ராம பட்டாபிஷேகத்துடன், ராமாயணத்தை முடித்துக் கொள்ளும் வழக்கம் பல உபன்யாசகர்களிடம் இருப்பதாலோ என்னவோ, உத்தரகாண்டப் பகுதிகள் மக்களிடையே அவ்வள வாகப் பரவவில்லை. உத்தர காண்டம், ராமாயணத்தைச் சார்ந்தது அல்ல என்பது போலவே ஒரு அணுகுமுறை உருவாகி விட்டது. இது வால்மீகியினால் இயற்றப்படவில்லைகளும் இருக்கிறார்கள்.
என்று கூறுபவர்
ஆனால், உத்தர காண்டப் பகுதிகள் இல்லையென்றால், ராமாயணம், முழுமை பெற்ற ஒரு காவியமாக அமையாது. ராவணன் பற்றிய பல விவரங்கள்; அவன் பெற்ற சாபங்கள்; இந்திர ஜித்தின் மேன்மைகள்; ராம பட்டாபிஷேகத்திற்குப் பிறகு சில வருடங்கள் கழிந்து விட்ட நிலையில், ஸீதையைப் பற்றி மக்கள் பேசிய அவதூறு; லவ–குசர்களின் பிறப்பு; ராம சகோதரர்களின் முடிவு; ரகு வம்சம் தழைத்தோங்கிய விவரம்… போன்றவையெல் லாம் உத்தர காண்டத்தில்தான் கூறப்பட்டுள்ளன.
ராமாயணத்தின் தொடக்கத்திலேயே ‘ஆறு காண்டங்கள் மற் றும், அவற்றின் தொடர்ச்சியாக உத்தர காண்டம் – வால்மீகியால் இயற்றப்பட்டது‘ என்று கூறப்பட்டுள்ளது. பிரம்மதேவனின் அருள் காரணமாக, நடந்தவற்றை மட்டுமல்லாமல், நடக்க இருந்த நிகழ்ச்சிகளையும் வால்மீகி அறிந்து கொண்டார் என்றும் சொல்லப் பட்டுள்ளது. ஸம்ஸ்க்ருத பதிப்புகள் எல்லாவற்றிலும் உத்தர காண்டம் இடம் பெறுகிறது. இவற்றை எல்லாம் பார்க்கும்போது, உத்தர காண்ட விவரங்களை விடுவது, ராமாயணத்தின் முழுமை யைக் கெடுப்பது போலத்தான் ஆகும்.
மேலும், ராமாயணம் பற்றி வால்மீகியே ‘இது ஸீதையின் மஹத்தான சரித்திரம்‘ என்று குறிப்பிடுகிறார். ராமரை மணந்தது; அவருடன் வனம் சென்றது; ராவணனால் அபகரிக்கப்பட்டு பின்னர் ராமரால் மீட்கப்பட்டது; அக்னி பிரவேசம் செய்தது; ராம பட்டா பிஷேகம்… என்பவையே ஸீதையின் வரலாற்றின் முக்கியமான பகுதிகள் என்றால், இது ஸீதையின் மஹத்தான சரித்திரம் ஆகி யிருக்காது. இவற்றிற்கெல்லாம் பிறகு, மக்களின் அவதூறுக்கு ஆளாகி, ராமரால் கைவிடப்பட்டு, வால்மீகி முனிவரால் காக்கப் பட்டு, லவ – குசர்களைப் பெற்றெடுத்து, அயோத்திக்கு வர வழைக்கப்பட்டு, மீண்டும் ஒரு சோதனைக்குள்ளாக்கப்பட்ட நிலை யில் – பூமாதேவியினால் அங்கீகரிக்கப்பட்டு, பூமி பிளந்து, ஸீதை மறைந்தாள் – எனும்போதுதான், இது ஸீதையின் மஹத்தான சரித் திரம் ஆகிறது. இவை எல்லாம் உத்தரகாண்ட நிகழ்ச்சிகளே.
