வாழ்விக்க வந்த கலியுக தெய்வம்

கா பெரியவா

இன்று உலகமே உச்சரிக்கிற உன்னத மந்திரமாகி விட்டது.

காஞ்சி மகா ஸ்வாமிகள், காஞ்சி பெரியவா, ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், சங்கராச்சார்யர், காஞ்சியின் 68-வது பீடாதிபதி, ஜகத்குருஇப்படி எத்தனையோ திருநாமங்கள் இந்த மகானுக்கு உண்டு என்றாலும், ‘மகா பெரியவாமட்டும் சட்டென்று மனசுக்குள் உட்கார்ந்து விடுகிறது.

பெரியவாஎன்ற பதமே வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த நிலையில் உள்ளவர்களைக் குறிப்பிடப் பயன்படும் சொல். அதிலும் இவரோமகா பெரியவா‘…

ஆஹா! யாருக்குக் கிடைக்கும் இந்த அதி உன்னத பட்டம்!

1894-ஆம் வருடம் மே மாதம் 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனுஷ நட்சத்திர தினத்தில் அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்தில் விழுப்புரம் நகரத்தில் நவாப் தோப்புக்கு அருகில் உள்ள அக்ரஹாரத்தில் காஞ்சி மகா பெரியவாளின் அவதாரம் நிகழ்ந்தது.

வசுதேவருக்கும் தேவகிக்கும் கிருஷ்ண பரமாத்மாவுக்கு பெற்றோராகும் பாக்கியம் எப்படிக் கிடைத்ததோ, அதுபோல் சுப்ரமண்ய சாஸ்திரிகளுக்கும், மகாலட்சுமி அம்மையாருக்கும் இந்த சுவாமிநாதனுக்குப் பெற்றோராகும் பாக்கியம் கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆம்!

மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம (துவக்க கால) பெயர் சுவாமிநாதன்.

இந்த நூலில் மகா பெரியவாளின் வாழ்க்கை வரலாற்றை நாம் பார்க்கப் போவதில்லை.

வாழ்க்கை வரலாறு என்பது புள்ளி விவரம்.

வாழ்ந்த விதம் என்பது நீங்கா நினைவு. அனுபவம். பாடம்.

எத்தனையோ பேர் பிறக்கிறார்கள். வளர்கிறார்கள். இறக்கிறார்கள்.

பிறக்கின்ற அத்தனை பேரும் செய்தி ஆகி விடுவதில்லை; இறக்கின்ற அத்தனை பேரும் செய்தி ஆகி விடுவதில்லை.

பிறக்கும்போது செய்தி ஆகிறோமோ இல்லையோ, இறக்கும்போது செய்தி ஆக வேண்டும். அதுவும் நல்ல விதமாக அந்த செய்தி பதியப்பட வேண்டும்.

அடடாஎப்பேர்ப்பட்ட நல்ல மனிதர்இவர் மறைந்து போனாரே…’ என்று இந்த உலகம் கண்ணீர் விட்டால், அவரது நினைவு காலாகாலத்துக்கும் மக்களின் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.

மகா பெரியவாஎத்தனை ஆண்டுகள் போனாலும், எத்தனை யுகங்கள் போனாலும் பக்தகோடிகளின் மனதில் நீக்கமற நிறைந்திருப்பார்.

வாழுகிற வாழ்க்கைதான் ஒரு மனிதனை அடையாளம் காட்டுகிறது.

நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகம் முழுக்க நாத்திகம் தலை விரித்து ஆடியபோது, கோயிலுக்குச் செல்லவே பயந்தார்கள்; ஆன்மிகத்தின் அடையாளங்களான திருநீறு, திருமண் போன்றவற்றை உடலில் தரிப்பதற்குத் தயங்கினார்கள்.

அத்தகைய நேரத்தில் தமிழகத்தின் மூலைமுடுக்கு ஊர்களுக்கு எல்லாம் நடை யாத்திரையாகச் சென்று, ‘நாம் ஏன் கடவுளை வணங்க வேண்டும்?’ என்பதற்கான விளக்கத்தை ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு பக்தியின் அவசியத்தை உணர்த்தியவர்இந்த ஆன்மிக குரு.

மகா பெரியவா

மகானா? தெய்வமா?

குருவாக எண்ணி சரண் புகுந்தவர்களுக்கு இந்த மகான் குருவாக விளங்கி அருளினார்.

