மாம்பலம் காமகோடி தெரு

கா பெரியவா வாழ்ந்த காலத்தில் நேருக்கு நேராக அவரை தரிசிக்காதவர்களும் இருக்கிறார்கள். அவர் இருப்பது காஞ்சிபுரம் என்று தெரிந்தும், அங்கே செல்ல முடியாதவர்களும் உண்டு. இதைஅஞ்ஞானம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், அந்த மகானைப் பற்றித் தற்போது கேள்விப்படுகிறபோதுஅடடாஅவர் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்திருக்கிறோமேஅப்போதே காஞ்சிக்குச் சென்று அவரை நேரில் தரிசித்திருக்கலாமே என்று இப்போது ஏங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதே சமயம், மகா பெரியவா வாழ்ந்த காலத்தில் அவரை நேரில் தரிசிக்கவில்லை என்றாலும், அந்த மகானின் அருளும் ஆசியும் நிச்சயம் உண்டு என்று சொல்கிறோம். நம்புகிறோம்.

காரணம், உண்மையான குரு பக்தி நமக்குள் அமைந்து விட்டால், உள்ளார்ந்த பக்தியுடன் அவரை இப்போது மட்டுமல்லஎப்போது வழிபட்டாலும் அவரது அனுக்ரஹம் பரிபூரணமாகக் கிடைத்து விடும்.

மகா பெரியவா ஸித்தி (மறைவு) ஆனது 1994-ஆம் ஆண்டு. அவர் மறைந்த காலத்துக்குப் பின் பிறந்தவர்களுக்கும் மகான் அருளிக் கொண்டிருக்கிறார் அல்லவா?

ஆதி சங்கரரை தரிசித்திருக்கிறோமா? ராமானுஜரைத் தரிசித்திருக்கிறோமா? ராகவேந்திரரை தரிசித்திருக்கிறோமா? ஆனால், இந்த மகான்களை எல்லாம் இன்றைக்கும் உள்ளார்ந்த பக்தியுடன் வழிபட்டு, அவர்களின் அருளைப் பெற்று வாழ்ந்து வருகிறோம் அல்லவா?

அதுபோல், ஒரு மகானின் ஆசிக்கு நாம் உள்ளாக வேண்டும் என்றால், அவரை நாம் தரிசித்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

மகா பெரியவாளை நேருக்கு நேர் தரிசித்தவர்கள், ஆசி பெற்றவர்கள்; பாக்கியசாலிகள்தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அவர்கள் இன்றைக்குச் சொல்லக் கூடிய அனுபவங்கள் ஒவ்வொன்றும் மெய் சிலிர்க்க வைக்கக் கூடியவை. காலாகாலத்துக்கும் அவர்களது நெஞ்சில் பொக்கிஷங்களாக இவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இவர்கள் இப்படி என்றால், மகா பெரியவாளோடு ஒன்றாகவே படித்தவர்கள், பழகியவர்கள், உடன் வாழ்ந்தவர்கள் இவர்கள் எல்லாம் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவர்களாக இருக்க வேண்டும்?!

மகா பெரியவா வேதம் கற்ற பாடசாலையில் அவருடன் இருந்து வேதம் படித்த மாணவர்கள் எப்பேர்ப்பட்ட பாக்கியவான்கள்!

அந்த மகானுடன் ஒன்றாக வேதம் படித்த ஒரு அன்பரைப் பற்றித்தான் தற்போது பார்க்க உள்ளோம்.

சுவாமிநாதன் என்கிற பூர்வாஸ்ரமப் பெயர் கொண்ட மகா பெரியவாளும், ‘ஜகத்ரட்சக சாஸ்திரிகள் என்று பின்னாட்களில் வழங்கப்பட்ட ஜகத்ரட்சகனும் ஒன்றாக வேதம் பயின்றவர்கள். இருவரும் அப்போது நண்பர்கள்.

