முனிகளிடையே சிங்கம் என போற்றப்பட்ட வால்மீகி முனிவரின் சரித்திரம். அவர் எழுதிய ராமாயண காவியத்தில் இல்லை. ஆனால் வேறு புராணங்கள் அவரைப் பற்றிய விவரங்களைத் தருகின்றன.
வேடர்களால் வளர்க்கப்பட்டவர் வால்மீகி. திருட்டு, வழிப்பறிக் கொள்ளை, அவற்றைச் செய்கையில் சில கொலைகள் –ஆகியவை வால்மீகியின் வாழ்க்கை முறையாகியது. ஒரு தினம், காட்டின் வழியே சில ரிஷிகள் சென்று கொண்டிருந்தபோது, வால்மீகி அவர்களை வழிமறித்து, ‘உங்களிடம் இருப்பதை எல்லாம் கொடுங்கள்‘ என்று மிரட்டினார்.
ரிஷிகள் தங்கள் வசமிருந்த உணவு போன்ற சாதாரண விஷயங்களை வால்மீகியிடம் கொடுத்து விட்டு, ‘எங்களிடம் இருந்ததைக் கொடுத்து விட்டோம். நீயும் ஒரு காரியம் செய்ய வேண்டும்‘ என்றனர்.
அது என்ன காரியம் என்று கேட்ட வால்மீகியிடம், ரிஷிகள் ‘உன்னுடைய இல்லத்திற்குப் போ. அங்கு உன் மனைவியையும், மகன்களையும் அழைத்து அவர்களிடம் ஒரு விஷயம் பற்றி விசாரிப்பாயாக! நீ செய்கிற திருட்டுக்களின் மூலம் கிட்டு வதையெல்லாம் உன்னோடு பங்கிட்டுக் கொள்கிற அவர்கள், உன்னுடைய செய்கைகளினால் உனக்குக் கிட்டுகிற பாவத்தையும், உன்னோடு சேர்ந்து பங்கிட்டுக் கொள்வார்களா – என்பதைக் கேள், அது போதும்‘ என்றனர்.
வால்மீகிக்கு இது புதிய அனுபவமாக இருந்தது. தன் மனைவியும், மக்களும் இந்தக் கேள்விக்கு என்னதான் பதில் சொல்கிறார்கள் என்பதை அறியும் ஆவல் அவனுக்கு ஏற்பட்டது. அவன் தனது வீடு திரும்பி, குடும்பத்தினரிடம், ரிஷிகள் கூறிய கேள்வியைக் கேட்டான்.
அவர்கள் அவன் எதிர்பாராத பதிலைக் கூறினார்கள். ‘நீ நமது குடும்பத்தின் தலைவன். குடும்பத்தினரைக் காப்பாற்றுவது உன்னுடைய பொறுப்பு. அதை நிறைவேற்றுவதற்காக, நீ உனக்குத் தெரிந்த வழியில் சம்பாதிக்கிறாய். அப்படி நீ சம்பாதித்து வருவதை வைத்துக் கொண்டுதான் நமது குடும்பம் வாழ்கிறது என்பது உண்மையே. ஆனால் அதற்காக, உன்னுடைய பாவத்தில் நாங்கள் எப்படி பங்கு பெறுவோம்? உன்னைத் திருட்டுத் தொழில் செய்யு மாறு நாங்கள் வற்புறுத்தவில்லை. சம்பாதிப்பது உன் கடமை. நீ சம்பாதிப்பதில் பங்கு பெறுவது எங்கள் உரிமை. உன்னுடைய பாவம், உன்னுடையதே. அதில் எங்களுக்குப் பங்கு கிடை ”யாது‘ என்று அவர்கள் கூறினார்கள்.
இதைக் கேட்டவுடன், வேடுவனாக இருந்த வால்மீகிக்கு, குடும்ப பந்தம் விலகியது. ஆசை, பாசம், அவற்றினால் ஏற்படுகிற கோப தாபங்கள் எல்லாம் அவனை விட்டு விலகின. விரைந்து சென்று மீண்டும் அதே ரிஷிகளைச் சந்தித்தான். ‘நான் தெளிவு அடைந்து விட்டேன். நான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை நெறி கெட்டது; அதை நான் வெறுக்கிறேன். நான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் காண்பது எப்படி?’ என்று அந்த ரிஷிகளிடம் அவன்
கேட்டான்.
