தூய பக்திக்கு மதம் இல்லை

ந்து மதத்தின் ஆன்மிகப் பெரியவர் என்கிற உயரிய அந்தஸ்து மகா பெரியவாளுக்கு இருந்தபோதிலும் மற்ற மதத்தினரையும் மிகுந்த அன்புடன் நடத்துவார். மகா பெரியவாளின் வாழ்க்கையில் இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. பள்ளிச் சிறுவனாக இருந்தபோது பைபிள் ஒப்புவிக்கும் போட்டியில் பரிசு வாங்கியவர் இவர்.

காஞ்சிபுரத்தில் சங்கர மடம் நிறுவப்பட்டு பல நூறு ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு வெகு அருகிலேயே ஒரு மசூதிக் கட்டடம் உள்ளது. இஸ்லாமியர்கள் இங்கே தொழுகை நடத்துவார்கள். தொழுகையின்போது ஒலிபெருக்கியும், மடத்து வழிபாடுகளின்போது மேளதாளமும் இருந்தாலும், எவருக்கும் எந்தக் காலத்திலும் எந்த பாதிப்பும் இருந்ததில்லை. இரு தரப்பினரும் பரஸ்பர அன்புடனும் நட்புடனும் பழகி வந்தனர்.

ஒரு முறை புனித ரம்ஜான் தொழுகையின்போது, மடத்தில் இருந்த இரண்டு ஒலிபெருக்கிகளிலும் வேத கோஷங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்களுக்கு இது அந்த வேளையில் சற்று இடைஞ்சலாக இருந்தது. எனவே, மசூதியில் இருந்து ஓர் இஸ்லாமிய அன்பர், மடத்துக்குச் சென்று அங்கிருந்த ஊழியரிடம், “சற்று நேரத்துக்கு ஒலிபெருக்கியை வேறொரு திசையில் திருப்பி வைத்துக் கொள்ளுங்களேன். அல்லது சத்தத்தைக் கொஞ்சம் குறைத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்தார்அந்த ஊழியர் மகா பெரியவாளிடம் போய் இதைச் சொன்னார்.

இஸ்லாமிய அன்பர்களின் தொழுகை முடியும் வரை ஒலிபெருக்கிகளை நிறுத்தி வைக்கவும். அவர்களுக்கு இது இடைஞ்சலாக இருக்கக் கூடாது ன்று சொல்லமடத்து ஒலிபெருக்கிகள் உடனேயே நிறுத்தி வைக்கப்பட்டன. அதன் பின், தொழுகை நடந்தது. மகா பெரியவா முக்தி அடைந்தபோது நூற்றுக்கணக்கான இஸ்லாமிய அன்பர்கள் வந்து மாலை மரியாதை அணிவித்து அஞ்சலி செலுத்தி விட்டுப் போன சம்பவமும் இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று.

1926-ஆம் வருடம் ஜனவரி மாதம் (மார்கழி) புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சேர்ந்த கறம்பக்குடி என்னும் சிற்றூரில் தங்கி இருந்தார் பெரியவா. அங்கிருந்து அடுத்த நாள் பட்டுக்கோட்டைக்குச் செல்வதாக ஏற்பாடு ஆகி இருந்தது. மார்கழி மாதத்து அதிகாலை வேளையையும் பொருட்படுத்தாமல் கறம்பக்குடியில் வசித்து வந்த எண்ணற்ற இந்துமுஸ்லிம் சகோதரர்கள் ஒன்று திரண்டு மகா பெரியவாளை ஊர் எல்லை வரை வந்து வாத்திய கோஷங்களுடன் வழியனுப்பி வைத்தார்கள். வைபவம் முடிந்த பின் அனைத்து இஸ்லாமியர்களும் தத்தமது இல்லங்களுக்குத் திரும்பினர். ஆனால், ஒரே ஒரு இஸ்லாமிய அன்பர் மட்டும் மகா பெரியவாளின் பல்லக்கைத் தன் தோளில் சுமந்தபடி சுமார் மூன்று மைல் தூரம் நடந்து வந்தார்.

இதைத் தாமதமாக அறிந்து கொண்ட மகா பெரியவா ஓரிடத்தில் பல்லக்கை இறக்கி வைக்குமாறு சொன்னார். பிறகு, அந்த இஸ்லாமிய அன்பரைத் தன் அருகே அழைத்தார். அவரைப் பற்றிய விவரங்களை ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார். தான் எந்த ஊர், செய்யும் தொழில் போன்ற பல விஷயங்களை மகா பெரியவாளிடம் சொன்னவர், “சாமீஎனக்கு ஒரு ஆசை இருக்கு என்றார்என்ன? என்று ஆர்வமாக விசாரித்தார் பெரியவா.

உங்க மேல சில பாடல்களை நான் எழுதி இருக்கேன். அதை உங்களோட பாதங்களுக்கு சமர்ப்பிக்கணும் என்றார் நெகிழ்ச்சியாக.

பேஷா என்று பெரியவா உற்சாகம் தெரிவிக்க… இஸ்லாமியர் குஷி ஆனார்தன் தோள் பையில் வைத்திருந்த கல்கண்டு, திராட்சை, பழங்கள், வாசனைத் திரவியங்கள், பவுன் காணிக்கை போன்றவற்றை ஒரு மூங்கில்தட்டில் வைத்து, அதோடு பெரியவா மீது தான் எழுதி இருந்த பாடல்கள் அடங்கிய பேப்பரையும் வைத்து அவரது திருவடிகளுக்கு சமர்ப்பித்தார்.