மகா பெரியவாளுடன் வேதம் கற்ற பின் இந்த ஜகத்ரட்சகன், சென்னை மயிலாப்பூரில் உள்ள சம்ஸ்க்ருதக் கல்லூரியில் பயின்றார். அடுத்து, ஆயுர்வேதம் கற்றார்.

ஆயுள்வேதம் என்பதன் வடமொழியாக்கமே ஆயுர்வேதம். ‘ஆயுர் என்ற சொல்லுக்கு ஆயுள் என்று பொருள். மனிதர்களுடைய ஆயுளை விருத்தி செய்யக் கூடிய இயற்கை தொடர்பான வைத்திய முறை என்பதால் இதற்குஆயுர்வேதம் என்று பெயர் வந்தது. வேதத்தோடும், வேத காலத்தோடும் தொடர்புடையது ஆயுர்வேதம்.

சரகர், சுஸ்ருதர், வாக்பட்டர் போன்ற ரிஷிகள் ஆயுர்வேதத்தில் தேர்ந்து விளங்கியவர்கள்.

மேலைநாட்டு மோகத்தில் நாம் திளைக்க ஆரம்பித்தபோதுஅலோபதி என்னும் ஆங்கில மருத்துவ முறை ஆட்கொண்டு ஆயுர்வேதத்தை சற்றே ஓரம்கட்டியது. ஆனால், இப்போது ஆயுர்வேதத்தின் அருமையைப் பலரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள்.

ஆயுர்வேதப் படிப்பைப் பூர்த்தி செய்த ஜகத்ரட்சக சாஸ்திரிகள், சென்னையில் வெங்கடரமணா ஆயுர்வேத வைத்தியசாலையில் சேர்ந்து பணியை ஆரம்பித்தார். ஆயுர்வேதத்தில் தேர்ந்த நிபுணராகவும் விளங்கினார்.

1960-களின் துவக்கத்தில் பழைய மாம்பலத்தில் (இன்றைய மேற்கு மாம்பலம்) ஏரிக்கரை சாலையில் வசித்து வந்தார் ஜகத்ரட்சக சாஸ்திரிகள். தன் முயற்சியால் தான் கட்டிய வீட்டுக்குகாமகோடி என்று பெயர் வைத்தார்.

காரணம்என்றென்றும் மகா பெரியவா நினைவு தனக்கு இருந்து கொண்டிருக்க வேண்டும் என்பதனால் இந்தப் பெயர்

வீட்டினுள் இருக்கும்போதும், வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும், வீட்டினுள் நுழையும்போதும் சதா மகா பெரியவாளை நினைத்து நினைத்து மனசுக்குள் பிரார்த்திப்பார்.

குறைந்த எண்ணிக்கையிலான வீடுகளே இருந்த இந்தத் தெருவுக்குகாமகோடி தெரு என்ற பெயரையும் அப்போது வைத்திருந்தார்கள்.

சென்னைக்கு மகா பெரியவா விஜயம் செய்திருந்த நேரம் அதுபழைய மாம்பலம் பகுதிவாசிகள் மகானைத் தங்கள் ஊருக்கும் அழைக்கஅந்த அழைப்பை ஏற்று மகா பெரியவா விஜயம் செய்திருந்தார்.

பழைய மாம்பலம் பகுதிக்கு வந்த மகா பெரியவாளுக்கு அங்குள்ள ஆன்மிக அன்பர்களால் விமரிசையான வரவேற்பு வழங்கப்பட்டது.

பழைய மாம்பலம் பகுதியில் வசிக்கின்ற பக்தகோடிகளுக்கு அருள் புரிய வேண்டும் என்பதற்காக அந்த ஊரில் ஒவ்வொரு தெரு வழியாகவும் மகா பெரியவாளின் பட்டணப் பிரவேசம் நடந்தது. அதாவது, தன் சிஷ்யகோடிகளுடனும், பக்தகோடிகளுடனும் நடந்தே சென்று கொண்டிருந்தார்.