ரிஷிகள், அவருக்கு ‘ராம‘ நாமத்தை உபதேசம் செய்து, அதையே எப்போதும் ஜபித்துக் கொண்டிருக்குமாறு கூறினார்கள். அந்த வேடுவன், ஆசைகளையும் பாசங்களையும் அழித்தான்; காமத் தையும் குரோதத்தையும் ஒழித்தான்; விருப்புக்கும் வெறுப்புக்கும் அப்பாற்பட்டு நின்றான். ரிஷிகள் கூறிய ‘ராம‘ நாமத்தை, அவன் ஜபித்துக் கொண்டே இருக்க, ஆண்டுகள் பல சென்றன. அவனைச் சுற்றி ஒரு கரையான் புற்று தோன்றி விடுகிற அளவுக்கு, கடுமை யான தவம் புரிந்தான். தவம் தொடர்ந்தது.
அந்த நிலையில், அதே ரிஷிகள் அவனைக் காணத் திரும்பி வந்தனர். புற்றிலிருந்து வெளியே வருமாறு அவர்கள் அவனை அழைத்தனர். திருடனாக இருந்த வால்மீகி, பெரும் ஞானியாக வெளியே வந்தார். வால்மீகி என்ற சொல்லிற்கு, புற்றிலிருந்து வெளியே வந்தவன்‘ என்று பொருள். வால்மீகி, அந்த ரிஷிகளி னால் போற்றப்பட்டார்.
இறைவன், ஒருவனை உயர்த்த நினைக்கிறபோது, அவனுக்கு ஞானம் பிறக்க வழி ஒன்று தோன்றுகிறது. வேடுவனாகவே வாழ்ந்து மடிந்திருக்கக் கூடியவன், பெரும் ரிஷியாகிற அளவிற்கு ஞானம் பெறுவான் – என்பது ஈச்வர சித்தம். அதைச் செயலாக்கு வதற்காகவே, அவன் சில ரிஷிகளை காட்டில் சந்திக்க நேர்ந்தது. அந்தச் சந்திப்பு நிகழவில்லை என்றால், வால்மீகி இல்லை. இப் படித்தான் மனித வாழ்க்கையில், எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக பெரும் மாற்றம் ஏற்படுகிறது.
இப்படி மஹா ரிஷியாகிய வால்மீகி தனது ஆச்ரமத்தில் இருந்தபோது, நாரதர் அங்கே வந்தார். அவரிடம் வால்மீகி கேட்ட கேள்வியே, ராமாயணத்தின் பிரமிக்கத்தக்கச் சிறப்பை எடுத்துக் கூறுவதாக அமைகிறது. நாரதர் வந்து பார்க்கிற வரையில், வால் மீகிக்கு ராமாயண நிகழ்ச்சிகள் தெரியும் என்பதற்கான குறிப்புகளே ல்லை – என்பது கவனிக்கத்தக்கது.
நாரதரிடம், வால்மீகி கேட்டார்: ‘பல சிறப்புகள் ஒருங்கே வாய்க்கப்பட்ட ஒரு மனிதன் இருந்தால், அவனைப் பற்றி நான் அறிய விரும்புகிறேன். நேர்மை ; ஈடில்லாத வீரம்; தர்மத்தின் சூட்சுமத்தைப் பற்றிய அறிவு; நன்றி மறவாத தன்மை; உண்மையே பேசுகிற குணம்; மேற்கொண்ட விரதத்தைக் காப்பாற்றுகிற உறுதி; குல கௌரவத்தைத் தவற விடாத வாழ்க்கை; அனைத்துப் பிரஜை களிடத்திலும் அன்பு; பாண்டித்யம்; வல்லமை; கருணை; பெரும்அப்பாற்பட்டு நின்றான். ரிஷிகள் கூறிய ‘ராம‘ நாமத்தை, அவன் ஜபித்துக் கொண்டே இருக்க, ஆண்டுகள் பல சென்றன. அவனைச் சுற்றி ஒரு கரையான் புற்று தோன்றி விடுகிற அளவுக்கு, கடுமை யான தவம் புரிந்தான். தவம் தொடர்ந்தது.

நாரதரிடம், வால்மீகி கேட்டார்: ‘பல சிறப்புகள் ஒருங்கே வாய்க்கப்பட்ட ஒரு மனிதன் இருந்தால், அவனைப் பற்றி நான் அறிய விரும்புகிறேன். நேர்மை ; ஈடில்லாத வீரம்; தர்மத்தின் சூட்சுமத்தைப் பற்றிய அறிவு; நன்றி மறவாத தன்மை; உண்மையே பேசுகிற குணம்; மேற்கொண்ட விரதத்தைக் காப்பாற்றுகிற உறுதி; குல கௌரவத்தைத் தவற விடாத வாழ்க்கை; அனைத்துப் பிரஜை களிடத்திலும் அன்பு; பாண்டித்யம்; வல்லமை; கருணை; பெரும் தைரியம்; கோபத்தை வென்ற நிலை; ஒளி வீசும் தோற்றம்; பொறாமையின்மை; போர்க்களத்தில் தேவர்களையும் அஞ்சி நடுங்கச் செய்கிற போர்த் திறன்… என்ற குணங்களை எல் லாம் ஒருங்கே அமையப் பெற்றவன் ஒருவன் இருக்கிறானா?’
