ஸ்ரீமத் பாகவதம் – 20

பரீக்ஷித் மன்னன், ‘கிருஷ்ணர் வைகுண்டம் திரும்பிய பிறகு, பூமியில் யார் யார் அரசாண்டார்கள்?’ என்று கேட்க, சுகர் ஒரு நீண்ட மன்னர் வரிசையைக் கூறினார். இந்த வரிசையில், ஓரிருவரைத் தவிர, மற்றவர்கள் எல்லாம் எதிர்கால அரசர்கள். அதாவது, சுகர் ஸ்ரீமத் பாகவதத்தை பரீக்ஷித்திற்கு விவரித்துக் கொண்டிருந்த கால கட்டத்திலும், அதற்கு முன்பாக, கிருஷ்ணர் வைகுண்டம் திரும்பிய பின்னரும், அரசாண்ட மன்னர்கள் ஒரு சிலர். ஸ்ரீமத் பாகவதம் கூறப் பட்ட காலத்திற்கு பின்னர், அரசாள இருந்த மன்னர்கள் பலர். அவர்கள் பெயர்களை எல்லாம் கூட சுகர், பரீக்ஷித்திற்கு எடுத்துச் சொன்னார். சுகர் சொன்னதுவருங்கால மன்னர் வரிசை,

இந்த வரிசையில் பல அரசர்களின் பெயர்களும் நாம் கேள்விப்படாதவையே. கிருஷ்ணர், த்வாபர யுகத்தின் முடிவில் வைகுண்டம் திரும்பினார். கலியுகம் தொடங்கி இப்போது கிட்டத் தட்ட ஐயாயிரம் வருடங்கள் ஆகின்றன. இந்த ஆயிரக்கணக்கான வருடங்களில் தோன்றிய அரசர்கள் பெயர்களை சரித்திர ஆராய்ச்சி களும் கூட அறியாது. ஆகையால், சுகர் கூறிய மன்னர்களின் பெயர் களில் பல, நாம் அறியாதவையாக இருப்பதில் வியப்பில்லை.

ஆனால் வியப்புக்குரிய விவரமும் ஒன்று உண்டு. நந்தர்கள், அவர்களைத் தொடர்ந்து, மௌரியர்கள், இந்த தேசத்தின் பெரும் பகுதியில் ஆட்சி செலுத்தினார்கள் என்பது சரித்திரம் கூறுகிற விஷயம். இதை சுகர், அன்றே பரீக்ஷித்திற்குக் கூறினார், என்பது வியப்புக்குரிய விஷயம்.

கூ

நந்தர் என்பவர் தனது குடையின் கீழ் பூமியின் பெரும் பகுதியை ஆள்வார். அவருக்குப் பின்னர் அவருடைய வம்சத்தினர் ஆட்சி புரிவார்கள். அப்போது, ஒரு அந்தணன், புகழ் பெற்ற நந்தர்களை அழிப்பார். அதன் பின் மௌரிய வம்சத்து அரசர்கள் பூமியை ஆள்வார்கள். அந்த அந்தணனே, மௌரிய வம்சத்தின் முதல் அரசனாகிய சந்திரகுப்தனுக்கு பட்டாபிஷேகம் செய்விப்பான்என்று சுகர் கூறினார்.

(நந்தர்களின் ஆட்சியை அகற்றி, சந்திரகுப்தன் அரசு பதவி ஏற்க, சாணக்கியன், கௌடில்யர் என்ற பெயர்களைப் பெற்ற அந்தணர் பேருதவி புரிந்தது, சரித்திர சம்பந்தமான நிகழ்ச்சி. கௌடில்யர் இயற்றிய அர்த்தசாஸ்திரம் என்கிற நூல் பற்றி, நாம் ஏற்கெனவே சற்று விவரமாகப் பார்த்தோம்.)

மௌரியர்களை அடுத்து கண்வர்கள், அரசு பதவிக்கு வரு வார்கள் என்று கூறிய சுகர், ஆந்திரர்கள் அரசாள இருப்பதையும் எடுத்துச் சொன்னார். யவனர்கள் ஆட்சி புரிவார்கள் என்பதும் கூறப் பட்டது. மிலேச்சர்களின் (அயல் நாட்டினர்) ஆட்சி நடக்கும் என் பதும் சொல்லப்பட்டது. இவர்கள் எல்லாம், யார் யார் எந்தெந்தப் பகுதிகளில் ஆட்சி செலுத்துவார்கள் என்பதும் குறிப்பிடப்பட்டது. இறுதி கட்டங்களில், க்ஷத்திரியர்கள் ஆட்சி என்பது போய்விடும்.