தெய்வமாக எண்ணி தங்களை ஒப்படைத்தவர்களுக்கு தெய்வமாகக் காட்சி தந்தார்.

காஞ்சி மகா பெரியவாளை திருப்பதி வேங்கடாசலபதியாகசர்வேஸ்வரனாகசுவாமிமலை முருகப் பெருமானாககாஞ்சி காமாட்சியாகநடராஜப் பெருமானாகஇப்படிப் பக்தர்கள் எந்தத் திருவடிவத்தை மனதில் இறுத்தி மகா பெரியவாளைத் தரிசித்தார்களோ, அதே வடிவில் திருக்காட்சி பெற்றிருக்கிறார்கள்.

நம் ஆழ் மனதில் என்னென்ன காட்சிகளைப் பெறுகிறோமோ, என்னென்ன எண்ணங்களைக் கொண்டிருக்கிறோமோஅவற்றையே அடைகிறோம் என்றுதான் தத்துவமும் சொல்கிறது.

மகா பெரியவாளைப் பார்த்து வியக்காத இந்திய அரசியல்வாதிகள்ஏன் உலகத் தலைவர்களே இல்லை எனலாம்.

தனது இறுதிக் காலத்தில் அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராஜர் மகா பெரியவாளைப் பார்க்க விரும்பி கலவைக்கு வந்து மகானுடன் உரையாடி இருக்கிறார்.

காமராஜரின் அரசியல் நேர்மையை அறிந்த மகா பெரியவா, ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டிருக்கிறார். ‘மிஸ்டர் க்ளீன்என்று பெயர் பெற்றிருந்த காமராஜர், ‘தமிழ்நாடு சுபிட்சமா இருக்கணும்அது போதும் சாமீஎன்று மகா பெரியவாளிடம் நாட்டு மக்களை முன்னிறுத்தி வரம் கேட்டாராம்.

கடவுள் மறுப்புக் கொள்கைஉடையவர்களாலும் பாராட்டப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட மகான் ஒருவர் உண்டு என்றால், அது மகா பெரியவாதான்.

காரணம்எளிமை, நேர்மை, தூய்மை, பரோபகாரம், மனிதநேயம்இப்படிப்பட்ட நற்குணங்களை மட்டுமே தனது சொத்தாகக் கடைசி வரை வைத்திருந்தவர் மகா பெரியவா.

கவியரசர் கண்ணதாசனை அறியாதோர் எவரும் இருக்க முடியாது. துவக்க காலத்தில் ஒரு நாத்திகராக இருந்து, மேடைக்கு மேடைஅவ்வளவு ஏன்? காஞ்சிபுரத்திலேயே சங்கர மடத்துக்கு எதிரில் மேடை போட்டு, காஞ்சி ஸ்ரீமடத்தையும், மகா பெரியவாளையும் பல முறை திட்டித் தீர்த்தவர்.

அப்பேர்ப்பட்டஅக்மார்க்நாத்திகரான கண்ணதாசன் கொடூரமான ஒரு கார் விபத்தில் உருக் குலைந்தார். அனைவருக்கும் இரங்கும் ஆபத்பாந்தவனான காஞ்சி மகா பெரியவாளின் பரிபூரண அருளாலும் ஆசியாலும் உயிர் மீண்டார்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும், நேராகக் காஞ்சி போய் மகா பெரியவாளை கண்ணீர் மல்க வணங்கினார் கண்ணதாசன். பெரியவாளின் ஆசியுடன்அர்த்தமுள்ள இந்து மதம்பிறந்தது.

காஞ்சி மகா பெரியவாளைப் பற்றிப் பின்னாளில் கண்ணதாசன் எழுதினார்:

அவர் பிராமண ஜாதியின் தலைவர் அல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்கக் கூடாது. உலகெங்கிலும் உள்ள அஞ்ஞானிகளுக்கு ஞானக் கண் வழங்கும் பேரொளி. அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருடங்கள் போனால்இந்து மதம் என்றால் என்ன?’ என்ற கேள்விக்குஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற சங்கராச்சார்ய ஸ்வாமிகள்என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.

செஞ்சிக் கோட்டைக்கு போகிறவன் எல்லாம் தேசிங்குராஜா அல்ல. காவி கட்டிய எல்லோரும் மகா யோகிகள் அல்ல. ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார். தாய் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும்போது இந்த மகானைப் பற்றிப் பாட வேண்டும். பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் இந்த மகானைப் பற்றிக் குறிக்க வேண்டும்.’