நாரதர் சொன்னார்: ‘முனிசிரேஷ்டரே! நீர் கூறுகிற அனைத்துச் சிறப்புக்களும் ஒரே மனிதனிடம் காணப்படுவது அரிது. ஆனால் அப்படி ஒருவன் இருக்கிறான். இக்ஷ்வாகு வம்சத்தில் உதித்தவன். இப்போது அயோத்தியில் ஆட்சி புரிபவன். ராமன் என்பது அவன் பெயர்‘.
இப்படிக் கூறிய நாரதர், ராமரைப் பற்றிய சிறப்புகள் மேலும் பலவற்றை எடுத்துச் சொல்கிறார். அப்படிச் சொல்லி விட்டு இறுதியில், ‘இப்படி அனைத்து நற்குணங்களின் இருப்பிட மாகிய ராமன், கம்பீரத்தில் கடல்; அசையாத மன உறுதியில் இமயமலை; வீரத்தில் விஷ்ணு; தோற்றத்தில் குளுமை தரும் சந்திரன்; கோபத்தில் பிரளயாக்னி; பொறுமையில் பூமி; கொடுப்ப திலோ குபேரன்; உண்மை பேசுவதில் அவன் தர்ம தேவதை! முனிவரே, ஆறுகள் எல்லாம் எப்படி சமுத்திரத்தில் போய்ச் சேருகின்றனவோ, அப்படி, நல்லவர்கள் எல்லோரும் பாய்ந்தோடி சென்று ராமனையே அடைகிறார்கள்‘ என்றார்.
மேலும் நாரதர், அதுவரை ராமர் தொடர்பாக நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் வால்மீகிக்கு சுருக்கமாகச் சொல்கிறார். ராமரின் பிறப்பு, அவருக்கு முடிசூட்ட தசரதன் செய்த முடிவு என்று தொடங்குகிற இந்தச் சுருக்கம் ராம பட்டாபிஷேகத்தில் முடிகிறது. இந்தச் சுருக்கத்தைக் கூறி விட்டு, நாரதர், ராமராஜ்யம் எவ்வாறு நடக்கிறது என்பதையும் வர்ணிக்கிறார். பின்னர் ‘ராமராஜ்யம் மேலும் செழித்தோங்கும். இறுதியில் ராமர், ப்ரம்ம லோகத்தை எய்துவார்‘ என்றும் நாரதர் கூறினார்.
நாரதர் விடைபெற்றுச் சென்ற பிறகு, வால்மீகி, தமஸா நதிக்கரையைச் நோக்கிச் சென்ற போது, ஆண், பெண் ஜோடியாக இருந்த இரண்டு க்ரௌஞ்ச பறவைகளைப் பார்த்தார். இப்படி அவர் பார்த்துக் கொண்டிருந்தபோதே, ஒரு வேடுவன் ஆண் பறவையின் மீது அம்பைச் செலுத்தி, அதைக் கொன்று விட்டான். இந்த நிகழ்ச்சி முனியின் மென்மையான உள்ளத்தை உலுக் கியது. ‘வேடனே! இன்புற்றிருந்த பறவைகளில் ஒன்றைக் கொன்று வீழ்த்திய நீ, நிலையான வாழ்க்கையை அடைவது என்பது இயலாது!’ என்று அவனை, அவர் சபித்தார். அந்தச் சாபமே, கவிதை நயம் பொங்குகிற ஒரு ஸ்லோகமாக அமைந்தது. ராமாயணத்திற் கும் அதுவே ஆரம்பமாகியது.
–
வால்மீகி முனிவர் சாபமாகக் கூறிய கவிதை, இரண்டு அர்த்தங் களை உடையது. ஒன்று – மேலே கூறப்பட்ட சாபம். இரண்டாவது – ‘லக்ஷ்மியின் உறைவிடமாகிய ஸ்ரீநிவாஸனே! ராக்ஷஸ இன்பத்தில் மதிமயங்கிய ஒருவனைக் கொன்று, நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும் புகழை நீர் பெற்றீர்!’ வால்மீகி முனிவர், வேடனுக்கு இட்ட சாபத்தில் உள்ள பதங்களைப் பிரித்துப் பார்த்து அர்த்தம் செய்கிற போது, மேற்கண்ட பொருள் வருகிறது.