கலியுகம் வளர வளர, மன்னர்களின் தன்மை எத்தகையதாக இருக்கும் என்பது பற்றி சுகர் கூறியவை, மிகவும் ஆச்சர்யத்தை அளிக்கின்றன. கலியுகம் முதிர்ச்சி அடைய அடைய, மன்னர்கள் தரம் தாழ்ந்து விடும் என்று சுகர், பரீக்ஷித்திடம் கூறினார். ‘அரசர்கள், அதர்மத்தையே கடைப்பிடிப்பார்கள். பொய் பேசுவதே அவர் களுடைய வழக்கமாக இருக்கும். பெண்கள், சிறுவர்கள், பசுக்கள், மற்றும் அந்தணர்கள் ஹிம்சிக்கப்படுவார்கள். பொதுவாகவே கூட, மக்களிடமிருந்து பெரும் பணத்தை வசூலித்து, அந்த மக்களையே மன்னர்கள் துன்புறுத்துவார்கள். மன்னர்கள், மற்றவர்களின் செல்வத்தில் ஆசை வைப்பார்கள். சாதாரண விஷயங்களுக்காகக் கூட பெரும் கோபத்தை அடையக் கூடிய அந்த மன்னர்கள், அல்ப விஷயத்திற்காகக் கூட சந்தோஷப்பட்டுக் கொள்வார்கள். ரஜோ குணமும், தமோ குணமும்தான் அவர்களிடம் காணப்படும்.

மன்னர்களின் சுபாவம், மக்களையும் பீடிக்கும். மன்னர்கள் பேசுகிற மாதிரியே மக்களும் பேசுவார்கள். அது மட்டுமின்றி, மன்னர்களால் துன்புறுத்தப்படுகிற மக்கள், தாங்களே கூட ஒரு வரை ஒருவர் துன்புறுத்திக் கொள்ளத் தொடங்குவார்கள்.

அரசர்கள், திருடர்கள் போலவே நடந்து கொள்வார்கள். மக்களின் பணத்தை அவர்கள் பல வழிகளில் அபகரிப்பார்கள். அவர்களால் ஹிம்சிக்கப்படுகிற மக்கள், தங்கள் தேசங்களைவிட்டு வெளியேறுவார்கள். காலம் தவறி மழை பெய்யும். கிழங்கு வகைகள், வேர்கள், விதைகள், தண்டுகள் ஆகியவை கூட மக்களின் உணவாகும். தர்மங்கள் குறையும்.

திருடனின் நியாயமே, அரசனின் நியாயம் என்று ஆகி விடுகிற நிலையில், மக்களிடையேயும் அதே குணம் பரவும். எல்லா வர்ணத்தவரும், நாலாம் வர்ணத்திற்குரிய குணாதிசயங்களையும் நடத்தையையும் கடைப்பிடிப்பார்கள்.

ஸன்யாஸிகள், இல்லறம் நடத்துகிறவர்கள் போல, குடும் பத்தை உடையவர்களாக இருப்பார்கள். இல்லறத்தில் உள்ளவர் களுக்கு, மனைவி வழி உறவினர்களே முக்கியஸ்தர்களாக இருப் பார்கள்; மைத்துனர்கள் போன்றவர்களே, நெருங்கிய பந்துக்களாகி விடுவார்கள். விருந்தாளிகளை உபசரிப்பது என்பது அற்றுப் போய், வீடுகள் சூன்யமாகி விடும்.

பணம் உள்ளவன், மேலானவனாகக் கருதப்படுவான்; பணம் உள்ளவன் குணவானாகப் போற்றப்படுவான்; பணம் உள்ளவன் நல்ல தர்மங்களைக் கடைப்பிடிப்பவனாக பாராட்டப்படுவான்; பலவான், நியாயவான் ஆவான்; பலம் உள்ளவன் சொல்வதே தர்மமும், நியாயமும் ஆகும்.

