், தோழிகள், துதிகளைக் கூறிக் கொண்டு வந்த வேதியர்கள், வாத்யங்களை இசைத்துக் கொண்டு வந்த கலைஞர் கள் என்று பலர் புடைசூழ, ருக்மிணி, அம்பிகையின் ஆல யத்திற்கு வந்தாள். அம்பிகையை தரிசனம் செய்து, கிருஷ்ணரே தனக்கு கணவனாக வேண்டும் என்று வேண்டிக் கொண்ட பிறகு, அவள் ஆலயத்தின் வெளிப்புறத்திற்கு வந்தாள். அங்கே கூடி யிருந்த படைவீரர்களும், பல அரசர்களும், மயக்கம் அடைந்து விடாத குறையாக, அவளைக் கண்டு பிரமித்து நின்றனர்.

தான் ஆலயத்திற்கு வந்து சேர்ந்த அரண்மனை ரதத்தில் ஏறுவதற்காக, ருக்மிணி அந்த ரதத்தை நெருங்கினாள். அப்போது கிருஷ்ணர் அங்கே வந்து, அவளை அப்படியே தூக்கி, தனது ரதத் தில் அமர்த்தி, ரதத்தை செலுத்தினார். தங்களை லட்சியம் செய் யாமல் கிருஷ்ணர் இப்படிச் செய்ததைக் கண்டு அரசர்கள் வெகுண்டனர். சிசுபாலன் பெரும் கோபம் கொண்டான். ஜரா ஸந்தன், பலர் பின்தொடர கிருஷ்ணரின் ரதத்தை துரத்திக் கொண்டு சென்றான். யாதவ வீரர்கள் அவர்களை எல்லாம் எதிர்த்தனர். ஜராஸந்தனும், அவனைத் தொடர்ந்து வந்தவர்களும், யாதவ சைன்யத்தின் தாக்குதலைத் தாங்க முடியாமல் பின்வாங்கி விட்டனர்.

இதையறிந்து பெரும் மனவருத்தம் அடைந்த சிசுபாலனை, ஜராஸந்தன் தேற்றினான். ‘இது நமது பகைவர்களுக்கு சாதகமான காலம்; இந்த நிலை மாறும்; நமக்கு சாதகமாக காலம் மாறு கிறபோது, நாம் நிச்சயமாக அவர்களை எல்லாம் அழிப்போம்என்று ஜராஸந்தனும், மற்றவர்களும் கூறிய சமாதானப் பேச்சு, சிசுபாலனின் மனவருத்தத்தை ஓரளவு போக்க, அனைவரும் தங்கள் தங்கள் நகரங்களுக்குத் திரும்பினர்.

இவ்வளவு நடந்த பின்பும், ருக்மியின் கோபம் அடங்கவில்லை. அவன் ரதத்தில் ஏறி, கிருஷ்ணரின் ரதத்தைத் துரத்திச் சென்று, அவரை போருக்கு அழைத்து, அவர் மீது தாக்குதலைத் தொடங்கி னான். ஆனால் அவனுடைய பாணங்கள் எல்லாம் கிருஷ்ணரால் நாசம் செய்யப்பட்டன. இறுதியில் ருக்மியை கொன்று விடுவதற் காக, கிருஷ்ணர் தன்னுடைய வாளை கையில் எடுத்தார்.

ருக்மிணி பயந்து போய், தன்னுடைய சகோதரனை உயிருடன் விட்டு விடுமாறு கிருஷ்ணரை வேண்டிக் கொள்ள, அவர் ருக்மியை கட்டிப் போட்டு, உருவிய கத்தியினாலேயே அவ னுடைய தலைமுடியையும், மீசையையும் வெட்டி எறிந்தார். அப்போது, கிருஷ்ணரின் அருகில் பலராமன் சென்று, ‘கிருஷ்ணா! இம்மாதிரி நீ இவனை விகாரப்படுத்தியது சரியல்ல. இது நீ அவனைக் கொன்றதற்கு சமமாகிறது. நீ இவ்வாறு செய்திருக்கக் கூடாதுஎன்று கூறி, ருக்மியை விடுவித்தார்.