ஸீதை இறுதியில் பூமியினுள் பிரவேசம் செய்யக் காரணமாகிய நிகழ்ச்சிகள், நெஞ்சைத் தொடுபவை. ராமாயணத்தைப் படிக்க முனைபவர்கள், இந்தப் பகுதியை விட்டு விடக் கூடாது. ஸீதையின் மஹத்தான சரித்திரம், நம் மனதை விட்டு அகலாத வகையில், ஆதிகவி வால்மீகி அந்நிகழ்ச்சிகளை விளக்குகிறார்.
உள்ளத்தை உலுக்குகிற அந்நிகழ்ச்சிகளின், ஆரம்பம் சாதாரண மானது. வரப் போகிற அதிர்ச்சிகளுக்கு, அது ஒரு பாதை போடாத மாதிரிதான் இருக்கும். ஸீதை கருவுற்றிருக்கிறாள்; கங்கைக் கரையில் வாழ்கின்ற ரிஷிகளின் ஆசிரமங்களைப் பார்க்க அவள் மனம் ஆசைப்படுகிறது. அவள் மனதில் ஏதாவது ஆசை இருந் தால், அதைச் சொல்லுமாறு கேட்கிற ராமரிடம், ஸீதை தனது விருப்பத்தைத் தெரிவிக்கிறாள். அவள் அந்த ஆசிரமங்களைக் கண்டு வர ஏற்பாடு செய்வதாகக் கூறி, ராமர் அவளுடைய அறையை விட்டு, வேறொரு அறைக்குச் செல்கிறார். அங்கே பலர் கூடியிருக்கிறார்கள். அவர்களுள் பத்ரன் என்பவன் ஒருவன். அவனிடம் ராமர், தன்னையும், தனது ஆட்சியையும் பற்றி மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்கிறார். ராமரைப் புகழ்ந்து மக்கள் பேசிக் கொள்வதையெல்லாம் பத்ரன் எடுத்துரைக்கிறான்.
ராமர் திருப்தி அடையவில்லை. மக்கள் காண்கிற குறைகளை யும் அவர் அறிய விரும்புகிறார். மக்கள் தன்னிடம் காணும் குறைகளை அறிந்து கொண்டால்தான், அக்குறைகளைக் களைந்து செயலாற்ற தன்னால் இயலும் என்பதை ராமர் சுட்டிக் காட்டுகிறார். (இன்றைய ஆட்சியாளர்களின் அணுகுமுறைக்கு இது எவ்வளவு மாறுபட்டது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆட்சி பற்றி குறைகளைச் சொல்வதே குற்றம் என்கிற இன்றைய நிலை எங்கே? குறைகளைக் கேட்டு, அவைகளை நீக்க முனைந்த அன் றைய ஆட்சி எங்கே?)
பத்ரன் அளிக்கிற பதிலில்தான், ஸீதையின் சோதனைக்கு வித்திடப்படுகிறது.
”அரசே! ‘யுத்த களத்தில் ராவணனை வீழ்த்திய அற்புதமான செயலைப் புரிந்த அரசர், ஸீதையை மீட்டு, அவளை தனது அரண்மனைக்கே அழைத்து வந்துள்ளார்! ஸீதையுடன் கூடி வாழ்வதில் அவர் காண்கிற இன்பம், அவரை இந்த அளவிற்கு அடிமையாக்கி விட்டது. ஸீதை, ராவணனால் பலாத்காரமாக அபகரிக்கப்பட்டாள் – அவனுடைய மடியில் அமர்த்தப்பட்டாள் – இலங்கைக்கு கவர்ந்து செல்லப்பட்டாள் – அங்கே ராட்சஸர்கள் கண்காணிப்பில் அசோக வனத்தில் இருத்தப்பட்டாள்! இதற்குப் பிறகு, ஸீதையை ராமர் எப்படி ஏற்கலாம்? இனி நமது மனைவி மார்கள் எல்லோரும் இந்த மாதிரி அனுபவங்களைப் பெற்றாலும், நாம் அவர்களை ஏற்க வேண்டியதுதான். மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி!’ என்று நகரங்களிலும், கிராமங்களிலும், மற்ற பல இடங்களிலும் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்” என்றான்.