திருமணம் செய்து கொள்வதில், அவரவர்களுடைய ஆசையே காரணமாக விளங்கும். வாய்ப் பேச்சில் வல்லவன், திறமை உள்ளவன் எனக் கருதப்படுவான். நல்ல குலத்தில் பிறப்பு, நல்ல நடத்தை, நல்ல பழக்க வழக்கங்கள் என்பவை, ஒரு மனிதனுக்கு சிறப்பு தராது.

ப்ராம்மணனுக்கு, பூணூல் ஒன்றுதான் அடையாளமாக இருக்கும்; மற்ற நியமங்களோ, தர்மங்களோ அவனிடம் இருக்காது. தண்டம் (கோல்) போன்ற அடையாளங்களைக் கொண்டுதான், ‘இவன் இந்த ஆச்ரமத்தைச் சார்ந்தவன்என்று புரிந்து கொள்ள வேண்டிய நிலை தோன்றும்.(அதாவது, இல்லறம், வானப்ரஸ்தம், ஸந்யாசம் என்கிற ஆச்ரமங்களில் அந்தந்த தர்மம் இருக்காதுவெறும் சின்னங்களே இருக்கும்என்று சுகர் கூறுகிறார்). அந்தந்த ஆச்ர மத்திற்கு உரிய தர்மங்கள் கடைப்பிடிக்கப்படாது.

ஏழை தோல்வியுறுவான்; பணக்காரன் வெற்றி பெறுவான். ஏழையாக இருப்பவனே தீயவன், திருடன் என்றெல்லாம் நினைக்கப் படுவான்; பணமுள்ளவன் நல்லவனாகவும், மேன்மையானவனாக வும் போற்றப்படுவான்.

ஆணும் பெண்ணும் கலப்பதே திருமணத்தின் நோக்கமாகி விடும். முடி வைத்துக் கொள்வது அழகுக்காகவே என்று ஆகி விடும். தன் வயிற்றை நிரப்பிக் கொள்வதே மனிதனுடைய லட்சிய மாகி விடும். ஒவ்வொருவனும் தன்னுடைய திறமைகளை, தன் குடும்ப நலனுக்காக மட்டுமே பயன்படுத்துவான்; ஒருவன் தர்மத்தை அனுஷ்டித்தால், அது புகழ் பெறுவதற்காக மட்டுமே இருக்கும்.

நான்கு வர்ணத்தாரில், ஒவ்வொரு நேரத்தில் எவன் பலமுள்ள வனாக இருக்கிறானோ அவன் அரசனாவான். மக்கள் அதிகமாக சாப்பிடுகிறவர்களாகவும், காம வெறி கொண்டவர்களாகவும் இருப் பார்கள். பெண்களோ, பதிவிரதைகளாக இருக்க மாட்டார்கள். வெட்கத்தை விட்டவர்களாகவும், கடும் சொற்களைப் பேசுபவர்களாகவும் பெண்கள் திகழ்வார்கள்.

திருட்டுத்தனம் நிலவும். வேதம் புறக்கணிக்கப்படும். மக்களிட மிருந்து பணத்தைப் பிடுங்கி மன்னர்கள் இன்புறுவார்கள். ப்ராம்ம ணர்கள் தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்வதிலும், ஆசைகளைத் திருப்தி செய்து கொள்வதிலும்தான் நோக்கமுடையவர்களாக இருப்பார்கள். ப்ரம்மச்சாரிகள், அசுத்தர்களாக இருப்பார்கள். ஸன்யாஸிகள் பணத்தில் குறி வைப்பார்கள்.