இதனால்தான் வால்மீகி முனிவரே கூட இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ‘வேடுவன் தன் தொழிலைச் செய்தபோது, என் வாக்கில் ஒரு சாபம் பிறப்பானேன்? அதுவும் ஏன் அந்தச் சாபம், ஒரு கவிதை யாக அமைந்தது? இதன் உட்பொருள் என்ன?’ என்று வால்மீகி சிந்தித்துக் கொண்டேயிருந்தார்.
அப்போது ப்ரும்மதேவன் அவர் முன் தோன்றினான். ‘முனி வரே! உமது வாக்கு, என் அருளினால் தோன்றியது. ராமருடைய வரலாற்றை, நீர் முழுமையாக இயற்றுவதற்காகவே இந்தத் தொடக்கம் நிகழ்ந்துள்ளது. நாரதர் மூலமாக ஏற்கெனவே ராமர் பற்றிய விஷயங்களை அறிந்தீர். மேலும் பல விஷயங்களையும் நீங்களாகவே அறிவீர்கள். நடந்த நிகழ்ச்சிகளை மட்டுமல்லாமல், நடக்கப்போகும் நிகழ்ச்சிகளையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அதை வைத்துக் கொண்டு, நீங்கள் இயற்றப் போகும் ராமாயண காவியத்தில், ஒரு சொல் கூட உண்மையிலிருந்து விலகியதாக இருக்காது. மலைகளும் நதிகளும் நிலைத்திருக்கும் வரை, நீர் இயற்றப் போகும் ராமாயண காவியமும் நிலைத்து நிற்கும். அந்தப் புனித வரலாறு போல உங்கள் பெயரும் நிலைத்து நிற்கும்‘. முனிகளிடையே சிங்கம் என போற்றப்பட்ட வால்மீகி முனிவரின் சரித்திரம். அவர் எழுதிய ராமாயண காவியத்தில் இல்லை. ஆனால் வேறு புராணங்கள் அவரைப் பற்றிய விவரங்களைத் தருகின்றன.
வேடர்களால்
வளர்க்கப்பட்டவர் வால்மீகி. திருட்டு, வழிப்பறிக் கொள்ளை, அவற்றைச் செய்கையில் சில கொலைகள் –ஆகியவை வால்மீகியின் வாழ்க்கை முறையாகியது. ஒரு தினம், காட்டின் வழியே சில ரிஷிகள் சென்று கொண்டிருந்தபோது, வால்மீகி அவர்களை வழிமறித்து, ‘உங்களிடம் இருப்பதை எல்லாம் கொடுங்கள்‘ என்று மிரட்டினார்.
ரிஷிகள் தங்கள் வசமிருந்த உணவு போன்ற சாதாரண விஷயங்களை வால்மீகியிடம் கொடுத்து விட்டு, ‘எங்களிடம் இருந்ததைக் கொடுத்து விட்டோம். நீயும் ஒரு காரியம் செய்ய வேண்டும்‘ என்றனர்.
அது என்ன காரியம் என்று கேட்ட வால்மீகியிடம், ரிஷிகள் ‘உன்னுடைய இல்லத்திற்குப் போ. அங்கு உன் மனைவியையும், மகன்களையும் அழைத்து அவர்களிடம் ஒரு விஷயம் பற்றி விசாரிப்பாயாக! நீ செய்கிற திருட்டுக்களின் மூலம் கிட்டு வதையெல்லாம் உன்னோடு பங்கிட்டுக் கொள்கிற அவர்கள், உன்னுடைய செய்கைகளினால் உனக்குக் கிட்டுகிற பாவத்தையும், உன்னோடு சேர்ந்து பங்கிட்டுக் கொள்வார்களா – என்பதைக் கேள், அது போதும்‘ என்றனர்.
வால்மீகிக்கு இது புதிய அனுபவமாக இருந்தது. தன் மனைவியும், மக்களும் இந்தக் கேள்விக்கு என்னதான் பதில் சொல்கிறார்கள் என்பதை அறியும் ஆவல் அவனுக்கு ஏற்பட்டது. அவன் தனது வீடு திரும்பி, குடும்பத்தினரிடம், ரிஷிகள் கூறிய கேள்வியைக் கேட்டான்.