அதிர்ச்சியுற்ற ராமர் இதுபற்றி, அங்கிருந்த மற்றவர்களிடம் விசாரிக்க, அவர்களும் பத்ரன் கூறுவது உண்மையே என்று சொல்கிறார்கள். பின்னர் ராமர் மனம் கலங்கி, பெரிதும் வாடிப் போய், சகோதரர்களை அழைத்து, மக்களிடையே பரவியுள்ள அவதூறு பற்றி விவரிக்கிறார். ஸீதையின் அக்னி பிரவேசத்திற்குப் பின்னரும், அவளைப் பற்றி இப்படி ஒரு எண்ணம் நிலவுவது, தனது குடலையே கிழிக்கிறது என்று கூறி ராமர் கண்கலங்குகிறார்.
இதன் பின்னர், லக்ஷ்மணனிடம் ‘ரதத்தைத் தயார் செய். ஸீதையை அழைத்துப் போய், கங்கையின் மறு கரையில் உள்ள வால்மீகியின் ஆசிரமத்தின் அருகே விட்டு விடுவாயாக! உன் கருத்தோ, மற்ற சகோதரர்கள் கருத்தோ தேவையில்லை. என் முடிவே இறுதி யானது. ரிஷிகளின் ஆசிரமங்களைப் பார்க்க ஸீதை ஆவல் தெரி வித்தாள். அங்கே கொண்டு போய் அவளை விடு!” என்று ராமர் ஆணையிட்டார்.
ஸீஸர்ஸ் வைஃப் மஸ்ட் பீ எபௌவ் ஸஸ்பிஷன்‘ என்பது ரோமானியர்கள் காலத்திய நம்பிக்கை. அரசனின் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டால், அது அவளை பாதிப்பதுடன் நிற்காது. அர சனை பாதிக்கும். அரசன் மீது மரியாதைக் குறைவு ஏற்படும். ஆட்சி மதிப்பிழக்கும். ஆட்சி மதிப்பிழந்தால், அரசு ஆணைகள் அவ மதிக்கப்படும். அரசு ஆணைகள் அவமதிக்கப்பட்டால், அரசு குலையும். அரசு குலைந்தால் மக்கள் அவதியுறுவார்கள்… இப்படி ஒரு சங்கிலித் தொடர் போன்ற நிலைகளுக்கு, அடிப்படைக் காரணமாகி நிற்கும் – அரசனின் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம்.
ஏதோ ஓரிருவர் தெரிவித்த சந்தேகம் அல்ல அது. பிரபல மாகியுள்ள கதையின்படி, ஒரு சலவைத் தொழிலாளி, தனது வீட்டில் தெரிவித்த சந்தேகம் அல்ல அது. ஊர் மக்கள் ஆங்காங்கே விவாதித்துக் கொண்டிருந்த கொடுமை அது. அதை எப்படி அணைப்பது?
மக்கள் அநியாயமாகப் பேசும்போது, அதைப் பற்றி கவலைப் பட்டு, மனைவியைத் துறப்பது நினைத்துப் பார்க்க முடியாதது‘ என்று ராமர் எண்ணியிருந்தால், அதில் தவறு இருந்திருக்காது அதாவது அவரை ஒரு சாதாரண மனிதராக, ஒரு சாதாரண அரசனாகப் பார்த்தால்! ஆனால் அவரோ – தெய்வமாக அல்ல –மனிதர்களில் சிறந்தவனாகவும், அரசர்களில் மேன்மையானவருமாகத் திகழ்ந் தார். ராவணனை அழித்தவுடன் அவதார காரியம் முடிந்து விட்டது; ஆனால் அதற்குப் பின்னும் பற்பல ஆண்டுகள் ராமராஜ்யம் நடந்தது. எதற்காக? ‘மக்களின் அவதூறைப் பற்றி கவலைப் படாமல், மனைவியைக் காப்பாற்றியவர்‘ என்ற பெயர் வாங்குவதற்காகவா? அல்ல. மனைவியை அப்படி காக்கிற மனிதர்கள், ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் காணக் கிடைப்பார்கள். அப்படி வாழ்ந்து காட்டு வதற்காக, ராமர் தன்னுடைய காலத்தை கழித்திருக்க வேண்டிய தில்லை.
