ஸயன்ஸ்களும் இதில் கலந்திருப்பதை உத்தேசித்தும், இத்தனை ஸயன்ஸ்கள் இருந்த போதிலும், ஸயன்ஸ் என்றால் ஸமயாசாரத்துக்கு விரோதமாகத்தான் போக வேண்டுமென்றில்லாமல் நம் ஆசாரத்துக்கு ஏற்றதாகவும் ஆயுர்வேதம் இருப்பதால் அதற்கே ஆயுர் விருத்தியை நாம் உண்டாக்கித் தரவேண்டும்.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”, “சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும்” என்ற பழமொழிகள் ஆரோக்யமாயிருக்க வேண்டியதன் அவசியத்தைச் சொல்கிறவையே. கிராம வாழ்க்கையின் ஸுகாதாரமான காற்றோட்டமும், எளிமையும் அநுஷ்டானங்களும் போய் நகர வாழ்க்கையின் பலவித நெரிசல்கள் ஏற்பட்டபின் வியாதிகள் அபரிமிதமாகப் பெருகி வருகின்றன. வைத்யத்தோடு ஈஸ்வரனைப் பிரார்த்தித்துத்தான் ஸரி செய்யணும். தெய்வ ஸம்பந்தமான பாராயண நூல்கள் பலவற்றிலும் ‘பலச்ருதி’யில் “ரோகார்த்தீ முச்யதே ரோகாத்“*2 என்பது போல ரோக நிவ்ருத்தியை ஒரு பலனாகச் சொல்லியிருப்பதால் மத ரக்ஷணைக்காகவே தேஹ ரக்ஷணையும் நம் நிலையில் அவசியந்தான் என்று தெரிகிறது. நம்முடைய கலாசாரத்தோடு ஒட்டிப்போகிற நம்முடைய பிராசீன வைத்ய சாஸ்திரப்படியே இந்த ரக்ஷணையைப் பெற்று எல்லோரும் ஸெளக்யமாய் வாழவேண்டும்.