அவர்கள் அவன் எதிர்பாராத பதிலைக் கூறினார்கள். ‘நீ நமது குடும்பத்தின் தலைவன். குடும்பத்தினரைக் காப்பாற்றுவது உன்னுடைய பொறுப்பு. அதை நிறைவேற்றுவதற்காக, நீ உனக்குத் தெரிந்த வழியில் சம்பாதிக்கிறாய். அப்படி நீ சம்பாதித்து வருவதை வைத்துக் கொண்டுதான் நமது குடும்பம் வாழ்கிறது என்பது உண்மையே. ஆனால் அதற்காக, உன்னுடைய பாவத்தில் நாங்கள் எப்படி பங்கு பெறுவோம்? உன்னைத் திருட்டுத் தொழில் செய்யு மாறு நாங்கள் வற்புறுத்தவில்லை. சம்பாதிப்பது உன் கடமை. நீ சம்பாதிப்பதில் பங்கு பெறுவது எங்கள் உரிமை. உன்னுடைய பாவம், உன்னுடையதே. அதில் எங்களுக்குப் பங்கு கிடை ”யாது‘ என்று அவர்கள் கூறினார்கள்.
இதைக் கேட்டவுடன், வேடுவனாக இருந்த வால்மீகிக்கு, குடும்ப பந்தம் விலகியது. ஆசை, பாசம், அவற்றினால் ஏற்படுகிற கோப தாபங்கள் எல்லாம் அவனை விட்டு விலகின. விரைந்து சென்று மீண்டும் அதே ரிஷிகளைச் சந்தித்தான். ‘நான் தெளிவு அடைந்து விட்டேன். நான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை நெறி கெட்டது; அதை நான் வெறுக்கிறேன். நான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் காண்பது எப்படி?’ என்று அந்த ரிஷிகளிடம் அவன்
கேட்டான்.
ரிஷிகள், அவருக்கு ‘ராம‘ நாமத்தை உபதேசம் செய்து, அதையே எப்போதும் ஜபித்துக் கொண்டிருக்குமாறு கூறினார்கள். அந்த வேடுவன், ஆசைகளையும் பாசங்களையும் அழித்தான்; காமத் தையும் குரோதத்தையும் ஒழித்தான்; விருப்புக்கும் வெறுப்புக்கும் அப்பாற்பட்டு நின்றான். ரிஷிகள் கூறிய ‘ராம‘ நாமத்தை, அவன் ஜபித்துக் கொண்டே இருக்க, ஆண்டுகள் பல சென்றன. அவனைச் சுற்றி ஒரு கரையான் புற்று தோன்றி விடுகிற அளவுக்கு, கடுமை யான தவம் புரிந்தான். தவம் தொடர்ந்தது.
அந்த நிலையில், அதே ரிஷிகள் அவனைக் காணத் திரும்பி வந்தனர். புற்றிலிருந்து வெளியே வருமாறு அவர்கள் அவனை அழைத்தனர். திருடனாக இருந்த வால்மீகி, பெரும் ஞானியாக வெளியே வந்தார். வால்மீகி என்ற சொல்லிற்கு, புற்றிலிருந்து வெளியே வந்தவன்‘ என்று பொருள். வால்மீகி, அந்த ரிஷிகளி னால் போற்றப்பட்டார்.
இறைவன், ஒருவனை உயர்த்த நினைக்கிறபோது, அவனுக்கு ஞானம் பிறக்க வழி ஒன்று தோன்றுகிறது. வேடுவனாகவே வாழ்ந்து மடிந்திருக்கக் கூடியவன், பெரும் ரிஷியாகிற அளவிற்கு ஞானம் பெறுவான் – என்பது ஈச்வர சித்தம். அதைச் செயலாக்கு வதற்காகவே, அவன் சில ரிஷிகளை காட்டில் சந்திக்க நேர்ந்தது. அந்தச் சந்திப்பு நிகழவில்லை என்றால், வால்மீகி இல்லை. இப் படித்தான் மனித வாழ்க்கையில், எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக பெரும் மாற்றம் ஏற்படுகிறது.
இப்படி மஹா ரிஷியாகிய வால்மீகி தனது ஆச்ரமத்தில் இருந்தபோது, நாரதர் அங்கே வந்தார். அவரிடம் வால்மீகி கேட்ட கேள்வியே, ராமாயணத்தின் பிரமிக்கத்தக்கச் சிறப்பை எடுத்துக் கூறுவதாக அமைகிறது. நாரதர் வந்து பார்க்கிற வரையில், வால் மீகிக்கு ராமாயண நிகழ்ச்சிகள் தெரியும் என்பதற்கான குறிப்புகளே ல்லை – என்பது கவனிக்கத்தக்கது.
