“பூர்ணாஹுதிக்குள்ள வரணும்…”

ந்திர மாநிலத்தில் சித்தூரை அடுத்த ஒரு கிராமத்தில் பெண்மணி ஒருவர் வசித்து வந்தார். தான் வசிப்பது சிறு கிராமம் என்றாலும், அந்தக் கிராமத்தின் வளர்ச்சிக்கு அவர் பெரிதும் பாடுபட்டார். மகா பெரியவா எப்போதோ ஒரு முறை அந்த ஊருக்கு வந்திருந்தார். தங்கினார். ஊர்மக்கள் அனைவரையும் ஆசிர்வதித்தார்.

காஞ்சி மகா பெரியவா அந்த ஊருக்கு வந்து சென்ற பிறகுதான், மழையும் பயிர் விளைச்சலும் அமோகமாக இருந்தன. ‘இத்தகைய நல்ல மாற்றங்கள் எல்லாம் இந்த மகான் நம் ஊரில் காலடி எடுத்து வைத்த பிறகுதான் நிகழ்ந்திருக்கின்றன என்பதில் அந்தப் பெண்மணிக்கு அசைக்க முடியாத நம்பிக்கை!

அடுத்து வந்த சில மாதங்களில் அந்தக் கிராமத்தில் கோயில் திருவிழா துவங்க இருந்தது. வருடா வருடம் நடக்கும் திருவிழாவை இந்த வருடம் சீரும் சிறப்புமாக நடத்தவேண்டும் என்பதாக ஊர்க்காரர்கள் பேசித் தீர்மானித்தனர். கோயில் விழா துவங்குவதற்கு முன்னால் பிரமாண்டமான யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார் அந்தப் பெண்மணி. யாகம் நடத்திய பின் திருவிழாவை நடத்தினால், எல்லாம் சிறப்பாக இருக்கும் என்பதால் இந்த யோசனை.

யாகம் நடத்துவதற்குரிய வேத பண்டிதர்களை முறையாக அழைத்து, ‘இந்த யாகத்துக்கு என்ன செலவானாலும் பரவாயில்லை. வெகு சிறப்பாக நடக்கவேண்டும். இந்த யாக நிகழ்ச்சிக்கு வந்து ஆசி புரியுமாறு காஞ்சி மகா பெரியவாளை அழைக்கப் போகிறேன் என்று அவர்களிடம் சொன்னார்.

வேத பண்டிதர்களுக்கு சந்தோஷம்தாங்கள் நடத்தப் போகும் இந்த யாக நிகழ்ச்சிக்குப் பெரியவாளை அழைக்கப் போகிறார்களே என்று. “கவலையே படாதீர்கள். காஞ்சி ஸ்வாமிகள் அருளால் இந்த யாகம் சிறப்பாக நடக்கும். அவரும் யாகத்துக்கு வந்திருந்து நமக்கெல்லாம் ஆசி வழங்குவார் என்று அந்தப் பெண்மணிக்கு உற்சாகம் கொடுத்தனர்.

அடுத்து வந்த ஒரு நல்ல நாளில் பூ, பழங்கள் வாங்கி எடுத்துக் கொண்டு தன் கிராமத்தில் இருந்து அதிகாலை வேளையில் பேருந்தில் ஏறி காஞ்சிபுரம் புறப்பட்டார். மதிய வாக்கில் காஞ்சி ஸ்ரீமடத்தை அடைந்தார். அன்று அளவான கூட்டமே இருந்ததால், இந்தப் பெண்மணி அவர் சந்நிதியை அடைந்து பேசுவதற்குப் பெரும் தடை ஏதும் இருக்கவில்லை.

பெண்மணி சொன்ன குறிப்புகளை வைத்து, அந்தக் கிராமத்தை நினைவுக்குக் கொண்டுவந்தார் மகா பெரியவா. தன்னைத் தேடி அங்கிருந்து ஒரு பெண்மணி புறப்பட்டு வந்திருக்கிறார் என்று அறிந்து ஆச்சரியப்பட்டார் பெரியவா.

தங்கள் ஊரில் நடக்கப் போகும் யாகம் குறித்துச் சொன்னார் பெண்மணி. பிறகு, அந்த யாகத்தின்போது பெரியவாளும் இருக்கவேண்டும் என்பதை நாசூக்காகச் சொன்னார்.