பின்னர் ருக்மிணியைப் பார்த்து பலராமன், பின்வருமாறு பேசினார்:

உன்னுடைய சகோதரனுக்கு நேரிட்டுவிட்ட அவமானத்தை நினைத்து நீ வருந்த வேண்டாம். தன்னால் செய்யப்பட்ட புண் ணியங்கள், பாவங்கள் ஆகியவற்றின் பலனை மனிதன் அனுப வித்துத்தான் ஆக வேண்டும். ஒரு மனிதனுக்கு நிகழ்கிற இன்பங்களும் சரி, துன்பங்களும் சரி, மற்றவர்களால் ஏற்படு கிறவை அல்ல. அவனவன் முற்பிறவியிலோ, இப்பிறவியிலோ செய்த புண்ணியங்கள் அவனுக்கு இன்பங்களை அளிக்கின்றன; அதேபோல அவன் செய்த பாவங்கள் அவனுக்கு துன்பத்தை ஏற்படுத்துகின்றன‘. இவ்வாறு ருக்மிணியிடம் கூறிய பலராமன், கிருஷ்ணரிட மும் இடையிடையே சில வார்த்தைகளைச் சொன்னார்:

கிருஷ்ணா! உறவினன் ஆகிவிட்டவன், தவறு செய்து விட் டால் அதற்காக அவனைக் கொன்று விட முனைவது விவேக மல்ல. அவன் செய்த குற்றமே, அவனுக்கு தண்டனையாகி விடும்! அப்படியிருக்க அவனை ஏன் மீண்டும் தண்டிக்க வேண்டும்? கிருஷ்ணா! தங்களிடமிருக்கும் செல்வம் ஏற்படுத்துகிற கர்வத்தினால் உந்தப்பட்டு, விவேகமில்லாத அரசர்கள், ராஜ்யம், நிலம்,செல்வம், பெண், கௌரவம் ஆகிய காரணங்களுக்காக மற்ற வர்களை வெல்கிறார்கள். ஆனால் இவை எல்லாம் உனக்கு பொருந்தாத விஷயங்கள்.

இப்படி கிருஷ்ணரிடம் தன் கருத்தைக் கூறிவிட்டு, மீண்டும் ருக்மிணியைப் பார்த்து பலராமன் பேசினார்:

சகோதரனைக் கூட அவசியம் நேரிடுகிறபோது கொன்று விடுவது, க்ஷத்ரிய தர்மம். இது கடுமையானதுதான்; ஆனால் அதில் தர்ம விரோதமில்லை. நல்லவர்கள் எல்லோரிடமும் பகை கொண்டு அலையும் ருக்மி போன்றவனுக்கு நன்மையை வேண்டுவது, அறி வுடைய செயல் அல்ல. தீயவனான உன்னுடைய சகோதரனுக்கு கிருஷ்ணன் அளித்தது தண்டனை அல்லஅது அனுக்ரஹம். ஏனென்றால் அவனுடைய பாவத்தின் பலனை இப்போது அவன் அனுபவித்து விட்டான். தவிர, ஆன்மாவிற்கு எந்த இன்னலும் விளைவதில்லை; அதற்கு எந்த அவமானமும் நிகழ்வதில்லைஎன்ற உண்மையையும் நினைத்து, உன் மனதை நீ தேற்றிக் கொள்‘.

இதைத் தொடர்ந்து, துவாரகையில் கிருஷ்ணருக்கும் ருக் மிணிக்கும் முறைப்படி திருமணம் நடந்தது. ஒருநாள் கிருஷ்ணர், ருக்மிணியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, அவர் பெரும் பலம் கொண்ட சிசுபாலன் மட்டுமின்றி, வலிமை வாய்ந்த வேறு பல அரசர்களும் கூட, உன்னை மணம் புரிய விரும்பினர். தகுதியுள்ள அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, என்னை மணக்க நீ ஏன் முனைந்தாய்? எனக்கென்று ஒரு ராஜ்யமும் இல்லை. எவனுடைய நடத்தை, இப்படிப்பட்டதென்று குறிப்பாக அறியப்படவில்லையோ, அவனை மணப்பது பெண்களுக்கு நல்லதல்லவே! நான் பலசாலி களை எல்லாம் விரோதித்துக் கொண்டவன்‘.

கிருஷ்ணரின் பேச்சு தொடர்ந்தது : ‘நான் தரித்திரன். ஏழை கள்தான் என்னிடம் அன்பு கொள்வார்கள். பணக்காரர்கள் என்னை உண்மையாக நினைக்க மாட்டார்கள். பெண், ஆண், இரு வருக்கும் அந்தஸ்து, செல்வம், அழகு எல்லாம் சமமாக இருந்தால், அவர்கள் மணம் புரியலாம். இவை சமமாக இல்லாத ஆணும், பெண்ணும் மணம் புரிவது மேலானது அல்ல. நான் ஸன் யாசிகளினால் கொண்டாடப்படுகிறவன்; நீயோ ராஜகுமாரி. நான் குணங்கள் அற்றவன்; நீயோ நற்குணங்கள் உடையவள். இவற்றையெல்லாம் நினைத்து பார்க்காமல் என்னை மணந்து

விட்டாய்!