அவரவர்கள் தங்கள் தங்கள் தர்மங்களை விட்டுவிட்டு, வியாபாரத்தில் நாட்டம் கொண்டு, வெறுக்கக் கூடிய விஷயங் களையும் விற்று பணம் திரட்ட முனைவார்கள்; அந்த வியா பாரத்திலும் கூட மோசடியே மேலோங்கி நிற்கும். பரம்பரை பரம்பரையாக பணி புரிந்து வரும் வேலைக்காரர்களைக் கூட, எஜமானர்கள் தயவு தாட்சண்யமின்றி, வேலையை விட்டு துரத்துவார்கள். கறக்காத பசுக்களை மக்கள் கைவிடுவார்கள். மைத்துனன், மனைவியின் சகோதரி போன்ற மனைவியின் உறவினர்களிடையே நெருக்கம் கொண்டு, அவர்களையே நெருங்கிய உறவினர்களாகப் பாவித்து, அவர்களுடன் பொழுதைக் கழிப்பதையே மனிதர்கள் விரும்புவார்கள். தனது சகோதரர்கள், சகோதரிகள், மற்ற உறவினர்கள் போன்றவர்களிடத்தில் மனிதன் அன்பு காட்ட மாட்டான். நாலாம் வர்ணத்தினர் தபஸ்விகளாக தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டு, மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய முனைவார்கள்.

சிறிய காசுக்காகக் கூட, மனிதர்கள் நட்பையும் மறந்து, பெரிய சண்டைகளில் ஈடுபடுவார்கள். வயது முதிர்ந்த தாய், தந்தையரை, மனிதர்கள் புறக்கணிப்பார்கள். தான், தன் வயிறு, தன்னுடைய காம வேட்கை போன்றவையே ஒவ்வொருவருக்கும் முக்கியமான தாகி விடும்.

இப்படி கலியுகத்தில் மனிதர்கள் அடையக் கூடிய தாழ்வை எல்லாம் சுகர் விளக்கியபோது, பரீக்ஷித் கேட்டான்: ‘இப்படி பாவங்கள் மலிந்த கலியுகத்தில், அந்த பாவங்களைப் போக்கிக்பவர்களாகவும் பெண்கள் திகழ்வார்கள்.

திருட்டுத்தனம் நிலவும். வேதம் புறக்கணிக்கப்படும். மக்களிட மிருந்து பணத்தைப் பிடுங்கி மன்னர்கள் இன்புறுவார்கள். ப்ராம்ம ணர்கள் தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்வதிலும், ஆசைகளைத் திருப்தி செய்து கொள்வதிலும்தான் நோக்கமுடையவர்களாக இருப்பார்கள். ப்ரம்மச்சாரிகள், அசுத்தர்களாக இருப்பார்கள். ஸன்யாஸிகள் பணத்தில் குறி வைப்பார்கள்.

அவரவர்கள் தங்கள் தங்கள் தர்மங்களை விட்டுவிட்டு, வியாபாரத்தில் நாட்டம் கொண்டு, வெறுக்கக் கூடிய விஷயங் களையும் விற்று பணம் திரட்ட முனைவார்கள்; அந்த வியா பாரத்திலும் கூட மோசடியே மேலோங்கி நிற்கும். பரம்பரை பரம்பரையாக பணி புரிந்து வரும் வேலைக்காரர்களைக் கூட, எஜமானர்கள் தயவு தாட்சண்யமின்றி, வேலையை விட்டு துரத்துவார்கள். கறக்காத பசுக்களை மக்கள் கைவிடுவார்கள். மைத்துனன், மனைவியின் சகோதரி போன்ற மனைவியின் உறவினர்களிடையே நெருக்கம் கொண்டு, அவர்களையே நெருங்கிய உறவினர்களாகப் பாவித்து, அவர்களுடன் பொழுதைக் கழிப்பதையே மனிதர்கள் விரும்புவார்கள். தனது சகோதரர்கள், சகோதரிகள், மற்ற உறவினர்கள் போன்றவர்களிடத்தில் மனிதன் அன்பு காட்ட மாட்டான். நாலாம் வர்ணத்தினர் தபஸ்விகளாக தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டு, மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய முனைவார்கள்.

சிறிய காசுக்காகக் கூட, மனிதர்கள் நட்பையும் மறந்து, பெரிய சண்டைகளில் ஈடுபடுவார்கள். வயது முதிர்ந்த தாய், தந்தையரை, மனிதர்கள் புறக்கணிப்பார்கள். தான், தன் வயிறு, தன்னுடைய காம வேட்கை போன்றவையே ஒவ்வொருவருக்கும் முக்கியமான தாகி விடும்.