நாரதரிடம், வால்மீகி கேட்டார்: ‘பல சிறப்புகள் ஒருங்கே வாய்க்கப்பட்ட ஒரு மனிதன் இருந்தால், அவனைப் பற்றி நான் அறிய விரும்புகிறேன். நேர்மை ; ஈடில்லாத வீரம்; தர்மத்தின் சூட்சுமத்தைப் பற்றிய அறிவு; நன்றி மறவாத தன்மை; உண்மையே பேசுகிற குணம்; மேற்கொண்ட விரதத்தைக் காப்பாற்றுகிற உறுதி; குல கௌரவத்தைத் தவற விடாத வாழ்க்கை; அனைத்துப் பிரஜை களிடத்திலும் அன்பு; பாண்டித்யம்; வல்லமை; கருணை; பெரும்அப்பாற்பட்டு நின்றான். ரிஷிகள் கூறிய ‘ராம‘ நாமத்தை, அவன் ஜபித்துக் கொண்டே இருக்க, ஆண்டுகள் பல சென்றன. அவனைச் சுற்றி ஒரு கரையான் புற்று தோன்றி விடுகிற அளவுக்கு, கடுமை யான தவம் புரிந்தான். தவம் தொடர்ந்தது.
அந்த நிலையில், அதே ரிஷிகள் அவனைக் காணத் திரும்பி வந்தனர். புற்றிலிருந்து வெளியே வருமாறு அவர்கள் அவனை அழைத்தனர். திருடனாக இருந்த வால்மீகி, பெரும் ஞானியாக வெளியே வந்தார். வால்மீகி என்ற சொல்லிற்கு, புற்றிலிருந்து வெளியே வந்தவன்‘ என்று பொருள். வால்மீகி, அந்த ரிஷிகளி னால் போற்றப்பட்டார்.
இறைவன், ஒருவனை உயர்த்த நினைக்கிறபோது, அவனுக்கு ஞானம் பிறக்க வழி ஒன்று தோன்றுகிறது. வேடுவனாகவே வாழ்ந்து மடிந்திருக்கக் கூடியவன், பெரும் ரிஷியாகிற அளவிற்கு ஞானம் பெறுவான் – என்பது ஈச்வர சித்தம். அதைச் செயலாக்கு வதற்காகவே, அவன் சில ரிஷிகளை காட்டில் சந்திக்க நேர்ந்தது. அந்தச் சந்திப்பு நிகழவில்லை என்றால், வால்மீகி இல்லை. இப் படித்தான் மனித வாழ்க்கையில், எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக பெரும் மாற்றம் ஏற்படுகிறது.
இப்படி மஹா ரிஷியாகிய வால்மீகி தனது ஆச்ரமத்தில் இருந்தபோது, நாரதர் அங்கே வந்தார். அவரிடம் வால்மீகி கேட்ட கேள்வியே, ராமாயணத்தின் பிரமிக்கத்தக்கச் சிறப்பை எடுத்துக் கூறுவதாக அமைகிறது. நாரதர் வந்து பார்க்கிற வரையில், வால் மீகிக்கு ராமாயண நிகழ்ச்சிகள் தெரியும் என்பதற்கான குறிப்புகளே ல்லை – என்பது கவனிக்கத்தக்கது.
நாரதரிடம், வால்மீகி கேட்டார்: ‘பல சிறப்புகள் ஒருங்கே வாய்க்கப்பட்ட ஒரு மனிதன் இருந்தால், அவனைப் பற்றி நான் அறிய விரும்புகிறேன். நேர்மை ; ஈடில்லாத வீரம்; தர்மத்தின் சூட்சுமத்தைப் பற்றிய அறிவு; நன்றி மறவாத தன்மை; உண்மையே பேசுகிற குணம்; மேற்கொண்ட விரதத்தைக் காப்பாற்றுகிற உறுதி; குல கௌரவத்தைத் தவற விடாத வாழ்க்கை; அனைத்துப் பிரஜை களிடத்திலும் அன்பு; பாண்டித்யம்; வல்லமை; கருணை; பெரும் தைரியம்; கோபத்தை வென்ற நிலை; ஒளி வீசும் தோற்றம்; பொறாமையின்மை; போர்க்களத்தில் தேவர்களையும் அஞ்சி நடுங்கச் செய்கிற போர்த் திறன்… என்ற குணங்களை எல் லாம் ஒருங்கே அமையப் பெற்றவன் ஒருவன் இருக்கிறானா?’
நாரதர் சொன்னார்: ‘முனிசிரேஷ்டரே! நீர் கூறுகிற அனைத்துச் சிறப்புக்களும் ஒரே மனிதனிடம் காணப்படுவது அரிது. ஆனால் அப்படி ஒருவன் இருக்கிறான். இக்ஷ்வாகு வம்சத்தில் உதித்தவன். இப்போது அயோத்தியில் ஆட்சி புரிபவன். ராமன் என்பது அவன் பெயர்‘.