அனைத்தையும் கேட்டுக்கொண்ட பெரியவா ஒரு முறை அந்தப் பெண்மணியிடம் தெளிவாகக் கேட்டார்: “நான் எப்ப வரணும்?

பெண்மணி சொன்னார்: “பூர்ணாஹுதிக்குள்ள வரணும்.

கட்டாயம் வர்றேன் போ. யாகத்துக்கான ஏற்பாடுகளை நன்னா கவனி என்று பிரசாதம் கொடுத்தார்.

காஞ்சி மகா பெரியவாளுடன் இருந்த ஸ்ரீமடத்து நிர்வாகிகளுக்குக் குழப்பம். அன்றைய தினம் பெரியவா ஆந்திரா பக்கம் போக வாய்ப்பே இல்லை. அவருடைய நிகழ்ச்சிகள் இங்கே ரொம்பவும்டைட் ஆக இருக்கின்றன. ஆனால், பெரியவா எப்படி இந்தப் பெண்மணியிடம் உத்தரவாதம் கொடுக்கிறார் என்று குழம்பினார்கள்.

தங்கள் ஊர் யாகத்தின்போது நிச்சயம் வந்துவிடுகிறேன் என்று பெரியவா கொடுத்த உற்சாகத்தில், அவருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு அங்கிருந்து சந்தோஷமாகப் புறப்பட்டார் பெண்மணி.

நடந்து போய்க்கொண்டிருக்கும் அந்தப் பெண்மணியைப் பார்த்துப் புன்னகைத்தார் பெரியவா.

அதன் அர்த்தம், அந்தப் பரப்பிரம்மத்தைத் தவிர வேறு எவருக்குத் தெரியும்?

யாகம் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட அந்த தினமும் வந்தது. மகா பெரியவா இந்த யாக வைபவத்தில் கலந்து கொள்ளப் போகிறார் என்கிற சந்தோஷமான செய்தி அக்கம்பக்கத்து கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் பரவி இருந்ததால், திரளான ஜனங்கள் அங்கு குவிந்திருந்தனர். ஆக, மொத்தத்தில், அந்தக் கிராமமே கோலாகலமாக இருந்தது.

சாஸ்திரப்படி எந்த விதமான குறையும் இல்லாமல் இந்த யாகம் பூர்த்தியாகவேண்டும் என்றும், யாகத் தீயில் சேர்க்க வேண்டிய திரவியங்களில் எந்த ஒரு சிக்கனமோ, குறைவோ இருக்கக்கூடாது என்றும் வேத பண்டிதர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி.

கணீரென்ற வேத மந்திரங்களின் ஒலி அந்தக் கிராமத்தையே நிறைத்தது. வந்திருந்த பண்டிதர்களும் கர்ம சிரத்தையாக இந்த யாகத்தை நடத்திக்கொண்டிருந்தனர். யாக குண்டத்தில் அக்னி பகவான் கொழுந்து விட்டு வியாபித்து, தன் விஸ்வரூபத்தைக் காண்பித்து, பக்தர்களின் மனதை ஆட்கொண்டார். வந்திருந்த பக்தர்கள் பலரும், ‘இது போல் பிரமாண்டமாக நடக்கும் யாகத்தை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை. இதில் கலந்து கொண்டது நாங்கள் பெற்ற பேறு என்றெல்லாம் சொல்லி மனம் பூரித்தார்கள்.

ஆனால், இவ்வளவு செலவு செய்து இந்த யாகத்துக்கு ஏற்பாடு செய்த அந்தப் பெண்மணியின் மனமோ யாகத்தில் இல்லை. யாகம் நடக்கின்ற இடத்துக்கும் வாசலுக்குமாக நடந்து கொண்டே இருந்தார். ‘என்னதுவரேன்னு சொன்ன மகா பெரியவாளை இன்னும் காணோமே? என்று தவியாய்த் தவித்தார்.

யாகத்தில் கலந்துகொண்ட பக்தர்களும், இதை நடத்திக் கொண்டிருக்கிற வேத பண்டிதர்களும்மகா பெரியவா எப்ப வருவாரோ? என்று எதிர்பார்த்த வண்ணம் ஆர்வத்தோடு இருந்தனர்.

நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. ஆனால், மகா பெரியவா வருவதாகக் காணோம்.

பூர்ணாஹுதி வேளை நெருங்கிக்கொண்டே இருந்தது. பெண்மணியின் முகம் வாடிய நிலையில் இருந்தது. அந்த மகானையே மனதுக்குள் நினைத்து உருக்கமாக அவரைப் பிரார்த்தித்தார். அப்போது, யாகத்துக்குத் தலைமை ஏற்று நடத்திக்கொண்டிருக்கும் பிரதான பண்டிதர், பெண்மணியிடம் வந்தார். “அம்மாஉங்களோட மனசுப்படி கன ஜோரா யாகம் நடந்திண்டிருக்கு. எல்லா தேவதைகளும் சந்தோஷம் ஆகி இருப்பா. பூர்ணாஹுதி வேளையும் நெருங்கிடுத்து. யாகத்தை பூர்த்தி பண்ணிடலாமா? என்று கேட்டார்.

அந்தப் பெண்மணிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார். கைகளைப் பிசைந்தார்.

புரியறதும்மா உங்க கவலை. ‘வரேன்னு சொன்ன மகா பெரியவா இன்னும் வரலியேனு குறுக்கும் நெடுக்குமா உலாத்திண்டிருக்கறதைப் பார்த்தோன்ன புரிஞ்சுண்டேன்சரி, காஞ்சி பெரியவா உங்ககிட்ட என்ன சொன்னார்? – தலைமைப் பண்டிதர் கேட்டார்.

அவரோட வருகையைத்தான் ஆவலோட எதிர்பார்த்துக் கிட்டிருக் கேன். ‘எப்ப நான் வரணும்?னு பெரியவாளே என்கிட்ட கேட்டார். ‘பூர்ணாஹுதிக்குள்ள வந்திடுங்கோனு சொன் னேன்அவரும் சரினு தலை அசைச்சார்இதோ, பூர்ணாஹுதி வேளையும் நெருங்கிடுத்து. ஆனா, இன்னும் அவரைக் காணோம். அதான் ஒண்ணும் புரியாம தவிக்கிறேன் என்றார்அப்போது அந்தப் பெண்மணியின் கண்கள் லேசாகக் கலங்கி இருந்தன.

தலைமைப் பண்டிதர் சொன்னார்: “சரிகவலையை விடுங்கோ. மகா பெரியவா இங்கே வர்றேன்னு சொன்னதே நமக்கெல்லாம் பெரிய பாக்கியம். அவர் வரணும்னு இருந்தா எப்படியும் வந்துடு வார்.

சாமீஇன்னும் கொஞ்ச நேரம் காத்திருக்கலாமா?

வேண்டாம்மா. யாக சாலைல எல்லா தெய்வத் தோட படங்களோட பெரியவாளோட திருவுருவமும் இருக்கு. தவிர, பூர்ணாஹுதியைத் தாமதப்படுத்தக் கூடாது. கூட்டம் வேற நிறைய இருக்கு. நாம எல்லாத்தையும் பூர்த்தி பண்ணிடலாம். பிறகு, சாவகாசமா ஒரு நாள் நீங்க பிரசாதத்தை எடுத்துண்டு காஞ்சிபுரம் போய், அவர்கிட்ட சமர்ப்பிச்சு ஆசிர்வாதம் வாங்கிக்கோங்கோ. எல்லாம் சரியாயிடும் என்றார், அந்தப் பெண்மணிக்கு ஆறுதல் சொல்லும் முகமாக.

இதன் பிறகு, காத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்துகொண்டவராக பூர்ணாஹுதியை நடத்துமாறு வேண்டினார் பெண்மணி. அங்கு இருக்கும் மகா பெரியவா திருவுருவப் படத்துக்குக் கற்பூர ஆரத்தி காண்பித்துவிட்டு, வேத மந்திர கோஷத்துடன் பிரமாதமாக நடந்து முடிந்தது பூர்ணாஹுதி. கூடி இருந்த பக்தர்கள் அனைவரும்ஜய ஜய சங்கரஹர ஹர சங்கர கோஷத்தை முழங்கினர்.

