அரசாங்கத்தின் அங்கங்கள்

ஷாட்குண்யம்என்றுஃபாரின் பாலிஸியின் ஆறு அம்சங்களைச் சொல்கிறபோது இதெல்லாவற்றுக்கும் அடிப்படையான ராஜ்யம் என்பதற்கே உள்ளஸப்தாங்கம் (அல்லதுஸ்ப்த ப்ரக்ருதி’) என்கிற ஏழு அம்சங்களைப் பற்றி நினைவு வருகிறது. ஸ்வாமி, அமாத்ய, ஸுஹ்ருத், கோச, ராஷ்ட்ர, துர்க, பலஎன்பவையே இந்த ஏழு. ‘ஸ்வாமிஎன்றால் ராஜா. உடைமையாளன் என்பதுதான் ஸ்வாமி என்பதற்கு நேர் அர்த்தம். ராஜ்யத்தை தனதாக உடையவனாதலால் ராஜா ஸ்வாமி எனப்படுகிறான். ‘அமாத்யாஎன்றால் மந்திரி. ‘ஸுஹ்ருத்என்றால் நண்பர்; அதாவது நேச நாடுகள். ‘கோசஎன்பது கஜானா; பொன், மணி மட்டுமின்றி தேசத்தின் விளைச்சலையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். ‘ராஷ்ட்ரம்என்பதுதான் நாடுஅதாவது குடிகள். ‘துர்கஎன்றால் கோட்டை. ‘பலஎன்பது ராணுவம்.

திருவள்ளுவர் இதில் ஸ்வாமி எனப்படும் ராஜாவை மத்தியில் வைத்து, அவனுக்கு இருக்க வேண்டிய ஆறு அங்கங்களாகப் பாக்கி ஆறையும்பொருட்பால்முதல் குறளிலேயே சொல்லியிருக்கிறார்.

படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்உடையான் அரசருள் ஏறு.