பக்தியின் பாதைக்கு முழுக்கத் திரும்பிய கண்ணதாசனின் உணர்ச்சிமிகு வரிகள் இவை.

இந்த மகானை முதல் முறையாக நான் காஞ்சியில் பார்த்தபோது இப்படியும் ஒரு எளிய துறவியா என்று வியந்தேன். இவரைப் பார்த்த பின் நானும் ஒரு துறவி என்று சொல்லவே வெட்கப்பட்டேன். பேச்சில் கலப்படம் இல்லாத உண்மை, குரலில் தெறிக்கின்ற ஞானம், தவத்தின்போது தெரிகின்ற அமைதியப்பப்பாஎன்று வியக்கிறார் புத்த துறவி தலாய்லாமா.

மகா பெரியவா வாழ்ந்த வாழ்வின் பெரும் பகுதி யாத்திரையிலேயே கழிந்திருக்கிறது. ‘சந்நியாசிகள் ஒரே இடத்தில் நிலை கொண்டிருக்கக் கூடாது. பல்வேறு பகுதிகளுக்குப் பயணித்து பலருக்கும் பயனுள்ள உபதேசங்களைச் செய்ய வேண்டும்என்று ஆன்மிக நூல்கள் சொல்லும்.

உலகில் வசிக்கின்ற எல்லோரையும் ஈர்த்த ஒரே விஷயம்மகா பெரியவா வாழ்ந்த எளிமையான வாழ்க்கைதான்!

உருவத்தில் குள்ளம். உள்ளத்தில் உயரம்.
பணத்தைக் கையால் தொட்டதில்லை.
தொலைபேசி பயன்படுத்தியதில்லை.
உணவில் பற்றில்லை.
உடையில் நாட்டமில்லை.
சொத்து சுகத்தில் கவனமில்லை.
சொந்த பந்தங்களுக்கு சலுகை இல்லை.

இவரிடம் ஆசி பெற வருபவர்களில் கோடீஸ்வரர்கள் பலரும் உண்டு. ஆனால், இவரோ கட்டாந்தரையில், மாட்டுத் தொழுவத்தில், ஏதோ ஒரு திண்ணையில் யாரும் அறியாதவாறு சாதாரணமாக சுருண்டு படுத்திருப்பார்.

பாரத தேசம் முழுக்க மூன்று முறை யாத்திரை செய்தவர். கார் போன்ற சொகுசு வாகனங்களைப் பயன்படுத்தியதில்லை.

18 மொழிகள் தெரிந்தவர்.

மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு ஒரு பார்வையாளராகச் சென்று விமானியே வியக்கும்படி பல சந்தேகங்களை எழுப்பி, அதற்கு உரிய விளக்கமும் தந்தவர்.

விசாகப்பட்டினம் சென்றபோது கப்பல் கட்டும் தொழிலில் உள்ளவர்களிடம் அதைப் பற்றி வெகு சுவாரஸ்யமாகப் பேசி அசத்தியவர்.

மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு அச்சகத்துக்குச் சென்று அச்சுத் துறை சம்பந்தமான பல வியக்கும் தகவல்களைச் சொன்னவர்.

ஒரு விஞ்ஞானியிடம் பேசும்போது, ‘இவர் எங்கே போய் இத்தனை விஷயங்களைக் கற்றார்?’ என்று அவரே மூக்கில் விரல் வைக்கும்படியான உரையாடல்

ஆக, மொத்தத்தில் மகா பெரியவாநடமாடும் என்சைக்ளோபீடியா!

தகரத்தையும் தங்கத்தையும் ஒரு சேரப் பார்த்தால், தங்கம்தான் நம்மை ஈர்க்கும்.

ஆனால், இந்த மகானை தகரம்தான் ஈர்க்கும்.

தகரத்தில்தான் எத்தனை சோகம்எத்தனை நிற மாற்றம்எத்தனை ஏளனம்

தங்கத்துக்கு நிகரானதுதான் இந்த தகரமும்அதுவும் ஒரு உலோகம்இதுவும் ஒரு உலோகம்என்று தகரத்துக்குப் பரிந்து பேசி அதை உற்சாகமூட்டினார்.ஆம்!