இப்படி கலியுகத்தில் மனிதர்கள் அடையக் கூடிய தாழ்வை எல்லாம் சுகர் விளக்கியபோது, பரீக்ஷித் கேட்டான்: ‘இப்படி பாவங்கள் மலிந்த கலியுகத்தில், அந்த பாவங்களைப் போக்கிக் கொள்ள மக்களுக்கு இருக்கிற வழிதான் என்ன?

பரீக்ஷித்தின் கேள்விக்கு, சுகர் பதில் அளித்தார்: ‘கலியுகம், பல பாவங்களுக்கு இடமளித்தாலும், அந்த யுகத்தில் ஒரு சிறப்பு இருக்கிறது. கிருத யுகத்தில், பகவானையே நினைத்து தியானம் செய்து அடைந்த பலனை த்ரேதா யுகத்தில், யாகங்கள் செய்து அடைந்த பலனை – த்வாபர யுகத்தில், பகவானுக்குப் பணிவிடை செய்து அடைந்த பலனை – கலியுகத்தில், பகவானின் பெயரை உச்சரிப்பதினாலேயே அடைந்து விடலாம்.

‘பகவானின் அவதார சரித்திரங்களைக் கேட்பது, அவருடைய பிம்பங்களைப் பூஜிப்பது, அவரையே நினைப்பது, அவருடைய பெயரை உச்சரிப்பது போன்ற பழக்கங்களைக் கொண்டு, கலி யுகத்தில் மனிதன் தனது பாவங்களையெல்லாம் போக்கிக் கொள்ள

லாம்’,

இவ்வாறெல்லாம் பரீக்ஷித்திற்கு பல விளக்கங்களை அளித்த சுகர், இறுதியில் அவனுக்கு ஆன்ம தத்துவங்களை மீண்டும் சுருக்க மாக உபதேசித்தார். பரீக்ஷித், தனது மனதில் ஆன்ம சிந்தனையை நிலைநிறுத்தி, பரமாத்மாவையே தியானம் செய்து, தனக்கு நேரிட்ட சாபத்தின்படி, தக்ஷகன் என்ற பாம்பால் கடிக்கப்பட்டு, நற்கதி அடைந்தான்.

இப்படி எதிர்கால நிகழ்வுகளையும் வியக்கத்தக்க வகையில் முன்கூட்டியே கூறுகிற பாகவதத்தில், புராணங்களின் பெயர்கள், அவற்றின் சிறப்புகள் ஆகியவையும் விவரிக்கப்பட்டுள்ளன.

நைமிசாரண்யத்தில் கூடியிருந்த பல ரிஷிகளுக்கு ஸ்ரீமத் பாகவதம் என்கிற புராணத்தை விவரமாகச் சொல்லி முடித்த ஸுதர், இறுதியில் கூறினார்: ‘இந்த பாகவதம் என்கிற புராணம் தூய்மை யானது. ஞானம், வைராக்யம் ஆகியவற்றை எய்துகிற வழி இதில் காட்டப்பட்டிருக்கிறது.

இந்த புராணத்தை, பகவானே, பிரம்ம தேவன் ஸ்வரூபமாக இருந்து நாரத மஹரிஷிக்கு உபதேசித்தார்; பின்பு அவரே நாரதரூபமாக இருந்து வியாசருக்கு உபதேசித்தார்; அவரேதான் வியாஸராக இருந்து சுகருக்கு இதை உபதேசம் செய்தார்; மீண்டும் பகவானே, சுகராக இருந்து, பரீக்ஷித்திற்கு இதைச் சொன்னார். அதைத்தான் இப்போது உங்களுக்கு நான் சொன்னேன்’.

பாகவதம், ஸகல வேதாந்தங்களின் ஸாரம் எனப்படுகிறது. இதில் ஒரு பகுதியைக் கேட்டாலும் கூட, பெரும் புண்ணியத்தை அடையலாம் என்று அப்புராணமே கூறுகிறது.

நான்கு வேதங்களையும் முறையாகப் பயின்று ஓதினால் என்ன பலன்கிட்டுமோ, அது இந்த பாகவதத்தைக் கேட்பதால கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

(இத்துடன் ‘ஹிந்து மஹா சமுத்திரம்’ என்கிற இந்தத் தொகுப்பின் இரண்டாவது பாகம் நிறைவு பெறுகிறது)