ராமராஜ்யம் நடத்திக் காண்பித்தவர் அவர். தந்தை சொல் மீறாமை மட்டுமல்ல – ஏகபத்னி விரதம் பூண்டது மட்டுமல்ல– சகோதரர்களிடம் காட்டிய வாஞ்சை மட்டுமல்ல – ரிஷிகள் போன்ற மேன்மையானவர்களிடம் காட்டிய பணிவு மட்டுமல்ல –வீரம், நெஞ்சுரம், சத்தியம், தர்மம் தவறாமை போன்ற பல உயர்ந்த குணங்களைக் காட்டியது மட்டுமல்ல அவருடைய அவதார காரியம்.
ஒரு ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதைக் காட்டிய தும் அவருடைய அவதாரம் சாதித்த மேன்மையான காரியங்களில் ஒன்று.
ஆட்சி மீது மக்கள் குறை காணாதபடி, அரசனை எள்ளி நகை யாடாதபடி, ஆட்சியில் தவறு நிகழாதபடி, செங்கோல் பிடித்தவர் ராமர். அப்படிப்பட்ட ஆட்சியை நடத்தி வந்த அரசரின் மனைவி பற்றி, மக்கள் ஆங்காங்கே விமர்சிக்க ஆரம்பித்து விட்டால், அப்போது அரசின் உத்திரவிற்கு என்ன மரியாதை கிட்டும்? ஆகை யால்தான், ஸீதை துறக்கப்பட வேண்டியவள் ஆனாள். ஸீதையைத் துறந்ததால், ராமர் மனம் பட்ட வேதனை கொஞ்சநஞ்சமன்று. அந்த மன வேதனையை பொறுத்துக் கொண்டுதான், அவர் ஸீதையைப் பிரிகிற முடிவை எடுத்தார். அது ஸீதைக்கு அவர் இழைத்த துரோகம் அல்ல; மனதிற்கிசைந்த மனைவியைத் துறக்கத் துணிந்த தியாகம் அது.
ஸீதையோ அக்னி போன்ற தூய்மை படைத்தவள். ராமர் கட்டளையை ஏற்று, அவளை கங்கைக் கரையில் விட்ட பிறகு, தட்டுத் தடுமாறி அவளிடம் செய்தியைத் தெரிவிக்கிறான் லக்ஷ்மணன். ‘என் இதயம் வேல் கொண்டு குத்தப்படுவது போல நான் உணர்கிறேன். தேவி! உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். நான் செய்யப் போகும் காரியத்தை, என்னுடைய குற்றமாகக் கருத வேண்டாம் என்று கூறி, ஸீதையின் காலில் விழுந்து, வணங்கி, இரு கைகளையும் கூப்பி லக்ஷ்மணன் சொல்கிறான்: ‘எனக்கு இடப்பட்ட கட்டளையை நான் நிறைவேற்றுகிறேன். மக்கள் பேசுகிற அவதூறு காரணமாக உங்களைக் கங்கைக் கரையில் ஆசிரமங்களுக்கு அருகில் விட்டுவிட்டு வருமாறு மன்னர் கட் டளையிட்டிருக்கிறார். ரிஷிகளில் உயர்ந்தவராகிய வால்மீகியின் ஆச்ரமம் இங்கேதான் இருக்கிறது. அந்த மஹரிஷியின் ஆச்ரமத்தில் வாழுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன். உங்கள் சிறப்பு இனி, மேலும் ஒளிவீசித் திகழப் போகிறது‘
ஸீதை திகைத்தாள். ‘கணவரே ஒரு பெண்ணுக்கு தெய்வம். அவரே தாய். அவரே தந்தை. அவரே குரு. எல்லா உறவினர்களும் அவரே. ஆகையால் அவர் இட்ட கட்டளையை நான் ஏற்றுக் கொண்டேன் என்று ராமரிடம் தெரிவித்து விடு‘ என்று கூறிய ஸீதையின் மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டது என்பதை அவர் அப்போது செய்த காரியம் எடுத்துக்காட்டுகிறது.