பெண்மணி உட்பட முக்கியஸ்தர்களுக்குப் பிரசாதம் கொடுக்கப்பட்டது. காஞ்சி மகா பெரியவாளிடம் சேர்ப்பிப்பதற்காக ஒரு பிரசாதத்தையும் தலைமைப் பண்டிதர் அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார். பயபக்தியுடன் அதைப் பெற்றுக்கொண்டு பத்திரப்படுத்தினார் பெண்மணி.

கிராமத்தில் கோயில் திருவிழாவும் முடிந்த பின் ஒரு நாள் யாக பிரசாதத்தை எடுத்துக்கொண்டு காஞ்சிபுரம் பயணித்தார் அந்தப் பெண்மணி. கூடவே, யாகத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் தன்னிடம் பத்திரப்படுத்திக் கொண்டார்.

அன்றைய தினம் காஞ்சி ஸ்ரீமடத்தில் கூட்டம் சுமாராக இருந்தது. மிகவும் மலர்ந்த முகத்துடன், கண்களில் அதீத பிரகாசத்துடன் தன் சந்நிதானத்தில் ஸ்ரீபரமேஸ்வரனாக வீற்றிருந்தார் மகா பெரியவா. தன்னிடம் வரும் பக்தர்கள் ஒவ்வொருவரையும் அவர்களது ஊர், குடும்பம் பற்றிய விவரங்களை எல்லாம் விசாரித்து அறிந்து பிரசாதம் தந்து அனுப்பிக்கொண்டிருந்தார்.

இந்தப் பெண்மணியின் முறை வந்தது. கண்களில் நீர் கசிய அவருக்கு ஒரு நமஸ்காரம் செய்துவிட்டு, யாக பிரசாதம் அடங்கிய பையை அருகே வைத்தார். இந்தப் பெண்மணி யார் என்பது அந்தப் பரப்பிரம்மத்துக்குப் புரியாமலா இருக்கும்? பார்த்தவுடன் ஒரு புன்னகை புரிந்தார். “என்னம்மாயாகம் எல்லாம் நன்னா நடந்துதா? எக்கச்சக்க ஜனங்க வந்துட்டா போலிருக்கே? என்றார், பலத்த சிரிப்புடன்.

நல்லா நடந்துது சாமீஆனா, வர்றேன்னு சொன்ன நீங்க வரலேங்கறதுதான் பலருக்கு வருத்தம் சாமீ என்றார் கமறிய குரலில்.

மகா பெரியவாளைச் சூழ்ந்திருந்த சீடர்களும் கூடி இருந்த பக்தர்களும் இந்த சம்பாஷணைகளைக் கவனிக்க ஆரம்பித்தனர்.

என்னம்மா சொல்றேநீ சொன்னபடி நான்தான் வந்திருந்தேனே – இது மகா பெரியவா.

என்ன சாமீபந்தல் வாசல்ல நான் எவ்ளோ நேரம் கால் கடுக்க அன்னிக்கு நின்னுட்டிருந்தேன்னு எனக்குத்தான் தெரியும் சாமீ. வந்தேன்னு சொல்லி என்னை நீங்க ஏமாத்த முடியாது – ரொம்பவும் உரிமையாக மகா பெரியவாளைக் கோபித்துக்கொண்டார் பெண்மணி.

சரியாகத்துக்குக் கூப்பிடறதுக்காக நீ இங்கே வந்த அன்னிக்கு எப்ப வரச் சொல்லி என்கிட்ட சொன்னே? – பெரியவா கேள்வி கேட்டார்.

பூர்ணாஹுதிக்குள்ள வந்திடுங்கன்னு சொன்னேன். நீங்களும் பெரிய மனசு பண்ணி சம்மதிச்சீங்க. ஆனா, பூர்ணாஹுதி டயம் தாண்டியும் நீங்க வரலியே சாமீ.

வந்தேனம்மா. நான்தான் வந்துட்டேனே. சரிஅன்னிக்கு நடந்த யாகத்தை போட்டோ எடுத்தியோ?

எடுத்தேன் சாமீ. நீங்க வரேன்னு சொன்னதால சித்தூர்ல இருந்து ஒரு போட்டோகிராபரை வரவழைச்சேன். அவர்தான் எல்லாத்தையும் போட்டோ எடுத்தார். உங்ககிட்ட காமிக்கலாம்னு இன்னிக்குக் கையோட கொண்டு வந்திருக்கேன்.