இப்படிக் கூறிய நாரதர், ராமரைப் பற்றிய சிறப்புகள் மேலும் பலவற்றை எடுத்துச் சொல்கிறார். அப்படிச் சொல்லி விட்டு இறுதியில், ‘இப்படி அனைத்து நற்குணங்களின் இருப்பிட மாகிய ராமன், கம்பீரத்தில் கடல்; அசையாத மன உறுதியில் இமயமலை; வீரத்தில் விஷ்ணு; தோற்றத்தில் குளுமை தரும் சந்திரன்; கோபத்தில் பிரளயாக்னி; பொறுமையில் பூமி; கொடுப்ப திலோ குபேரன்; உண்மை பேசுவதில் அவன் தர்ம தேவதை! முனிவரே, ஆறுகள் எல்லாம் எப்படி சமுத்திரத்தில் போய்ச் சேருகின்றனவோ, அப்படி, நல்லவர்கள் எல்லோரும் பாய்ந்தோடி சென்று ராமனையே அடைகிறார்கள்‘ என்றார்.
மேலும் நாரதர், அதுவரை ராமர் தொடர்பாக நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் வால்மீகிக்கு சுருக்கமாகச் சொல்கிறார். ராமரின் பிறப்பு, அவருக்கு முடிசூட்ட தசரதன் செய்த முடிவு என்று தொடங்குகிற இந்தச் சுருக்கம் ராம பட்டாபிஷேகத்தில் முடிகிறது. இந்தச் சுருக்கத்தைக் கூறி விட்டு, நாரதர், ராமராஜ்யம் எவ்வாறு நடக்கிறது என்பதையும் வர்ணிக்கிறார். பின்னர் ‘ராமராஜ்யம் மேலும் செழித்தோங்கும். இறுதியில் ராமர், ப்ரம்ம லோகத்தை எய்துவார்‘ என்றும் நாரதர் கூறினார்.
நாரதர் விடைபெற்றுச் சென்ற பிறகு, வால்மீகி, தமஸா நதிக்கரையைச் நோக்கிச் சென்ற போது, ஆண், பெண் ஜோடியாக இருந்த இரண்டு க்ரௌஞ்ச பறவைகளைப் பார்த்தார். இப்படி அவர் பார்த்துக் கொண்டிருந்தபோதே, ஒரு வேடுவன் ஆண் பறவையின் மீது அம்பைச் செலுத்தி, அதைக் கொன்று விட்டான். இந்த நிகழ்ச்சி முனியின் மென்மையான உள்ளத்தை உலுக் கியது. ‘வேடனே! இன்புற்றிருந்த பறவைகளில் ஒன்றைக் கொன்று வீழ்த்திய நீ, நிலையான வாழ்க்கையை அடைவது என்பது இயலாது!’ என்று அவனை, அவர் சபித்தார். அந்தச் சாபமே, கவிதை நயம் பொங்குகிற ஒரு ஸ்லோகமாக அமைந்தது. ராமாயணத்திற் கும் அதுவே ஆரம்பமாகியது.
–
வால்மீகி முனிவர் சாபமாகக் கூறிய கவிதை, இரண்டு அர்த்தங் களை உடையது. ஒன்று – மேலே கூறப்பட்ட சாபம். இரண்டாவது – ‘லக்ஷ்மியின் உறைவிடமாகிய ஸ்ரீநிவாஸனே! ராக்ஷஸ இன்பத்தில் மதிமயங்கிய ஒருவனைக் கொன்று, நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும் புகழை நீர் பெற்றீர்!’ வால்மீகி முனிவர், வேடனுக்கு இட்ட சாபத்தில் உள்ள பதங்களைப் பிரித்துப் பார்த்து அர்த்தம் செய்கிற போது, மேற்கண்ட பொருள் வருகிறது.
இதனால்தான் வால்மீகி முனிவரே கூட இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ‘வேடுவன் தன் தொழிலைச் செய்தபோது, என் வாக்கில் ஒரு சாபம் பிறப்பானேன்? அதுவும் ஏன் அந்தச் சாபம், ஒரு கவிதை யாக அமைந்தது? இதன் உட்பொருள் என்ன?’ என்று வால்மீகி சிந்தித்துக் கொண்டேயிருந்தார்.