ஸீதை, லக்ஷ்மணனைப் பார்த்துச் சொன்னாள்: ‘கர்ப்பவதியாகி விட்ட நிலையில்தான், நீ இங்கே என்னை கொண்டு வந்து விட்டுச் செல்கிறாய். இதை சந்தேகமற நீயே பார்த்துக் கொள்!’
இவ்வாறு கூறிவிட்டு, ஸீதை, தனது வயிறை லக்ஷ்மணனுக்குக் காண்பித்தாள்.
லக்ஷ்மணன் பதறினான். தனது தலையை பூமியின் மீது வைத்து, கதறினான்.
‘தாயே! களங்கமற்றவரே! உங்களுடைய பாதங்களைத் தவிர, உங்கள் உடலில் வேறு எந்த அங்கத்தையும் நான் பார்த்தவ னல்லவே! அப்படிப்பட்ட எனக்கு, இப்படி ஒரு காட்சியா? என்ன கொடுமை இது! என்னால் இதைத் தாங்க முடியவில்லையே! என்ன பாவம் செய்தேனோ! இப்படிப்பட்ட குற்றத்தைப் புரிகிற அளவிற்கு நான் துரதிர்ஷ்டசாலியாகி விட்டேனே‘ என்று கூறி லக்ஷ்மணன் அழுதான். பின்னர் ஸீதையை நமஸ்கரித்து, படகில் ஏறி கங்கை நதியின் மறுபுறம் சென்றான்.
ஸீதை துடித்து அழுதாள். அந்த வனத்தில் கூவிக் கொண்டிருந்த மயில்கள் எழுப்பிய ஒலியுடன், ஸீதையின் கூக்குரலும் சேர்ந்து ஒலித்தது.
இதற்குப் பின் ஸீதையை வால்மீகி தனது ஆச்ரமத்திற்கு அழைத்துச் சென்ற விவரங்கள் வருகின்றன.
எப்படிப்பட்ட நிகழ்ச்சி! ஸீதையின் தியாகம்தான் எப்பேர்ப் பட்ட சிகரத்தைத் தொட்டது! அதனால்தான் ராமாயணம் ‘ஸீதை யின் மகத்தான சரித்திரம்‘ என்று வால்மீகியினாலேயே வர்ணிக்கப் பட்டிருக்கிறது.பின்னர் ஸீதையை நமஸ்கரித்து, படகில் ஏறி கங்கை நதியின் மறுபுறம் சென்றான்.
ஸீதை துடித்து அழுதாள். அந்த வனத்தில் கூவிக் கொண்டிருந்த மயில்கள் எழுப்பிய ஒலியுடன், ஸீதையின் கூக்குரலும் சேர்ந்து ஒலித்தது.
இதற்குப் பின் ஸீதையை வால்மீகி தனது ஆச்ரமத்திற்கு அழைத்துச் சென்ற விவரங்கள் வருகின்றன.
எப்படிப்பட்ட நிகழ்ச்சி! ஸீதையின் தியாகம்தான் எப்பேர்ப் பட்ட சிகரத்தைத் தொட்டது! அதனால்தான் ராமாயணம் ‘ஸீதையின் மகத்தான சரித்திரம்‘ என்று வால்மீகியினாலேயே வர்ணிக்கப் பட்டிருக்கிறது.