இதை அன்புடன் ஏற்றுக் கொண்ட பெரியவா, கல்கண்டு மற்றும் திராட்சைகளில் சிலதை எடுத்து அவருக்கு பிரசாதமாகக் கொடுத்து விட்டு, பாடல்கள் அடங்கிய பேப்பரை எடுத்தார். படித்துப் பார்த்தவர், புன்னகையுடன் அதை அவரிடம் கொடுத்து, “நீங்களே இதைப் பாடிக் காண்பியுங்களேன் என்றார்.

இஸ்லாமியருக்கு உற்சாகம் பெருக்கெடுத்தது. அந்தக் காகிதங்களை வாங்கி, பெரியவா மீது தான் எழுதிய பாடல்களை ராகம் போட்டுப் பாடத் துவங்கபுன்னகை ததும்பும் முகத்துடன் அதை ரசித்தார் பெரியவா. இதைக் கண்டதும் அந்த அன்பரின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தது. “ஐயனேதாங்கள் என் கண்களுக்கு அல்லாவாகத் தெரிகிறீர்கள். உங்களைப் போன்ற மகான்கள் பல ஆண்டுகள் வாழ வேண்டும். உங்களின் தரிசனம் என்னைப் போல் பலரையும் பரவசப்படுத்த வேண்டும். தங்களை இப்படி ஏகாந்தமான ஒரு சூழ்நிலையில் தரிசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தங்களைப் பல்லக்கில் சுமந்து வரும் பாக்கியத்தை நான் பெற்றேன் என்றார் உருக்கமாக.

சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரியும் தியாகராஜன் என்பவர், தனக்கு உயர் அதிகாரியாகப் பணிபுரிந்த இஸ்லாமிய அன்பர் பற்றிய ஒரு சம்பவத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

மத்திய அரசின் நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பு வகித்தவர் லியாகத் கான் என்பவர். பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம் அன்பர் இவர். லக்னோவில் பிறந்தவர். இஸ்லாமிய மதத்துக்கு உண்டான தொழுகை முறைகளை வேளை தவறாமல் மேற்கொள்ளும் லியாகத் கான், இந்து மத தத்துவத்திலும் ஆர்வம் உள்ளவர். 1980-களின் இறுதியில் சென்னையில் பணியாற்றிய இவர், ஒரு முறை காஞ்சிபுரம் சென்று மகா பெரியவாளைச் சந்தித்தார். ஒரு மகானைத் தரிசிக்கும்போது வெறுங்கையோடு செல்லக் கூடாது என்கிற சம்பிரதாயப்படிபழம், பூ, கல்கண்டு இத்யாதிகளை எடுத்துக் கொண்டு போய் பெரியவாளைச் சந்தித்தார்.

இந்து மதக் கோட்பாடுகளில் லியாகத் கானுக்கு இருந்த புலமை குறித்து வியந்த மகா பெரியவா, சுமார் முக்கால் மணி நேரம் தன் அறையில் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். இந்து மதத்தில் பகவத் கீதையின் சிறப்பு பற்றியும், முஸ்லிம்களின் தினப்படி தொழுகை குறித்தும் இருவரும் விரிவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். சந்திப்பு முடிந்த பின், “எப்ப தோணுதோ, அப்பல்லாம் மடத்துக்கு வாங்கோ என்று அவரை இன்முகத்துடன் வழி அனுப்பி வைத்தாராம் மகா பெரியவா.

அதன் பின், சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் காஞ்சிபுரம் சென்று மகா பெரியவாளைச் சந்தித்து உரையாடி விட்டு வருவது லியாகத் கானின் வழக்கமாக இருந்தது. ஒரு சில வருடங்களுக்குப் பிறகு லியாகத் கானுக்கு சென்னையில் இருந்து மும்பைக்கு மாற்றல் உத்தரவு வந்தது. அங்கே இணையும் முன், தன் பணி சிறப்பதற்கு உதவிய ஊழியர்கள் அனைவரையும் சென்னையில் ஒரு ஓட்டலுக்கு அழைத்து விருந்து கொடுத்தார் லியாகத் கான். அப்போது ஊழியர்களிடம் அவர் பேசினார். அந்த உரையின் முத்தாய்ப்பாக, “காஞ்சி மகா ஸ்வாமிகளுடன் உரையாடிய தருணங்களை இப்போது நினைத்தாலும் எனக்கு சிலிர்ப்பாக இருக்கிறது. அவருடன் அமர்ந்திருந்த அந்த நினைவுகள் சுகமானவை. இதை நான் பெருமையாகக் கருதுகிறேன். அவருடைய ஆன்மிக அருளுக்கு முன்னால் நாமெல்லாம் சாதாரணமானவர்கள். ஆனால், எதையோ சாதித்து விட்டதாகக் கருதி பெருமையுடன் காலரைத் தூக்கி விட்டுக் கொள்கிறோம். இதெல்லாம் போலித்தனம் என்றே படுகிறது. மும்பை சென்ற பின்னும் அந்த மகானை சந்திக்கும் பாக்கியத்தை அல்லா எனக்கு அருள வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன் என்றாராம் உருக்கமாக.

கூடி இருந்த ஊழியர்கள் அனைவரும் உற்சாகமாகக் கைதட்டி அவருக்கு விடை கொடுத்தனர்.