அப்போது ப்ரும்மதேவன் அவர் முன் தோன்றினான். ‘முனி வரே! உமது வாக்கு, என் அருளினால் தோன்றியது. ராமருடைய வரலாற்றை, நீர் முழுமையாக இயற்றுவதற்காகவே இந்தத் தொடக்கம் நிகழ்ந்துள்ளது. நாரதர் மூலமாக ஏற்கெனவே ராமர் பற்றிய விஷயங்களை அறிந்தீர். மேலும் பல விஷயங்களையும் நீங்களாகவே அறிவீர்கள். நடந்த நிகழ்ச்சிகளை மட்டுமல்லாமல், நடக்கப்போகும் நிகழ்ச்சிகளையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அதை வைத்துக் கொண்டு, நீங்கள் இயற்றப் போகும் ராமாயண காவியத்தில், ஒரு சொல் கூட உண்மையிலிருந்து விலகியதாக இருக்காது. மலைகளும் நதிகளும் நிலைத்திருக்கும் வரை, நீர் இயற்றப் போகும் ராமாயண காவியமும் நிலைத்து நிற்கும். அந்தப் புனித வரலாறு போல உங்கள் பெயரும் நிலைத்து நிற்கும்‘. இவ்வாறு கூறிவிட்டு, ப்ரும்மதேவன் மறைந்தான். ராமருடைய வரலாற்றில் அடங்கிய ஒவ்வொரு நிகழ்ச்சியும், வால்மீகிக்குத் தெளிவாகத் தெரிந்தன; பேசப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் அவர் செவிகளில் விழுந்தன; நடத்தப்பட்ட பயணங்களை எல்லாம் அவர் கண்டார். இப்படி அதுவரை நடந்தவற்றையெல்லாம் அறியப் பெற்றதோடு, நடக்க இருப்பதையும் ப்ரும்மதேவனின் அருளினால் உணர்ந்த வால்மீகி, ராமாயண காவியத்தை இயற்றினார். ஆறு காண்டங்கள், ஐந்நூறு ஸர்க்கங்கள், இருபத்தி நான்காயிரம் ஸ்லோகங்கள் ஆகியவை கொண்ட ராமாயணத்திற்கு, உத்தர காண்டத்தையும் அவர் இயற்றினார். ‘இதை யார் எல்லோருக்கும் எடுத்துச் சொல்வது?’ என்ற கேள்வி அவர் மனதில் தோன்றியது. அப்போது ரிஷி குமாரர்கள் போலவே, அவருடைய ஆச்ரமத்தில் வாழ்ந்து வந்த ராமனின் புதல்வர்களாகிய லவன், குசன் ஆகியோர் அவரை வணங்கி நின்றனர். அவர்கள் அரச குமாரர்கள் மட்டுமல்ல; வேதங்களைக் கற்றவர்கள், நேர்மையும், நன்னடத்தையும், புத்தி கூர்மையும் பொருந்தியவர்கள். ராமரின் சரித்திரமாகிய ராமாயண காவியத்தை வால்மீகி முனிவர் அந்தச் சிறுவர்கள் இருவருக்கும். கற்பித்தார்.
தங்களுடைய இனிய குரலில், ராமாயண காவியத்தை, அந்த இருவரும் ரிஷிகள் கூடியிருந்த இடங்களில் இசைத்துக் கொண்டே. சென்றார்கள். ராமர் அச்வமேத யாகம் நடத்திக் கொண்டிருந்த நேரம் அது. அங்கே யாகத்தின் நடுவில், இடைவெளி ஏற்பட்ட போது, இந்தக் காவியத்தைக் கேட்ட ரிஷிகள் மெய்சிலிர்த்தார்கள்.
செய்தி பரவியது. நகர மக்கள் எல்லாம் இக்காவியம் பற்றி பேச ஆரம்பித்தனர். செய்தி அரண்மனையையும் சென்று அடைந்தது. சிறுவர்கள், ராமரின் உத்திரவின் பேரில் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ராமரின் மகன்களாகிய லவனும் குசனும், ஏதோ இரண்டு ரிஷி குமாரர்கள் போல, ராம சபையில் வந்து நின்று வணங்கி, அந்த சபை யோர் முன்னிலையில், வால்மீகியின் ராமாயண காவியத்தை பாடத் தொடங்கினர். அவர்கள் பாடப் பாட, கடந்தகால நிகழ்ச்சிகள் எல்லாம், தன் கண் முன்னே திரைக் காட்சிகள் போல தோன்றத் தோன்ற, மனம் நெகிழ்ந்து போன ராமர், கொஞ்சம் கொஞ்சமாக தனது சிம்மாசனத்தை விட்டிறங்கி, சபையோருடன் சேர்ந்து அமர்ந்து, ராமாயணத்தை கேட்டார். அப்படிக் கேட்டுக் கொண்டிருந்தது, தங்கள் தந்தையே என்பதை அறியாத அந்த இரு சிறுவர்களும், அந்தத் தந்தையின் சரித்திரத்தை கேட்போர் மனமுருக இசைத்தார்கள். அப்படிப்பட்ட ஆதி காவியம் ராமாயணம்.