முதலில், யாக பிரசாதத்தை எடுத்து, அங்கிருந்த ஒரு மூங்கில்தட்டில் வைத்தார். அதைத் தொட்டு ஏற்றுக்கொண்டார் பெரியவா. அடுத்து, தான் கொண்டுவந்திருக்கிற புகைப்படங்கள் அடங்கிய சிறு ஆல்பத்தை மகா பெரியவாளிடம் நீட்டினார் பெண்மணி.

ஒரு சீடன் வாங்கி, மகா பெரியவாளுக்கு முன்னால் வைத்தான். வலக் கையால் அதில் ஏதோ ஒரு பக்கத்தைத் திருப்பினார். முகம் மலர்ந்தார். தன் வலக்கை விரலை நீட்டி அந்தப் பெண்மணியை அருகே வரச் சொன்னார் பெரியவா. “தோ பாரம்மாநீ சொன்னபடி பூர்ணாஹுதிக்குள்ள நான் வந்திருக்கேனே என்று ஒரு படத்தைக் காட்டிஇடியெனச் சிரித்தார் பெரியவா.

என்ன இது குழப்பம் என்றபடி அந்தப் பெண்மணி தான் இருந்த இடத்தில் இருந்து கொஞ்சம் முன்னேறி, மகா பெரியவா குறிப்பிட்டுக் காட்டிய புகைப்படத்தைப் பார்த்தார். “என்ன சாமீ, ஏமாத்தறீங்கஇதுல அக்னி மட்டுமே இருக்கு. பூர்ணாஹுதி பண்றவங்களோட கைதான் தெரியுது. யாரும் ஆளுங்களே இல்லே என்றார்.

மகா பெரியவா விடவில்லை. “ஏம்மாநன்னா பாரும்மா என்று ஆல்பத்தை அவர் பக்கம் திருப்பினார்பூர்ணாஹுதி வேளையில் யாக குண்டத்திலிருந்து கொழுந்து விட்டுப் புறப்பட்ட அக்னி, மகா பெரியவாளின் திவ்ய சொரூபத்தைத் தன்னுள்ளே அழகாகக் காண்பித்தது. அந்தப் பெண்மணி உட்பட, அங்கு கூடியிருந்த பலருக்கும் அப்போதுதான் அந்தக் காட்சி புரிபட்டது. “ஆமாம்பாஅந்த அக்னி ஜுவாலையை நன்னா பாருபெரியவா சொரூபத்துல எவ்ளோ தத்ரூபமா இருக்கு என்று தங்களுக்குள வியந்து பேசிக்கொண்டனர்.

இதைப் பார்த்த அந்தப் பெண்மணியின் கண்களிலிருந்து கரகரவென்று நீர் வழிந்தோடியது.

மகா பெரியவா சொன்னார்: “ஏம்மா… ‘பூர்ணாஹுதிக்குள்ள வந்துடுங்கோனு சொன்னேள்நீங்க சொன்ன வாக்கியப்படி பூர்ணாஹுதிக்குள்ளதான் நான் இருக்கேனே என்று புகைப்படத்தைச் சுட்டிக்காட்டி மீண்டும் சொல்லஅந்தப் பெண்மணிவென அழ ஆரம்பித்துவிட்டார்தடாலென அவரின் திருவடிகளில் விழுந்து நமஸ்கரித்தார்சாமீ… அதிகப்பிரசங்கித்தனமா பேசியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க என்று கேவிக் கேவி அழ ஆரம்பித்தார்.

கூடி இருந்த பக்தர்கள் தேற்றினர். “ஏம்மாஅதான் உங்க ஆசைப்படி பூர்ணாஹுதிக்குள்ள இருக்காரே பெரியவா. இதை விட என்ன பாக்கியம்மா வேணும்? என்று கேட்கஅந்த மகானின் மேல் உள்ள பக்தி இன்னும் கூடியது.

கண்கள் கலங்க மீண்டும் ஒரு முறை பெரியவாளை நமஸ்கரித்து விட்டு, அவர் தந்த பிரசாதங்களை எடுத்துக்கொண்டு, பூர்ணாஹுதி போட்டோவையும் பத்திரப்படுத்தியபடி, தன் கிராமத்துக்குப் புறப்பட்டார் ஆந்திரப் பெண்மணி.