மனைவி, மக்கள், உடல், வீடு, செல்வம் என்ற எதிலும் எனக்குப் பற்றில்லை. ஓரிடத்தில் நடக்கிற நிகழ்ச்சிகளுக்கெல் லாம், அங்கு இருக்கக் கூடிய விளக்கு எப்படி வெறும் சாட்சியாக இருக்கிறதோ, அப்படித்தான் நான் இருக்கிறேன். என்னை மணந்ததால் உனக்கு எந்த மகிழ்வும் இல்லை!’

கிருஷ்ணருக்கு, எல்லோரையும் விட தன்னிடம்தான் அன்பு அதிகம் என்ற எண்ணம் ருக்மிணிக்கு இருந்ததால், அந்த கர்வம் தந்த எண்ணத்தை அவளுடைய மனதிலிருந்து அகற்ற, ஒரு அதிர்ச்சி அளிக்கும் நோக்கத்தில் கிருஷ்ணர் இப்படிப் பேசினார். அவர் பேசியதைக் கேட்ட ருக்மிணி அதிர்ச்சியுற்றாள். கிருஷ்ணர் தன்னை விட்டு விலகி விடுவாரோ என்று அஞ்சிய அவள், நிலை தடுமாறி மயக்கமுற்றாள்.

கிருஷ்ணர் அவளுடைய மயக்கத்தைத் தெளிவித்து, ‘நீ என்னிடம் அன்பு கொண்டவள் என்பது எனக்குத் தெரியாதா? விளையாட்டாக நான் பேசியதை, விபரீதமாக நினைத்து விடாதே!’ என்று கூறி அவளைத் தேற்றினார்.

ருக்மிணி பயம் நீங்கியவளாக கிருஷ்ணரைப் பார்த்து இவ் வாறு பேசினாள்: ‘நாம் இருவரும் சமமானவர்கள் அல்லஎன்று நீங்கள் கூறியது உண்மையே; நீர் ப்ரும்ம தேவனுக்கே அதிபதி; நானோ சாதாரண அபலைப் பெண்; நாம் எப்படி சமமானவர்கள் ஆக முடி யும்? பலமுள்ளவர்களை நீங்கள் விரோதித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னீர்கள்; உண்மையே. இந்த்ரிய சுகங்கள் பலம் வாய்ந்தவை; அவை உமக்கு விரோதமே! உம்முடைய நடத்தை பிறரால் அறியப்படாதது என்று சொன்னீர்கள்அதுவும் மெய்தான்; உம் முடைய பாதங்களை சரண் அடைந்துள்ள முனிவர்களின் நடத்தை யையே யாராலும் புரிந்து கொள்ள முடியாது எனும்போது, உங்களைப் புரிந்து கொள்வது எப்படி?

பணக்காரர்கள் உங்களை உண்மையில் நினைக்க மாட்டார்கள் என்று நீங்கள் சொன்னது சரிதான்; தங்கள் உடலை திருப்தி செய்வதையே நோக்கமாகக் கொண்ட அவர்கள், உங்களை நினைக்க மாட்டார்கள்தான். ஸன்யாசிகள்தான் உங்களை சரண் எய்துவார்கள் என்பதும் உண்மையே. அவர்கள் ஆத்ம ஞானத்தை முழுமையாகப் பெற விரும்புகிறவர்கள். அதைத் தருவதற்கு உங்களைத் தவிர வேறு எவர் இருக்கிறார்?

மற்ற அரசர்களை எல்லாம் விட்டு உங்களைத் தேர்ந்தெடுத்தது ஏன்என்று கேட்டீர்கள்; உம்முடைய புருவம் உயர்ந்தால் இந்திர தேவனின் செல்வமே நாசமாகி விடும்; அப்படியிருக்க இந்த அரசர்கள் எம்மாத்திரம்? அதனால் அவர்களை விட்டு, உங்களை நான் வரித்தது, சரியான செயலே

இவ்வாறெல்லாம் கூறிய ருக்மிணி, இறுதியாக உம்முடைய பாதங்களை சரண் அடைந்தவர்களுக்கு சம்சார பந்தம் என்பதே கூட அழிந்து விடும். நான் உமது பாதங்களை சரண் அடைந்தேன் என்று கூறினாள். கிருஷ்ணர், ருக்மிணியை சிலாகித்து, லக்ஷ்மி தேவியின் அம்சமான அவளுடன் இல்லற தர்மத்தை அனுஷ்டித்தார்.

இவ்வாறு சுகர், பரீக்ஷித் மன்னனுக்கு ருக்மிணி கல்யாண விவரங்களைக் கூறினார் என்பதை, நைமிசாரண்யத்தில் கூடியிருந்த ரிஷிகளுக்கு ஸுதர் எடுத்துரைத்தார்.