ஆங்காங்கு வீதிகளிலும், வீடுகளிலும் இருக்கின்ற பக்தர்களை ஆசிர்வதித்து விட்டு சொற்ப அன்பர்கள் சூழ… ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர கோஷம் முழங்கஇந்த யாத்திரை விறுவிறுவென்று போய்க் கொண்டிருந்தது.

ஜகத்ரட்சக சாஸ்திரிகள் வசிக்கும் காமகோடி தெரு வழியாகத் தன் பரிவாரங்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார் மகா பெரியவா.

ஜகத்ரட்சக சாஸ்திரிகளின் இல்லத்தைக் கடந்து சென்ற பின் அது வரை நடந்து கொண்டிருந்த தன் வேகத்தைத் திடீரென்று குறைத்தார் மகா பெரியவா.

மகானுடன் பயணித்து வந்து கொண்டிருந்த சிஷ்யர்களும், பக்தர்களும் தங்கள் வேகத்தைக் குறைத்துக் கொண்டார்கள்.

என்ன காரணம்? இவ்ளோ வேகமா வந்திண்டிருந்த பெரியவா ஏன் நடையை ஸ்லோ ஆக்கிட்டார்? – யாத்திரையில் ஆளாளுக்குக் கேட்டுக் கொண்டிருந்தார்களே தவிர, ஒருவருக்கும் பதில் தெரியவில்லை.

ஆனால், மகா பெரியவாளுக்குத் தெரியாமலா இருக்கும்? கலியுக தெய்வம் அல்லவா இங்கே நடந்து போய்க் கொண்டிருக்கிறது?! தெய்வத்துக்குத் தெரியாதது ஏதேனும் இருக்க முடியுமா?

பின்னால் தன்னந்தனி ஆளாகவேக வேகமாக ஓடி வந்து கொண்டிருக்கும் தன் பக்தனுக்குபால்ய காலத்து சிநேகிதனுக்கு அருள் வழங்க அல்லவா நடையின் வேகம் இப்போது குறைக்கப்பட்டிருக்கிறது!

இன்னும் புரியவில்லையா? இந்தக் கூட்டத்துக்குப் பின்னால் ஜகத்ரட்சக சாஸ்திரிகள் மூச்சிரைக்க ஓடி வந்து கொண்டிருக்கிறார். முன்னால் சென்று கொண்டிருக்கிற மகா பெரியவாளுக்கு இது தெரிந்து விட்டது.

காமகோடி இல்லத்தை மகா பெரியவா கடக்கும்போது ஜகத்ரட்சக சாஸ்திரிகள் வீட்டில் இல்லை. தன் பணி காரணமாக பக்கத்தில்தான் சென்றிருந்தார்.

மகா பெரியவா இவரது இல்லத்தைக் கடந்து சென்ற வேளையில் வீட்டுக்குள் நுழைந்தார் சாஸ்திரிகள். விஷயத்தைக் கேள்விப்பட்டார். ‘ஆகா, நம் வீடு வழியாகச் சென்ற மகா பெரியவாளை நாம் தரிசிக்காமல் விட்டு விட்டோமே என்ற ஏக்கத்துடன், மகான் சென்று கொண்டிருக்கிற திசை நோக்கி ஓடி வர ஆரம்பித்தார்.

தன்னுடன் வேதம் படித்த ஜகத்ரட்சக சாஸ்திரிகள் பின்னால் வந்து கொண்டிருப்பதை அறிந்த மகா பெரியவா, தன் நடையை நிதானப்படுத்தினார்.

ஒரு கட்டத்தில் மகா பெரியவாளை அடைந்து விட்ட ஜகத்ரட்சக சாஸ்திரிகள் கண்களில் நீர் மல்க, மகானைப் பார்த்துக் கைகளை உயர்த்தி வணங்கினார். சட்டென்று அப்படியே நின்ற மகா பெரியவா, புன்னகையுடன் அவரை ஆசிர்வதித்தார்.

சாலையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்து நின்ற ஜகத்ரட்சக சாஸ்திரிகளைப் பார்த்த மகா பெரியவா, “எதுக்காக நீ இப்படி ஓடி வந்தே? நான்தான் ஒன் வீட்டைப் பாத்துட்டு ஆசிர்வாதம் பண்ணிட்டு வந்தேனே என்று சொல்லநெகிழ்வுடன் மீண்டும் கைகளைக் கூப்பி மகா பெரியவாளை வணங்கினார்.

அதன் பின் மகா பெரியவா புறப்பட்டுச் சென்றார்.

தன் பக்தன் ஒருவன் பின்னால் ஓடி வந்து கொண்டிருக்கிறான்அவனுக்கு ஆசி வழங்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தன் வேகத்தைக் குறைத்து நின்றார். வந்ததும், ஆசி வழங்கிவிட்டுப் புறப்பட்டார்.

உள்ளார்ந்த பக்தியுடன் தன்னை சரண் புகுந்த எந்த ஒரு பக்தனையும் குரு கைவிட மாட்டார்.

குடும்பத்துடன் எந்த விதமான குறைவும் இல்லாமல் வாழ்ந்தார் ஜகத்ரட்சக சாஸ்திரிகள். பின்னாட்களில்காமகோடி வைத்தியசாலை என்ற ஆயுர்வேத மருத்துவமனையும் நடத்தினார்.

மகா பெரியவா அருளால் ஜகத்ரட்சக சாஸ்திரிகளின் தலைமுறை இன்றைக்கு நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.

பின்னாட்களில் இவரது காமகோடி இல்லம் இன்னொருவருக்கு விற்கப்பட்டு விட்டது. இடத்தை வாங்கியவர் அங்கே அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டினார். ஜகத்ரட்சக சாஸ்திரிகள் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குகாமகோடி ஃப்ளாட்ஸ் என்றே பெயரிட்டு விட்டார் அந்த புரமோட்டர்.

தற்போது சென்னையில் வசித்துக் கொண்டிருக்கும் ஜகத்ரட்சக சாஸ்திரிகளின் பேரன் சந்திரசேகரன், தாத்தாவின் இந்த அனுபவம் பற்றி நெகிழ்வுடன் சொன்னார்.

அதோடு இன்னொரு உருக்கமான சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

மேற்கு மாம்பலம் ஏரிக்கரைத் தெரு காமகோடி குடியிருப்பில் வசிக்கும் தன் நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக சமீபத்தில் அங்கு சென்றார் சந்திரசேகரன்

அப்போது இவரைச் சந்தித்த அந்தக் குடியிருப்புவாசிகளில் இருவர், “உங்க குடும்பத்துக்கே நாங்க எல்லாம் ரொம்ப கடமைப்பட்டிருக்கோம். இந்த இடத்துல வசிக்கிறதுக்கு நாங்க எல்லாம் கொடுத்து வெச்சிருக்கணும்.

உங்க தாத்தா வாழ்ந்த இந்த இடத்துக்கு மகா பெரியவா வந்திருக்கார்னு கேள்விப்பட்டோம். இதே இடத்துல ரெண்டு தடவை மகா பெரியவாளுக்கு பாத பூஜை பண்ணி இருக்காராம் ஒங்க தாத்தா. இதெல்லாம் எப்பேர்ப்பட்ட கொடுப்பினை. இதை நாங்க வீடா நினைக்கலை. மகா பெரியவா இன்னிக்கும் வாழ்ந்து வரும் கோயிலாத்தான் நினைக்கிறோம். அவரோட பாத அடி பட்ட இடம், எங்களுக்கு வாழுகின்ற இடமா அமைஞ்சது நாங்கள் செய்த பேறு என்று மனம் நெகிழ்ந்து சொல்லி இருக்கின்றனர்.

இதைக் கேட்டதும் எப்பேர்ப்பட்ட குடும்பத்தில் நாம் பிறந்திருக்கிறோம் என்பதை அறிந்த சந்திரசேகரனின் கண்கள் கலங்கியே விட்டனவாம்.